Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிருப்திக்கான காரணம்

Featured Replies

அதிருப்திக்கான காரணம்

 

இன்­றைய நிலையில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களை உரு­வாக்­க­வேண்டும். என்­பது எமது முக்­கிய நோக்கம். வடக்கு கிழக்கில் தற்­போது நிலவும் நிலை­மை­களை பார்க்­கும்­போது மீண்டும் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் கைகள் ஓங்­க­வேண்டும்.என சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார இராஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் கூறிய கருத்­தா­னது தென்­னிலங்கை அர­சியல் வாதி­களை கொதி­தெழ வைத்­தி­ருப்­ப­துடன் இலங்கை பாரா­ளு­மன்றை கதி­க­லங்­க­வைத்­துள்­ளது.

எதி­ர­ணி­யி­னரின் அகோர கோஷங்கள் ஒரு புறம் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யினர் பாரா­ளு­மன்றில் கொதித்­தெ­ழுந்­துள்­ளமை மறு­புறம். ஆளும் கட்­சி­யினர் பாராளுமன்றை புரட்­டிப்­போ­டு­ம­ள­வுக்கு கூச்­சி­லிட்­டமை.இன்­னொ­ரு­புறம் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் ஆவே­ஷப்­பட்டு கத்­து­வது வேறு ஒரு புற­மாக பார­ளு­மன்­றிலும் நாட்டின் பல பகு­தி­யிலும் பிர­தி­ப­லித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.

விஜ­ய­க­லாவை கைது செய்­ய­வேண்டும். விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­த­வேண்டும் அவரின் பத­வியை பறிக்­க­வேண்டும். கட்­சி­யி­லி­ருந்து உடன் நீக்­குங்கள். பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை வறி­தாக்­குங்கள். என்­றெல்லாம் ஆவே­ஷத்­து­டனும் ஆத்­தி­ரத்­து­டனும் தென்­னி­லங்கை சமூ­கமும் அர­சியல்வாதி­களும் கூச்­ச­லிட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

யாழ். மாவட்­டத்தின் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் இராஜாங்க அமைச்­ச­ரா­கவும் பதவி வகித்­து­வரும் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு இத்­த­கை­ய­தொரு அவல நிலை தோன்­றி­ய­தற்­கு­ரிய காரணம் திட்­ட­மிட்ட முறை­யிலோ அல்­லது முன்­கூட்­டிய நிகழ்­வா­கவோ நடந்­த­வொன்­றாக கரு­த­மு­டி­யாது .நினை­யாப்­பி­ர­கா­ர­மா­க­ எ­திர்­பா­ராத வார்த்­தைப்­பி­ர­யோகம் கார­ண­மாக ஏற்­பட்ட தர்ம சங்­க­ட­மான சிக்­க­லாக திரி­பு­ப­டுத்­தப்­பட்­டு­விட்­டது.

யாழ்ப்­பாணம் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் கடந்த 2. 7. 2018 நடத்­தப்­பட்ட மக்கள் நட­மாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­றி­ய­போது இன்­றைய நிலையில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களை உரு­வாக்­க­வேண்டும் என்பதே எமது முக்­கிய நோக்கம். விடு­த­லைப்­பு­லி­களின் காலத்தில் எப்­படி வாழ்ந்தோம் என்­பதை உணர்வு பூர்­வ­மாக உணர்­கிறோம். நாம் உயி­ருடன் வாழ­வேண்­டு­மானால் நிம்­ம­தி­யாக வாழ­வேண்டுமானால் பாட­சா­லைக்கு செல்லும் எமது பிள்­ளைகள் மீண்டும் வீடு திரும்­ப­வேண்­டு­மானால் வடக்கு, கிழக்கில் புலி­களின் கை ஓங்­க­வேண்டும். என்று உணரும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது.

வேலை வாய்ப்­பற்று காணப்­படும் இளை­ஞர்கள் மது போதைக்கு அடிமை ஆகு­கி­றார்கள். திட்­ட­மிட்ட முறையில் அர­சி­யல்வாதி­களே போதைப்­பொ­ருள்­களை யாழ்ப்­பா­ணத்­துக்கு கடத்­தி­வந்து இப்­பி­ர­தே­சத்தை நிர்­மூ­ல­மாக்­கப்­பார்க்­கி­றார்கள். பாலியல் வன்­மங்கள், படு­கொ­லைகள் மலிந்த பூமி­யாக வடக்கு காணப்­ப­டு­கி­றது. வித­வைகள் துன்பம், முன்னாள் போரா­ளி­களின் வாழ்­வியல் போராட்­டங்கள் என ஏகப்­பட்ட கொடு­மை­க­ளுக்கு ஆளாக்­கப்­பட்ட பூமி­யாக வடக்கு, கிழக்கு காணப்­ப­டு­கி­றது . என­வேதான் 2009 ஆம் ஆண்­டுக்கு முன்­புள்ள சமூக கட­்டுப்­பாட்டு நிலை­மைகள் மீண்டும் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்­டு­மாயின் புலி­களின் முன்­னைய கால நிர்­வாக முறை மீண்டும் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும் என்ற தனது ஆதங்­கத்தை அவர் வெளிக்­காட்­டி­யி­ருந்­தார். இந்த விவகாரம் கருத்­த­ளவில் திரிபுபட்டு இன்று அவ­ருக்கு பாரிய நெருக்­கடி நிலை­யொன்றை உரு­வாக்­கி­விட்­டி­ருக்­கி­றது.

அவரின் கூற்­றா­னது அர­சியல் சாச­னத்­துக்கு முர­ணா­னது . மீண்டும் பயங்­க­ர­வா­தத்தை உரு­வாக்கும் பாஸிச கருத்­தாகும். இது நாட்­டுக்கும் ஆளும் ஜன­நா­ய­கத்­துக்கும் துரோகம் விளை­விக்கும் செய­லா­கு­மென கர்ஜித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். விஜ­ய­கலா மகேஸ்­வரன் தேசி­யக்­கட்­சி­யான ஐக்­கி­ய­தே­சி­யக்­க­ட­்சியின் பாராளு மன்ற உறுப்­பினர் மாத்­தி­ர­மல்ல யுத்­தத்­துக்­குப்­பி­றகு தனது கணவன் வழி ஐக்­கிய தேசி­யக்­க­ட்­சியின் வேட்­பா­ளா­ராக யாழில் நின்று வெற்­றி­பெற்று அத­னது செல்­வாக்­கையும் வாக்கு வங்­கி­யையும் காப்­பாற்­றி­வரும் ஆளுமை மிக்க ஒரு அர­சியல் வாதி­யா­கவும் விளங்­கி­வ­ரு­பவர்.

 விஜ­ய­கலா புலிகள் மீண்டும் வட, கிழக்கில் மீள் எழுச்­சி­பெ­ற­வேண்­டு­மென்று கூறி­யதன் ஆழ­மான அர்த்தம் மீண்டும் இந்­நாட்டில் ஆயு­தப்போர் நிக­ழ­வேண்டும். இளை­ஞர்கள் பயங்­க­ர­வா­தி­க­ளாக மாற­வேண்­டு­மென்ற அர்த்­தத்தில் தனது கருத்தை அப்­பட்­ட­மா­கவும் பச்சைத் தன­மா­கவும் கூறி­யி­ருப்பார் என்று கருதி அல்­லது அர்­த்தப்­ப­டுத்தி அவரை குற்­ற­வா­ளிக்­கூண்டில் ஏற்ற நினைக்கும் எதி­ர­ணி­யி­னரும் பின­்வ­ரிசை ஆச­னக்­கா­ரரும் நாட்டை குழப்­பு­வ­தற்­கு­ரிய ஆயு­த­மாக இதை கையி­லெ­டுத்­துக்­கொண்டு தமது அர­சியல் சது­ரங்­கத்தை ஆடப்­பார்க்கும் ஒரு நிலைதான் நாட்டில் தற்­பொ­ழுது உரு­வா­கி­யுள்ள கொந்­த­ளிப்பு நிலை­யாகும்.

யாழ். மண்ணின் யதார்த்­தங்கள் நாடோ சர்வ­தே­சமோ அறி­யா­த­வொன்­றல்ல. யாழின் தனித்­து­வத்­தையும் கலா­சார ஆழங்­க­ளையும் பூர்­வீக அடை­யா­ளங்­க­ளையும் அழித்து நிர்­மூ­ல­மாக்கும் நிகழ்ச்­சி­த்­திட்டம் மிக திட்­ட­மிட்ட முறையில் மறை­மு­க­மா­கவும் வெளிப்­ப­டை­யாவும் உரு­வாக்­கப்­பட்டு வரு­வ­தற்­கு­ரிய ஆதா­ரங்கள் ஏரா­ள­மா­கவே உள்­ளன. இந்த விட­யத்தை அமைச்சர் வெளிப்­ப­டை­யா­கவும் பகி­ரங்­க­மாகவும் வெள்ளப்படுத்­தி­யுள்ளார். அதற்­கு­ரிய ஆதா­ரங்­களை அவர் புட்­டுக்­காட்­டி­யுள்ளார். இன்று நிகழும் அடா­வ­டித்­த­னங்­களும் அட்­டூழி­யங்­களும் 2009 காலப்­ப­கு­திக்­குமுன் இருந்­த­தில்­லை­யென்­பதை சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண்டும். ஆனால் இன்­றைய வடக்கு, கிழக்கு நிலைமைகள் எவ்­ள­வவு மோசத்­த­ன­மா­னது என­்பது பற்றி யாவரும் அறிவர்.

  விஜ­ய­கலா மகேஸ்­வரன் அர­சியல் சாச­னத்­துக்கு முர­ணாக கதைத்­தி­ருப்­பது என்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஒரு­வி­ட­ய­மாக இருக்­கலாம். காரணம் அவர் நாட்­டுக்கும் மக்­களு­க்கும் விசு­வா­ச­மா­கவும் சத்­தி­ய­மா­கவும் இருப்பேன் என்று பிர­மாணம் செய்­தி­ருக்­கிறார் என்­ப­தற்கு அப்பால் அவர் தேசி­யக்­கட்­சியான ஐக்­கி­ய­தே­சி­யக்­க­ட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்பினர் என்ற பட்­ட­யத்தை மறந்து போனது மன்­னிக்­க­மு­டி­யாத குற்­ற­மாக இருக்­கலாம்.இருந்த போதிலும் தமி­ழ் பெண் என்ற வகையில் வட, கிழக்கு நிலை­மைகள் அவரை இவ்­வாறு உணர்ச்சி வசப்­பட வைத்­தி­ருக்­கி­ற­தென்­பதே யதார்த்தம்.

  ஏன் இந்த மறு எழுச்­சி­யுணர்வும் ஆவே­சமும் வர­வேண்டும் என்று சிந்­திப்­போ­மாயின் வட,­கி­ழக்­கி­லுள்ள இன்­றைய நிலைகள் மக்கள் அனை­வ­ரையும் இவ்­வாறே சிந்­திக்­கத்­தூண்­டு­கி­றது.புதிய ஆட்­சி­யென்ற வகையில் நல்­லாட்சி அர­சாங்கம் நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வை நல்கும் என்று நம்­பி­யி­ருந்த மக்கள் ஏமாற்­றப்­பட்­ட­வர்க­ளாக காணப்­ப­டு­கி­றார்கள். இதனை தமி­ழ­ரசுக்­கட்­சியின் தலை­வரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்­பி­ன­ருகிய மாவை சேனா­தி­ராஜா தெளிவா­கவே தெரி­வித்­துள்ளார். அவரின் அதி­ருப்தி ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களின் அதி­ருப்­தி­யா­கவும் கவ­லை­யா­கவும் தெரிவிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­ப­தே­ உண்மை.

   மாவை சேனா­தி­ராஜா தனது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­து­கையில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இரண்டு பக்­கங்­களில் இருந்து ஆற்­று­கின்ற கடமை மக்­க­ளுக்கு ஏமாற்­றத்­தைத்­த­ரு­கி­றது. இந்த ஏமாற்றம் மூன்று ஆண்­டு­க­ளாக தொடர்ந்து வரு­கி­றது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஒன்­றாக நின்று வட­,கி­ழக்கு தேசத்தை கட்டி­யெ­ழுப்­ப­வேண்டும். என்று அர­சாங்­கத்­தின்­மீது தமது கடு­மை­யான அதி­ருப்­தியை தெரி­வித்­துள்ளார்.

  அர­சாங்கம் வட,­கி­ழக்­கு ­வி­ட­யத்தில் தன்­னிச்­சை­யாக நடந்­து­கொள்­கி­றது . மக்கள் பிர­தி­நி­தி­க­ளையோ சம்பந்­தப்­பட்­ட­வர்க­ளையோ கலந்து பேசி தீர்­மானம் எடுக்­காமல் தன்­போக்கில் நடந்து கொள்­கி­ற­தென அவர் வெளிப்­ப­டை­யா­கவே அர­சாங்­கத்தின் மீது குற்றம் சாட்­டி­யுள்ளார். வடக்கு, கிழக்கை சேர்ந்த பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சம்பந்தப்­ப­டாமல் அமைச்­சர்களை மட்டும் உள்­ள­டக்கி செய­லணி அமைத்­தி­ருக்­கி­றார்கள். பிர­தமர் ஒரு கூட்­டத்தை நடத்­து­கிறார். ஜனா­தி­பதி இன்­னொரு மாற்று கூட்­டத்தை நடத்­து­கிறார். இது ஆரோக்­கியம் கொண்­ட­தாக காணப்­ப­ட­வில்லை. இந்த நட­வ­டிக்­கையில் மாற்றம் வேண்­டு­மென அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

   இதே­வ­கை­யான அதி­ருப்­தி­களை வடக்கு, கிழக்கு முத­ல­மைச்சர்களும் அடிக்­கடி தெரிவித்து வந்­துள்­ளனர். இந்­த­முறை அதி­ருப்­தியை விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.ஜனா­தி­பதி அடிக்­கடி யாழ்ப்­பா­ணத்­துக்கு வரு­கிறார்.

தனது கட்­சியை கட்­டி­யெ­ழுப்­பவும் மறு சீர­மைக்­க­வுமே வரு­கிறார். அவர் மக்­க­ளின பிரச்­சினையை தீாக்க வரு­வ­தில்லை. நாங்கள் கஷ்­டப்­ப­டு­கிறோம் ஆனால் எமது பெயர் அபி­வி­ருத்தி குழு­வி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தி­யிடம் வடக்கு அபி­வி­ருத்தி மற்றும் பிரச்­ச­ினைகள் தொடர்பில் பல கோரிக்­கை­களை முன் வைத்­துள்­ள­போதும் அவை பொருட்­ப­டுத்­தப்­ப­டு­வ­து­மில்லை . தீர்க்­கப்­ப­டு­வ­து­மில்­லை­யென அவர் தனது அதி­ருப்­தி­யையும் கவ­லை­யையும் தெரி­வித்­தி­ருந்தார்.

  இவர்­களின் குற்­றச்­சாட்­டுக்­களும் அதி­ருப்­தி­களும் பொது­வா­கவே மக்­களின் மறு­ப­தி­வா­கவே இருக்­கி­ற­தென்­ப­தே­ உண்மை.

அண்­மைக்­கா­ல­மாக பிர­த­ம­ருக்கும் ஜனா­தி­ப­திக்­கு­மி­டை­யி­லான பனிப்போர் கார­ண­மாக தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விவ­காரம் இவர்­களால் மறக்­கப்­பட்­ட­தாக இல்லை புறந்­தள்­ளப்­பட்­ட­தா­கவே காணப்­ப­டு­கி­ற­தென்­பது பொது­வா­கவே மக்­களின் அபிப்­பி­ரா­ய­மாக காணப்­ப­டு­கி­றது.

வட­கி­ழக்கில் குறிப்­பாக யாழ். குட நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக சட்டம் ஒழுங்கு தொடர்ச்­சி­யாக சீர் குலைந்து வரு­கி­றது . குற்­றச்­செ­யல்­கள் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்து வரு­வ­துடன் இக்­குற்றச் செய­ல்­க­ளு­டன்­ தொடர்­பு­டை­ய­வர்கள் கைது செய்­யப்­ப­டு­வது மக்கள் மத்­தியில் அச்சத்­தையும் பீதி­யையும் உண்­டாக்­கி­வ­ரு­வது தெரிந்த விடயம். கொலைகள் பாலியல் வன்­மங்கள் வாள்­வெட்டு சம்­ப­வங்கள், கொள்­ளைகள் கொலைகள் என அடுத்­த­டுத்து யாழ்.­கு­டா­நாட்டில் இடம்­பெற்று வரு­கி­ற­தென்­பதை அதிர்ச்­சி­யான செய்­தி­க­ளாக வெளிவந்­த­வண்ணம் உள்­ளன. குற்­றச்­செ­யல்கள் வன்­மு­றைகள் தொடர்பில் பொலிஸார் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­காமை தொடர்பில் சிவில் சமூ­கத்­த­வரும் பொது­மக்­களும் தமது கடும் விச­னத்தை தெரி­வித்­துள்­ளனர்.

   இவ்­வகை சம்­ப­வங்கள் கெடு­தி­களின் பின்­ன­ணி­யி­லேயே விஜ­ய­க­லா­ம­கேஸ்­வரன் தனது கருத்தை வெளிப்­ப­டுத்தி காட்டி­யுள்ளார். எய்­தவன் இருக்க அம்பை நோவ­துபோல் குடா­நாட்­டிலும் குறிப்­பாக வட­கி­ழக்­குப்­பி­ர­தே­சங்­களில் நடை­பெறும் சமூக அநி­யா­யங்­களை தடுக்­கவோ சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளவோ முடி­யாத அர­சாங்­கமும் தென்­னி­லங்­கை­யரும் விஜ­ய­கலா புலி­களை மீள் எழுச்­சி­பெற வைக்­கப்­பார்க்­கிறார். பயங்­க­ர­வா­தத்தை மீண்டும் கொண்­டு­வ­ரப்­பார்க்­கி­றா­ரென்று கூக்­கு­ர­லி­டு­வது எதைக்­காட்­டு­கி­ற­தென்றால் இன­வாதம் இன்னும் அழிந்­து­போ­க­வில்­லை­யென்ற உண்­மை­யையே புலப்­ப­டுத்­து­கி­றது.முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ரான அநி­யா­யங்­களும் அட்­டூழி­யங்­களும் அன்­றைய அர­சாங்க காலத்­திலும் இதற்கு முன்­னைய அர­சாங்க காலத்­திலும் நடை­பெற்­றபோ­தெல்லாம் வாழாது மெளனம் சாதித்து அடக்கி வாசித்­த­வர்கள் தற்­பொ­ழுது சின்­ன­தொரு விட­யத்தை தூக்­கிப்­பி­டித்து ஊதிப்­பெ­ரி­சாக்க நினைக்கும் சூட்­சு­மத்தை அறிய முடி­ய­வில்லை. பாரா­ளு­மன்றை குண்­டு­வைத்து தகர்க்­க­வேண்டும். எரித்து சாம்­ப­லாக்­க­வேண்டும் என்று முழக்கம் செய்­த­வர்கள் அர­சியல் சாச­னத்தை மீற­வில்லை. பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­த­ரிக்­கப்­ப­டாத நிலையில் தனது மக்கள் படும் துன்­பத்­தைக்­கண்டு கண்ணீர் மல்­கு­வது மாத்­தி­ர­மன்றி பேயாட்சி செய்யும் பிர­தே­ச­மாக யாழ். குடா நாடு மாறி­வ­ரு­கி­றது என்­பதை வெளிக்­கொண்டு வரு­வ­தற்­காக தனது கருத்தை கூறி ஆதங்­கப்­பட்ட மக்கள் பிர­தி­நி­தியை அவரின் பத­வி­யைப்­ப­றி­யுங்கள், கைது செய்­யுங்கள் என தென்­னி­லங்கை அர­சியல்வாதிகள் கிளர்ந்­தெ­ழு­வது எதற்­கா­க­வென்று புரி­ய­மு­டி­ய­வில்லை. ஹிட்லர் போல் நடந்து கொள்­ள­வேண்­டு­மென கூறப்­பட்ட பாஸிஷ விவ­கா­ரங்­க­ளுக்கு வரிந்து கட்­டாமல் தனது மக்­களின் அவ­லங்கள் தொடர்பில் காட்­ட­மாக கூறி­ய­தற்­காக தென்­னிங்­கையில் கொந்­த­ளிப்பை உண்­டாக்க நினைக்கும் அர­சியல் சமூ­கத்­த­வர்கள் இன்னும் இன­வா­தத்தை விட்டு விட­வில்­லை­யென்­பதை தெளிவாக உணர்ந்து கொள்ள முடி­கி­றது. விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் சர்­வ­தேசளவில் தடை செய்­யப்­பட்ட இயக்கம் மாத்­தி­ர­மன்றி அதை முற்­றாக கரு­வ­றுத்து விட்­டோ­மென முன்­னைய ஆட்­சி­யி­னரும் குறிப்­பாக கூட்டு எதி­ர­ணி­யைச்சேர்ந்­த­வர்­களும் தற்­போ­தைய அர­சாங்­கமும்பெரு­மைப்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் நிலையில் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் கூற்று பயங்­க­ர­வா­தத்தை கொண்டு வந்­து­விடும் அர­சியல் சாச­னத்தை மீறிய செயல் என கூறு­வதில் எத்­த­கைய தர்க்க ரீதி­யான உண்மையிருக்­கி­ற­தென தெரி­ய­வில்லை.அவ்­வாறு உண்­மை­யி­ருக்­கு­மாயின் அமைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டிய அல்­லது உரு­வா­கக்­கூ­டிய சூழ்­நி­லை­யொன்று இலங்­கையில் இருந்து வரு­கி­ற­தென்­பதை அர­சாங்­கமும் எதி­ர­ணி­யி­னரும் ஏற்­றுக்­கொள்­கி­றார்­களா என்­பது தெரி­யில்லை. மீண்டும் இந்­நாட்டில் பயங்­க­ர­வாத நிலை­யொன்று உரு­வா­க்காமல் இருக்­க­வேண்­டு­மாயின் தமிழ் மக்­களின் நீண்­ட­கால இனப்­பி­ரச்­ச­ினைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வொன்று காணப்­ப­ட­வேண்­டு­மென்­பதை தமிழ் தலை­மைகள் நீண்­ட­கா­ல­மா­கவே வலி­யு­றுத்தி வருகின்றன. இதன் போக்­குக்­கா­ர­ண­மா­கவே கடந்த ஜனா­தி­ப­திததேர்த­லிலும் பொதுத்தேர்த­லிலும் தமிழ் தலை­மைகள் பகி­ரங்­க­மா­கவே தேசி­யக்­கட்­சி­க­ளான ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யையும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யையும் பகி­ரங்­க­மாக ஆத­ரித்த சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. இந்த ஆத­ரவின் நிமித்­தமே தேசிய அர­சாங்­க­மொன்று உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. தேசிய அர­சாங்­கத்தின் மீது தமிழ் மக்கள் அதிக நம்­பிக்­கை­கொள்ளும் வண்ணம் அரசியல்சூழ் நிலைமைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அதற்கு நடந்ததென்ன. மூன்று வருடங்களை அரசு வெற்றிகரமாக ஓட்டிவந்திருப்பதுடன் சர்வதேச அளவிலும் நல்லபிள்ளையென்ற பெயரைபெற்று மனித உரிமை மீறல்களிலிருந்தும் போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்தும் முன்னைய ஆட்சியாளர்களையும் குற்றம் புரிந்தவர்களையும் தப்பவைத்த சாணக்கியத்தில் வெற்றி கண்டுள்ளது. இலங்கை அரசாங்கம்.

இறுதியுத்தத்தின்போது இடம் பெற்ற மனிதவுரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும் அரசாங்கமானது அந்த விவகாரத்தில் அக்கறையுடன் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு மீண்டும் முன் கொண்டுவரப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் நிலையில் நாட்டில் நடக்கும் சின்ன சின்ன விவகாரங்களை ஊதிப்பெரிதாக்கி திசை திருப்பப்பார்க்கும் நடவடிக்கைகளே நாளாந்தம் நடந்து கொண்டிருக்கின்றன. உண்மையைச்சொல்லப்போனால் அரசியல் தீர்வு விவகாரத்தை அரசியல் சாசன ஆக்கும் விடயத்தை அரசாங்கம் மறந்து போனது மாத்திரமன்றி தமிழ்தலைமைகளும் மறந்துபோய்விட்டார்களா என தமிழ் மக்கள் ஆதங்கப்படுமளவுக்கு நிலைமைகள் பூஜ்ஜிய புள்ளியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.

துரும்பை மலையாக்கி கடுகை காயாக்கி அரசியல் நீரோட்டத்தை தமது பக்கம் இழுத்து செல்ல நினைக்கும் கூட்டு எதிரணியினரும் அரசாங்கத்தின் பக்கம் பாடிகளும் ஒன்றை நினைத்துக்கொள்ளவேண்டும். வட, கிழக்கு பிரச்சினை ஒரு நீண்ட காலப்பிரச்சினை மாத்திரமன்றி அது தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை யென்பதை உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட விவகாரமாகும். அதற்கு பரிகாரம் காணப்படவில்லையாயின் விஜயகலாவின் ஆதங்கங்களைப்போல ஆத்திரத்தைப்போல இன்னும் ஆயிரம் ஆயிரம் அதிருப்திகளுக்கும் விசனங்களுக்கும் பதில்தேடவேண்டிய அவசியம் உருவாகுமென்பதை அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ளவேண்டும்.

திருமலை நவம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-07-07#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.