Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்

Featured Replies

யாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம் நிலாந்தன்..

SelfDefence.png?resize=600%2C342

யாழ்ப்பாணத்தில் அண்மையில் மிகக் குறுகிய காலத்திற்குள் நடந்த வன்முறைகள் தொடர்பில் முக்கிய அரசியற் பிரமுகர்கள் சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு.முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகிறார். இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண சபைக்கு இல்லையென்று. இராணுவத்தைத் தமிழ்ப் பகுதிகளிலிருந்து அகற்றி மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களைத் தந்தால் இது போன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது ஒரு கடினமான செயலாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.

 

சுமந்திரன் கூறுகிறார் கிராமமட்ட விழிப்புக் குழுக்களை உருவாக்க வேண்டுமென்று. தமிழ் மக்கள் தங்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாட்டை தாங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற தொனி இக்கூற்றில் இருக்கிறது. உள்ளுராட்சி மன்றங்களில் தொகுதி வாரியாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் தத்தமது தொகுதிகளில் விழிப்புக் குழுக்களை உருவாக்கலாம் என்றும் சுமந்திரன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

வடமாகாணசபை உறுப்பினரான டெனீஸ்வரன் புலம்பெயர்ந்த தமிழர்களைக் குற்றஞ்சாட்டியுள்ளார். புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து வரும் காசுதான் இவ்வாறான வன்முறைகளுக்கு ஒரு காரணம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.ஆளும் யு.என்.பிக் கட்சியின் உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமாகிய திருமதி.விஜயகலா மகேஸ்வரன் மேற்படி வன்முறை தொடர்பில் கருத்துத் தெரிவித்து சிக்கலில் மாட்டியிருக்கிறார். புலிகள் இயக்கத்தின் ஆட்சிக்காலத்தில் இப்படிப்பட்ட வன்முறைகள் இருக்கவில்லை என்றும் இப்பொழுது அதிகரித்து வரும்; வன்முறைகளை அடக்குவதற்கு புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க வேண்டும் என்ற தொனிப்பட அவர் ஓர் உரையை ஆற்றியிருக்கிறார். உட்துறை அமைச்சரும் உட்பட இரண்டு அமைச்சர்கள் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரோடு ஒரு தொகுதி அரச அதிகாரிகளும் அமர்ந்திருந்த ஓர் அரங்கிலேயே விஜயகலா மேற்கண்டவாறு பேசியிருக்கிறார். அப்பேச்சு அவருடைய பதவியைப் பதம் பார்த்திருக்கிறது.

மற்றொரு அமைச்சரான மனோகணேசன் முதலில் விஜயகலாவை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்திருந்தார். பின்னர்; தென்னிலங்கையில் ஏட்படட கொந்தளிப்பையடுத்து அவர் விஜயகலாவை காப்பாற்றுவதிலிருந்து சிறிது பின் வாங்கினார். முதலமைச்சர் விக்கியும் விஜயகலா கூறியதை ஆதரித்திருக்கிறார்.மாகாணசபைக்கு அதிகாரம் இல்லையென்பதை இது போன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விக்கினேஸ்வரன் வலியுறுத்திக் கூறுவதுண்டு. டெனீஸ்வரனின் வழக்கில் அது மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாகாண சபைக்கு அதிகாரம் இல்லையென்பதைக் கண்டு பிடிப்பதற்கு ஒரு முதலமைச்சராகத்தான் வரவேண்டும் என்றில்லை. அது பற்றி ஏற்கெனவே நிறைய உரையாடப்;பட்டு விட்டது. மாகாணசபைக்கு இருக்கின்ற அதிகாரங்களைப் பிரயோகிப்பதற்குக் கூட இலங்கைத்தீவின் நிர்வாகக் கட்டமைப்போ அல்லது அதிகாரப் படிநிலைக் கட்டமைப்போ இடம் கொடுக்காது. விக்னேஸ்வரன் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அதை கண்டு பிடித்து வருகிறார்.

ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் அரசாங்கம் அதிகாரத்தைத் தரவில்லை என்று கூறிக்கொண்டு எதையும் செய்யாமல் இருந்து விடுவதுதான். எதிர்ப்பு அரசியல் எனப்படுவது கொழும்பைக் குறை கூறுவது மட்டுமல்ல. அதற்குமப்பால் அதற்கொரு ஆக்கபூர்வ நிகழ்ச்சித் திட்டம் உண்டு. எதிரியைத் திட்டுவதும், விமர்சிப்பதும் மட்டும் எதிர்ப்பு அரசியலாகாது. எதிர்த்தரப்பு என்ன செய்கிறதோ அதற்கு எதிரான தற்காப்புச் சுய கவசங்களைக் கட்டியெழுப்புவதே எதிர்ப்பு அரசியலின் இதயமான பகுதியாகும். இந்த ஆக்க பூர்வ தரிசனம் இல்லாமல் எல்லாவற்றுக்கும் சிங்களத் தரப்பைக் குறை கூறிக்கொண்டிருப்பது முழுமையான எதிர்ப்பு அரசியலல்ல.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எதிர்ப்பு அரசியல் எனப்படுவது பிரதானமாக இரண்டு தடங்களில் முன்னெடுக்கப்பட வேண்டியது. முதலாவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் போராட்டம். இரண்டாவது கட்டமைப்பு சார் இனப்படுகொலைக்கு எதிராக சுய பாதுகாப்புக் கவசங்களைக் கட்டியெழுப்புவது.

இனப்படுகொலை என்றால் என்ன? ஒரு இனத்தின் தேசிய இருப்பை நிர்மூலம் செய்வதுதான். எனவே நேரடியான இனப்படுகொலை அல்லது கட்டமைப்புசார் இனப்படுகொலைக்கு எதிரான சுயகவசங்களைக் கட்டியெழுப்புவது என்பது தமிழ்த்தேசிய மூலக்கூறுகளை கீழிருந்து மேல் நோக்கி பலப்படுத்துவதுதான். இனம், மொழி, நிலம், பண்பாடு போன்ற அடிப்படையான மூலக்கூறுகளை எப்படிப் பலப்படுத்தலாம் என்று ஆக்க பூர்வமாகச் சிந்திப்பதுதான்.

இதை மேலிருந்து கீழ்நோக்கிச் செய்வதில் வரையறைகள் உண்டு. ஏனெனில் 2009ற்குப் பின்னரான அரசியலில் மேலிருந்து கீழ்நோக்கிய பெரும்பாலான கட்டமைப்புகள் அரசாங்கத்தின் நிர்வாகப் படிநிலைக் கட்டமைப்புக்களுக்குள்தான் வருகின்றன. எனவே தமக்குரிய சுய கவசங்களைக் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு மக்கள் கூட்டம் அதை அதிக பட்சமாக கீழிருந்து மேல் நோக்கியே கட்டியெழுப்ப வேண்டும்.

உதாரணமாக வன்முறைக் கலாச்சாரம் தொடர்பில் நுண்கடன்கள் தொடர்பில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் கீழிருந்து மேல் நோக்கிய விழிப்புக் கட்டமைப்புக்கள் அவசியம். பல மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் தொடர்பகத்தில் நிகழ்ந்த பெண் அமைப்புக்களுடனான சந்திப்பு ஒன்றின் போது வலிகாமம் மேற்கைச் சேர்ந்த ஒரு சங்கத் தலைவி ஆணித்தரமாகச் சொன்னார். எமது கிராமத்தில் நுண்கடன் நிதி அமைப்புக்களை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். எமது பெண்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தி அவர்களாக அந்த அமைப்புக்களை புறக்கணிக்கச் செய்து விட்டோம் என்று.

இது ஒரு சிறிய உதாரணம். இது போல கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கவசங்களை ஈழத்தமிர்கள் உருவாக்கலாம். முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையும் இது தொடர்பில் சிந்திக்கலாம். மாற்று அரசியலைக் குறித்து விவாதிக்கும் எல்லாரும் இது தொடர்பில் சிந்திக்கலாம். தமிழ் சிவில் சமூக அமையம் சிந்திக்கலாம். ஏனைய சிவில் இயக்கங்களும் சிந்திக்கலாம். இரணைதீவு மக்களின் நிலமீட்பிற்கான போராட்டத்தை பின்னிருந்து ஊக்குவித்தது ஓர் அரச சார்பற்ற நிறுவனம்தான். அந்நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கிராமமட்ட வலையமைப்பே போராட்டத்தில் பெரும் பங்கை வகித்தது. ஓர் அரச சார்பற்ற நிறுவனம் அதைச் செய்யலாம் என்றால் ஏன் செயற்பாட்டு இயக்கங்களால் முடியாது? ஏன் மக்கள் இயக்கங்களால் முடியாது? ஏன் அரசியல் கட்சிகளால் முடியாது?

நுண்கடன் வழங்கும் நிறுவனங்களிடம் கிராம மட்டக் கட்டமைப்பு உண்டு.ராணுவப் புலனாய்வாளர்களிடம் கிராம மட்டக் கட்டமைப்பு உண்டு. ஆனால் தமிழ் செயற்பாட்டாளர்களிடம் அவ்வாறான கட்டமைப்புக்கள் இல்லை.இந்த வெற்றிடத்துள்தான் ரட்ணபிரியாக்கள் எம்.ஜி. யார்களாக மேலெழுகிறார்கள். விஜயகலாக்கள் புலிகளைப் போற்றித் தமது வாக்கு வங்கியைப் பலப்படுத்துகிறார்கள்.

இது தொடர்பில் ஒரு விசித்திரமான முரணை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். யாழ்ப்பாணத்து வன்முறைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுமந்திரன் விழிப்புக்குழுக்களைப் பற்றி பேசியிருக்கிறார். அவர் எதிர்ப்பு அரசியலுக்குரியவர் அல்ல. ஆனால் உள்ளுர் மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவரும் உட்பட மேற்படி வன்முறை தொடர்பில் கருத்துத் தெரிவித்த எல்லாருமே நிலமைகளைக் கட்டுப்படுத்த பொலீசாரால் முடியவில்லை என்பதனை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இது விடயத்தில் விஜயகலா ஓர் அரசாங்க அமைச்சர் என்ற தனது பதவியை மறந்து பேசியிருக்கிறார். அமைச்சர் மனோ கணேசனும் பொலீசைக் காட்டமாகப் விமர்சித்திருக்கிறார். மேற்படி விமர்சனங்கள் யாவும் பொலிசின் இயலாமையை அல்லது செயற்திறன் இன்மையை சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அந்தப் பொலிசின் பாதுகாப்பைப் பெறும் அரசியல் பிரமுகர்களே இவர்கள் எல்லாரும். தனது பாதுகாப்பிற்காக அதிரடிப்படையை நம்பியிருக்கும் சுமந்திரன் விழிப்புக் குழுக்களைப் பற்றிக் கதைக்கிறார். மெய்யாகவே கீழிருந்து மேல்நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களை உருவாக்க விளையும் எந்தவோர் அரசியல்வாதியும் தனக்கு மெய்க்காவலர்களாக இருக்கும் பொலிசார் அல்லது அதிரடிப்படையின் பாதுகாப்பை முதலில் கைவிட வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய கூற்றுக்களை வாக்கு வேட்டை அரசியல் உத்தியாகவே பார்க்க வேண்டியிருக்கும்.

அண்மை வாரங்களாக சம்பந்தரும், சுமந்திரனும், மாவையும் சற்றுக் கூடுதலாக எதிர்ப்பு அரசியலைக் கதைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாகச் சம்பந்தர் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், ஐ.நா வதிவிடப் பிரதிநிதி போன்றோரிடம் அரசாங்கத்தை விமர்சிக்கும் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் மாவை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது அடுத்த தேர்தலுக்கு முன் வாக்கு வங்கியை மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். விஜயகலாவும் அப்படியொரு நோக்கத்தோடு பேசியிருக்கலாம். அது அவருடை பதவியை உடனடிக்குப் பாதித்திருக்கலாம். ஆனால் நீண்ட எதிர்காலத்;தில் அவர் தனது வாக்கு வங்கியைப் பாதுகாத்திருக்கிறார் என்றே கூற வேண்டும். தன்னை ஆதரிக்கும் சாதாரண மக்களின் நம்பிக்கைகளை பிரதிபலித்த காரணத்தால் நெருக்கடிக்குள்ளாகியமை என்பது அவருடைய ஜனவசியத்தைக் கூட்டுமே தவிர குறைக்காது. புலிகள் இயக்கத்தைப் போற்றி அவர் தன் வாக்கு வங்கியைப் பலப்படுத்துகிறார். ஆனால் வன்முறைச் சூழலில் இருந்து அது தமிழ் மக்களைப் பாதுகாக்கப் போவதில்லை. அதோடு விஜயகலா தனது மெய்க்காவலர்களான பொலிஸ்காரர்களைக் கைவிடப் போவதுமில்லை.

எனவே செயலுக்குதவாத வீரப்பேச்சுக்களை விடுவோம். வித்தியா கொல்லப்பட்;ட போதும் யாழ்ப்பாணமா? வாள்ப்பாணமா? என்ற கேள்வி எழுந்த பொழுதும் வலியுறுத்தப்பட்டதைப் போல கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கவசங்களைக் கட்டியெழுப்புவதே இப்போதைக்குச் சாத்தியமானது. தமிழ்த்தேசிய செயற்பாட்டு அரசியல் எனப்படுவது அதன் மெய்யான பொருளில் இங்கிருந்தே தொடங்குகிறது. முதலமைச்சர் கூறும் மக்கள் இயக்கம் எனப்படுவது அதன் மெய்யான பொருளில் இங்கிருந்தே தொடங்குகிறது. விட்டுக்கொடுப்பு அரசியல் அல்லது சரணாகதி அரசியல் போன்றவற்றுக்கு மாற்றான மெய்யான எதிர்ப்பு அரசியல் எனப்படுவது இங்கிருந்தே தொடங்குகிறது.

http://globaltamilnews.net/2018/86820/

  • தொடங்கியவர்

கடி­வாளம் போடப்போவது யார்?

S-01Page1Image0002-4c618d8bf9334ee1e09291dbda9a844371e74856.jpg

 

வடக்கில் மீண்டும் வன்­மு­றைகள், சமூக விரோதச் செயல்கள் அதி­க­ரித்­தி­ருப்­பது ஒரு பக்கம் மக்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள அதே­வேளை, இன்­னொரு பக்­கத்தில் அர­சி­யல்­வா­திகள் பலரும் ஆளா­ளுக்கு கூச்சல் போடத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

இந்தச் சந்­தர்ப்­பத்தை ஒவ்­வொ­ரு­வரும் தமக்குச் சாத­க­மாக்கிக் கொள்­வ­திலும் அவர்கள் மிகக் கவ­ன­மாக இருக்­கி­றார்கள்.

வடக்கில் அடுத்­த­டுத்து, பெண்கள், குழந்­தை­க­ளுக்கு எதி­ராக நிகழ்த்­தப்­பட்ட வன்­மு­றை­களும், வாள்­வெட்­டுகள் போன்ற கொடூரச் செயல்­களும், கொள்­ளை­களும் இடம்­பெற்­றி­ருப்­ப­தா­னது, குடா­நாட்டை மீண்டும் அச்­சத்­துக்­கு­ரிய ஓர் இட­மாக மாற்­றி­யி­ருக்­கி­றது.

இந்­த­நி­லையில் தான், வன்­மு­றை­களைக் கட்­டுப்­ப­டுத்த உடன் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கடிதம் எழு­தி­யி­ருந்தார் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன்.

முகாம்­க­ளுக்குள் முடக்­கப்­பட்ட இரா­ணு­வத்தை மீண்டும் பாது­காப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­து­மாறு தாம் ஜனா­தி­ப­தி­யி­டமும், பிர­த­ம­ரி­டமும் கோரிக்கை விடுக்கப் போவ­தாக - மீண்டும் தமது பழைய விசு­வா­சத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார் டக்ளஸ் தேவா­னந்தா.

கிராம மட்­டங்­களில் விழிப்புக் குழுக்­களை உட­ன­டி­யாக அமைத்து, சமூக விரோதச் செயல்­களில் ஈடு­ப­டு­வோரை பொலி­ஸா­ருக்குப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கோரி­யி­ருக்­கிறார் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன்.

இதற்­கெல்லாம், விடு­தலைப் புலிகள் தான் மீண்டும் வர­வேண்டும். அவர்கள் இருந்­த­போது இப்­ப­டி­யெல்லாம் நடந்­ததா என்று, அமைச்­சர்கள் திலக் மாரப்­பன, வஜிர விஜே­வர்த்­தன ஆகி­யோரின் முன்­பாக, தனது ஆதங்­கத்தை, வெளிப்­ப­டுத்தி, அதி­கா­ரி­களின் கூட்­டத்தில் மிகப்­பெ­ரிய கைதட்­ட­லையும் வாங்கிக் கொண்டார் விஜ­ய­கலா மகேஸ்­வரன். (அதன் பின்னர் ஏற்­பட்ட விளை­வுகள் வேறு கதை)

அது­மாத்­தி­ர­மன்றி, முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், பொலிஸ் அதி­கா­ரங்­களை எம்­மிடம் தந்தால், இத்­த­கைய குற்­றச்­செ­யல்­களைக் கட்­டுப்­ப­டுத்தி விடுவோம் என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

இப்­படி, அர­சி­யல்­வா­திகள் ஒவ்­வொ­ரு­வரும், ஒவ்­வொரு நிலைப்­பாட்டை, எதிர்­பார்ப்பை, முன்­வைத்து, கருத்­துக்­களை வெளி­யிட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

போருக்குப் பிந்­திய சூழலில் குடா­நாட்டில், வாள்­வெட்­டுகள், போதைப்­பொருள் பாவனை, திருட்டு போன்ற சமூக விரோதச் செயல்கள், அதி­க­ரித்த போது, அது போருக்குப் பிந்­திய ஓர் உள­வியல் தாக்­க­மா­கவே, பர­வ­லாகப் பார்க்கும் நிலை காணப்­பட்­டது.

போர்ச் சூழ­லுக்குப் பின்னர், அத்­த­கைய பிர­தே­சங்­களில் இது­போன்ற சம்­ப­வங்கள், சமூகப் பிறழ்­வுகள் வழக்­கமே என்று கார­ணங்­களைக் கூறித் தப்­பிக்கும் நிலையே இருந்­தது.

இறுக்­க­மான சட்­டங்கள் மற்றும் ஏனைய வழி­களில் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான, தடுப்­ப­தற்­கான வழி­மு­றைகள் ஆரா­யப்­ப­டவோ செயற்­ப­டுத்­தப்­ப­டவோ இல்லை.

இதன் விளைவு தான், அவ்­வப்­போது, இத்­த­கைய சூழ்­நி­லைகள் எழு­வதும், இறுக்­க­மான சூழ்­நிலை ஒன்று உரு­வாக்­கப்­படும் போது அவை குறை­வதும், மீண்டும் அந்த இறுக்கம் தளரும் போது, மீண்­டெ­ழு­வ­து­மாகும்.

இந்தச் சூழ­லுக்கு யார் காரணம், இதில் தவ­றி­ழைப்­ப­வர்கள் யார் என்ற கேள்­வியை எழுப்­பினால், சட்டம் ஒழுங்கைக் கவ­னிக்கும் பொலிஸார் மீது தான் பெரும்­பா­லா­ன­வர்­களின் கைகள் நீளு­கின்­றன.

வடக்கில் பொலிஸார் திற­மை­யாகச் செயற்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்­டுகள் பர­வ­லாக இருந்­தாலும், அதனை அர­சாங்கம் சீர்­ப­டுத்­து­வதில் அக்­கறை கொள்­ள­வில்லை.

இதற்குப் பின்னால், ஏதேனும் அர­சியல், இரா­ணுவக் கார­ணிகள் இருந்தால் கூட ஆச்­ச­ரி­யப்­பட முடி­யாது. குற்­ற­வா­ளி­களை தப்­பிக்க விடு­வதும், குற்­ற­வா­ளிகள் அல்­லாத அப்­பா­வி­களை பிடித்து வழக்­கு­களை முடிக்க நினைப்­பதும்,

(8ஆம் பக்கம் பார்க்க)

கடிவாளம்... (தொடர்ச்சி)

முக்­கி­ய­மா­ன­தொரு பிரச்­சி­னை­யாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

வடக்கில் அதி­க­ரித்­துள்ள கஞ்சா போன்ற போதைப்­பொ­ருள்­களின் பயன்­பாடு தான், சமூக விரோதச் செயல்­களின் அடிப்­படை என்ற கருத்து குடா­நாட்டு மக்கள் மத்­தியில் பர­வ­லாக இருக்­கி­றது.

பொலிஸார் கஞ்சா கடத்­தலை கட்­டுப்­ப­டுத்­த­வில்லை, கடற்­ப­டை­யினர், நினைத்தால், முழு­மை­யாக கஞ்சா கடத்­தலைத் தடுக்க முடியும் என்று கூறு­ப­வர்கள் பலரும், கடற்­படை, இரா­ணுவம், பொலி­ஸாரின் உத­வி­யு­ட­னேயே கஞ்சா போன்ற போதைப்­பொ­ருட்கள் கடத்­தல்கள் இடம்­பெ­று­வ­தாக வலு­வா­கவே சந்­தே­கிக்­கி­றார்கள்.

பல வேளை­களில்,கஞ்சா போன்ற போதைப்­பொ­ருட்கள் பிடிக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­படும் போது, கைப்­பற்­றப்­பட்ட முழு அளவும், நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தில்லை என்றும், சில­வே­ளை­களில் போதைப் பொருட்­களைப் பிடித்து விட்டு, கடத்தல் குற்­ற­வா­ளி­க­ளிடம் பணம் பெற்றுக் கொண்டு தப்­பிக்க விட்டு விடு­கி­றார்கள் என்றும், கூட பலரும் குற்­றச்­சாட்­டுகள் கூறு­கின்­றனர்.

அதா­வது, சட்டம் ஒழுங்கை நிர்­வ­கிக்க வேண்­டிய, பொலிஸ் தரப்பு, தனது கட­மையை சரி­வரச் செய்­ய­வில்லை. அதனால் தான் இந்த நிலை என்று, கை நீட்­டு­கி­றது குடா­நாட்டு சமூகம்.

பொது­வா­கவே, தவ­று­களை அடுத்­தவர் பக்கம் திருப்பி விடு­வது மனித சுபாவம்.

பொலிஸ் அல்­லது பாது­காப்புத் தரப்­பு­களின் தவ­றுகள் எவையும் நியா­யப்­ப­டுத்தக் கூடி­ய­வை­யல்ல.

ஆனால், அந்தப் போர்­வையை வைத்துக் கொண்டு, குடா­நாட்டு சமூகம் தன்­னிடம் உள்ள குறை­பா­டு­க­ளையும், தவ­று­க­ளையும் மறைக்க முற்­படக் கூடாது.

மீண்டும் மீண்டும் பொலிஸ் அல்­லது படைத்­த­ரப்பு மீதே, குற்­றச்­சாட்­டு­களை கூறிக் கொண்­டி­ருந்தால், இப்­போது, டக்ளஸ் தேவா­னந்தா கூறு­வ­து­போல, முன்னர் இரா­ணு­வத்தைக் குற்­றம்­சாட்­டி­னீர்கள், இப்­போது அவர்கள் முகாம்­க­ளுக்குள் இருக்கும் போதும், அதே சம்­ப­வங்கள் தொடர்­கின்­றன என்று எதிர்­கா­லத்தில் இன்­னொ­ருவர் கேட்­கின்ற நிலை உரு­வா­கலாம்.

பொலிஸ் அதி­கா­ரத்தை எம்­மிடம் தாருங்கள், எம்மால் கட்­டுப்­ப­டுத்த முடியும் என்று முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கேட்­கிறார். ஒரு­வேளை, 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமைய, பொலிஸ் அதி­கா­ரத்தை மாகாண அர­சுக்கு வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் இணங்கும் சூழ்­நிலை வந்தால் தான், அப்­போது எம்­ம­வர்­களால் என்ன செய்ய முடியும் என்­பது தெரி­ய­வரும்.

அப்­போதும் கூட, இதே­போன்­ற­தொரு நிலை நீடிக்­காது என்­பது நிச்­ச­ய­மில்லை. ஏனென்றால், வெறும் அதி­காரம் மாத்­தி­ரமே, இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு அல்ல.

விடு­தலைப் புலி­களின் காலத்தில் இப்­ப­டி­யெல்லாம் நடந்­த­தில்லை என்ற கருத்து பர­வ­லாக கூறப்­ப­டு­கி­றது.

உண்­மையில் அந்தக் கால­கட்­டத்தில், விடு­தலைப் புலி­களின் மீதான பயத்­தி­னாலோ, அவர்­களின் சட்­டங்­களில் இருந்த கடு­மை­யான தண்­ட­னை­க­ளி­னாலோ மாத்­திரம், அந்தக் காலத்தில் குற்­றச்­செ­யல்கள் குறை­வாக இருக்­க­வில்லை.

சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­ப­வர்­க­ளாக இருந்த புலி­களின் மீதி­ருந்த மதிப்பும், மரி­யா­தையும் ஒரு காரணம்.

அதை­விட, அந்தக் கால­கட்­டத்தில், விடு­தலைப் புலிகள், சமூக விரோதச் செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்த உத­வி­யாக இருந்­த­வர்கள்- ஒத்­து­ழைத்­த­வர்கள் தமிழ் மக்­களே.

போர்க்­கா­ல­கட்­டத்தில், மக்கள் மத்­தியில் ஒற்­று­மையும், பிணைப்பும், பிறரை நேசிக்கும் பண்பும் அதி­க­மாக இருந்­தது.

தொலை­பே­சி­களே இல்­லாத போதும், தொலைவில் இருந்­தாலும், ஓடிப்போய் உதவும், தேடிச் சென்று நலம் விசா­ரிக்கும் பண்பு அதி­க­மாக இருந்­தது.

சமூ­கத்தில் உற­வுகள் பல­மான நிலையில் இருந்­தது. அது, சமூக விரோதச் செயல்­க­ளுக்கு தடை­யாக இருந்­த­துடன், அத்­த­கைய செயலில் ஈடு­ப­டு­ப­வர்கள் இல­கு­வாக கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வ­தற்கு அல்­லது தண்­ட­னைக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு வச­தி­யாகக் காணப்­பட்­டது.

ஆனால் இப்­போது எல்­லாமே தலை­கீ­ழாகி விட்­டது. உற­வு­களின் நெருக்கம் குறைந்து, அடுத்­த­வ­ருக்கு என்ன நடந்தால் எமக்­கென்ன என்ற மனோ­பாவம் பெருகி விட்­டது. அயலில் உள்­ள­வர்­க­ளுக்­கி­டையில், உற­வு­களை விட, பிணக்­குகள் தான் அதி­க­மாக இருக்­கி­றது.

இது, சமூக விரோதச் செயல்­க­ளுக்கு சாத­க­மான நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. யாரும் எதையும் கண்­டு­கொள்­ள­மாட்­டார்கள், தட்டிக் கேட்­க­மாட்­டார்கள் என்ற துணிச்சல், சமூக விரோதச் செயல்­க­ளுக்கு உந்­து­சக்­தி­யாக மாறி­யி­ருக்­கி­றது.

அதை­விட, இப்­போது யாழ். குடா­நாட்டில் அதி­க­ரித்­துள்ள வன்­மு­றைகள் ஒன்றும், வெளியே இருந்து வந்­த­வர்கள் எவ­ராலும் நிகழ்த்­தப்­ப­ட­வில்லை.

முன்னர், கிறிஸ் பூதம் பிரச்­சினை இருந்­தது. அது ஒரு திட்­ட­மிட்டு ஒழுங்­க­மைக்­கப்­பட்ட ஓர் அச்­சு­றுத்தும் செயற்­பாடு.

ஆனால், குடா­நாட்டில் நிகழ்ந்து வரும் அண்­மைய, சம்­ப­வங்கள் அத்­த­கை­ய­வை­யன்று.

சமூக கட்­டுப்­பா­டுகள் இல்­லாத நிலை, தட்­டிக்­கேட்க யாரும் வர­மாட்­டார்கள் என்ற துணிவு, எதைச் செய்­தாலும் தப்பி விடலாம் என்ற நம்­பிக்கை, எப்­ப­டிப்­பட்ட தொழிலைச் செய்­தா­வது, பணத்தை ஈட்டி விட்டால் சரி என்ற பேராசை இவை தான், இந்த நிலைமையின் அடிப்படை.

இங்கு. கஞ்சா கடத்துபவர்களாகவும், அதனை விற்றுக் காசாக்குபவர்களாகவும், அதனை வாங்கி பயன்படுத்துபவர்களாகவும், அதன் விளைவாக, நடக்கும் குற்றச்செயல்களால் பாதிக்கப்படுபவர்களாகவும், இருப்பது குடாநாட்டு மக்கள் தான்.

ஆக, இந்தப் பிரச்சினையில் வெளியே உள்ளவர் மீது மாத்திரம் குற்றச்சாட்டை கூறி விட்டு தப்பிக்கொள்வது தற்காலிகமான தீர்வையே தரும். அது நிரந்தரத் தீர்வு அல்ல.

குடாநாட்டு மக்கள் தமக்குள் இருக்கும், சமூக விரோதிகளை அடையாளம் காண வேண்டும், அவர்களின் செயல்களை தடுப்பதற்கான, கட்டுப்படுத்துவதற்கான வழிகளைத் தேட வேண்டும். ஏனென்றால், குடாநாட்டில் உள்ளவர்களின் உறவுகள், சொந்தங்கள் தான் அவர்கள்.

அவர்களை மீறி யாராலும் எதையும் செய்து விட முடியாது. மக்கள் மத்தியில் வழிப்புணர்வு ஏற்பட்டு, இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டால் தான், அது நிரந்தரமானது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.