Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துள்ளோம்..... எம்.ஏ.சுமந்­திரன்

Featured Replies

வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துள்ளோம்.....  எம்.ஏ.சுமந்­திரன்

 

தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களின் தாமதம், வடக்கின் அசா­தா­ரண சூழ்­நிலை,70 ஆண்­டு­கால தமி­ழரின் பிரச்­சி­னைகள் தீர்க்கப்படாமையினால் மக்கள் அதிருப் டையடைந்துள்ளனர். அர­சாங்­கத்தை சார்ந்­தேனும் நலன்­களை பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இன்று மக்கள் மத்­தியில் எழுந்­துள்ள கார­ணத்­தினால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் மீது மக்கள் அவ­நம்­பிக்கை கொண்­டுள்­ளனர். நாம் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­படக் கூடாதா என்ற கேள்வி மக்கள் மத்­தியில் எழுந்­துள்­ளது. எனவே இது குறித்து நாம் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.அதேபோல் வட­மா­காண சபையை பலப்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யமும் உள்­ளது. இதில் கடந்­த­கால குள­று­ப­டிகள் இருக்கக் கூடாது.விக்­கி­னேஸ்­வரன் இன்­னொரு தடவை கள­மி­றக்­கப்­ப­டக்­கூ­டாது என்­பதே எனது தனிப்­பட்ட கருத்து என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். கேச­ரிக்கு வழங்­கிய செவ்­வியில் இதனைக் குறிப்­பிட்டார்.

அவ­ரு­ட­னான செவ்வியின் விபரம் வரு மாறு:–

கேள்வி:-ஆட்சி மாற்­றத்தின் பின்னர் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கடந்த மூன்று ஆண்­டு­களில் நாடு பாரிய நெருக்­க­டி­களை சந்­திக்­கின்­ற­தாக பொது­வான விமர்­சனம் உள்­ளது. பாதாள உலக குழுக்­களின் ஆதிக்கம், பொரு­ளா­தார நெருக்­க­ டிகள் என மக்­களை பாதிக்கும் செயற்­பா­டுகள் உள்­ளன.எதிர்­க்கட்­சி­யாக இதனை நீங்கள் எவ்­வாறு கரு­து­கின்­றீர்கள்?

 

 பதில்:- நாங்கள் ஒரு­சில முக்­கிய விட­யங்­களை பிர­தா­னப்­ப­டுத்தி அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட்டோம். குறிப்­பாக அர­சியல் தீர்வு ஒன்­றினை ஏற்­ப­டுத்­தவும், பிர­தான இரண்டு கட்­சிகள் ஒன்­றி­ணைந்­ததன் மூல­மாக எமது நோக்­கங்­களை நிறை­வேற்­றிக்­கொள்ள முடியும் என்ற கார­ணத்­தினால் நாம் அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வாக செயற்­பட்டோம்.அதேபோல் போருக்கு பின்னர் எமது மக்­க­ளுக்கு பார­தூ­ர­மான பிரச்­சி­னைகள் இருந்­தன.காணி விடு­விப்பு, கைதிகள் விடு­தலை, வாழ்­வா­தார சிக்­கல்கள் இருந்­தன. அவற்றை பூர்த்தி செய்ய நாம் அர­சாங்­கத்­துடன் இணைந்து பய­ணிக்க வேண்­டிய தேவை இருந்­தது. அதை தவிர்த்து நாட்டின் ஏனைய முக்­கிய பிரச்­சி­னை­களில் பிர­தான எதிர்க்­கட்­சி­யாக நாம் செயற்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.அதில் உண்­மையும் உள்­ளது.எனினும் எமது பார்­வையில் இந்த நாட்­டினை பாதித்த பிர­தான பிரச்­சினை இனப்­பி­ரச்­சி­னை­யாகும். இதன் கார­ண­மா­கவே 30 ஆண்­டு­கால யுத்­தம் இடம்­பெற்­றது.வேறு பிரச்­சி­னை­க­ளினால் அல்ல. ஆகவே சகல நேரங்­க­ளிலும் அதற்­கான முக்­கி­யத்­து­வத்தை கொடுத்து செயற்­பட்டு வரு­கின்றோம்.எனினும் இந்த அர­சாங்கம் மூன்று ஆண்­டு­களில் நாம் எதிர்­பார்த்­த­தையும் பூர­ண­மாக நிறை­வேற்­றாமல், நாட்டின் வேறு பிரச்­சி­னை­க­ளையும் கருத்தில் கொள்­ளாது உள்ள நிலையில் நாம் ஒரு பிரச்­சி­னையில் மாத்­திரம் தங்­கி­யி­ருக்க வேண்­டுமா என்ற கேள்வி எழு­கின்­றது. நாட்டில் உள்ள சகல பிரச்­சி­னை­க­ளையும் சகல மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும் நாம் கையாள வேண்டும். பிர­தான எதிர்க்­கட்­சி­யாக எத­னையும் நாம் தட்டிக்கழிக்க முடி­யாது.அதே­வேளை முன்­னைய அர­சாங்­கத்தை விடவும் இந்த அர­சாங்­கத்தின் ஆட்­சியில் பல முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்கள் இடம்­பெற்­றுள்­ளன. குறிப்­பாக கடத்­தல்கள், ஊடக அடக்­கு­மு­றைகள், அர­சியல் அடக்­கு­முறை இல்­லாத அல்­லது விடு­பட்ட ஜன­நா­யக சூழல் ஒன்று விருத்­தி­ய­டைந்­துள்­ளது. தகவல் அறியும் சட்டம், 19 ஆம் திருத்தம் என்­பன கொண்­டு­வ­ரப்­பட்டு மக்­க­ளுக்­கான சுதந்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. எவ்­வாறு இருப்­பினும் இன்று நிலவும் பிரச்­சி­னை­களில் அர­சாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்டும்.  

 

கேள்வி:-பிர­தான இரண்டு கட்­சி­களும் அத ­னுடன் கூட்­டணிக் கட்­சி­களும் இணைந்து ஆட்­சியை உரு­வாக்கும் நிலையில் சகல பிரச்­சி­ னை­க­ளுக்கும் தீர்வு, பொரு­ளா­தார வளர்ச்சி என்ற வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டன. அவற்றில் திருப்­தி­க­ர­மான நகர்­வுகள் உள்­ள­தாக கரு­து­கி ன்­றீர்­களா?

பதில் :- கொடுத்த வாக்­கு­று­திகள் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­படவில்லை. எனினும் எத­னையும் செய்­ய­வில்லை என முழு­மை­யாக நிரா­க­ரிக்­கவும் முடி­யாது. பல விட­யங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு அரை­கு­றை­யாக இடைநடுவே உள்­ளன. காணி விடு­விப்பு அரை­வாசி இடம்­பெற்­றுள்­ளது, கைதி­களின் அரை­வாசி பேர் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். அர­சியல் அமைப்பு நகர்­வு­களும் அரை­வாசி நடை­பெற்­றுள்­ளன. ஆனால் எந்த நகர்வும் பூர­ண­ம­டை­ய­வில்லை. இப்­போது அர­சாங்­கத்தின் காலம் முடி­ய­டைய குறு­கிய காலம் உள்ள நிலையில் இவற்றில் அனைத்­தையும் பூர­ணப்­ப­டுத்த முடி­யுமா என்ற கேள்வி எழு­கின்­றது.

கேள்வி :- இந்தக் குறு­கிய காலத்தில் புதிய அர­சியல் அமைப்பு நகர்­வுகள் பூர­ண­ம­டையும் என்ற நம்­பிக்கை உள்­ளதா ?

பதில் :-2016 மார்ச் மாதத்தில்தான் அர­சியல் அமைப்பு நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இதில் ஆறு மாத காலத்தில் முக்­கி­ய­மான நட­வ­டிக்­கைகள் பூர்த்­தி­யாகி இருந்­தன.உப குழுக்­களின் அறிக்­கை பூர­ணப்­ப­டுத்­தப்­பட்டு இடைக்­கால அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.இந்த வேகத்­தி­லேயே அடுத்த கட்­டத்தை நாம் கையாண்­டி­ருந்தால் ஒரு வருட காலத்தில் இதனை பூர்த்­தி­யாக்­கி­யி­ருக்க முடியும். 2017 மார்ச் மாதம் அளவில் புதிய அர­சியல் அமைப்­பினை உரு­வாக்­கி­யி­ருக்க முடியும். ஆனால் அது நடை­பெ­றாது இழுத்­த­டிக்க பல கார­ணங்கள் உள்­ளன. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியே இதற்கு முக்­கிய கார­ண­மாகும். அதேபோல் அடுத்­த­தாக இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் அர­சாங்­கத்தில் பிர­தான இரண்டு கட்­சி­களும் பாரிய பின்­ன­டைவை சந்­தித்த காரணி, பல தட­வைகள் அமைச்­ச­ரவை மாற்­றங்கள் இடம்­பெற்­றமை, இழுத்­த­டிப்­பு­களை செய்­ய­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இப்­போது மாதிரி வரைவு தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.இப்­போதும் பின்­ன­டைவு என ஒன்றும் இல்லை. முன்­னேற்­ற­க­ர­மான நகர்­வு­களே இடம்­பெற்­றுள்­ளன. சிலர் கட்சி மாறிய போதிலும் எதிர்ப்­புகள் என ஒன்றும் இல்லை. கால அவ­காசம் மட்­டுமே இப்­போது நெருக்­க­டி­யாக உள்­ளது. எனக்கும், கலா­நிதி ஜயம்­ப­திக்கும் முக்­கிய பொறுப்­புக்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இன்னும் சில வாரங்­களில் மாதிரி வரைவு ஆரா­யப்­படும்.எவ்­வாறிருப்­பினும் வேறு அர­சியல் கார­ணி­க­ளுக்­காக தலை­மைகள் தடுக்­கின்­றன என்­பதும் உண்மை.

கேள்வி:- ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சிதான் தடைக்கு காரணம் என்றால், ஜனா­தி­பதி விரும்­ப­ வில்­லையா?

பதில் :- அவர் புதிய அர­சியல் அமைப்­பினை உரு­வாக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உள்ளார். அவ­ருக்கு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மீது ஆதிக்கம் இல்­லா­மையே சிக்­க­லாக உள்­ளது.அவ­ருக்கு முழு­மை­யான செல்­வாக்கு இல்­லாத கார­ணத்­தினால் இந்த விட­யங்கள் தடை­ப­டு­கின்­றன.அவர்­களை ஒன்­றாக வைத்­து­க்கொண்டு அர­சியல் அமைப்­பினை முன்­னெ­டுக்க முடி­யா­த­மையே ஜனா­தி­ப­திக்­குள்ள சிக்­க­லாகும்.

 

கேள்வி :- தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை விட்டு வெளி­யே­று­வ­தாக கூறு­கின்­றீர்­களே, ஏன் ?

பதில் :- நான் அர­சி­ய­லுக்கு வந்­ததே அர­சியல் யாப்பு ரீதியில் ஒரு தீர்­வினை பெற­வேண்டும் என்­ப­தற்­கா­கவே.அந்த முயற்­சிகள் வெற்றி பெற்றால் அதற்கு பின்னர் நான் அர­சி­யலில் இருக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. அதேபோல் அர­சியல் அமைப்பு விவ­காரம் முழு­மை­யான தோல்­வியில் முடிவடைந்­தாலும் அதற்­கான பொறுப்­பினை நான் ஏற்­க­வேண்டும். இந்த முயற்­சியில் அதற்­கான பொறுப்­பினை நானும் தலைவர் சம்­பந்­தனும் மட்­டுமே ஏற்­றுள்ளோம்.ஆகவே தோல்­வியில் முடிவடைந்தால் நான் வெளி­யேற வேண்டும்.ஆகவேதான் நான் அவ்­வா­றான கருத்­தினை முன்­வைத்தேன்.நான் ஏற்­க­னவே எனது இரா­ஜி­னாமா கடி­தத்தை எழு­தினேன். அது அரை­வா­சியில் உள்­ளது. தேவைப்­படும் நிலையில் அதனை நான் பூர்த்தி செய்வேன். எவ்­வாறு இருப்­பினும் அர­சி­யலில் உள்­ள­வர்கள் தாம் எடுக்கும் வேலைத்­திட்­டத்­திற்­கான முழு­மை­யான பொறுப்­பினை ஏற்க வேண்டும் என்­பது எனது கருத்து. இதில் தோல்வி கண்டால் இரா­ஜி­னாமா செய்ய வேண்டும் என்ற முன்­னேற்­ற­க­ர­மான அர­சியல் கலா­சா­ரமும் இருக்க வேண்டும்.வெளி­நா­டு­களில் இது உள்­ளது. தவறு ஏற்­பட்டால் அதற்­கான பொறுப்­பினை ஏற்க வேண்டும்.

கேள்வி:- முன்­னேற்ற அர­சியல் ஆரோக்­கி­ ய­மான விட­யமே, எனினும் ஒரு அமைச்சு பொறுப்பில் இருக்கும் நபர் இரா­ஜி­னாமா செய்­வது என்­பதை கூறலாம்.எனினும் நீங்கள் அதற்கு தயா­ரா­வது ஏன்?கட்­சிக்குள் அழுத்­தமா?

பதில்:- அவ்­வாறு ஒன்றும் இல்லை. வீணாக அவர்கள் ஓடித்­தி­ரிய வேண்­டிய அவ­சியம் இல்லை.நான் வில­குவேன். அதற்­கான காலம் உள்­ளது.எப்­போதும் அர­சி­யலில் இருந்து விலக வேண்டும். அது தான் எனது நிலைப்­பாடு.

 

கேள்வி:- ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணை ­ய­வுள்­ள­தாக கூறு­கின்­றனர். நீங்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணையும் எண்ணம் உள்­ளதா ?

பதில் :- ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணையும் நோக்கம் ஒரு­போதும் இருந்­த­தில்லை.அவ்­வா­றான ஒரு சிந்­தனை எனக்­கில்லை.ஏன் அவ்­வாறு கூறு­கின்­றனர் என்றும் எனக்கு தெரி­ய­வில்லை. அர­சியல் அமைப்பு உரு­வாக்க விட­யத்தில் வழி­காட்டல் குழுவின் தலைவர் பிர­தமர். இந்த விட­யத்தில் அதன் செய­ல­கத்தை மேற்­பார்வை செய்ய நிய­மிக்­கப்­பட்ட நபர்­களில் நான் முக்­கி­ய­மான நபர். நானும் கலா­நிதி ஜயம்­ப­தியும் இணைத்­த­லை­வர்கள். நாம் இரு­வ­ருமே நிகழ்ச்சி நிரல் தயா­ரிக்­கின்றோம். இதன் கார­ண­மாக பிர­த­ம­ருடன் நெருக்­க­மாக இயங்க வேண்­டிய தேவை உள்­ளது. அதனை நாம் மீற­மு­டி­யாது. இதை பார்க்கும் நபர்­க­ளுக்கு நாம் நெருக்­க­மாக உள்­ளதை போல தோன்­றலாம். ஆனால் எம்மால் இதில் எதிர்ப்பை காட்­டிக்­கொண்டு செயற்­பட முடி­யாது.

 

கேள்வி:- ஐக்­கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்தால்?

பதில்:- அழைப்பு விடுத்தால் செல்ல வேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை. அர­சி­யலில் இருக்க வேண்டும் என்­ப­தற்­காக நான் அர­சி­ய­லுக்கு வர­வில்லை. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்டும் என்­ப­தற்­காக அழைத்து வரப்­பட்ட ஒரு நபர் நான். எனக்கும் அர­சியல் ஈடு­பாடு தீர்வு வரையில் தான் உள்­ளது. இன்­னொரு கட்­சியில் சென்று அர­சியல் செய்ய வேண்டும் என்ற தேவை எனக்கு ஒரு­போதும் இருந்­த­தில்லை.

கேள்வி :- தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்க்கட்­சி­யாக இருப்­பதை விடவும் அர­சாங்­கத்தில் அங்கம் வகித்­துக்­கொண்டு தமிழ் மக்­க­ ளுக்­கான நலன்­களை பெற்­று­க்கொ­டுக்க முடியுமே?

பதில் :- அவ்­வா­றான ஒரு கேள்வி இப்­போது எழுந்­துள்­ளது.இது ஆரா­யப்­பட வேண்­டிய ஒரு விடயம்.எமது மக்­களும் அவ்­வாறு சிந்­திக்­கின்­றனர் என்­பது தெரி­கின்­றது.கடந்த தேர்தல் முடி­வு­களில் இருந்து அது வெளிப்­ப­டு­கின்­றது.எனினும் எமது நிலைப்­பாட்டில் இது­வ­ரையில் அவ்­வா­றான மாற்­றங்கள் எதுவும் ஏற்­ப­ட­வில்லை. எமக்­கான தீர்­வுகள் கிடைக்கும் வரையில் மத்­திய ஆட்சி அதி­கா­ரங்­களை கையில் எடுக்கக்கூடாது என்­ப­தையே நாம் சிந்­தித்து வரு­கின்றோம்.எமது இந்த நிலைப்­பாட்டில் எந்த மாற்­றங்­களும் இல்லை.

 

கேள்வி :- மக்­களின் நிலைப்­பாட்டை கவ­னத்தில் கொள்­ள­வில்­லையா ?

பதில் :- மக்­களின் அழுத்­தங்­களை கவ­னத்தில் கொண்டே நாம் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களில் இணைந்து செயற்­பட்டு வரு­கின்றோம்.வடக்கு,கிழக்கு அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் குறித்து நாம் பிர­த­ம­ருடன் இணைந்து கலந்­து­ரை­யாடி வரு­கின்றோம். எதிர்க்­கட்­சியில் உள்ள கார­ணத்­தினால் நாம் எமது மக்­களின் நலன்­களை கையாளும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களில் பின்­னிற்கப் போவ­தில்லை. ஜனா­தி­ப­திக்கும், பிர­த­ம­ருக்கும் நாம் இதனை தெரி­வித்­துள்ளோம்.சென்ற ஆட்­சியில் நாம் இந்த ஒத்­து­ழைப்­பு­களை வழங்­க­வில்லை. இந்த ஆட்­சியில் நாம் ஒத்­து­ழைப்பு வழங்கி செயற்­பட்டு வரு­கின்றோம்.எனினும் ஆளும் தரப்­புடன் இருந்தால் பேரம்­பேசும் சக்தி இல்­லாமல் போய்­விடும்.தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு கிடைக்கும் வகையில் நாம் எதிர்க்­கட்­சி­யாக இருக்க வேண்டும்.

 

கேள்வி :- எனினும் கடந்த தேர்தல் பெறு­பே­று­ களை பார்த்தால் மக்­களின் நிலைப்­பாடு மாற்றம் பெற்­றுள்­ளது.வடக்கில் உங்­களை ஆத­ரிக்­காது பிர­தான கட்­சி­களை ஆத­ரித்­துள்­ளனர்.இது உங்கள் மீதுள்ள அவ­நம்­பிக்­கையா அல்­லது அதி­ருப்­தியா ?

பதில் :- இது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மீது மக்­க­ளுக்கு ஏற்­பட்ட அவ­நம்­பிக்கை தான் பிர­தா­ன­மான காரணம். மக்­க­ளுக்­கான தீர்வு இல்லை. உட­னடி பிரச்­சி­னை­களும் தீர­வில்லை. 70 ஆண்­டு­கால பிரச்­சினை இப்­போது முடி­யாது என்ற சந்­தே­கமும் மக்கள் மத்­தியில் உள்­ளது. அர­சியல் விவ­கார இழுத்­த­டிப்­புகள் இடம்­பெறும் போது பழைய சரித்­திரம் தான் இப்­போதும் இடம்­பெறப் போகின்­றது என்ற மக்­களின் சந்­தேகம் அதி­க­ரித்­துள்­ளது.இந்த சூழலில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு எதி­ராக தமது குரலை கொடுத்­த­தா­கவே நான் கரு­து­கின்றேன்.ஆக­வேதான் அந்த வாக்­குகள் வேறு ஒரு அணியை மாத்­திரம் சென்­ற­டை­யாது பல கட்­சி­க­ளுக்கும் சிதை­வ­டைந்­துள்­ளன. எங்­க­ளுக்கு எதி­ரான ஒரு செய்­தியை மக்கள் தெரி­வித்­துள்­ளனர்.

கேள்வி :- மாகா­ண­ சபை தேர்தல் குறித்து எதிர்க்­கட்சி என்ன நிலைப்­பாட்டில் உள்­ளது? தேர்­தலை நடத்த அழுத்தம் கொடு­க்கின்றீர்­களா?

பதில் :- தேர்தல் பிற்­போ­டப்­படக் கூடாது என்­பதே எமது நிலைப்­பா­டாகும். தேர்தல் தடை­ப்ப­டு­வதை எந்த சந்­தர்ப்­பத்­திலும் அனு­ம­திக்க முடி­யாது.இப்­போது ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணை­யையும் நாங்கள் தான் கொண்­டு­வந்­துள்ளோம்.தேர்­தலை ஒத்தி வைப்­பது ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணா­ன­தாகும்.எனினும் தேர்தல் முறை­மை மாற்­றப்­பட வேண்டும் என்றால் முதலில் தேர்­தலை நடத்­தி­விட்டு அதன் பின்னர் தேர்தல் முறை­மையை மாற்­ற­ வேண்டும்.தேர்தல் முறை­மையை காட்டி தேர்­தலை பிற்­போ­டக்­கூ­டாது.தேர்­தலை தள்­ளிப்­போட்டால் அது அர­சாங்­கத்­துக்கே பாத­க­மாக அமையும்.கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மூல­மாக அர­சாங்கம் அதன் விளை­வு­களை அனு­ப­வித்­தது.தேர்­தலை தள்­ளிப்­போ­டு­வதால் மக்­க­ளுக்கு எப்­போதும் அர­சாங்கம் மீதான நம்­பிக்கை இழக்­கப்­படும்.புதிய அர­சியல் அமைப்பில் தேர்தல் முறைமை விட­யத்தில் குறித்த நாளில் தேர்­தலை நடத்­து­வது குறித்தும் நாம் கலந்­து­ரை­யாடி வரு­கின்றோம்.ஒரு தினத்தை தெரிவு செய்தால் அதே தினத்தில் தேர்­தலை நடத்­தி­யாக வேண்டும் என்ற கருத்­தையும் முன்­வைத்­துள்ளோம்.எமது நாட்டில் தேர்­தலை பிற்­போ­டு­வது பழகிப்­போன ஒன்­றாகும். ஜன­நா­யகம் பேசி­ய­வர்கள் அனை­வ­ருமே தேர்­தலை ஒழுங்­காக நடத்­த­வில்லை.ஆகவே கூடிய விரைவில் ஒரே நாளில் தேர்­தலை நடத்தும் அர­சியல் அமைப்பு சட்­டத்தை ஏற்­ப­டுத்­தவும் முயற்­சிக்­கின்றோம்.

 

கேள்வி :- இந்தத் தேர்­தல்கள் பிற்­போ­டப்­பட்டு சென்­றாலும் இறு­தியில் ஜனா­தி­பதி தேர்­தலை சந்­தித்தே ஆக­வேண்டும். இதில் அடுத்த ஜனா­தி­ பதி வேட்­பாளர் குறித்து பல்­வேறு தெரி­வுகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அத­னுடன் இரா­ணுவ ஆட்சி முறைமை ,ஹிட்லர் என்ற கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.இதை எவ்­வாறு பார்க்­ கின்­றீர்கள்?

பதில்:- அஸ்­கி­ரிய அனு­நா­யக தேரர் ஒரு­வரின் கருத்­துடன்தான் இந்த விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன.ஆனால் அவர் கூறிய கருத்­துடன் இணங்கும் சிந்­தனை கொழும்பில் பலர் மத்­தியில் உள்­ளது. இந்த அர­சாங்கம் ஒழுங்­காக எத­னையும் செய்­ய­வில்லை. கோத்த­பாய ராஜபக் ஷ கொழும்பை சீராக வைத்­தி­ருந்தார். ஆகவே அவர் கையில் ஆட்­சியை கொடுத்தால் நாடு சீராக அமையும் என்ற கருத்து நில­வு­கின்­றது. ஆனால் இது பார­தூ­ர­மா­னது என்­பதை இவர்கள் விளங்­கிக்­கொள்­ள­வில்லை. ஒரு ஜன­நா­யக சூழலில் இவ்­வா­றான ஒரு முறைக்குள் செல்­வது பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்­பதை விளங்­கிக்­கொள்­ள­வில்லை.ஏனென்றால் இவர்கள் வினைத்­தி­ற­னாக செயற்­பட வேண்டும் என்­ப­தற்கு அப்பால் அதனை செய்ய அடக்­கு­மு­றையை கையாள்­வார்கள்.அடக்­கு­முறை என்­பது ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணா­னது. எவ்­வாறு இருப்­பினும் எமது நாட்டில் இரா­ணுவ சிந்­த­னைக்கு மக்கள் இட­ம­ளிக்க மாட்­டார்கள் என்­பது எமது நம்­பிக்கை. ஒரு சில மட்­டத்தில் கோத்­த­பாய ராஜபக் ஷ வரு­வது நல்­லது என்ற சிந்­தனை இருந்­தாலும் பெரும்­பா­லான சிங்­கள மக்கள் அவரை ஆத­ரிக்­கப்­போ­வ­தில்லை. பொது எதி­ர­ணியும் வெற்­றி­பெறக் கூடிய ஒரு­வரை கள­மி­றக்க வேண்டும் என்றால் அது கோத்­தபாய ராஜபக் ஷவாக இருக்க வாய்ப்­பில்லை என்­பதே எனது எண்ணம்.

கேள்வி :- வடக்கின் அடுத்த முதல்வர் குறித்து இப்­போதே ஆய்­வு­களும், கருத்­துக்­களும் முன் ­வைக்­கப்­ப­டு­கின்­றன.தமிழ் தேசியக் கூட்­ட ­மைப்பு யாரை கள­மி­றக்­கப்­போ­கின்­றது?

பதில் :- இன்­னமும் வடக்கு முதல்வர் குறித்து எந்தத் தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை.வடக்­குக்கு தெரிவு செய்ய முன்னர் கிழக்கு மாகா­ணத்­துக்­கான முதல்­வரை தெரி­வு­செய்ய வேண்டும். சென்ற தடவை கிழக்கு மாகா­ணத்தில் எமக்கு 11 ஆச­னங்கள் இருந்­தன.அதனை வைத்­து­க்கொண்டு எம்மால் ஆட்­சியை அமைத்­தி­ருக்க முடி­யாது.மத்­தியில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்டபோது ஒரு சந்­தர்ப்பம் எழுந்­தது.எனினும் எமக்கு போதிய வாய்ப்­புகள் இருக்­க­வில்லை. எம்­மை­விட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸுக்கு குறை­வான ஆச­னங்கள் இருந்த போதும் அவர்­க­ளுக்கு முத­ல­மைச்சர் பத­வியை கொடுத்தோம்.நாங்கள் ஆட்­சியில் பங்­கு­கொண்டோம்.கிழக்கில் தமிழ்–முஸ்லிம் உறவு என்­பது மிகவும் முக்­கி­ய­மா­னது.வட­,கி­ழக்கு இணைப்பு குறித்து சிந்­திக்கும் போதும் இந்த உற­வு­மு­றையை பலப்­ப­டுத்­தாது மேற்­கொள்ள முடி­யாது. அதற்­காக நாம் பரீட்­சார்த்­த­மாக இவற்றை கையாண்டோம். அதே சிந்­த­னையில் எமக்கு தான் இந்­த­முறை முத­ல­மைச்சு பதவி வர­வேண்டும். அதற்கு முஸ்லிம் கட்­சிகள் ஆத­ர­வாக இருக்க வேண்டும், மாகா­ண­சபை கலைக்­கப்­பட்டு 9 மாதங்கள் கடந்­துள்­ளன.ஆகவே கிழக்கின் முதல்வர் யார் என்­பது குறித்து முதலில் நாம் சிந்­திக்க வேண்டும்.அத்தோடு சேர்த்து வடக்கு மாகா­ணத்­துக்கும் ஒரு­வரை தெரி­வு­ செய்ய வேண்டும்.அனே­க­மாக இரண்டு மாகா­ணங்­க­ளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் இடம்­பெறும் வாய்ப்­புகள் உள்­ளதால் கட்சி இரண்டு தெரி­வு­க­ளையும் விரைவில் மேற்­கொள்ளும்.

கேள்வி:-வடக்கு முதல்வர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா தயார் என கூறு­கின்­றாரே, இது குறித்து பரி­சீ­லனை செய் ­ய­வில்­லையா?

பதில் :- அவர் அவ்­வாறு கூறவும் காரணம் உள்­ளது.சென்ற தடவை வடக்கு முதல்வர் வேட்­பா­ள­ராக மாவை சேனா­தி­ரா­ஜாவை கள­மி­றக்க தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. கூட்­ட­மைப்பின் சகல கட்­சி­களும் அந்தத் தீர்­மா­னத்தை ஆதரித்தன. உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அனைத்துக் கட்­சி­களும் அந்த தீர்­மா­னத்தை அங்­கீ­க­ரித்­தன. எனினும் அன்­றைய சூழலில் மாற்று சிந்­தனை ஒன்­றினை முன்­னெ­டுக்க வேண்­டிய கட்­டாயம் எழுந்­தது. அதற்­க­மைய முன்னாள் நீதி­ய­ரசர் விக்­கி­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்க தீர்­மானம் எடுத்தோம். எமது நிலைப்­பாட்டை விளங்­கிக்­கொண்டு மாவை சேனா­தி­ராஜா தானாக விட்­டுக்­கொ­டுத்தார்.அவர் அன்று பிடி­வாதம் பிடித்­தி­ருந்தால் இன்று அவர்தான் வடக்கின் முதல்­வ­ராக இருந்­தி­ருப்பார். ஆனால் அவர் தானாக இவற்றை விட்­டுக்­கொ­டுத்து தியா­கத்தை செய்தார். அவர் இதற்கு முன்­னரும் தமிழ் மக்­க­ளுக்­காக பல தியா­கங்­களை செய்­தவர்.அது தமிழ் மக்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும்.அவர் எந்தக் காலத்­திலும் தனது கொள்­கையை விட்­டுக்­கொ­டுக்­கா­தவர். அப்­ப­டி­யான ஒருவர் இந்த முறையும் தியாகம் ஒன்­றினை செய்தார்.அதே நிலையில் விக்­கி­னேஸ்­வரன் முதலில் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்க இணக்கம் தெரி­விக்­காத போதிலும் பின்னர் தான் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மட்­டுமே முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக செயற்­ப­டு­வ­தா­கவும், பின்னர் மாவை பொறுப்­பினை ஏற்­றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரி­வித்தார்.ஆனால் கால சூழ்­நி­லையில் அவரே முத­ல­மைச்­ச­ராக இருந்து வரு­கின்றார்.அதன் பின்­ன­ணியில் தான் வடக்கு மாகா­ண­சபை ஒழுங்­காக இயங்­க­வில்லை,பிரே­ர­ணை­களை நிறை­வேற்­று­வ­துடன் மாத்­திரம் வடக்கு மாக­ாண­ சபை நின்­று­விட்­டது.குறு­கிய அதி­கா­ரங்கள் இருந்த போதிலும் அதைக்­கூட வடக்கு மாகா­ண­சபை கையா­ள­வில்லை என்­பது பொது­வான கருத்து. ஆகவே அவ்­வா­றான சூழ்­நி­லையில்தான் சென்ற தடவை விட்ட தவறை இந்த தடவை விடக்கூடாது என மாவை சேனா­தி­ராஜா கூறு­கின்றார். இந்தத் தட­வையும் கட்­சிகள் தன்னிடம் கேட்டால் போட்­டி­யிடத் தயார் என கூறி­யுள்ளார். ஆனாலும் இன்னும் அவ்­வா­றான தீர்­மா­னத்தை கட்­சிகள் எடுக்­க­வில்லை.

கேள்வி:- மீண்டும் விக்­கி­னேஸ்­வரன் கள­மி­ றங்­கினால் ஆரோக்­கி­ய­மாக அமையும் என்ற நிலைப்­பாடு உள்­ளதா? அல்­லது அவரை மாற்­ற­ வேண்டும் என்ற சிந்­தனை உங்கள் மத்­தியில் உள்­ளதா?

பதில் :- 2013 ஆம் ஆண்டு இருந்த சூழல் இப்­போது இருக்கும் சூழ­லிலும் பார்க்க முற்­றிலும் மாறு­பட்ட ஒன்­றாக இருந்­தது. ஒடுக்­கு­முறை ஆட்­சியில் இருந்த சூழ்­நிலை, இப்­போது அது இல்லை. எனினும் அடுத்த மாகா­ண­ சபை தேர்தல் எப்­போது நடை­பெறும் என்­பது எமக்கு தெரி­யாது. அர­சியல் அமைப்பு எவ்­வா­றான நிலையில் கொண்­டு­வ­ரப்­படும் என்­பதும் தெரி­யாது. இவை அனைத்­தையும் கவ­னத்தில் கொண்டு மாகா­ண­சபை தேர்­தலை அணு­க ­வேண்டும். விக்­கி­னேஸ்­வ­ரனை மீண்டும் கள­மி­றக்­கப்­போ­வ­தில்லை என்­பது என்­னு­டைய தனிப்­பட்ட கருத்­தாகும்.அதற்கு எதி­ராக எவரும் கருத்­துக்­கூ­ற­வில்லை. விக்­கி­னேஸ்­வ­ர­ன் மீது எதி­ராக பலர் நம்­பிக்­கையை இழந்­துள்­ளனர்.சொந்தக் கட்­சி­யி­னரே நம்­பிக்­கை இழந்­துள்­ளனர் என்­பதை அவர் உணர்ந்­துள்ளார்.

அதுதான் புதிய கட்சி தொடங்­கு­வது குறித்தும் தனித்து பய­ணிப்­பது குறித்தும் அவர் சிந்­தித்து வரு­கின்றார். யாராக இருந்­தாலும் கட்­சியின் செயற்­பா­டு­க­ளுக்கு இணக்­கம்­கண்டு செயற்­பட வேண்டும்.கட்சி தன்னை நிய­மிக்­க­வில்லை எனவே நான் தனிக்­கட்சி அமைக்­கப்­போ­கின்றேன் என ஒவ்­வொ­ரு­வரும் வரிந்­து­கட்­டிக்­கொண்டு சென்றால் தமிழ் மக்­க­ளுக்கு விடிவு ஏற்­ப­டாது. தமிழ் மக்­களின் ஒற்­றுமைதான் பிர­தா­ன­மானது.தேசிய கட்­சிகள் அனைத்­துமே பிள­வு­பட்­டுள்ள நிலையில் நாம் ஒற்­று­மை­யாக இருந்­தால்தான் வெற்­றி­பெற முடியும்.நாமும் பிள­வு­பட்டால் தமிழ் மக்­க­ளை பாது­காக்க முடி­யாது. மாவை எவ்­வாறு விட்­டு­க்கொ­டுப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றாரோ அதேபோல் அனை­வரும் விட்­டுக்­கொ­டுத்து செயற்­பட வேண்டும். முத­ல­மைச்சர் பதவி கிடைத்தால்தான் நான் செயற்­ப­டுவேன் இல்­லையேல் தனிக்கட்சி அமைப்பேன் என்ற சிந்­தனை இருந்தால் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.விக்­கி­னேஸ்­வ­ரனும் இதனை விளங்­கிக்­கொள்ள வேண்டும்.  

கேள்வி :- தமிழ் மக்­களின் தீர்­வு­களில் தமிழ் கட்­சி­களின் ஒற்­றுமை அவ­சியம் என்­பதை உண­ர வில்­லையா ?

பதில் :- தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் பிர­தான கட்­சி­யாக உள்ள இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியை பொறுத்தவரையில் எந்த சந்­தர்ப்­பத்­திலும் எந்தக் கட்­சி­யையும் நாம் புறக்­க­ணிக்­க­வில்லை.கூட்­ட­ணியைவிட்டு வெளி­யேறக் கூறவும் இல்லை. ஆரம்­பத்தில் அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் 2010 ஆம் ஆண்டு வில­கி­யது. ஆசன பங்­கீடு கார­ண­மா­கவே அவர்கள் வில­கி­னார்கள். கொள்கை என்று கூறு­வது பொய்.தமிழர் விடு­தலை கூட்­டணி வில­கி­யது. இப்­போது எம்­முடன் உள்­ளதா? இல்­லையா என்­பது எமக்குத் தெரி­ய­வில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப். தானா­கவே வெளி­யே­றி­யது. நாம் யாரையும் வெளி­யேறக் கோர­வில்லை. இன்­றைக்கும் கட்­சிகள் வில­கு­வது அவர்­களின் நிலைப்­பா­டாக உள்­ளதே தவிர எமது நிலைப்­பாடு அல்ல. இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி எப்­போதும் வீழ்ச்சி காண­வில்லை.

கேள்வி:- எனினும் கட்­சி­களின் பிளவு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை பல­வீ­னப்­ப­டுத்­துமே?

பதில்:- ஆம், இன்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பல­வீ­ன­மாக உள்­ளது. இது கட்­சி­களின் பிளவால்தான் என கூற முடி­யாது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்ட வாக்கு சரி­வினால் தான் இந்த பல­வீ­ன­மான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. எனினும் இப்­போதும் நாம் கூட்­ட­ணி­யாக செயற்­பட்டு வரு­கின்றோம்.வில­கி­ய­வர்கள் மீண்டும் வரு­வது என்றால் அது குறித்து ஆராயத் தயார்.

கேள்வி:- 20ஆம் திருத்­தத்தை கூட்­ட­மைப்பு ஆத­ரிக்­குமா, ஆத­ரிக்­கி­றதா ?

பதில் :- புதிய அர­சியல் அமைப்பு ஒன்று உரு­வாக வாய்ப்பு கிடைத்­துள்­ளது.இதில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வது என்­பது சக­ல­ரதும் நிலைப்­பாடு. இதில் மக்கள் விடு­தலை முன்­னணி உறு­தி­யாக நின்று நிறை­வேற்று அதிகார ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வது தொடர்பில் பேசி வரு­கின்­றது. இதில் எமது நிலைப்­பாடு புதிய அர­சியல் அமைப்பு சட்­டத்தை உரு­வாக்க வேண்டும் என்­ப­தாகும். அதில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை இருக்கக் கூடாது. அதை ஜே.வி.பி.யும் ஏற்­றுக்­கொண்டு அவை நடந்தால் இணங்கி வரு­வ­தாக கூறு­கின்­றனர். ஆகை­யினால் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை மட்­டுமே பேசாது முழு­மை­யான அர­சியல் அமைப்­பி­னையும் மாற்ற வேண்டும். நிறை­வேற்று அதிகார ஜனா­தி­பதி முறைமை கார­ண­மாக இந்த நாட்டில் மக்கள் சாக­வில்லை, அர­சியல் அமைப்பில் தீர்வு இல்­லாத கார­ணமே இழப்­பு­க­ளுக்கு காரணம். எனினும் 20ஆம் திருத்தம் மட்டும் வந்­தாலும் கூட நாம் எமது கொள்­கையின் பிர­கா­ரமே நடக்க வேண்டும். நிறை­வேற்று அதிகார ஜனா­தி­பதி முறை­மையை நீக்க வேண்டும் என்­ப­தையும் நாம் வாக்­கு­று­தி­களில் ஒன்­றாக முன்­வைத்­துள்ளோம்.

கேள்வி :- அர­சியல் கைதிகளின் விடு­தலை குறித்து ஏன் இன்­னமும் ஸ்­தி­ர­மான நிலைப் பாடு ஒன்­றினை எட்ட முடி­ய­வில்லை? அவர் களை விடு­விப்­ப­தற்­காக அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுப்­ப­தாக நீங்கள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தீர்களே ?

பதில் :- அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.அது குறித்து நாம் தொடர்ச்சியாக பேசி வருகின்றோம். அனைவரும் விடுவிக்கப்படுவதாக ஜனாதிபதி எமக்கு வாக்குறுதி கொடுத்தார். அதற்கமைய பலர் விடுவிக்கப்பட்டனர்.ஆனால் அனைவரையும் விடுவிக்க முடியாதுள்ளது. இது குறித்து நாம் இப்போதும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். இது குறித்து ஆராய பிரதமர் கூட்டம் ஒன்றை கூட்டவுள்ளதாகவும் கூறினார்.பத்து நாட்களுக்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பிலும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பேசினார். பிரதமர் நாடு திரும்பியவுடன் இந்த விடயத்துக்கு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி கொடுத்துள்ளார். வருகின்ற வாரங்களில் இந்த சந்திப்புகள் இடம்பெறும். சட்டமா அதிபர், முன்னாள் நீதி அமைச்சர் ஆகியோர் தடைகளாக இருந்தனர். எனினும் இப்போதும் முயற்சிகள் எதையும் கைவிடவில்லை. மிக அழுத்தமாக எமது கருத்துக்களை முன்வைப்போம். ஜனாதிபதிக்கு உள்ள தெற்கின் அழுத்தம் மற்றும் இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் கைதுகளை கருத்தில் கொண்டு அவர்களை சிறையில் வைத்துக்கொண்டு புலிகளை எவ்வாறு விடுதலை செய்வது என்ற கேள்வியை கேட்கின்றார். இராணுவத்தை சிறையில் வைத்துகொண்டு புலிகளை விடுவிப்பதாக தென்பகுதி அரசியலில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. எனினும் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அரசியல் நோக்கத்தில் தான் இந்த நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை இனியும் சிறையில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி:-உங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றதாக கூறுகின்றீர்கள், யாரால்?

பதில்:- இதன் பின்னணி எனக்கு தெரியவில்லை.எனினும் சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.எனினும் அரசியல் அமைப்பு உருவாக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையில் பல தரப்புகளுக்கு தேவைகள் உள்ளன. இதில் தமிழ் தரப்பு, தமிழருக்கு எதிரான தரப்பு என இரண்டு தரப்பும் உள்ளன. எனினும் யாருடைய உந்துதலில் இவர்கள் செயற்படுகின்றனர் என்பது எமக்கு தெரியவில்லை. எனினும் வேறு கோணங்களில் சம்பவங்களை காட்டி வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம். எனக்கான பாதுகாப்பை நான் கோரவில்லை, அரசாங்கம் சில ஏற்பாடுகளை செய்துள்ளது. நானாக பாதுகாப்புகள் எதையும் கேட்கவில்லை. 

ஆர்.யசி

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-07-14#page-3

  • கருத்துக்கள உறவுகள்

இது  தான் கடைசீல நடக்கப்போகுது என்று  எந்த இளிச்சவாயனுக்கும் தெரியும்.  நல்லரசாங்கம் எண்டு  காவடி தூக்கீட்டு இப்ப கதை விடுறீங்களா?

 

கொலைகாரர்களே அந்தக் கொலைகளை விசாரணை செய்தால் எப்படியிருக்குமோ அப்படியே சுமந்திரனின் கருத்துக்களும் அமைந்துள்ளது.

கைக்கூலி அரசியலில் கொடிகட்டி பறக்கும் சுமந்திரனின் தமிழின விரோத செயற்பாடுகள் மூலமே அரசியல் தீர்வு விடயத்தில் முன்னேற்றம் தாமதமடைந்தது என்ற உண்மை சுமந்திரனின் வாயால் வரும் என்று எதிர்பார்க்க முடியாது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.