Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அபாய அறிவிப்பு!

Featured Replies

அபாய அறிவிப்பு!

 

பி.மாணிக்­க­வா­சகம்

பிராந்­திய சுயாட்­சியின் கீழ் சமஷ்டி முறையில் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுக்க வேண்டும் என்­பதே, ஆயுதப் போராட்டம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டதன் பின்னர் தமிழர் தரப்பு அர­சி­யலின் அடிப்­படை நோக்­க­மாகும். அந்த நோக்­கத்தை நிறை­வேற்­று­வ­தற்கு அல்­லது அந்த இலக்கை அடை­வ­தற்கு அவ­சி­ய­மான செய­ற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­னவா என்­பது கேள்­விக்கு உரி­ய­தா­கி­யி­ருக்­கின்­றது.

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு, இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கா­கச் செய்து கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்தின் மூலம் மாகா­ண­சபை ஆட்சி முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால் தனி­நாடு கோரிய தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களை பூர்த்தி செய்­ய­வில்லை என்­ப­தற்­காக தமிழ் அர­சியல் தலை­வர்கள் மாகாண ஆட்சி முறையை நிரா­க­ரித்­தி­ருந்­தார்கள்.  

எனினும் இந்­திய அர­சாங்கம் ஆயு­த­மேந்திப் போரா­டிய அமைப்­புக்கள் மீது செலுத்­தி­யி­ருந்த அழுத்தம் கார­ண­மாக ஈ.பி.­ஆர்­.எல்.எவ்.கட்­சியின் ஊடாக வடக்கு கிழக்கு மாகா­ண­சபை உரு­வாக்­கப்­பட்டு செயற்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால், 13 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்­டத்தின் ஊடாக அதி­காரம் பெற்­றி­ருந்த மாகா­ண­சபை ஆட்சி முறையை சரி­யான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் முயற்­சிக்­க­வில்லை. 

இந்த விட­யத்தில் ஏனோ­தானோ என்று மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யுடன் அது நடந்து கொண்­டது. ஆயுதப் போராட்ட நெருக்­க­டிக்குள் நடத்­தப்­பட்ட ஒரு தேர்­தலின் மூலம், வடக்கு கிழக்கு மாகாண ஆட்சிப் பொறுப்பை கைப்­பற்­றி­யி­ருந்த ஈ.பி­.ஆர்­.எல்.எவ்., இந்­தி­யாவின் உத­வி­யுடன், பய­னுள்ள வகையில் அதனைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு முற்­பட்ட போதிலும், அர­சாங்கம் அதற்கு உரிய முறையில் ஒத்­து­ழைக்­க­வில்லை. அது, பொறுப்­பற்ற போக்கில் செயற்­பட்­டி­ருந்­ததைக் கண்­டித்து, தன்­னிச்­சை­யாக தனி ஈழப் பிர­க­ட­னத்தைச் செய்­ததன் பின்னர் முத­ல­மைச்சர் வர­த­ராஜப் பெருமாள் உள்­ளிட்ட ஈ.பி.­ஆர்.­எல்.எவ். கட்­சி­யினர் அமை­திப்­ப­டை­யுடன் நாட்­டை­விட்டு வெளி­யே­றினர்.  

இவ்­வாறு கைவி­டப்­பட்ட மாகாண ஆட்சி முறை­யைத்தான், விடு­த­லைப்­பு­லி­களை இரா­ணுவ ரீதி­யாக செய­லி­ழக்கச் செய்­ததன் பின்னர், அரசு நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளது. இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்­தின்­படி இணைந்­தி­ருந்த வடக்கும் கிழக்கும், சுமார் 19 வரு­டங்­களின் பின்னர் 2006 ஆம் ஆண்டு, உச்ச நீதி­மன்­றத்தின் தீர்ப்பு ஒன்றின் உத­வி­யுடன், இரண்­டாகப் பிரிக்­கப்­பட்­டது. யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து, அவ்­வாறு தனித்­தனி மாகா­ணங்­க­ளாகப் பிரிக்­கப்­பட்ட கிழக்­கிற்கும், வடக்­கிற்கும் இரண்டு வெவ்வேறு தேர்­தல்­களின் மூலம், இரண்டு மாகாண சபைகள் செயற்­ப­டுத்­தப்­பட்­டன. 

அந்த வகை­யி­லேயே வட­மா­காண சபை உரு­வாக்­கப்­பட்­டது. இந்த மாகாண சபைக்­கென நடத்­தப்­பட்ட தேர்­தலில் தமிழ் மக்கள் ஓர­ணியில் திரண்டு, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை வெற்றி பெறச் செய்­தி­ருந்­தார்கள். இந்த வெற்­றியின் மூலம் மாகா­ண­சபை முறை­மையின் கீழ் தமிழ் மக்­க­ளுக்­கான ஓர் அரசு உத­ய­மா­கி­யி­ருந்­தது என்­று­கூட பெருமை பாராட்­டப்­பட்­டது. இந்த மாகாண அர­சிடம் தமிழ் மக்கள் பெரும் எதிர்­பார்ப்­பு­களைக் கொண்­டி­ருந்­தார்கள். உள்ளூர் அர­சி­யலில் மட்­டு­மல்­லாமல் சர்­வ­தேச அள­வி­லும்­கூட இந்த மாகா­ண­ச­பையின் மூலம் பல விட­யங்கள் சாதிக்­கப்­ப­டலாம் என்ற எதிர்­பார்ப்பு நில­வி­யது.  

எதிர்­பார்ப்­பு­களும் ஏமாற்­றமும் 

வட­மா­கா­ண­சபைத்தேர்­தலின் ஊடாக அர­சி­ய­லுக்குக் கொண்டு வரப்­பட்ட முன்னாள் நீதி­ய­ரசர் விக்­னேஸ்­வரன் வட­மா­காண முத­ல­மைச்­ச­ராக மக்­களால் அமோ­க­மாகத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தார். வட­மா­கா­ணத்தின் அரச நிர்­வாகம் தமிழ் மக்­களின் கைகளில் வந்­த­மையும், நீதித்­து­றையில் முதிர்ந்த அனு­பவம் பெற்ற முன்னாள் நீதி­ய­ர­ச­ரா­கிய விக்­னேஸ்­வரன் அதன் முத­ல­மைச்­ச­ராகத் தெரி­வா­கி­யி­ருந்­த­மையும் தமிழர் அர­சி­யலில் பெரும் மாற்­றங்­க­ளையும் முன்­னேற்­றங்­க­ளையும் கொண்டு வரும் என பலரும் ஆவ­லோடு எதிர்­பார்த்­தி­ருந்­தார்கள். கடும் போக்கைக் கொண்ட இலங்கை அர­சாங்­கத்­திற்கு சட்­ட­ரீ­தி­யாக பல அழுத்­தங்­களைக் கொடுத்து, நியா­ய­மான ஓர் அர­சியல் தீர்வை நோக்கி நகர்த்திச் செல்­வ­தற்கு வட­மா­காண சபை உறு­துணை புரியும் என்ற எதிர்­பார்ப்பும் பர­வ­லாக நில­வி­யது. 

தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் உரி­மைக்­கான போராட்­டத்தில், கிடைப்­பதைப் பெற்று, குறைந்­ததைக் கொண்டு, கூடிய நிலை­மை­களை நோக்கி நகர்ந்து செல்­கின்ற அர­சியல் சாணக்­கிய முறை பின்­பற்­றப்­ப­ட­வில்லை என்ற ஒரு பொது­வான குறை கூறப்­ப­டு­வது உண்டு அதே­வேளை, தமிழ் மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளாக செய­ற்­பட்டு வந்த பல கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஓர­ணியில் உறு­தி­யாகச் செயற்­பட வேண்டும் என்றும் மக்கள் எதிர்­பார்த்­தார்கள்.  தொடர்ந்து, தமிழ் அர­சியல் கட்­சிகள் தங்­க­ளுக்குள் மோதிக்­கொள்­வதைத் தவிர்த்து, ஒன்­றி­ணைந்து அர­சியல் போராட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது. ஆனால் அந்த ஒற்­றுமை சாத்­தி­ய­மா­க­வில்லை. பல கட்­சி­களும் இணைந்த கூட்டு அமைப்பு மட்­டுமே சாத்­தி­ய­மா­யிற்று. ஓர் அணி என்ற ஒற்­று­மை­யான அர­சியல் கட்­ட­மைப்பு சார்ந்த  செயற்­பாட்­டுக்­கான வழி திறக்­கவே இல்லை. 

கூட்டுச் சேர்ந்த அணி­க­ளுக்­கி­டை­யி­லேயும் பல்­வேறு பிச்சுப் பிடுங்­கல்­களே இருந்­தன. பல்­வேறு அர­சியல் தந்­தி­ரோ­பாய நகர்­வு­களின் மூலம், தமிழர் தாயகப் பிர­தே­சங்­க­ளா­கிய வடக்­கையும் கிழக்­கையும் மீண்டும் ஒன்­றி­ணைய விடாமல் தடுத்து, தமிழர் தாயகம் என்ற அந்தப் பிர­தே­சங்­களின் வர­லாற்று அந்­தஸ்தை இல்­லாமல் செய்­வ­தற்­காக அர­சுகள் எடுத்த முயற்­சி­களை முறி­ய­டிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை தமிழ் அர­சியல் கட்­சி­க­ளினால் முன்­னெ­டுக்க முடி­ய­வில்லை. 

வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், அந்தத் தாய­கத்தில் பகி­ரப்­ப­டாத இறை­மை­யுடன் கூடிய சுய ஆட்சி என்ற அர­சியல் கனவு குறித்த பிர­சா­ரங்கள் மாத்­தி­ரமே முடுக்­கி­வி­டப்­பட்­டன. ஆனால் அந்த இலட்­சி­யத்­தையும், அந்த அர­சியல் இலக்­கையும் அடை­வ­தற்­கான இரா­ஜ­தந்­திரச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. இந்த கோஷங்கள் இன்று வரையில் வெற்றுக் கோஷங்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன. அந்த அர­சியல் இலக்கை நோக்­கிய நகர்வில் எந்­த­வித முன்­னேற்­றத்­தையும் காண முடி­ய­வில்லை. யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­ப­டு­வ­தற்கு முன்னர் வடக்­கிலும் சிங்­களக் குடி­யேற்­றங்கள் வலிந்து மேற்­கொள்­ளப்­பட்­டன. யுத்­தத்தின் பின்னர், இரா­ணுவ மய­மான ஒரு சூழலில் தமிழ் மக்­களின் பாரம்­ப­ரிய குடி­யி­ருப்­புக்கள் கிரா­மங்கள் இரா­ணு­வத்­தினால் கப­ளீ­கரம் செய்­யப்­பட்டு, யுத்தம் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­துள்ள மக்­களின் மீள்­கு­டி­யேற்ற உரிமை அப்­பட்­ட­மாக மீறப்­பட்­டி­ருக்­கின்­றது. மறு­த­லிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

அதே­வேளை, வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­களின் தனித்­து­வ­மான தமிழ் முஸ்லிம் குடிப்­ப­ரம்­பலை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­காக இரா­ணு­வத்தின் நிழலில், சிங்­களக் குடி­யேற்­றங்­களும், பௌத்த மதச் சின்­னங்­களை நிறுவும் பணி­களும் பர­வலாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவற்றைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு மேற்­கொள்­ள­வில்லை. வட­மா­கா­ண­ச­பையும் அதற்­காக அர்த்­த­முள்ள வகையில் செயற்­ப­ட­வில்லை என்றே கூற வேண்டும். 

வட­மா­காண சபைக்­கான தேர்­தலில் தமிழ் மக்கள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பின்னால் ஒற்­று­மை­யாக ஓர் அணியில் ஒன்று திரண்­டி­ரு­க்­கின்­றார்கள் என்­பதைக் காட்­டு­வதன் ஊடாக அர­சாங்கத்தினதும், சர்­வ­தே­சத்­தி­னதும் பார்­வையை, பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பக்கம் திருப்பி, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும் என்று பிர­சாரம் செய்­யப்­பட்­டது. அதற்­க­மைய வட­மா­காண சபையின் நிர்­வாகம் சிறப்­பா­ன­தாக அமைய வேண்டும் என்­ப­தற்­கா­கவே தமிழ் மக்கள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை அறுதிப் பெரும்­பான்­மை­யுடன் வெற்­றி­பெறச் செய்­தார்கள். 

ஆனால் பெரும்­பான்மை பலத்­துடன் ஆட்சி நிர்­வாகப் பொறுப்பை ஏற்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் வட­மா­காண நிர்­வாகம் எவ்­வாறு நடந்து கொண்­டது? பல விட­யங்­களைச் சாதிக்­கக்­கூ­டிய வல்­லமை பொருந்­தி­யவர் என எதிர்­பார்க்­கப்­பட்ட முன்னாள் நீதி­ய­ர­ச­ரா­கிய வட­மா­காண முத­ல­மைச்சர் எதனைச் சாதித்­தி­ருக்­கின்றார்? -இந்த கேள்­வி­க­ளுக்கு முகம் சுழிக்­கத்­தக்க வகை­யி­லேயே பதில்கள் அமைந்­தி­ருக்­கின்­றன. வட­மா­கா­ண­சபை மக்­க­ளு­டைய எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்றத் தவ­றி­ய­தனால் மக்கள் பெரும் ஏமாற்­றத்­திற்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றார்கள். இதனால், மலை­போல தாங்கள் நம்­பி­யி­ருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் மீது அவர்கள் நம்­பிக்கை இழக்க வேண்­டிய நிலை­மைக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

குழப்­பங்­க­ளுக்குக் குறை­வில்லை

தங்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்டும். அதற்­காக உழைக்க வேண்டும். தங்­க­ளு­டைய தேவை­களை முடிந்த அளவில் பூர்த்தி செய்ய வேண்டும் என்­ப­தற்­கா­கவே வட­மா­கா­ண­ச­பைக்­கான முத­ல­மைச்­ச­ரையும் மற்றும் பிர­தி­நி­தி­க­ளையும் மக்கள் தெரிவு செய்து அனுப்­பி­னார்கள். ஆனால் அந்தப் பிர­தி­நி­திகள் உளப்­பூர்­வ­மாக மக்­க­ளு­டைய எதிர்­பார்ப்­பு­கனை சரி­வர நிறை­வேற்­றி­ய­தாகத் தெரி­ய­வில்லை.

தேர்­தலின் பின்னர், கடந்த 2013 ஆம் ஆண்டு, ஒக்­டோபர் மாத இறு­தியில் நிர்­வாகப் பொறுப்பை ஏற்ற வட­மா­கா­ண­ச­பையின் பத­விக்­காலம் முடி­வ­டைய இன்னும் மூன்று மாதங்­களே இருக்­கின்­றன. இந்த நிலை­யிலும் மாகா­ண­ச­பைக்குள் உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டை­யி­லான குழப்ப நிலைமை முடி­வுக்கு வர­வில்லை. மாகா­ண­ச­பைக்குள் சென்­ற­வர்கள் அங்கு அர­சியல் அந்­தஸ்­துக்கும், பதவி நிலை­க­ளுக்கும் தங்­க­ளுக்குள் முரண்­பட்டு, மோதிக்­கொண்­டி­ருக்­கின்­றார்­களே தவிர, மக்­க­ளு­டைய நலன்­களை முதன்­மைப்­ப­டுத்தி, அதற்­கேற்ற வகையில் செயற்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. 

வட­மா­காண முத­ல­மைச்சர் சாதா­ர­ண­மா­னவர் அல்ல. கற்று உயர்ந்­தவர். மக்கள் மத்­தியில் பல வழி­க­ளிலும் நன்­ம­திப்பைப் பெற்­றவர். நீதித்­து­றையில் உயர் பத­வியை வகித்­தவர். நீண்ட அனு­ப­வமும், முதிர்ச்­சியும் அவ­ருக்கு உண்டு. ஆனால், அவ­ச­ர­மா­கவும் அவ­சி­ய­மா­கவும் தீர்வு காணப்­பட வேண்­டிய பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ள மக்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்­வதில்  கூடிய அளவில் கவனம் செலுத்­த­வில்லை என்ற மனப்­ப­தி­வையே மக்கள் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

முத­ல­மைச்­சரும், மாகாண அமைச்­சர்­களும், உறுப்­பி­னர்­களும் மக்­க­ளுக்­கான சேவைகள் எத­னை­யுமே செய்­ய­வில்லை என்று கூறு­வ­தற்­கில்லை, பல காரி­யங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அதனை எவரும் மறுக்க முடி­யாது. ஆயினும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பின்­னரும், இன­வாத போக்­கிலும், இன ஒடுக்கு முறை­யிலும் ஆழ­மாகத் தோய்ந்­துள்ள அர­சு­களின் நட­வ­டிக்­கை­க­ளினால் தொடர்ச்­சி­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு, தன்­மு­னைப்­புள்ள அர­சியல் நலன்­க­ளுக்கு அப்பால் சேவை­யாற்ற வேண்­டி­யது அவ­சியம். 

அர­சி­யலில் மாகா­ண­ச­பையில் இருந்து அடுத்­த­டுத்த கட்­டங்­க­ளுக்கு வளர்ச்சி பெற்றுச் செல்ல வேண்டும் என்றும் முடிந்­த­வ­ரையில் அர­சியல் பத­வி­களில் ஒட்­டிக்­கொண்­டி­ருக்க வேண்டும் என்றும்  சுய அர­சியல் நலன் சார்ந்த செயற்­பா­டு­களைப் புறந்­தள்ளி, மக்கள் நலன்­சார்ந்து செயற்­பட வேண்­டி­யது அவ­சியம். முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் மக்கள் நலன்­க­ளுக்கே முதன்மை நிலை அளிக்­கப்­பட வேண்­டி­யது முக்­கியம்.

அர­சி­யலில் சாதா­ரண புறச்­சூழல் நில­வு­மானால், தன்­மு­னைப்பு பெற்ற அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பதில் தவறு காண முடி­யாது. ஆனால் மோச­மான யுத்­தத்­திற்கும் யுத்தப் பாதிப்­பு­க­ளுக்கும், யுத்­தத்தின் பின்­னரும் மோச­மான அர­சியல் ஒடுக்­கு­மு­றை­க­ளுக்கு மக்கள் முகம் கொடுத்­தி­ருக்­கின்­றார்கள். தேசிய அர­சியல் மட்­டத்தில் தீர்வு காணப்­பட வேண்­டிய விட­யங்­க­ளுக்கும், மாகாண மட்­டத்தில் தீர்வு காணப்­பட வேண்­டிய பிரச்­சி­னை­க­ளுக்கும் முடிவு ஏற்­ப­ட­மாட்­டாதா என்று அந்த மக்கள் ஏங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

காணிப்­பி­ரச்­சினை, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் பிரச்­சினை, அர­சியல் கைதி­களின் பிரச்­சினை என மக்­களை அன்­றாடம் அழுத்திக் கொண்­டி­ருக்­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­காக மக்கள் வீதி­களில் இறங்கிப் போரா­டு­கின்ற நிலை­மைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். மக்கள் தாமா­கவே முன்­னெ­டுத்­துள்ள இந்தப் போராட்­டங்­க­ளுக்கு அர­சியல் தலை­மைத்­து­வமும் இல்லை. அர­சியல் ரீதி­யான சரி­யான வழி­ந­டத்­தலும் இல்லை. 

இந்த நிலையில் கட்சி அர­சியல் நலன்கள், தனிப்­பட்­ட­வர்­களின் அர­சியல் முன்­னேற்றம், அர­சியல் துறை­யி­லான வளர்ச்சி என்­ப­வற்றில் கவனம் செலுத்­து­வதைப் பொருத்­தப்­பா­டு­டைய நட­வ­டிக்­கை­யாகக் கருத முடி­யாது. 

மோச­ம­டைந்­துள்ள நிலை­மைகள்

மாகா­ண­ச­பைக்­கான தேர்­தல்கள் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யி­லேயே நடத்­தப்­பட்­டன. அந்தத் தேர்­தல்கள் வெறு­மனே ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்­து­வ­தற்­காக நடத்­தப்­பட்­ட­தாகக் கருத முடி­யாது. அதி­காரக் குறை­பா­டு­களைக் கொண்­ட­தாக இருந்­தாலும், வடி­வ­மைக்­கப்­பட்ட கட்­ட­மைப்­புக்குள் மத்­திய அர­சாங்­கத்தின் ஆட்சி அதி­கார வல்­லமை தலை­யீடு செய்­கின்ற சூழலில், எஞ்­சி­யுள்ள அதி­கார வெளியில் தங்­களால் இயன்ற நட­வ­டிக்­கை­க­ளை ­முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு இயன்ற வகை­யி­லான வழி­மு­றை­களைப் பின்­பற்­றி­யி­ருக்­கவும் வேண்டும். 

அதி­காரப் பகிர்­வையும் பகி­ரப்­பட்ட இறை­யாண்­மை­யையும் வேண்­டி­நிற்­கின்ற ஒரு தளத்தில், மாகா­ண­சபை நிர்­வாக முறைமை பிராந்­திய மட்­டத்­தி­லான பிரச்­சி­னை­க­ளுக்கும், தேசிய மட்­டத்தில் படர்ந்­துள்ள அந்தப் பிரச்­சி­னை­களின் அம்­சங்­க­ளுக்கும் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய அவ­சி­யத்தை அடை­யாளம் காட்­டத்­தக்க வகையில் மாகாண சபையின் செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்க வேண்டும். 

இதன் மூலம் மாகா­ண­சபை நிர்­வா­கத்தின் கீழ் உச்­சக்­கட்ட அளவில் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த போதிலும், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கும், பாதிக்­கப்­பட்ட  மக்­களின் அதி­முக்­கிய தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்கும் மாகா­ண­சபை பொறி­மு­றையின் கீழ் முடி­யாமல் இருக்­கின்­றது என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். இதன் ஊடாக மாகா­ண­சபை நிர்­வா­கத்­திற்கு அப்பால் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் நடை­முறைச் செயற்­பா­டு­களை ஆதா­ர­மாகக் கொண்டு நிறு­வப்­பட்­டி­ருக்க வேண்டும்.  வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். 

 

மாகா­ண­சபை நிர்­வாக முறையில் ஆளு­நரின் செயற்­பா­டுகள் எந்த அள­வுக்கு இடைஞ்­ச­லாக இருக்­கின்­றன என்­பது செயற்­பா­டு­களின் ஊடாக வெளிப்­ப­டுத்­தப்­பட்டு,  அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக அதில் மாற்­றங்கள் செய்­யப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். இது நடை­பெ­ற­வில்லை. 

மாகா­ண­ச­பைக்­கு­ரிய அதி­கா­ரங்கள் போத­வில்லை என்­பதை நிர்­வாகச் செயற்­பா­டு­களின் ஊடாக வெளிப்­ப­டுத்தி, பகி­ரப்­பட்ட இறை­யாண்­மை­யுடன் கூடிய பிராந்­திய சுயாட்­சியின் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். இத்­த­கைய செயற்­பாடே அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளிக்கச் செய்­வ­தற்கு அர­சாங்­கத்தை நிர்ப்­பந்­திக்­கவும், அது­வி­ட­யத்தில் சர்­வ­தே­சத்தின் ஆத­ரவை மேலும் வென்­றெ­டுப்­ப­தற்கும் ஊன்­று­கோ­லாக அமைந்­தி­ருக்கும் 

அர­சாங்­கத்தின் மீது அழுத்­தங்­களைப் பிர­யோ­கிப்­பதற்­கான இத்­த­கைய செயற்­பா­டு­க­ளுக்கு பதி­லாக மாகா­ண­ச­பையின் ஊடாக அளிக்­கப்­பட்ட அதி­கா­ரங்­க­ளைக்­கூட வட­மா­கா­ண­சபை சரி­யான முறையில் செயற்­ப­டுத்­த­வில்லை. செயற்­ப­டுத்த முடி­யாமல் போயுள்­ளது என்ற அவச்­சொல்­லுக்கு இட­ம­ளித்­த­தாக நிலைமை மோச­ம­டைந்­துள்­ளது. 

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பெரும்­பான்மை பலத்­துடன் ஆட்சி நிர்­வாகம் நடை­பெற்ற வட­மா­கா­ண­ச­பையில் மாகாண அமைச்­சர்­க­ளுக்­கான அதி­கா­ரங்­களும், முத­ல­மைச்­ச­ருக்­கான அதி­கா­ரங்­களும் மேலும் விரி­வு­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற தேவை அர­சியல் அரங்கில் உணர்த்­தப்­ப­ட­வில்லை. மாறாக அந்த அதி­கா­ரங்­களை சரி­யான முறையில் பயன்­ப­டுத்த முடி­யா­த­வர்­க­ளா­கவே மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­திகள் இருக்­கின்­றார்கள் என்ற வெட்­கக்­கே­டான நிலை­மையை வெளிப்­ப­டுத்­து­கின்ற நட­வ­டிக்­கை­களே இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. 

முத­ல­மைச்சர் தனது அதி­கா­ரங்­களை முடிந்த அளவில் சரி­யான முறையில் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். அவரால் முன்­னெ­டுக்­கப்­பட்ட பல கைங்­க­ரி­யங்­க­ளுக்கு மாகா­ண­ச­பையில் அளிக்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்கள் போதாமல் இருக்­கின்­றது என்­பது வெளிக்­கொ­ண­ரப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால், இங்கு நிலைமை தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது. 

ஆளும் கட்­சி­யா­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­களே முத­ல­மைச்­சரைப் பத­வியில் இருந்து தூக்­கு­வ­தற்­காக ஆளுந­ரிடம் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கைய­ளிக்க வேண்டிய அள­வுக்கு நிலை­மைகள் தாழ்ந்து போயி­ருந்­தன. அது மட்­டு­மல்­லாமல் அமைச்­சர்கள் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட ஊழல் குற்­றச்­சாட்­டுக்­களைத் தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் முதலமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியமையும், அதுவிடயத்தில் நீதிமன்றம் எடுத்த முடிவு தொடர்பில் மாகாணசபைக்குள் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. 

ஆளும் கட்சியைச் சேர்ந்த பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் பிளவுபட்டு பிரிந்து சென்று சபை நடவடிக்கைகளை புறக்கணிக்க, சரி அரைவாசி அளவில் எஞ்சியிருந்த தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மாகாணசபைக்கு உடனடியாக அமைச்சரவை ஒன்று அவசியம் அதனை நியமிப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள வேடிக்கையான நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே பிளவுபட்டு போயுள்ளது. இந்த நிலையில் மாகாண சபைக்குள்ளேயும் அது பகிரங்கமாகப் பிளவுபட்டு வாக்களித்த மக்களினால் வழங்கப்பட்ட ஆணைகளை மீறிச் செயற்பட்ட நிலைமை உருவாகி இருக்கின்றது.

அரசியலமைப்பு ரீதியாக மாகாணசபையின் செயற்பாடுகளும், ஆளுநரின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களுக்கு அவசியமான சேவைகளை முன்னெடுக்கவும் முடியாதுள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்குப் பதிலான முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட மாகாணசபையையே சரியான முறையில் நிர்வகிக்க முடியாமல் தங்களுக்குள்ளேயே குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்ற அவப்பெயரைச் சம்பாதிக்கும் அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-07-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.