Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் எச்சரிக்கை

Featured Replies

மீண்டும் எச்சரிக்கை

 

ஒன்­றி­ணைத்த வகையில் இந்த விடயம் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருப்­ப­தா­கவும் கூற முடி­ய­வில்லை. நாட்டின் அர­சியல் நிலை­மைகள் குறித்தும். நாட்டின் சுபிட்­ச­மான எதிர்­காலம் குறித்தும் அவ்­வப்­போது, அர­சியல் நலன்­களின் அடிப்­ப­டையில் வெளி­யி­டப்­ப­டு­கின்ற எச்­ச­ரிக்­கை­களைப் போல இந்த எச்­ச­ரிக்­கையும் பத்­தோடு பதி­னொன்­றாகக் கரு­தப்­பட்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது.

இந்த எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருப்­ப­வர்­களில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க ஒருவர். மற்­றவர் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பொறுப்­பான ஐ.நா.வின் விசேட அறிக்­கை­யாளர் பென் எமர்ஸன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பண்­டா­ர­நா­யக்க ஞாபகார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் தேசிய சமா­தானப் பேரவை ஒழுங்கு செய்­தி­ருந்த தேசிய நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது தொடர்பில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யாடல் நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க, தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்குத் தீர்­வில்­லையேல், வடக்கில் மீண்டும் பிரச்­சினை ஏற்­ப­டலாம் என்று எச்­ச­ரித்­துள்ளார்.

அதே­வேளை, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 30 – 1 தீர்­மானம் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­டு­வது அவ­சியம். தொடர்ந்து நில­வு­கின்ற தண்­டனை விலக்­கீட்டுச் சூழலும், பொறுப்பு கூறப்­பட வேண்­டிய யுத்­த­கால மற்றும் யுத்­தத்தின் பின்­ன­ரான காலத்து, பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்­களும் அவ­ச­ர­மாகத் தீர்வு காணப்­பட வேண்­டி­ய­வை­யாகும். பாது­காப்புத் துறையில் மறு­சீ­ர­மைப்பும், சர்­வ­தேச ஒழுங்­குக்கு அமை­வாக பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான சட்டம் மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்­டி­யதும் முக்­கியம் என சுட்­டிக்­காட்­டி­யுள்ள பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பொறுப்­பான ஐ.நா.வின் விசேட அறிக்­கை­யாளர் பென் எமர்ஸன், இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்குப் பய­னு­று­தி­மிக்க வகையில், உட­ன­டி­யாகத் தீர்வு காணா­விட்டால், தற்­போ­தைய சந்­த­தி­யினர் பிரச்­சி­னை­க­ளுக்கு கொடுத்­துள்ள விலை­யிலும் பார்க்க எதிர்­கால சந்­த­தி­யினர் அதிக விலையைக் கொடுக்க நேரிடும் என்று கூறி­யுள்ளார்.

அர­சியல் தளத்தில் இருந்தும் சர்­வ­தேச மனித உரிமை தளத்தில் இருந்தும் கரி­சனை மிக்க வகையில் இந்த எச்­ச­ரிக்கை வெளி­வந்­தி­ருக்­கின்­றது என்­பது மிகவும் முக்­கி­ய­மா­னது.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க ஓர் அர­சி­யல்­வாதி. அர­சியல் பாரம்­ப­ரி­ய­முள்ள ஒரு குடும்­பத்தில் உதித்­தவர். அதே­வேளை, நாட்டின் தலை­வ­ராகச் செயற்­பட்டு, இனப்­பி­ரச்­சி­னையின் தாக்­கத்தை உணர்ந்­தவர். இனப்­பி­ரச்­சினை கார­ண­மாக எழுந்த யுத்­தத்­திற்கு முகம் கொடுத்­தவர். நேர­டி­யாக யுத்­தத்தின் தாக்­கத்­திற்கு ஆளா­கி­யவர். தேர்தல் கூட்டம் ஒன்றில் அவ­ரு­டைய உயி­ருக்கு இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட குண்டுத் தாக்­கு­தலில் தெய்­வா­தீ­ன­மாக உயிர்­தப்­பி­யவர். அந்த சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்து தனது ஒரு கண்ணை நிரந்­த­ர­மாக இழந்­தவர். அந்த வகையில் இனப்­பி­ரச்­சி­னை­யி­னதும், இனப்­பி­ரச்­சினை கார­ண­மாக எழுந்த யுத்­தத்­தி­னதும் வடுவை சுமந்து வாழ்­பவர்.

அர­சி­யலில் நேர­டி­யா­கவும், தீவி­ர­மா­கவும் ஈடு­ப­டா­விட்­டா­லும்­கூட நாட்டின் அர­சியல் போக்­கிலும், நாட்டு மக்­களின் எதிர்­கா­லத்­திலும் அவர் மிகுந்த அக்­கறை கொண்­டி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. நாட்டில் சர்­வா­தி­காரம் தலை­தூக்­கி­ய­தை­ய­டுத்து, முன்­னைய ஆட்­சியை முடி­வுக்குக் கொண்டு வந்து ஜன­நா­யகம் தழைத்­தோங்­கவும், நாட்டில் நல்­லாட்சி உரு­வா­கு­வ­தற்கும் அர­சியல் ரீதி­யான ஆபத்­துக்­களுக்கு மத்­தியில் துணிந்து பணி­யாற்­றி­யவர். அத்­துடன் யுத்­தத்­திற்குப் பின்னர் நாட்டில் தேசிய நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான செற்­திட்­டங்­க­ளுக்குப் பொறுப்­பேற்றுச் செயற்­பட்டு வரு­பவர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைகள் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்

தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைகள் மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்­க­ளினால் மறுக்­கப்­பட்­ட­துடன், அவர்கள் மீதான அடக்­கு­மு­றைகள் வளர்ச்சிப் போக்கில் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அது மட்­டு­மல்­லாமல், உரி­மை­க­ளுக்­காக சாத்­வீக வழி­யிலும், ஆயு­த­மேந்­தியும் போரா­டிய தமிழ் மக்கள் மீது இன ஒடுக்­கு­மு­றையும், இன அழிப்பு நட­வ­டிக்­கையும் திட்­ட­மிட்ட வகையில் மறை­மு­க­மான நிகழ்ச்சி நிரலின் கீழ் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த நட­வ­டிக்­கைகள் நாளுக்­குநாள் அதி­க­ரித்துச் செல்­கின்­ற­னவே தவிர, குறை­வ­டை­வ­தற்­கான அறி­கு­றி­களைக் காண முடி­யா­துள்­ளது.

பிரச்­சி­னை­களைத் தீர்த்து, நாட்டில் இன ஐக்­கி­யத்­தையும், ஒற்­று­மை­யையும் மேலோங்கச் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் அத்­தி­பூத்­தது போலவே இடம்­பெ­று­கின்­றன. வெறும் கண்­து­டைப்­புக்­காக அந்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­னவே தவிர, உளப்­பூர்­வ­மாக, இதய சுத்­தி­யுடன் பல்­லி­னங்­க­ளையும் ஒன்­றி­ணைத்த வகை­யி­லான தேசிய நலன்­களைக் கருத்திற் கொண்டு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

ஆட்சி அதி­கா­ரத்­தையும், அர­சியல் அந்­தஸ்­தையும் நிரந்­த­ர­மாக நிலை­நி­றுத்திக் கொள்­வ­தற்­கான சுய­லாப அர­சியல் நோக்­கத்­துடன், கட்சி அர­சி­யலை முதன்­மைப்­ப­டுத்­திய அர­சியல் போக்கே நில­வு­கின்­றது. இதற்கு, எந்­த­வி­த­மான கூச்­சமும் இல்­லாமல், மனி­தா­பி­மா­னத்தைக் கைவிட்ட நிலையில், இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் உத்­தி­யாகக் கையாள்­வதும் காலம் கால­மாக நிகழ்ந்து வரு­கின்­றது.

இந்த நிலை­மை­களில் மாற்றம் ஏற்­பட வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க கூறி­யுள்ளார். இரண்டாம் உலக யுத்­தத்தின் பின்னர் நாடு­களில் இனங்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்­டி­ருந்த பிரச்­சினை இப்­போது இனங்கள் தங்­க­ளு­டைய அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கா­ன­தாக மாறி­யி­ருக்­கின்­றது என குறிப்­பிட்­டுள்ள அவர், அந்த வகையில்:, தமிழ் மக்கள் வடக்­கிலும் கிழக்­கிலும் தமது அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கா­கவும், அர­சியல் உரி­மை­க­ளுக்­கா­கவும் சமா­தான முறை­யிலும் ஆயு­த­மேந்­தியும் போரா­டி­னார்கள் எனவும், யுத்தம் முடி­வுக்கு வந்த பின்­னரும் அந்த மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் தீர்த்து வைக்­கப்­ப­ட­வில்லை என்­பதை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

தனி­நபர் என்ற வகை­யிலும், மக்கள் என்ற வகை­யிலும், நாடு என்ற வகை­யிலும் அனை­வ­ரி­னதும் பன்­மு­கத்­தன்மை ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும் என அவர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். அதே­வேளை, அனை­வ­ரி­னதும் இனம், மதம். உரி­மைகள் என்­ப­வற்­றுடன் நல்­லி­ணக்­கமும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும் என்றும், இவற்றைப் புறக்­க­ணிக்­கும்­போதே பிரச்­சி­னைகள் உரு­வா­கின்­றன என்­ப­தையும் அவர் எடுத்­துக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

தமிழ் மக்கள் தமது மொழி, மத உரி­மை­களை அனு­ப­விப்­ப­தற்­கான உரித்­து­டை­ய­வர்கள். என்­பதை அங்­கீ­க­ரித்து அவர்கள் தமது அரச அலு­வல்­களைத் தமது மொழி­யா­கிய தமிழ் மொழியில் மேற்­கொள்­வ­தற்­கான சூழல் ,ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். நாட்டில் பன்­மு­கத்­தன்மை ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். அது மட்­டு­மல்­லாமல் அரச தொழில்­வாய்ப்­புக்­களில் இன­வி­கி­தா­சாரம் பேணப்­பட வேண்டும். குறைந்த அள­வி­லான தொழில்­வாய்ப்­புக்கள் வழங்­கப்­ப­டும்­போ­து­கூட, தமிழ் மக்­க­ளுக்கு அதிக உரிமை வழங்­கப்­பட்­டு­விட்­டது என்று கூச்­ச­லி­டு­வது நிறுத்­தப்­பட வேண்டும் என்ற வகையில் தேசிய நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது தொடர்­பி­லான தேசிய சமா­தானப் பேர­வையின் நிகழ்வில் உரை­யாற்­றி­ய­போது சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

முக்­கி­ய­மாக தமிழ் மக்­க­ளு­டைய இன, மத, அர­சியல் உரி­மைகள் அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­ப­தையும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

நாட்டின் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகித்­த­போது, தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­களை வழங்­கு­வ­தற்குத் தவ­றி­விட்ட சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க, காலம் கடந்த பின்னர் தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மைகள் வழங்­கப்­பட வேண்டும் என்று போதனை செய்­வதைப் போன்று கருத்து வெளி­யிட்­டி­ருக்­கி­னறார் என்று அவர் விமர்­சிக்­கப்­ப­டாமல் இல்லை. இருந்த போதிலும், இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்ற தேவை அதி­க­ரித்­துள்ள அர­சியல் சூழலில் அவ­ரு­டைய கருத்­துக்கள் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­ற­ன. அந்தக் கருத்­துக்­க­ளுக்கு ஆட்­சி­யா­ளர்­களும் பொறுப்பு மிக்­க­வர்­களும் செவி­சாய்க்க வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும்.

நிலை­மைகள் குறித்த ஆழ­மான கண்­டு­பி­டிப்பு 

பொறுப்பு கூறும் விட­யத்தில் உட­ன­டி­யாக உறு­தி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டா­விட்டால் எதிர்­கால சந்­த­தி­யினர் பெரும் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று தெரி­வித்­துள்ள பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பொறுப்­பான ஐநாவின் விசேட அறிக்­கை­யாளர் பென் எமர்ஸன் கடந்த வருடம் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்தார்.

அந்த விஜ­யத்­தின்­போது, அவர் பல இடங்­க­ளுக்கும் சென்று, பல்­வேறு தரப்­பி­ன­ரையும் நேர­டி­யாகச் சந்­தித்துக் கலந்­து­ரை­யாடி நாட்டின் உண்­மை­யான நிலை­மைகள் என்ன என்­பதைக் கண்­ட­றிந்­தி­ருந்தார். சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­க­ளையும் சந­தித்து, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம், யுத்தம் முடிந்த பின்­னரும் நாட்டில் எந்த அள­வுக்கு செல்­வாக்கு பெற்­றி­ருக்­கின்­றது. சித்­தி­ர­வதை நட­வ­டிக்­கைகள் எந்த அள­வுக்கு மோச­ம­டைந்­தி­ருக்­கின்­றன என்­ப­தற்­கான ஆதா­ர­பூர்­வ­மான தக­வல்­களைத் திரட்­டி­யி­ருந்தார்.

இலங்­கைக்­கான விஜ­யத்தை முடித்துக் கொண்டு அவர் ஜெனிவா திரும்­பி­யதும் இலங்­கையின் நிலை­மைகள் குறித்து கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். இப்­போது அந்த விஜயம் தொடர்பில், தனது அவ­தா­னிப்­பு­க­ளையும் பரிந்­து­ரை­க­ளையும் உள்­ள­டக்­கிய விரி­வான அறிக்கை ஒன்றை அவர் வெளி­யிட்­டி­ருக்­கின்றார். பய­ன­ளிக்­கத்­தக்க வகையில் இப்­போது உட­ன­டி­யாகச் செயற்­ப­டா­விட்டால். இலங்­கையின் எதிர்­கால சந்­த­தி­யினர் இப்­போ­துள்ள நெருக்­க­டிகள் பிரச்­சி­னை­க­ளை­விட மோச­மான நிலை­மை­க­ளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று அவர் எச்­ச­ரிக்கை செய்­தி­ருக்­கின்றார்.

பென் எமர்ஸன், கடந்த வருடம் ஜுலை மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரையில் மேற்­கொண்ட விஜ­ய­மா­னது, பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரா­னதும், உள்­நாட்டு இன முரண்­பா­டு­மான யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர், இலங்கை தனது கொள்­கைகள், சட்­டங்கள், நடை­மு­றைகள் என்­ப­வற்றில் சர்­வ­தேச மனித உரி­மைகள் சட்­டத்­திற்கு அமை­வாக எத்­த­கைய முன்­னேற்­றத்தை அடைந்­துள்­ளது என்­பதை மதிப்­பி­டு­வ­தற்­கா­கவே அமைந்­தி­ருந்­தது.

இலங்­கையில் நிரந்­த­ர­மான சமா­தா­னத்தை நிலை­நி­றுத்­து­வ­தற்கு, இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­துதல், தண்­டனை விலக்கு பெறு­கின்ற ஆட்­சிக்கு முடிவு காணுதல், உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்பு கூறு­வதை உறு­திப்­ப­டுத்தல் என்­ப­வற்றில் ஏற்­ப­டு­கின்ற முன்­னேற்றம், வழி­ச­மைக்­க­வல்­லவை என்ற அடிப்­ப­டையில் இந்த விஜ­யத்தை பென்ஸன் மேற்­கொண்­டி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வர­லாற்றில் ஒரு­போதும் இல்­லாத அளவில் அவர் அரச உயர் மட்­டத்தில் பிர­தமர், ஜனா­தி­ப­தியின் செய­லாளர், பாது­காப்பு அமைச்சின் செய­லாளர், வெளி­வி­வ­கார அமைச்சர், சட்டம் ஒழுங்கு மற்றும் தென்­மா­காண அபி­வி­ருத்­திக்குப் பொறுப்­பான அமைச்சர், மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, இந்து விவ­கார அமைச்சர், முப்­ப­டை­களின் முக்­கிய உயர் மட்டத் தள­ப­திகள், பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் தலைவர் பொலிஸ் மா அதிபர் புல­னாய்வு பொலிஸ் பிரினின் தலைவர், பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரிவின் தலைவர், நீதி அமைச்சர், பிர­தம நீதி­ய­ரசர், சட்­டமா அதிபர், கொழும்பு, அனு­ரா­த­புரம், வவு­னியா நக­ரங்­களில் உள்ள பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழான வழக்­கு­களை விசா­ரணை செய்யும் நீதி­ப­திகள் மட்­டு­மல்­லாமல், அந்த வழக்­கு­களில் முன்­னி­லை­யாகும் பல­த­ரப்­பட்ட சட்­டத்­த­ர­ணிகள், அனு­ரா­த­புரம், வெலிக்­க­டை­சி­றைச்­சா­லையில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கைதிகள் உள்­ளிட்ட பல­த­ர­ரப்­பி­ன­ரையும் அவர் சந்­தித்துக் கலந்­து­ரை­யாடி நிலை­மை­களைத் தெரிந்து கொண்டார்.

தமிழ் அர­சியல் கைதி­க­ளிடம் அவர் சிறைச்­சா­லை­க­ளுக்குள் தனித்­த­னி­யாகச் சந்­திப்­பு­களை சுதந்­தி­ர­மாக மேற்­கொண்டு அவர்­களின் நிலை­மை­களைக் கேட்­ட­றிந்­துள்ளார் என்­பதும், அவர்­களின் குடும்­பங்கள் மற்றும் சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் என்­போ­ரையும் அவர் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். இந்தச் சந்­திப்­பு­களின் மூலம், ஆரம்ப நிலையில் தான் கண்­ட­றிந்­த­வற்றை தனது விஜ­யத்தின் முடிவு தினத்­தன்று அர­சாங்­கத்­துடன் பகிர்ந்து கொள்­ளவும் அவர் தவ­ற­வில்லை.

பரந்த அள­வி­லான இந்தச் சந்­திப்­புக்­களின் ஊடாக பென் எமர்ஸன் வேறு எந்­த­வொரு இரா­ஜ­தந்­தி­ரி­யையும், அல்­லது மனித உரிமைச் செயற்­பாட்­டா­ள­ரை­யும்­விட பயங்­க­ர­வாதத் தடுப்பு நட­வ­டிக்­கைகள் சம்­பந்­தப்­பட்ட அர­சாங்­கத்­தி­னதும், பாதிக்­கப்­பட்­ட­வர்கள் உள்­ளிட்ட வேறு வேறு வழி­களில் அவற்­றுடன் நேர­டி­யாகத் தொடர்­பு­டை­ய­வர்­க­ளி­னதும் உண்­மை­யான நிலைப்­பா­டு­களைக் கண்­ட­றிந்­துள்ளார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பரிந்­து­ரைகள்

இன­ரீ­தி­யான பிரி­வி­னைகள் நில­வு­கின்ற சூழலில், பல்­வேறு நிலை­களில் பாது­காப்பு சம்­பந்­த­மான பாரிய சவால்­களை பலரும் எதிர்­கொண்­டுள்­ளனர். இதனால், சிக்­க­லான உள்­ளக ஆயுத முரண்­பாட்டை நீண்ட வர­லா­றாக இலங்கை கொண்­டி­ருக்­கின்­றது. இனப்­பி­ரி­வி­னை­க­ளி­னாலும், இனப்­பி­ரச்­சினை கார­ண­மா­கவும், அர­சியல், பொரு­ளா­தார, சமூக, கலை, கலா­சார ரீதி­யாக பதட்ட நிலைமை காணப்­ப­டு­கின்­றது என்­பதைத் தான் கண்­ட­றிந்­துள்­ள­தாக பென் எமர்ஸன் தெரி­வித்­துள்ளார்.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணியில், ஐ.நா.வின் 30 – 1 தீர்­மானம் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். குற்­றங்கள் புரி­யப்­பட்­டி­ருந்த போதிலும் தண்­டனை விலக்­கீட்டு உரி­மையை அனு­ப­விக்­கின்ற போக்­கிற்கு முடிவு காணப்­ப­டு­வ­துடன், பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்கள் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் என்­ப­வற்­றுக்குப் பொறுப்பு கூறப்­பட வேண்டும் என்­ப­தையும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார். பாது­காப்பு என்ற விட­யத்தில் எதிர்­கொள்­ளப்­ப­டு­கின்ற சிவில் நிலை­யி­லான சவால்கள், சிக்­கல்கள் கார­ண­மாக பாது­காப்­புத்­துறை மறு­சீ­ர­மைக்­கப்­ப­டு­வ­துடன், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் நீக்­கப்­பட்டு, சர்­வ­தேச நடை­மு­றைக்கு அமை­வாகப் புதிய சட்டம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­ப­தையும் அவர் தனது அறிக்­கையில் வற்­பு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டு­விட்ட போதிலும், பல வரு­டங்கள் கடந்த நிலை­யிலும் இழு­­பறி நிலையில் உள்ள பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாடு கார­ண­மா­கவும், அத­னோடு இணைந்த வேறு பல நட­வ­டிக்­கைகள் உரிய முறையில் சரி­யான நேரத்தில் எடுக்­கப்­ப­டாத கார­ணத்­தி­னாலும் பல்­வேறு நெருக்­க­டிகள் உரு­வாகி இருக்­கின்­றன என்­பது பென் எமர்­ஸனின் முடி­வாகும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தல்கள் நாட்டின் நிலை­மை­களில் ஒரு திருப்பு முனை­யாக அமைந்­தன. மாற்­றங்­களைக் கொண்டு வரு­வ­தாக அந்தத் தேர்­தல்­களில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது, மோச­மான மனித உரிமை மீறல்­கள, போர்க்­குற்றச் சார்ந்த சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்­க­ளுக்குப் பொறுப்பு கூறு­வ­தாக உறு­தி­ய­ளித்து, ஐ.நா. மனித உரி­மைகள் பிரே­ர­ணைக்கு புதிய அரசு இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. அதன் மூலம் உண்­மையைக் கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், நிவா­ரணம் வழங்­குதல், மீள் நிக­ழா­மையை உறுதி செய்தல் ஆகிய நான்கு அம்­சங்­களைக் கொண்ட நிலை­மா­று­கால நீதிக்­கான பொறி­மு­றை­களை உரு­வாக்கி, பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாட்டை நிறைவு செய்­வ­தாக அரசு உத்­த­ர­வாதம் அளித்­தி­ருந்­தது.  

ஆனால். மேலும் ஒரு பிரே­ர­ணையின் மூலம் இரண்டு வரு­டங்கள் அவ­காசம் அளித்­தும்­கூட பொறுப்பு கூறும் விடத்­திலும், அத­னோடு சேர்ந்த நிலை­மாறு­கால நீதியை நிலை­நாட்­டு­வ­திலும், உண்­மை­யான முன்­னேற்­றங்­களை உறு­திப்­ப­டுத்தும் வகையில் எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் ஆக்­க­பூர்­வ­மாக மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பது பென் எமர்­ஸனின் கருத்­தாகும்.

இந்த நிலையில் பரந்­து­பட்­ட­தாக 22 பரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்ள பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பொறுப்­பான ஐ.நா.வின் விசேட அறிக்­கை­யாளர் பென் எமர்ஸன், அந்தப் பரிந்­து­ரைகள் பய­னு­று­தி­மிக்க வகையில் உட­ன­டி­யாகச் செயற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று இடித்­து­ரைத்­துள்ளார். அவற்றை நிறை­வேற்றத் தவ­றும்­பட்­சத்தில் எதிர்­கால சந்­த­தி­யினர் மிக மோச­மான நிலை­மை­களை எதிர்­கொள்ள நேரிடும் என்றும் எச்­ச­ரித்­துள்ளார்.

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை சட்­டப்­புத்­த­கங்­களில் இருந்து அகற்றி, அதனை முழு­மை­யாக இல்­லாமல் செய்­வ­தற்­கான மாற்று நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் வரையில், புதி­தாக ஆட்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் அந்தச்சட்டத்தை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக உருவாக்கப்படுகின்ற சட்டம் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டதாக அமைந்திருக்க வேண்டும் என்பது அவருடைய பரிந்துரைகளில் முதன்மை பெற்றிருக்கின்றது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விடயம் சட்டரீதியாக மீளாய்வு செய்யப்படவேண்டும். அவர்களின் தடுப்புக்காவலின் சட்டத்தன்மையும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்திருக்கின்றார்.

அது மட்டுமல்லாமல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அச்சாணியாகிய ஒப்புதல் வாக்குமூலம் அவர்களுக்கு எதிரான விசாரணைகளில் முக்கிய சாட்சியமாகப் பயன்படுத்தக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் அவருடைய பரிந்துரைகளில் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புப் பிரிவின் நிறுவனங்கள் அனைத்தும் சிவில் மயப்படுத்தப்படும் வiயில் மறுசீரமைப்படுவதுடன், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அந்த நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளையும் சேவையில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் பாதுகாப்புத் துறையில் இனவிகிதாசாரத்தின் அடிப்படையில் ஆளணி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது.

நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும், நல்லெண்ணத்தை உறுதி செய்வதற்குமான அடையாளமாக வடக்கிலும் கிழக்கிலும் நிலவுகின்ற இராணுவ சூழல் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்றும்

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பென் எமர்ஸன் பரிந்துரைத்திருக்கின்றார். அவருடைய பரிந்துரைகளை எந்த அளவுக்கு அரசு ஏற்றுச் செயற்படுத்தும் என்பது தெரியவில்லை.

அதேபோன்று நாட்டின் எதிர்காலம் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பென் எமர்ஸன் ஆகியோரின் எச்சரிக்கையில் உள்ள தீவிரத்தன்மையை அரச தரப்பினர் எந்த அளவுக்கு உணர்ந்து செயற்படுவார்கள் என்பதையும் கூற முடியாதுள்ளது. 

பி.மாணிக்­க­வா­சகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-07-28#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.