Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்காகும் கிழக்கு

Featured Replies

இலக்காகும் கிழக்கு

 

இலங்­கையின் சம­கால நாட்கள் பல்­வேறு பேசு­பொ­ருள்­க­ளுடன் நகர்ந்து செல்­கின்­றன.தென்­னி­லங்­கையில் பல்­க­லைக்­க­ழக மற்றும் உயர் கல்வி நிறு­வன மாண­வர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற ஆர்ப்­பாட்­டங்கள், ஆசி­ரிய, அரச வைத்­திய அதிகாரிகள் சங்கம் உட்­பட தொழிற்­சங்­கங்கள் முன்­னெ­டுக்­கின்ற மற்றும் முன்­னெ­டுக்­கத்­திட்­ட­மிட்­டுள்ள பணிப்­ப­கிஷ்­க­ரிப்­பு­க்கள்,கிழக்கில் இடம்­பெறும் வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் போராட்­டங்கள்,வடக்கில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நில­மீட்புப் போராட்­டங்கள், காணாமல் போன அல்­லது காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை கண்­டு­பி­டித்­துத்­தா­ருங்கள் எனக் கண்­ணீர்­விட்­ட­ழுது நடந்­தே­று­கின்ற போராட்­டங்கள் என்­பன பாதிக்­கப்­பட்ட தரப்­பு­களின் மத்­தி­யி­லி­ருந்து எழு­கின்ற உணர்­வு­களின் அதிர்­வு­க­ளாக வெளிப்­ப­டுத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­நி­லையில், தற்­கொ­லைகள், சிறுவர் பெண்கள் மீதான பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள், கொள்ளை, கொலை என்ற குற்­றச்­செ­யல்கள், போதைப்­பொருள் வர்த்­தகம், விபத்­துக்­க­ளினால் வீணாகப் பலி­யாகும் உயிர்கள், வழி­த­வறும் இளை­ஞர்­களின் வன்­முறை நட­வ­டிக்­கைகள் உள்­ளிட்ட சகித்­துக்­கொள்ள முடி­யாத சம்­ப­வங்­களும் இடம்­பெற்­று­ வ­ரு­வ­தை அவ­தா­னிக்க முடி­கி­றது.

இத­னி­டையே, இக்­கூட்­டாட்­சிக்­கெ­தி­ராக கூட்டு எதி­ர­ணி­யினர் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். இதில், சிங்­கப்பூர் வர்த்­தக உடன்­ப­டிக்கை, மத்­தள விமான நிலையம் மற்றும் அம்­பாந்­தோட்டை துறை­முகம் என்­பனவற்றை இந்­தி­யா­வுக்கும் சீனா­வுக்கும் வழங்கும் விடயம், புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மற்றும் வடக்கு, கிழக்­கி­லுள்ள இரா­ணுவ முக­ாம்கள் குறித்­தான வாதப்பிர­தி­வா­தங்கள், மரண தண்­டனை வழங்­கு­வது குறித்­த­ான கருத்து முரண்­பா­டுகள் என்­பன தென்­னி­லங்கை அர­சி­யலை சூடாக்கி வரு­கின்­றன.

அவற்­றுடன், வடக்கு,கிழக்கில் தமிழ் பேசும் அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டை­யில் உட்­கட்­சி பூ­சல் ­களும், வாதப்­பி­ர­தி­வா­தங்­களும் வெட்­டுக்­குத்­துக்­களும், கட்சித் தலை­மை­களின் நட­வ­டிக்­கைகள் குறித்த விமர்­ச­னங்­களும் தத்­த­மது கட்­சி­களின் செல்­வாக்­கு­களை நிலை­நி­றுத்தும் அர­சியல் நகர்­வு­களும் இடம்­பெற்று வரு­கின்ற சூழலில் மாகாண சபைத் தேர்தல் தொடர்­பான விடயம் நாளாந்த ஊடகச் செய்­தி­களில் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாகக் காணப்­ப­டு­கின்­றன.

பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்ள கிழக்கு உட்­பட மூன்று மாகாண சபை­க­ளுக்கும் மற்றும் பத­விக்­காலம் விரைவில் நிறை­வ­டை­ய­வுள்ள வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகா­ணங்கள் உள்­ளிட்ட 6 மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் பழைய முறைமை­யி­லா அல்­லது புதிய முறைமையிலா நடத்­தப்­படும் என்­பது தொடர்­பான இறுதித் தீர்­மானம் இக்­கட்­டுரை எழுதும் நிமிடம் வரை கட்சித் தலை­மை­க­ளுக்­கி­டையில் எட்­டப்­பட்­ட­தற்­கான எத்­த­க­வல்­களும் அறி­யப்­ப­ட­வில்லை.

தேர்தல் முறை­மையும் கட்­சி­களின் நிலைப்­பாடும் 

இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில், "மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்­து­வ­தையே தாங்கள் விரும்­பு­வ­தா­கவும், எந்த முறைமையில் நடத்­தப்­பட்­டாலும் எமக்கு வெற்றி நிச்­சயம். ஆனால், பழைய முறைமையே சிறந்­தது" என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல சில தினங்­க­ளுக்கு முன்னர் ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­ச­ம­யத்தில், "மாகாண சபைத் தேர்தல் பழைய தேர்தல் முறைமையின் நிமித்தம் உடன் நடத்­தப்­பட வேண்­டு­மென" கடந்த புதன்கிழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கூடிய ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­கு­ழுக்­ கூட்­டத்தில் ஏக­ம­ன­தாகத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இச்­சந்­தர்ப்­பத்­தில்­தான்,மாகாண சபை­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்சர் பைசர் முஸ்­தபா புதிய முறைமை­யி­லேயே தேர்தல் நடத்­தப்­படும் அல்­லது நட­த்தப்­பட வேண்டும் என்ற விட­ாப்­பி­டி­யான தனது நிலைப்­பாட்டை எடுத்­து­ரைத்து வரும் நிலையில் இது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பாடா அல்­லது ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாடா என்­பது குறித்த கேள்­விகள் அர­சியல் களத்தின் பேசு­பொ­ரு­ளா­க­வுள்­ளது. புதிய தேர்தல் முறைமை­யை ஏற்க முடி­யாது;பழைய முறைமை­யி­லேயே தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மைக் கட்சித் தலை­வர்கள் தெரி­வித்து வரு­கின்­றனர்.

இருப்­பினும், கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடை­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அல்­லது ஜன­வரி 5ஆம் திகதி மாகாண சபைத்தேர்தலை நடத்­து­வது என தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.இந்­நி­லை­யில்தான் மாகான சபை உரு­வாக்­கப்­பட்­டது எதற்­காக? அதன் வர­லாற்றுப் பின்­னணி இச்­சபை உரு­வாக்­கப்­பட்­டதன் இலக்கை அடைந்­துள்­ளதா? நடை­பெ­ற­வுள்ள தேர்தலில் மக்­களின் தீர்ப்பு எத்­த­கைய­தாக இருக்கும் என்ற கேள்­வி­களும் அர­சியல் களத்தில் காணப்­ப­டு­கி­ன்றன.

வர­லாற்றில் மாகாண சபை

இந்­நாட்டின் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்­குடன் இந்­திய அரசின் அழுத்­தத்தின் விளை­வாக 1987ஆம் ஆண்டு இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­த­ன­வுக்கும் முன்னாள் இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­திக்கும் இடையில் மேற்­கொள்­ளப்­பட்ட இலங்கை–- இந்­திய ஒப்­பந்­தத்தின் வாயி­லாக உரு­வாக்­கப்­பட்­டதே மாகாண ஆட்சி முறைமை­யாகும்.

1987ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட இலங்கை–இந்­திய ஒப்­பந்­தத்தின் ஊடாக வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்டு, இணைந்த வடகிழக்கு மாகாண சபைக்­கான தேர்தல் 1988 ஆம் ஆண்டு நடை­பெற்­றது. இணைந்த வட-­கி­ழக்கு மாகாண சபையில் தமிழர் தரப்பு ஆளும் கட்சி வரி­சை­யி­லும,முஸ்லிம் தரப்பு எதிர்க்கட்சி வரி­சை­யிலும் அமர்ந்து ஆட்சி மேற்­கொண்ட போதிலும் அவ்­வாட்சி நீண்ட காலத்­திற்கு நிலைத்­தி­ருக்­க­வில்லை.

1990களில் இலங்­கையின் வடகிழக்­கி­லி­ருந்து இந்­திய அமைதி காக்கும் படை வெளியேற ஆயத்­த­மான நிலையில், இணைந்த வட-­கி­ழக்கு மாகாண சபையின் முத­ல­மைச்­ச­ரா­க­வி­ருந்த வர­த­ரா­ஜ­பெ­ருமாள் தன்­னிச்சையாக ஈழப் பிர­க­ட­னத்தை மேற்­கொண்ட போது, அப்­போ­தைய ஜனா­தி­பதி மறைந்த ரண­சிங்க பிரேம­தாஸ­வினால் இணைந்த வட-கிழக்கு மாகாண சபை கலைக்­க­ப­்பட்­டது.

வட-­கி­ழக்கு மாகாண சபை கலைக்­கப்­பட்ட நாள் முதல் இம்­மா­கா­ணங்­க­ளுக்­கான முறைமை­யான தேர்தல் நடை­பெறும் வரை வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் ஆட்சி அதி­கா­ரங்கள் ஆளுநர்­களின் ஆளு­கைக்கு உட்­பட்­ட­தா­கவே இருந்து வந்­தது.வடக்கு,கிழக்கு இணைப்பு தொடர்பில் எழுந்த பல எதிர்ப்புக் கோஷங்கள் நீதி­மன்றம் வரை சென்­றதன் விளை­வாக 2006ஆம் ஆண்டு வடக்கு ,கிழக்கு இணைப்­பா­னது சட்டவிரோ­த­மா­னது என நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பைய­டுத்து 2007ஆம் ஆண்டு ஜன­வரி 1ஆம் திகதி இணைந்த வட-­கி­ழக்கு மாகா­ணம் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளாகப் பிரிக்­கப்­பட்­டது.

எந்த மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண இந்த மாகாண ஆட்சி அதி­கார முறைமை

உரு­வாக்­கப்­பட்­டதோ அந்த இரு மாகா­ணங்களின் மக்­க­ளாலும் அவ்­வாட்சி அதி­கா­ரங்­களை ஜன­நா­யக ரீதியில் அனு­ப­விக்க முடி­யாமல் போனது துரதிர்ஷ்­ட­மே.

17 வரு­டங்­களின் பின்னர் 2008ஆம் ஆண்டு பிரிக்­கப்­பட்ட கிழக்­கிற்­கான தேர்தலும் 2013இல் வடக்­கிற்­கான தேர்தலும் நடை­பெற்­றன. 2008ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை கிழக்கு மாகா­ணத்தின் ஆட்சி கடந்த மத்­திய ஆட்­சி­யா­ளர்­களின் ஜன­நா­யகம் போர்த்­திய சர்­வ­ாதி­கார ஆட்­சியின் நிழ­லாகக் காணப்­பட்­ட­தா­கவே அர­சியல் அவ­தா­னிகள் குறிப்­பி­டு­கின்­றனர்.

இந்த ஆட்­சியில் இரு மாகா­ணங்­க­ளிலும் வாழும் மக்­களின் அபி­லா­ஷைகள் நிறை­வே­றி­யதோ இல்­லையோ முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய மக்கள் பிர­தி­நி­தி­களின் ஆசைகள் நிறை­வே­றி­யி­ருக்­கின்­றன. அவற்­றிற்கு பாசிக்­கு­டா­விலும் பொத்­துவில் அரு­கம்பையிலும் அமைக்­கப்­பட்­டு­ள்ள ஹோட்­டல்­களும் உல்­லாச விடு­தி­களும் சான்­றாகக் காணப்­ப­டு­கின்­றன.

2012ஆம் ஆண்டு நடை­பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் இணைந்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் கிடைத்தும் அவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் உதா­சீனம் செய்­யப்­பட்­ட­தாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பு தெரி­வித்து வந்த நிலையில், 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்­சியும் முஸ்லிம் காங்­கி­ரஸும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் இணைந்து ஆட்­சி­ய­மைக்கும் சூழலைத் தோற்­று­வித்­தது.

 இந்­நி­லையில், 2013ஆம் ஆண்டு நடை­பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலின் வெற்றி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு கிடைத்தும் அதன் முத­ல­மைச்­ச­ராக முன்னாள் நீதி­ய­ரசர் சீ.வி.விக்­கினேஸ்­வரன் நிய­மிக்­கப்­பட்டும் அம்­மா­காண சபை­யினால் பெற்ற அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி வாக்­க­ளித்து வெற்­றி­பெறச் செய்த அம்­மக்­க­ளுக்கு உதவ முடி­யாத கையா­லா­காத நிலை தொடர்ந்து நில­வு­வ­தா­கவே வடக்கின் முதல­மைச்சர் கூறி­வ­ரு­வ­தையும் காண முடி­கி­றது.

மாகாண சபைத் தேர்தலும் தமிழ் பேசும் சமூ­கமும்

 

ஏறக்­கு­றைய 10 வருட காலம் நீடித்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்கு கடந்த ஜன­வரி 8ஆம் திகதி இந்­நாட்டில் வாழும் ஏறக்­கு­றைய 60 இலட்சம் மக்­களால் முடிவு கட்­டப்­பட்­டது.அந்த முடிவை மாற்றி அமைப்­ப­தற்கு இன­வாதக் கட்­சி­களின் கூட்­ட­மைப்பு தற்­போது ஒன்­று­பட்டு செயற்­பட்டுக் கொண்­டிருப்­ப­தையும், இக்­கூட்­ட­மைப்­பா­னது சிங்­கள மக்கள் மத்­தியில் தற்­போ­தைய அர­சினால் வடக்கு, கிழக்கு வாழ் சிறு­பான்மை சமூ­கங்கள் வரப்­பி­ர­சா­தங்­களைப் பெற்­று­வ­ரு­வ­தா­கவும், மீண்டும் பயங்­க­ர­வாத அமைப்­புக்கள் தலை­தூக்கி உள்­ள­தா­கவும் பொய்ப்­பி­ர­சா­ரங்கள் அவர்கள் மொழியில் தொடர்ந்தும் பரப்­பப்­ப­டு­வ­தையும் காண முடி­கி­றது.

" வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் சமஷ்டி ஆட்சி முறைமையைக் கொண்ட புதிய அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்­ளது.அவ்­வி­ட­யங்­களை விரை­வு­ப­டுத்­து­மாறு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் சர்­வ­தே­சமும் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து வரு­­கின்­றன. இது இந்­நாட்­டுக்கு மிகவும் ஆபத்­தா­னது என கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­கமகே தெரி­வித்­தி­ருப்­பதன் மூலம் கூட்டு எதி­ரணி­யி­னரின் நிலைப்­பாட்டை அறிந்து கொள்­ளலாம்.

இந்­நாட்டை ஆண்ட ஆட்­சி­யா­ளர்கள் சிறு­பான்மை மக்­களை மாற்றுக் கண்­கொண்டு பார்த்­ததன் விளைவு 3 தசாப்­தங்­க­ளுக்கு மேற்­பட்ட காலத்தை ஒரு சுடு­கா­டாக வடக்கு மற்றும் கிழக்கை மாற்­றி­யி­ருந்­தது என்­பதை மறக்க முடி­யா­த­துதான். இன்றுவரை அதன் வடுக்கள் மண்­ணையும் மனங்­க­ளையும் விட்டு அக­லாது காணப்­ப­டு­கி­ன்றன.

இந்­நாட்டில் 9 மாகா­ணங்கள் உள்­ளன.இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளி­லேயே தமிழ் பேசும் சிறு­பான்­மை­யின மக்­க­ளான தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் அதி­க­ளவில் வாழ்­கின்­றனர். வடக்கு,கிழக்கில் பல்­லாண்டு காலம் சகோ­தர வாஞ்­சை­யுடன் ஒன்­றரக் கலந்து வாழ்ந்து வந்த தமி­ழர்­களும்,முஸ்­லிம்­களும் பேரி­ன­வா­தத்தின் தீயிற்குப் பலி­யாகி, ஒரு­வரை ஒருவர் சந்­தேகக் கண் கொண்டு பார்த்­த­தை­யும் பழ­கி­ய­தையும் பழி­வாங்­கல்­க­ளில் ஈடு­பட்­ட­தையும் வர­லா­று சொல்­லித்தான் நிற்­கி­றது.

கடந்த கால ஆட்­சி­யா­ளர்­களின் சூழ்ச்­சிகள் சமூக ஒற்­று­மையை சீர்­கு­லைப்­ப­தற்கு பின்­ன­ணி­யாக இருந்­தி­ருந்­தாலும் 2015 ஆட்சி மாற்­றத்தின் பின் அதே ஆண்டில் கிழக்கு மாகாண சபையின் முத­ல­மைச்சர் மற்றும் அமைச்சுப் பொறுப்­புக்கள் தொடர்பில் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்­கு­மி­டை­யி­லான விட்­டுக்­கொ­டுப்பு கிழக்கில் தமிழ்,முஸ்லிம் உறவை பல­வீ­னப்­ப­டுத்த நினைத்­த­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அர­சியல் ரீதி­யான பேரி­டி­யாக கரு­தப்­பட்­டது.

இந்­நி­லை­யில்தான், மீண்டும் மாகாண சபைத் தேர்தல் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான தினங்கள் அறி­விக்­கப்பட்­டி­ருக்­கின்­றன. இதனால் குறிப்­பாக கிழக்கின் ஆட்சி யார்­ பக்கம் செல்­லப்­போ­கி­றது? அதற்­கான முயற்­சிகள் தமிழ், முஸ்லிம் தரப்பில் எத்­த­கைய முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. முஸ்லிம் அர­சியல் கட்சித் தலை­மைகள் தங்­க­ளது கட்­சிப்­ப­லத்தை கிழக்கில் புடம்­போ­டு­வ­தற்கு எத்­த­கைய நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன என்­ப­தையும் காண முடி­கி­றது.

கிழக்குத் தேர்தலும் முஸ்லிம் கட்­சி­களும் 

வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியை தாய் மொழி­யாகக் கொண்டு தமது அத்­தனை தொடர்­பா­டல்­க­ளையும் முன்­னெ­டுத்து வாழும் தமி­ழர்­களும் முஸ்­லி­ம்களும் ஒரு­வரை ஒருவர் பிரிந்து வாழ முடி­யாது. அதற்கு பூகோள அமைப்பும் இடம்­கொ­டாது என்ற நிலை இருக்­கின்ற போதிலும் அவ்­ இ­ன­வு­றவை சீர்­கு­லைக்க சிலர் பத­வி­களை தூக்­கிப்­பி­டித்து செயற்­பட்­டதை கடந்த காலங்­களில் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருந்­தது.

இந்­நி­லையில், கடந்த ஒக்­டோபர் மாதம் பதவிக் காலம் நிறை­வ­டைந்த கிழக்கு மாகா­ணத்­திற்­கான தேர்தல் ஏதோ ஒரு தேர்தல் முறைமை­யில் நடை­பெ­றப்­போ­கி­ன்றது. 7 மாகா­ணங்­க­ளுக்­கான தேர்தல்கள் நடை­பெ­று­மென அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தாலும் முஸ்லிம் மற்றும் தமிழ் அர­சியல் கட்­சி­களின் இலக்கு பெரும்­பாலும் கிழக்கை நோக்­கி­ய­தா­கவே அமை­யு­மென்­பது தற்­போது இரு தரப்­புக்­க­ளி­னாலும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நட­வ­டிக்­கைகள் புடம்­போ­டு­வதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளன.

"கிழக்கு தமி­ழர்கள் அனை­வரும் தமது கட்சி நலன்­க­ளுக்கு அப்பால் ஒன்­றி­ணைய வேண்­டி­யது காலத்தின் தேவை. கிழக்கு மாகா­ணத்தில் வாழும் தமிழ் மக்­களின் இருப்பை சமூக, பொரு­ளா­தார ரீதி­யாக பாது­காக்க வேண்­டு­மாயின் இங்­குள்ள அனைத்துக் கட்­சி­களும் ஒரு பொதுச்­சின்­னத்தின் கீழ் இணைந்து தேர்தலில் போட்­டி­யிட வேண்டும். கிழக்குத் தமிழர் ஒன்­றியம் அனை­வ­ரையும் ஒன்­றி­ணைக்கும் செயற்­பாட்டில் ஈடு­பட்டு வரு­வ­தாக ஒன்­றி­யத்தின் மாகாண இணைப்­பாளர் கோபா­ல­கி­ருஸ்ணன் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் " நாம் யாராக இருந்­தாலும் சமூகம் என்று வரும்­போது ஒற்­று­மைப்­பட வேண்டும். சமூ­கத்­திற்­காகப் பேச வேண்டும். கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு பல்­வேறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. அவற்றில் முக்­கி­ய­மா­னது காணிப்­பி­ரச்­சி­னை­யாகும். கிழக்கில் முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் காணிப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க எமது கட்சி நட­வ­டிக்கை எடுத்துக் கொண்­டி­ருப்­ப­தாக கிழக்கில் கட்­சியின் செல்­வாக்கை ஆழ­மாகப் பதித்­துக்­கொள்­வ­தற்­காக பல்­வேறு முனை­களில் முயற்சி மேற்­கொண்­டு­வரும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் அண்­மையில் நிந்­த­வூரில் நடை­பெற்ற பொதுக்­கூட்­ட­மொன்றில் குறிப்­பிட்­டுள்ளார்.

கிழக்கு மாகா­ணத்தின் அம்­பாறை,மட்­டக்­க­ளப்பு மற்றும் திரு­கோ­ண­மலை மாவட்­டங்­க­ளி­லுள்ள முஸ்லிம் பிர­தே­சங்­களில் தனிக்­காட்டு ராஜா­வாக அர­சியல் புரிந்து வந்த முஸ்லிம் காங்­கி­ரஸுக்கு தேசிய காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி ஆகிய கட்­சி­களின் வரவும் மக்கள் ஆத­ரவும் பெரும் தலை­யி­டி­யாக மாறி வரு­வதை கடந்த கால தேர்தல் முடி­வுகள் தெரி­யப்­ப­டுத்­து­கின்­றன.

அதிலும், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தமது கட்­சியின் செல்­வாக்கை அதி­க­ரித்­துக்­கொள்­வ­தற்­காக கிழக்கில் முன்­னெ­டுத்து வரு­கின்ற நட­வ­டிக்­கைகள் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு பெரும் தலை­யிடி என்றே கூற வேண்டும். இதனை முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தி­நி­தி­க­ளினால் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற கருத்­துக்கள் தெளிவு­ப­டுத்­து­கின்­றன.

"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மேற்­கொண்டு வரும் மாபெரும் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை மூடி மறைக்கும் வகையில் பிளாஸ்டிக் வாளி­க­ளையும், மண்­வெட்­டி­க­ளையும் கொடுத்து மக்­களை குழப்­பு­வ­தற்கும் வங்­கு­ரோத்து அர­சியல் செய்­வ­தற்கும் சில அர­சி­யல்­வா­திகள் முயற்சி செய்து வரு­வ­தாக பிரதி அமைச்சர் பைஸல் காசிம் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­னது அமைச்சர் ரிஷாத்­தினால் வடக்கு, கிழக்கு வாழ் வறிய மக்­களின் வாழ்­வா­தார முயற்­சி­க­ளுக்­காக வழங்­கப்­பட்டு வரும் உப­க­ர­ணங்­களைச் சுட்­டிக்­காட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது.

அத்­துடன், "முஸ்லிம் காங்­கிரஸ் பெற்­றி­ருக்கும் அமைச்­சுக்­க­ளி­னூ­டாக எவ்­வா­றான அபி­வி­ருத்திப் பணிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்று இவர்­க­ளுக்குத் தெரி­யுமா? எமது அமைச்­சுக்­க­ளி­னூ­டாக நாம் செய்த,செய்து கொண்­டி­ருக்­கின்ற ஒரு பணி­யை­யா­வது இவர்­களால் செய்ய முடி­யுமா என்ற கேள்­வி­யையும் பிரதி அமைச்சர் பைசல் காசிம் கேட்­டுள்ள நிலையில் இக்­கேள்­வி­க­ளுக்கு மாற்று அர­சியல் கட்­சி­யி­னரை விட கிழக்கு முஸ்­லிம்­களின் பதில் எவ்­வாறு அமையும் என்­பதும் கேள்­விக்­கு­றி­யாகும்.

அமைச்சர் ரிஷாத்­தினால் இவ்­வாழ்­வா­தார உப­க­ர­ணங்கள் வழங்கும் நட­வ­டிக்­கைகள் வடக்கு,கிழக்கு மாகாண சபைத் தேர்தலை மையப்­ப­டுத்­தி­யதா அல்­லது மக்கள் காங்­கி­ரஸை பலப்­படுத்­து­வ­தற்­கான முயற்­சியா என்ற கேள்­வி­க­ளுக்கு மத்­தியில் பிரதி அமைச்சர் அமீர் அலி இவ்­வாறு குறிப்­பி­டு­கிறார்."மக்­க­ளு­டைய வறு­மையைக் குறைக்கும் வகையில் வாழ்­வ­ாதார அபி­வி­ருத்­திக்­கான உப­கர­ணங்கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. மக்கள் எவ­ரி­டமும் கையேந்­தாமல் சொந்த முயற்­சியில் முன்­னேற வேண்டும். இந்த முயற்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கையே அமைச்சர் ரிஷாத்தின் நட­வ­டிக்­கை­யாகும்" என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­நி­லையில், "முஸ்லிம் மக்­க­ளுக்­காக குரல்­கொ­டுப்போம் என வாக்­கு­களைப் பெற்ற முஸ்லிம் காங்­கி­ரஸை சேர்ந்த மக்கள் பிர­தி­நி­திகள் அற்­ப­சொற்ப இலா­பங்­க­ளுக்­காக மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழுக் கூட்­டங்­களில் கலந்துகொண்டு பேரி­ன­வா­தத்­திற்­கெ­தி­ராக குரல் கொடுப்­ப­தில்லை" என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உது­மா­லெப்பை தெரி­வித்­தி­ரு­க்கிறார்.

இவ்­வாறு பரஸ்­பர குற்­றச்­சாட்­டுக்­களை முஸ் லிம் அர­சியல் கட்­சிகள் முன்­வைத்து வரும் ஹசந்­தர்ப்­பத்தில், கடந்த கால தேர்தல்­களில் வெற்­றி­பெ­று­வ­தற்­காக மக்­க­ளுக்கு அளித்த  வாக்­கு­று­தி­களை மறந்து செயற்­ப­டு­வதைச்  சுட்­டிக்­காட்ட வேண்டும். ஒரு கட்சி இன்னு  மொரு கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பில்  கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் நடை  பெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் பிரசாரங்களுக்காக குறிப்பாக கிழக்கு  மாகாணத்தில் கட்சி ரீதியாக பிரதிநிதித்துவங் களை அதிகளவில் பெற்றுக்கொள்வதற்காக எத்தகைய வாக்குறுதிகளை முஸ்லிம் அரசியல் கட்சிகள் வழங்கவுள்ளன?  

மக்களை ஏமாற்றுவதற்கான எத்தகைய சாணக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படும்? அதில் எந்த வாக்குறுதிகளை நம்பி  மக்கள் வாக்களிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புகள் முஸ்லிம் அரசியல் அவதானி  களிடையே காணப்படுகின்ற நிலையில் "மாகாண சபைத் தேர்தலை புதிய கலப்பு முறை  மையில் நடத்த வேண்டும் என பாராளுமன் றத்தில் கை உயர்த்திய ரவூப் ஹக்கீம் அடங்க  லான முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். மக்களுக்காக அல்லாமல் அவர்களின் சட்டைப்பைகளை நிரப்புவதற்காகவே மாகாண சபைத் தேர்தலை புதிய கலப்பு முறைமையில் நடத்த வேண்டும் என்ற திருத்தத்திற்கு ஆதர  வாக முஸ்லிம் அரசியல்வாதிகள் பாராளு மன்றத்தில் கை உயர்த்தினார்கள்.  ஆனால், தற்போது சுடலை ஞானம்  

பெற்றவர்கள் போல பழைய முறைமை யில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென நடிக்கிறார்கள் என ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் ஹசன் அலி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.அத்துடன் புதிய கலப்பு முறைமையில் தேர் தல் நடத்தப்படலாம். ஆனால், எல்லை நிர்ண யத்தில் செய்யப்பட்டுள்ள ஊழல்கள் அகற்றப்  பட்டு முஸ்லிம்களின் இருப்பு உறுதிப் படுத்தப்பட வேண்டும் எனவும் அவரது நிலைப் பாடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இவ்வாறு கிழக்கு முஸ்லிம் அரசியல் வாதிகளின் கருத்துச் சமர்கள், கட்சிகளுக் கிடையிலான போட்டா போட்டிகள் பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கை இலக்காக கொண்டு முன்னெடுக்கவுள்ள அரசியல் நடவடிக்கைகள் முஸ்லிம் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்குமா அல்லது அதிகரிக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

 

 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-07-28#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.