Jump to content

அரளிக்கொட்டை


Recommended Posts

பதியப்பட்டது

அரளிக்கொட்டை

 

 
kadhir4


நீட் தேர்வு ரிசல்ட் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும்.  கமலாவின் நெஞ்சு "பட பட' வென்று அடித்துக் கொண்டிருந்தது. மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு வேண்டிக் கொண்டு  விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள்.
அந்தக் கிராமத்தில் நாம் தான் முதல் டாக்டர் என்ற கற்பனை அவளை வானத்தில் பறக்க விட்டுக் கொண்டிருந்தது. டாக்டர் ஆகி இதே கிராமத்தில் இலவச வைத்தியம் பண்ணினால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தாள்.  ஊரில் வைத்திய வசதி இல்லாததால்தான் தன் அப்பா திடீர் நெஞ்சு வலியில் செத்துப் போனதையும், அது  போல் இங்குள்ள யாரும் செத்துப் போகாமல் காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பார்த்தாள்.
வீடு வீடாகச் சென்று கூலிக்கு வீட்டு வேலை செய்து கஷ்டப்படும் அம்மாவை, தான் டாக்டராகி வேலைக்குப் போக வேண்டாம் என்று தடுத்து ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற ஆசையும், ஊனமான தன் தங்கச்சியின் காலைச் சரியாக்கி நடக்க வைக்க  வேண்டும் என்ற ஆசையும்  கமலாவைத் தெருவில் நடக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் நடக்க வைத்துக் கொண்டிருந்தது.

 


அந்தச் சின்னக் கிராமத்தில் வீதி பெரும்பாலும் நடமாட்டம் இல்லாமல் தான் இருக்கும். எனவே அவளால் கற்பனை செய்து கொண்டே நடந்து வர முடிந்தது. வீட்டுக்குள் வந்த உடனே அவளுக்குத் திடீர் என்று ஒரு பயம் உடம்பைச் சற்று நடுங்க வைத்தது. "ஒரு வேளை மார்க் வராமல் போனால்?'  என்ற எண்ணம் கற்பனைகளையெல்லாம் நொடி நேரத்தில் சிதற அடித்தது.
தான் கூலி வேலை செய்யும் வீடுகளில் எல்லாம் மகளை டாக்டருக்குப் படிக்க வைக்கப் போவதாகப் பெருமையாகச் சொல்லி, கூடவே காலேஜுக்குக் கட்ட  கடனும் கேட்டு வைத்திருக்கும் அம்மாவுக்கு அந்த அதிர்ச்சி? கமலாவுக்கு அதை நினைக்கவே முடியவில்லை... மீண்டும் மீண்டும்  கடவுளை வேண்டிக்கொண்டாள். 
கமலாவின் குடும்பம் ஓர்  ஏழைக் குடும்பம் தான். ஆறு வருஷத்துக்கு முன்னால்  கூலி வேலை செய்து வந்த அப்பா திடீர் நெஞ்சு வலியால் துடித்தபோது   உள்ளுரில் ஆஸ்பத்திரி வசதி இல்லாததால்  காப்பாற்ற முடியாமல்  போன அன்று  அம்மா,  ""ஐயோ... எ சாமி...என்னை அனாதியா உட்டுட்டுப் போயிட்டீயே...ரண்டு பொட்டப் புள்ளகள வச்சிக் கிட்டு நா என்ன செய்வேன்?'' 
என்று  நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுத அழுகையை நினைத்த போதெல்லாம் கமலா கண்கலங்கி விடுவாள். அதன் பிறகு, ஊனமான தங்கையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அம்மா கூலிவேலைக்குச் சென்றதால்தான்  தான் பள்ளிக்கூடம் செல்ல முடிந்தது என்பதையும் அவள் மறந்து விடவில்லை. 
பகலில் கூலி வேலை இரவில் வெகுநேரம் வரை தையல் மெஷினில் ஜவுளிக்கடைக்குப் பை தைத்துக் கொடுத்துக் கூலி வாங்கியது... இப்படி அம்மா பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம் அல்ல என்பதும் அவளுக்குத் தெரியும். இந்த நிலைமையில் தான் ஒரு டாக்டரானால் அம்மாவுக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் என்பதையும் எண்ணிப் பார்த்தாள்.

 


சைக்கிளை எடுத்துக் கொண்டு பக்கத்து ஊரில் இருந்த புரெளசிங் சென்டருக்கு ஒன்பது மணிக்கே வந்து விட்டாள். மணி பத்தை நெருங்க நெருங்க கமலா நெஞ்சு முன்பை விட வேகமாக அடித்துக் கொண்டது.
மீண்டும் கடவுளை வேண்டிக் கொண்டு கம்ப்யூட்டரை ஆன் பண்ணினாள். இன்னும் ஐந்து நிமிடங்கள்!  உடல் நடுக்கத்தைவிட மனம் அதிகமாக நடுங்கியது. அவளைப் போலவே அவளது தோழிகள் சிலரும் அதற்காக வந்திருந்த போதும் அவர்கள் எல்லாம் அவள் கவனத்தில் இல்லை. 
மணி பத்தானது. நடுக்கத்தில் தடுமாறித்  தடுமாறித் தன் பதிவு எண்ணைத் தேடினாள்.  ஒரு வழியாகக் கண்டு பிடித்தபோது அவளால் நம்ப முடியவில்லை! அவள் பயந்தது போலவே குறைவான மதிப்பெண்! அதிர்ச்சியில் தான் பார்த்த எண் தப்பாகப் போயிருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டு நடுக்கத்தோடு மீண்டும் தன் ஹால் டிக்கெட்டை எடுத்துப் பார்த்தாள். அதே எண் தான்!  
கமலாவுக்கு மயக்கமே வந்து விடும் போல் ஆகிவிட்டது. கண்கள் கலங்கி விட்டன. அழுகை வந்தும் கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் இரண்டு மூன்று முறை போட்டுப் பார்த்தாள். அதே தான் மார்க்! 
அதற்கு மேல் அவளால் அங்கு இருக்க முடியவில்லை. பணத்தைக் கொடுத்து விட்டுத் தோழிகளைக் கூடப் பார்க்கப் பிடிக்காதவளாய், அதிர்ச்சி நீங்காதவளாய், எப்படியோ சைக்கிளை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். ஓடிப்போய்ப் பாயில் குப்புறப் படுத்துக் கொண்டு அழுதாள். 
அம்மா வேலைக்குப் போய் விட்டிருக்க, விவரம் தெரியாத தங்கச்சி தவழ்ந்து வந்து  ""ஏக்கா அழுவுற?'' என்று கேட்ட போது கமலா பதில் ஏதும் சொல்லாமல் அழுதுகொண்டே இருந்தாள். தன் கனவும், அம்மாவின் கனவும் நொறுங்கிப் போனதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 
பொதுவாகக் கமலா நன்றாகப் படிப்பவள் தான், வகுப்பில் எப்போதும்  முதல் ரேங்க் தான். ஆனாலும் நீட் தேர்வில் தோற்றுப் போன அதிர்ச்சி... இனி எப்படி ஊரார் முகத்தில் விழிப்பது? தோழிகள் முகத்தில்? அம்மாவின் டாக்டர் கனவு நொறுங்கிப் போய் விட்டதே! அம்மாவைக் கஷ்டத்திலிருந்து காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே, தங்கச்சியின் ஊனத்தைச் சரிபண்ண முடியாதே, ஊராருக்கு இலவச வைத்தியம் என்பதெல்லாம் வெளியே சொல்லவே கேவலமாகப் போய்விட்டதே! இனி அம்மாவுக்குப் பாரமாக  இருந்து கெட்ட பெயர் வாங்கிக் கொடுப்பதா? அவளால் சமாதானம் பண்ணிக் கொள்ளவே முடியவில்லை. தோல்வி என்ற இடி அவளைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருந்தது.

 


புரண்டு புரண்டு அழுது பார்த்தாள். தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நினைத்து நினைத்து அழுது கொண்டே இருந்தாள். அவமானம்...அவமானம்... "இது வரை நீ வாங்கிய மார்க்கெல்லாம் காப்பியடித்து வாங்கியதா?' என்று கேட்பார்களே, என்ன சொல்வது? 
அம்மா வேலைக்குப் போகும் வீட்டிலெல்லாம் கேட்பார்களே...  அம்மா எப்படிக் கேவலப்படப் போகிறாள். கோச்சிங் வகுப்புக்குப் போயிருந்தால் அந்த நான்கு மார்க்கையும் வாங்கியிருக்கலாமோ? பணம் இருந்தால் போயிருக்கலாம், பணமில்லையே என்ன செய்வது? இன்னும் கொஞ்சம் படித்திருக்க வேண்டும் தான்.
"ஐயோ, ஏமாந்து போய் விட்டோமே. ஆயிரம் கனவுகளோடு வரும் அம்மாவின் முகத்தில் இனி எப்படி முழிப்பது?  தன் வகுப்புத் தோழி மாலதி  தன் அம்மா திட்டியதற்கே அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாளே, நாம் இத்தனை அவமானத்தையும் கேவலத்தையும் தாங்கிக்கொண்டு எப்படி உயிரோடிருப்பது? ஊரார் கேவலமாகப் பார்ப்பார்களே...இப்படிப் பல கேள்விகள் மின்னலைப் போல் வந்து  கொண்டே இருந்தன. உலகமே அவளைப் பார்த்துச் சிரிப்பதைப்  போல் அவளுக்குத் தோன்றியது.

 


செல்போனில் அவள் தோழிகள் சிலர் அழைத்த போதிலும் எடுத்துப் பேச விரும்பவில்லை. எப்படிச் சொல்வது, அவர்கள் எல்லாம் பாஸாகி இருப்பார்களே, பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. அம்மா வருவதற்குள் ஒரு முடிவு செய்தாக வேண்டும் என்றும் அக்கம் பக்கத்தாரின் கேவலத்தை விடச் செத்துப் போவதே மேல் என்றும் தோன்றியது.
ஏற்கெனவே அதே கிராமத்துப் பெண்கள் சிலர் செய்த செயல் அவளுக்கு நினைவுக்கு வந்தது. எழுந்து கதவைச் சாத்தி விட்டுப்  பக்கத்துத் தோட்டத்துக்குப் போனாள். அங்கு வேலி ஓரம் இருந்த தங்க அரளி மரத்தில் இருந்து ஐந்தாறு கொட்டைகளைப் பறித்துத் தாவணியில் முடிந்து கொண்டாள். அதை அரைத்துக் குடித்தால் செத்துப் போகலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். கூடவே அது மிகவும் கசக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறாள். யோசித்துக் கொண்டே மாரியம்மன் கோயிலுக்கு வந்து சாமியிடம்  அம்மாவுக்காகவும் தங்கச்சிக்காகவும் வேண்டிக் கொண்டாள். 
வெளியே வரும்போது எதிர் வீட்டுப் பையன் கதிர்வேலு நொண்டி நொண்டி வந்து கொண்டிருந்தான். அவனுடைய  ஒரு கால் பிறவியிலேயே போலியோவால் ஊனம். அவன் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருப்பது கமலாவுக்குத் தெரியும். எப்போவாவது சந்தேகம் கேட்க வருவான். 
""என்ன அக்கா, எப்பவும் உங்க அம்மாவோடதான் கோயிலுக்கு வருவே, இப்போ தனியா வந்திருக்கே?'' என்று கேட்டான். 
""எங்கம்மா வர லேட் ஆகும், அதனாலே நானே வந்தே?'' என்று சொல்லிவிட்டுப் போக நடந்தவளுக்கு ஒரு யோசனை வந்தது. 
""ஏங் கதிர்வேலு, நீ எங்க போறே?''

 


""கடைக்குப் போறேங்க்கா''
""சரி கதிர்வேலு, எனக்கு ஒரு உதவி பண்றயா ?''
""என்னக்கா, சொல்லக்கா''
""இந்தா, இந்த ரண்டு ரூபாய்க்குக் கடலை முட்டாய் ரண்டு வாங்கிட்டு வந்து தர்றயா?''
""சரிக்கா''
பணத்தை வாங்கிக்கொண்டு கதிர்வேலு போனான். அவன் திரும்பி வரும் வரை கமலா கோயில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள். அரளி விதையை அரைத்துக்  கடலை மிட்டாயைக் கடித்துக் கொண்டு குடித்துவிடலாம் என்று முடிவு செய்து கொண்டாள். இது தான் அந்தக் கிராமத்துத் தற்கொலைக் கலாசாரம்!
கொஞ்ச  நேரத்தில் நொண்டி நொண்டி நடந்து வந்த கதிர்வேலு கொஞ்சம் களைத்துப் போனதால் கடலை மிட்டாயைக் கமலாவிடம் கொடுத்து விட்டுக் கோயில் திண்ணையில் உட்கார்ந்தான்.
உதவி செய்த நன்றிக்காக ஏதாவது பேசவேண்டுமென்று கமலாவுக்குத் தோன்றியது.
""ஏங் கதிர்வேலு, ஊனமானவங்களுக்குன்னு இருக்கற பள்ளிக்கூடத்திலேயும் ஹாஸ்டல்லேயும் உனக்கு இலவச  எடங்கெடச்சுதாமே, அங்கே போனாக் கஷ்டப்படாமே படிக்கலாமே, ஏன் போகலே?''


""போக்கா, இங்க எங்கம்மாவையும்  தங்கச்சியையும்  அனாதையாக் கஷ்டப்பட வுட்டுட்டு, என்னய் மட்டு சொர்க்கத்துக்கு வான்னு கடவுளே  கூப்பிட்டாலும்  நா போக மாட்டேக்கா,  நா கஷ்டப்பட்டுப் படிச்சு வேலைக்குப் போயி, சம்பாரிச்சு, ஒரு வேள சோத்தக் கூட வயிறாரத் திங்காத எங்கம்மாவைக் கஷ்டப்படாமே காப்பாத்தணும், எந் தங்கச்சியப் படிக்க வச்சு, நகை போட்டுக் கல்யாணம் பண்ணி வெக்கணும். அப்பத்தா நா மனுச! நீ வென்னா பாரக்கா,  இந்த நொண்டி செய்து காட்றானா 
இல்லையான்னு!'' 
சொல்லிவிட்டுத் திண்ணையிலிருந்து வேகமாக இறங்கிய கதிர்வேலு வேக வேகமாக நொண்டி நொண்டி  நடந்து போனான். அது கோபமா, வீறாப்பா என்று புரியவில்லை!
விக்கித்துப் போன, வாயடைத்துப் போன கமலா  தன் பார்வையிலிருந்து மறையும் வரை கதிர்வேலுவையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். 
பத்து வயசுப் பையன் கதிர்வேலு! 
முட்டாள்தனமும் வெட்கமும் மண்டையில் இடிக்க மடியிலிருந்த அரளிக் கொட்டைகளைத் தூக்கி வீசிவிட்டு வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள் கமலா.

http://www.dinamani.com/

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.