Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தப்பாகிப் போகின்ற – ரணிலின் ராஜதந்திரம்!!

Featured Replies

தப்பாகிப் போகின்ற – ரணிலின் ராஜதந்திரம்!!

 

 

ceasefire-agreement-sign-in-2002-sri-lan

 
 

நான் நேற்­றும் இன்­றும் யாழ்ப்­பா­ணத்­திலே இருந்­தேன். நான் 2010ஆம் ஆண்­டி­லும் யாழ்ப்­பா­ணத்­துக்­குச் சென்­றி­ருந்­தேன். 2015ஆம் ஆண்­டில் இன்­றைய அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் முன்­னாள் அர­ச­த­லை­வர் சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க ஆகி­யோ­ரு­ட­னும் யாழ்ப்­பா­ணத்­துக்­குச் சென்­றி­ருந்­துள்­ளேன். அன்­றைய நில­மை­யில் எம்­மீது யாழ்ப்­பாண மக்­கள் மத்­தி­யில் சந்­தேக உணர்வு இருந்­ததை நான் உணர்ந்­தி­ருந்­தேன். ஆனால் இன்று அவற்­றுக்­கெல்­லாம் மாறா­ன­தொரு அர­சி­யல் பார்வை யாழ்ப்­பாண மக்­கள் மத்­தி­யில் நில­வு­கி­றது’’.

‘‘இலங்­கை­யின் ஏனைய பிர­தே­சங்­க­ளில் இருப்­பது போன்­ற­தொரு நில­மையை அண்­மைய எமது யாழ்ப்­பா­ணத்­துக்­கான பய­ணத்­தின்­போது நாம் அனு­ப­வித்­தோம். எங்­க­ளைப் பற்றி யாழ்ப்­பாண மக்­கள் மத்­தி­யில் நில­விய சந்­தேக உணர்வு தற்­போது குறை­வ­டைந்­துள்­ளது. ஆனா­லும் ,தற்­போ­தும் தமிழ்­மக்­க­ளுக்­குப் பிரச்­சி­னை­கள் நிறை­யவே உள்­ளன. அவை எம்­மால் இது­வரை தீர்வு காணப்­ப­டாத பிரச்­சி­னை­க­ளா­கும். ஆனால் தற்­போது அந்­தப் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காணப்­ப­டக்­கூ­டும் என்ற எதிர்­பார்ப்பு அந்த மக்­க­ளி­டம் நிறைந்­துள்­ளது.

இன்று யாழ்ப்­பா­ணத்தை எடுத்­துக் கொண்­டால், அந்­தப் பகுதி வங்­கி­க­ளில் வட­மத்­திய மற்­றும் ஊவா மாகா­ணங்­க­ளது வங்­கி­க­ளை­விட பெருந்­தொ­கை­யாக நிதி­ வைப்­புச் செய்­யப்­பட்­டுள்­ளது. நாம் இத்­த­கைய நல்­லி­ணக்­கத்தை முன்­னோக்கி எடுத்­துச் செல்­வோ­மே­யா­னால், அர­சி­யல் ரீதி­யி­லான தீர்­வொன்றை ஏற்­ப­டுத்­திக் கொடுப்­போ­மே­யா­னால், எதிர்­வ­ரும் சில ஆண்­டு­க­ளில் யாழ்ப்­பா­ணம் உண்­மை­யில் எமது இலங்­கை­யின் ஒரு­ப­கு­தி­யாக மாற்­ற­மு­றும். எந்­த­வித சந்­தே­கமோ, அச்­சமோ இன்றி வட­ப­கு­தித் தமிழ் மக்­கள் தாம் இலங்­கை­யர்­கள் என்ற உணர்­வு­டன் செயற்­பட முனை­வார்­கள். அத்­த­கைய விதத்­தி­லேயே எனது உணர்­வு­களை வார்த்­தை­க­ளால் வௌிப்­ப­டுத்­தி­னேன். அது உண்­மை­யில் நீங்­க­ளும் உங்­க­ளது தரப்­பி­ன­ரும் தனித்து மேற்­கொண்ட முயற்­சி­க­ளுக்­கான பலா­ப­லன் என நான் கரு­து­கி­றேன். இன்று அத்­த­கைய நம்­பிக்­கை­யு­டன் நாம் இந்த நாட்டை நியா­யம் நீதி நில­வும் ஒரு நாடாக ஆக்­கி­யுள்­ளோம்’’.

 

தமது பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றுள்ள முன்­னாள் ஆயர் ஒஸ்­மன்ட் கோமிஸ் அடி­க­ளா­ரது ஆயர் பத­வி­யின் ஐம்­ப­தா­வது ஆண்டு நிறைவை முன்­னிட்டு கடந்த வாரம் பண்­டாரநாயக பன்­னாட்டு மாநாட்டு மண்­ட­பத்­தில் இடம்­பெற்ற நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்­தார்.

யாழ்ப்­பா­ணம் தற்­போது இலங்­கை­யின்
ஒரு பகு­தி­யாக இல்­லையா?
கேள்வி என்­ன­வென்­றால், தலைமை அமைச்­ச­ரது மேற்­கு­றித்த கருத்து வௌிப்­பாட்­டின்­படி, யாழ்ப்­பா­ணம் தற்­போது இலங்கை நாட்­டின் ஒரு பகு­தி­யாக இல்­லையா? யாழ்ப்­பாண மக்­கள் இலங்­கை­யர்­கள் இல்­லையா? யாழ்ப்­பா­ணம் தற்­போ­தும் எமது இலங்­கைத்­தி­ரு­நாட்­டின் ஒரு பகு­தி­யாக ரணி­லுக்­குத் தோன்­ற­வில்­லையா? என எழும் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்க இய­லா­துள்­ளதே? 2002ஆம் ஆண்­டி­லென்­றால், மேற்­கு­றித்த ரணி­லின் கருத்தை நம்­பு­வ­தற்கு தேவை­யான அத்­தனை கார­ணங்­க­ளும் இருந்­தன. ஏனென்­றால், அந்­தக் கால­கட்­டத்­தில் ரணில் தரப்­பி­னர் மேற்­கொண்ட சமா­தான உடன்­ப­டிக்கை கார­ண­மாக யாழ்ப்­பா­ணப்­ப­குதி மட்­டு­மல்­லாது வட­ப­குதி முழு­வ­துமே இலங்கை அர­சின் நிர்­வா­கத்­தின் கீழ் செயற்­ப­ட­வில்லை என்று எம்­மால் கரு­த­மு­டிந்­த மையே அதற்­கான கார­ண­மா­கும்.

இன்று நாட்­டின் வட­ப­கு­தி­யில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரை அங்­கி­ருந்து அகற்­றிக்­கொள்ள வேண்­டு­மென்ற தமிழ்த் தரப்­பி­ன­ரது கோரிக்கை குறித்து கடும் விமர்­ச­னக் கருத்­துக்­களை வெளி­யிட்­டு­வ­ரும் தினேஸ் குண­வர்த்­தன மற்­றும் விமல் வீர­வன்ச தரப்­பி­னர்­கள், அது தொடர்­பாக காட்­டுக்­கத்­தல் கத்­தும் நிலை­யில், ரணி­லின் தலை­மை­யி­லான இன்­றைய கூட்டு அரசு, அது குறித்து ஐந்து சதத்­துக்­குக்­கூட கணக்­கில் எடுக்­காத விதத்­தில் நடந்து கொள்­கி­றது. 2002ஆம் ஆண்­டி­லும்­கூட ரணி­லின் தலை­மை­யி­லான அரசு, எதை­யும் சட்டை செய்­யாத அத்­த­கை­ய­தொரு விதத்­தி­லேயே செயற்­பட்­டது. குச்­ச­வௌிச் சம்­ப­வம் இதற்­குப் பொருத்­த­மா­ன­தொரு உதா­ர­ண­மா­கக் கொள்­ளத்­தக்­கது.

குச்சவௌிச்­சம்­ப­வம் கற்­றுத்­தந்த பாடம்

2002ஆம் ஆண்­டில் குறிப்­பிட்­ட­தொரு நாளன்று, அந்த வேளை­யில் பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ள­ரா­கச் செயற்­பட்ட ஒஸ்­ரின் பெர்­னாண்டோ, இலங்­கைக்­கான நெதர்­லாந்து தூத­ரு­டன் யாழ்ப்­பா­ணத்­துக்­குச் சென்­றி­ருந்­தார். தமது மதிய உணவை எடுத்­துக்­கொண்­டி­ருந்த ஒஸ்­ரின் பெர்­னாண்­டோ­வுக்கு கடற்­ப­டைத் தள­பதி மூல­மாக கெட்ட செய்­தி­யொன்று கிடைத்­தது. ஆயு­தம் தாங்­கிய இரு­பது பேர் வரை­யி­லான விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­புப் போரா­ளி­கள் குச்­ச­வௌிப் பி­ர­தே­சத்­துள் நுழைந்­தி­ருப்­ப­தா­க­வும், அவர்­களை இலங்­கைக் கடற்­ப­டை­யி­னர் சுற்றி வளைத்­தி­ருப்­ப­தா­க­வும் ஒஸ்­ரின் பெர்­னாண்­டோ­வுக்கு தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. குறித்த தக­வ­லால் குழப்­ப­ ம­டைந்­து­போன ஒஸ்­ரின் பெர்­னாண்டோ, போர் நிறுத்­தக் கண்­கா­ணிப்­புக் குழு­வி­னூ­டாக விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­புக்கு செய்­தி­யொன்றை அனுப்­பி­வைத்­தார். ஆனால் அதற்கு விடு­த­லைப்­பு­லி­கள் தரப்­பி­லி­ருந்து சாத­க­மா­ன­தொரு பதில் எது­வும் கிடைக்­க­வில்லை.

அர­சின் நிர்­வா­கத்­தின் கீழ் இருந்து வந்த குச்­ச­வௌிப் பி­ர­தே­சத்­துக்­குள் பிர­வே­சித்­தி­ருந்த விடு­த­லைப் புலிப்­போ­ரா­ளி­கள் ‘‘இது எமது கட்­டுப்­பாட்­டில் உள்ள பிர­தே­சம். நீங்­கள் புத்­தி­சா­லித்­த­ன­மாக இங்­கி­ருந்து வில­கிச் சென்று விடுங்­கள்’’ என அரச படை­யி­னரை மிரட்­டி­னர். அரச படையினர் என்­ன­தான் எடுத்­துச் சொன்ன போதி­லும், விடு­த­லைப்­பு­லிப் போரா­ளி­கள் படை­யி­ன­ரது பேச்­சுக்கு மதிப்­புக் கொடுக்­க­வில்லை. நாங்­கள் உங்­கள் மீது மோதல் தொடுத்து உங்­க­ளைக் கைது செய்­யப்­போ­கி­றோம் என கடற்­ப­டைத் தள­பதி விடு­த­லைப்­பு­லிப் போரா­ளி­க­ளுக்கு தக­வல் அனுப்­பி­னார். அந்­தச் செய்­திக்­குக்­கூட புலிப் போரா­ளி­கள் எவ்­வித மதிப்­பும் கொடுக்­க­வில்லை. ‘‘பர­வா­யில்லை, வேறு போர்­வீ­ரர்­கள் அணியை வேண்­டு­மா­னா­லும் அனுப்­பிப்­பா­ருங்­கள். நாங்­கள் மோது­வ­தற்­குத் தயார்’’ என விடு­த­லைப்­பு­லிப் போரா­ளி­கள் பதில் தக­வல் அனுப்­பி­னர்.

இத­னால் கடுங்­கு­ழப்­பத்­துக்­குள்­ளான பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ளர் ஒஸ்­ரின் பெர்­னாண்டோ, சிக்­க­லுக்­கான தீர்­வொன்றை முன் வைத்தார். அதற்கு முன்­னர் ஒரு சந்­தர்ப்­பத்­தில் விடு­த­லைப்­பு­லி­க­ளது கட்­டுப்­பாட்­டில் இருந்த பகு­திக்­குள் பிர­வே­சித்­த­தால் விடு­த­லைப்­பு­லி­க­ளால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வரை விடு­த­லைப்புலி­கள் விடு­விப்­பார்­க­ளா­னால், கடற்­ப­டை­யி­ன­ரால் சுற்றிவளைக்­கப்­பட்­டி­ருந்த விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­கள் 20பேரை­யும் கைது செய்­யாது, குறித்த பகு­தி­யி­லி­ருந்து திரும்­பிச் செல்ல அனு­ம­திக்­கத் தயா­ரென கடற்­ப­டைத் தரப்­பி­ன­ரால் விடு­த­ லைப்­பு­லி க­ளுக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. அந்­தச் சம­ரச முயற்­சிக்­கும் விடு­ த­லைப்­பு­லி­கள் உட­ன­டி­யா­கச் சம்­ம­தம் தெரி­விக்­க­வில்லை.

இருந்­த­போ­தி­லும், கடற்­ப­டை­யி­னர் தாம் கூறி­யது போன்று தம்­மால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட நிலை­யி­லி­ருந்த அந்த விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­கள் 20பேரை­யும் எவ்­வித இடை­யூ­றும் ஏற்­ப­டுத்­தாது விடு­த­லைப்­பு­லி ­க­ளது கட்­டுப்­பாட்­டுப் பிர­தே­சத்­துக்­குள் திரும்­பிச்­செல்ல அனு­ ம­தித்­த­னர். இருந்தபோதி­லும், விடு­த­லைப் புலி­க­ளால் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த குறிப்­பிட்ட அந்­தப் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர், விடு­த­லைப் புலி­க­ளால் அர­சின் கட்­டுப்­பாட்­டுப் பகு­திக்கு மீண்­டு­வர அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. மேற்­கு­றித்த விதத்­தி­லேயே அந்த வேளைய பேரம் பேசல்­க­ளின்போது விடு­த­லைப்­பு­லி­கள் தரப்பு விட்­டுக் கொடுக்­காது, இறுக்­க­மாக நடந்து கொண்­டி­ருந்­தது.

விடு­த­லைப்­பு­லி­களை பன்­னாட்­டுத் தரப்பு அங்­கீ­க­ரிக்க வைத்­தது ரணி­லின் போர் நிறுத்த உடன்­ப­டிக்கையே
2002ஆம் ஆண்­டுக் காலப்­ப­கு­தி­யில் விடு­த­லைப் புலி­கள் அமைப்பு பன்­

னாட்டு அங்­கீ­கா­ரத்­தைப் பெற்­றி­ருந்­தி­ருக்­க­வில்லை. சமா­தா­னப் பேச்­சுக்­கள் என்ற போர்­வை­யில் நோர்வே அரசு, பிர­பா­க­ரனை ஒரு போராட்ட வீர­ரா­கச் சித்­த­ரிக்­கவே முயற்­சித்­தது. போர் நிறுத்த உடன்­ப­டிக்கை என்­ப­த­னூ­டாக விடு­த­லைப் புலி­கள் அமைப்­பி­னர் அர­சி­யல் பிரிவு என்ற ஒரு பிரிவை உரு­வாக்­கிக் கொண்­ட­னர். அந்­தப் பிரி­வின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட புலித்­தே­வன், ரணி­லின் புண்­ணி­யத்­தில் ஐரோப்­பா­வில் தங்க முடிந்­தது. சுக­வீ­னம் கார­ண­மாக மருத்­துவ சிகிச்­சைக்­கென புலித்­தே­வன் கொழும்­புக்கு வந்­தி­ருந்­தார்.

2002ஆம் ஆண்­டில் போர் நிறுத்த ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­வ­தற்கு முன்­னர், ரணில் கொழும்பு மற்­றும் கொழும்­பின் புற­ந­கர்ப் பகு­தி­க­ளில் செயற்­பட்ட இரா­ணுவ காவ­ல­ரண்­களை அகற்ற நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தார். ரணில் தற்­போ­தும்­கூட அத்­த­கைய நட­வ­டிக்­கை­யையே மேற்­கொண்டு வரு­கி­றார். ரணி­லின் அன்­றைய மற்­றும் இன்­றைய செயற்­பா­டு­க­ளி­லுள்ள மாறு­பாடு என்­ன­வெ­னில், முன்­னைய சந்­தர்ப்­பத்­தில் பிர­பா­க­ரன் உயி­ரு­டன் இருந்­தார் என்­பது மட்­டுமே. ரணில் அந்த வேளை­யில் அவ்­வி­தம் இரா­ணு­வக் காவ­ல­ரண்­களை அகற்றி அதன்­மூ­லம் நாட்டு மக்­க­ளுக்கு ஒரு­சிறு உற்­சா­கத்தை ஏற்­ப­டுத்த முயன்­றார். அந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி, விடு­த­லைப்­பு­லி­கள் குண்­டு­கள், வெடி மருந்­து­கள், தற்­கொ­லைக்­குண்­டு­தா­ரி­கள் மற்­றும் தமது இயக்­கப் புல­னாய்­வா­ளர்­களை கொழும்­புக்­குள் உட்­கொண்டு வந்து ஊடு­ருவ வைத்­தி­ருந்­த­னர், அத்­தோடு, விடு­த­லைப்­பு­லி­கள் தமக்­கென குறி­பார்த்­துச் சுடும் பிஸ்­டல் குழு­வை­யும் உரு­வாக்­கிக்­கொண்­ட­னர்.

பேச்சு மேசை­யி­லி­ருந்து
வில­கிக் கொண்ட விடு­த­லைப் புலி­கள்
இத்­த­கைய விதத்­தில் தாம் மேற்­கொள்ள விரும்­பி­யி­ருந்த சகல ஏற்­பா­டு­க­ளை­யும் பூர்த்­தி­செய்து கொண்ட பின்­னர், விடு­த­லைப் புலி­கள் நொண்­டிச் சாட்­டுக்­களை முன்­வைத்து சமா­தா­னப் பேச்­சுக்­க­ளி­லி­ருந்து வௌியே­றி­னர். ரணி­லின் தலை­மை­யி­லான அர­சுக்கு அத­னை­ய­டுத்தே விடு­த­லைப் புலி­க­ளது உள்­நோக்­கம் தௌிவா­கப் புலப்­பட ஆரம்­பித்­தது. விடு­த­லைப்­பு­லி­களை மீண்­டும் சமா­தா­னப் பேச்­சுக்­க­ளில் இணைய வைக்க ரணில் தரப்­பி­னர் கடும் முயற்­சி­களை மேற்­கொண்­ட­னர்.
2001ஆம் ஆண்­டுக் கால­கட்­டத்­தில் நாட்­டின் பாது­காப்­புப் படைத்­த­ரப்பு சிறப்­பான தரப்­பாக பெய­ரீட்­டி­யி­ருந்­தது. விடு­ த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான தமிழ் அமைப்­புக்­கள் மற்­றும் தனி நபர்­க­ளது உத­வி­யு­டன் விடு­த­லைப் புலி­க­ளது கட்­டுப்­பாட்­டுப் பிர­தே­சங்­க­ளில் இலங்கை அரச படைத்­த­ரப்பு சிறந்­த­தொரு புல­னாய்­வுப் பிரிவு வலை­ய­மைப்பை நடை­மு­றைப்­ப­டுத்தி வந்­தது. விடு­த­லைப்­பு­லி­கள் தரப்பு அர­ச­ப­டைத் தரப்­பின் அத்­த­கைய புல­னாய்­வுப் பிரிவு குறித்து அச்­ச­ம­டைந்­தி­ருந்­த­னர். சமா­தான ஒப்­பந்­தம் என்ற போர்­வை­யில் விடு­த­லைப்­பு­லி­கள் அந்­தப் பிரச்­சி­னைக்­கும் தீர்வு தேடிக்­கொண்­டார்­கள்.

தமது இலக்­கில்
வெற்­றி­கண்ட விடு­த­லைப்­பு­லிகள்
தமக்கு எதி­ரான தமிழ்ப் போரா­ளித் தரப்­புக்­களை நிரா­யு­த­பா­ணி­க­ளாக்க வேண்­டு­மென விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்பு நிபந்­தனை முன்­வைத்­தது. ரணில் உட­ன­டி­யா­கவே அதற்கு ஒப்­பு­தல் தெரி­வித்­தார். இத­னால் இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வு­டன் சேர்ந்து இயங்­கிய புளொட், ஈ. பி. டி .பி போன்ற அமைப்­புக்­க­ளது உறுப்­பி­னர்­கள் பலர் ஆயு­தங்­கள் களை­யப்­பட்ட நிலை­யில் விடு­த­லைப் புலி­க­ளால் கொல்­லப்­பட்­ட­னர். பாது­காப்­புத் தரப்­பின் நிபு­ணர்­க­ளது ஆலோ­சனை எது­வும் பெறாது தன்­னிச்­சை­யாக ரணில் மேற்­கொண்ட 2002ஆம் ஆண்­டின் போர் நிறுத்த உடன்­பாடு வர­லாற்­றில் பெரும் துரோ­க­ மா­ன­தொன்று என்ற கருத்து முற்­று ­மு­ழு­தாக உண்­மை­யா­னதே.

பயங்­க­ர­வாத அமைப்பு என்ற விதத்­தில் பன்­னாட்­டுத் தரப்­புக்­க­ளால் கணிக்­கப்­பட்டு வந்த விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­புக்கு, உலக அங்­கீ­கா­ரத்­தைப் பெற்­றுக்­கொ­டுத்­தது, 2002ஆம் ஆண்­டின் ரணி­லின் அரசே. அந்த ரணில் இந்த ஆண்­டில் விடு­த­லைப் புலி­க­ளுக்கு வௌ்ளைய­டித்­துக்­காட்­டி­யி­ருக்­கி­றார். போர் முடிந்து விட்­ட­போ­தி­லும் ரணில் இப்­போ­தும் அர­சி­யல் அரங்­கி­லேயே உள்­ளார். ரணி­லைப் பொறுத்­த­வரை, இன்று யாழ்ப்­பா­ணத்­தில் வாழ்­வோர் இலங்­கை­யர்­கள் அல்லர். யாழ்ப்­பா­ணம் இலங்­கை­யின் ஒரு பகு­தி­யென ரணில் கரு­த­வில்லை. விடு­த­லைப்­பு­லி­கள் இனி ஒரு­போ­தும் தலை­யெ­டுக்­கப்­போ­வ­தில்லை. இவ்­வா­று­தான் ரணில் கரு­து­கி­றார்.

ஆனால் நிதர்­சன உண்மை அது­வல்­லவே. மூன்று தசாப்­த­கா­லப்­போர் முடிந்­து­விட்­டது. மீண்­டும் போரொன்று அவ­சி­ய­மில்லை. இலங்கை தற்­போது பிள­வு­ப­டாத ஒரு நாடு. யாழ்ப்­பா­ணம் அந்­தப் பிள­வு­ப­டாத நாட்­டின் ஒரு நக­ரமே. யாழ்ப்­பாண மக்­கள் இந்­தப் பிள­வு­ப­டாத இலங்கை நாட்­டின் பிர­சை­களே. அவர்­கள் உண்­மை­யில் இலங்­கை­யர்­களே.

2002ஆம் ஆண்­டில் ரணில் பத­விக்­கு­வந்து நாட்­டின் இனப் பிரச்­சி­னைக்கு இதோ தீர்வு கிட்­டப்­போ­கி ­றது என்­றி­ருந்த நிலை­யில், அத­னைக் குழப்­பி­ ய­டித்­தி­ருந்­தார். இப்­போது இந்த 2018ஆம் ஆண்­டி­லும் ரணில் மீண்­டும் அத்­த­கை­ய­தொரு குழப்­ப­நி­லையை உரு­வாக்­கப்­போ­கி­றார். ஆனால் கடந்த சில நாள்­க­ளாக அவர் வௌியிட்­டு­வ­ரும் கருத்­துக்­கள், மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­களை நோக்­கும்­போது எது­வும் நல்­ல­தா­கத் தோன்­ற­வில்லை.

http://newuthayan.com/story/09/தப்பாகிப்-போகின்ற-ரணிலின்-ராஜதந்திரம்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.