Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? – சுமந்திரன் தகவல்

Featured Replies

வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? – சுமந்திரன் தகவல்

 

 

M.A.Sumanthriran-720x450.jpg

வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் சி.வி.விக்னேஸ்வரனையே முன்னிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து எமது ஆதவன் செய்திச் சேவை வினவியபோது அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனக் குறிப்பிட்டார். அத்தோடு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பாக சரியான நேரத்தில் அறிவிப்போம் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வடக்கு முதல்வராக தெரிவுசெய்யப்பட்ட விக்னேஸ்வரன், கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்டு வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான சர்ச்சை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.

இந்நிலையில், கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான மாவை சேனாதிராஜாவை அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, அடுத்த மாகாண சபை தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரன், கூட்டமைப்பு அல்லாத மாற்றுக் கட்சியொன்றின் ஊடாக  முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வடக்கின்-அடுத்த-முதலமைச்/

  • தொடங்கியவர்

விக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன

b5aa8ed46c64eb5ac312bb4e4042301e?s=48&d=

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கூட்டமைப்பு கடைசி நேரம் வரை நம்பிக்கை கயிறைக் கொடுத்து விட்டு,இறுதி நேரத்தில் காலை வாரினால் கூட, அவருக்கும் கடைசிக் கட்டத்தில் கால் வைத்துச் செயற்பட இன்னொரு படகு வெளியில் தயார் என்பது தான் கணேஷ் வேலாயுதத்தின் முயற்சி காட்டுகின்றது. (காலைக்கதிர் – மின்னல்)

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராக நிறுத்த மாட்டோம் – முன்னர் விட்ட பிழையை மீண்டும் விட மாட்டோம் – என தமிழ் அரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுமந்திரன் ஏற்கனவே கூறியுள்ளார்.

அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தமிழ் அரசுக் கட்சியில் நீண்ட காலம் உழைத்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களின் விருப்பாக இருக்கிறது.

625.500.560.350.160.300.053.800.900.160.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் 2013 இல் நடந்த தேர்தலில் வென்று வந்த பின்னர் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராகவே செயற்பட்டு வந்துள்ளார். 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரன் ஒன்றுக்கு மேற்பட்ட அறிக்கைகள் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் ஆதரவாகவும் நடந்து கொண்டார்.

விக்னேஸ்வரன் அவர்களே தமிழ் அரசுக் கட்சி நியமனம் கொடுக்காத பட்சத்தில் தான் வேறு அணிகளோடு சேர்ந்து தேர்தலில் நிற்கப் போவதாகச் சொல்கிறார். வேறு அணியும் சாத்தியப்படாவிட்டால் தான் தனிக் கட்சி தொடங்கி போட்டி போடப் போவதாக அறிவித்துள்ளார்.

எனவே “கூட்டமைப்பு கடைசி நேரம் வரை நம்பிக்கை கயிறைக் கொடுத்து விட்டு, இறுதி நேரத்தில் காலை வாரினால் கூட” என்று எந்த அடிப்படையில் சொல்லப்படுகிறது என்பது தெரியவில்லை.

விக்னேஸ்வரன் புத்திசாலி என்றால் அவர் தமிழ் அரசுக் கட்சி 2013 இல் விட்ட பிழையை மறுபடியும் விடும் எனக் கனவிலும் எதிர்பார்க்க மாட்டார்.

அவருக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன.

http://www.newsuthanthiran.com/2018/08/06/விக்னேஸ்வரனுக்கு-ஒரு-படக/

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நவீனன் said:

முதலமைச்சர் விக்னேஸ்வரன் 2013 இல் நடந்த தேர்தலில் வென்று வந்த பின்னர் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராகவே செயற்பட்டு வந்துள்ளார். 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரன் ஒன்றுக்கு மேற்பட்ட அறிக்கைகள் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் ஆதரவாகவும் நடந்து கொண்டார்.

நீங்கள் சிங்கள அரசிடம் பணத்தை பெற்றுக்கொண்டு பேசா மடந்தைகளாக தமிழர் விடயத்தில் இருப்பது போல் விக்கியரையும் இருக்கணும் என்று விரும்பியது நடக்கவில்லை என்றால் கட்சிக்கு எதிராக நடப்பது என்று பொருள் என்று இன்றுதான் எனக்கு விளங்கியது ????? காலையில் ஒரு அறிக்கையையும் பின் அதே அறிக்கையை அப்படி சொல்லவில்லை என்று மறுப்பறிக்கையும் விடுவதில் சூரர் சுமந்திரன் என்பது குழந்தை பிள்ளைக்கும் தெரியும் .  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.