Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் யாழ்.ரமணன் காலமானார்!

Featured Replies

எனது அஞ்சலிகள்.

  • தொடங்கியவர்

“ஓ மரணித்த வீரனே” புகழ் யாழ் ரமணனுக்கு வடமாகாண ஆளூநர் இரங்கல்…

 

 

Yal-ramanan-Regi.jpg?resize=800%2C589

விடுதலைப்புலிகளின் பல புரட்சி பாடல்களுக்கு இசையமைத்தவரும்,  ஈழத்து இசை கலைஞருமான யாழ்.ரமணன் என அழைக்கப்படும் இராஜேந்திரன் இராஜேஸ்வரனின் மறைவுக்கு வடமாகாண ஆளூநர்   றெஜினோல்ட் குரே இரங்கல் தெரிவித்து ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார்.

 
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , 
 

நீதித்துறையில் மட்டுமல்ல இசைத்துறையிலும் ஊடகத்துறையும் சாதனை படைத்த அமரர் இராஜேந்திரன் இராஜேஸ்வரன் (ரமணன்) மரணமடைந்த செய்தி யாழ் குடாநாட்டினை மட்டுமல்ல உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களையும் இசை ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆற்றியுள்ளது.

ஒரு மனிதன் ஒரு துறையினையே சரிவர கையாள்வதற்கு முடியாது உள்ள தற்போதய காலத்தில் கலைஞனாக, சட்டத்தரணியாக, ஊடகவியலாளராக மூன்று துறைகளிலும் செயலாற்றி “யாழ் ரமணன்” என்றால் உலகம் அறியும் வகையில் திகழ்ந்த ஒரு நல்ல மனிதனை தமிழ் சமூகம் இழந்து இருக்கின்றது.

ஏராளமான பாடல்களுக்கு இசை அமைத்த ரமணன் ராஜன்ஸ் இசைக்குழுவின் இயக்குனராக இருந்து வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடாத்திய பெருமைக்கு உரியவர் இலங்கை இந்திய பிரபல்யமான கலைஞர்களுக்கு இசை அமைத்த பெருமையையும் அவரையே சாரும். சிறந்த கலைஞர்களை உருவாக்கிய பெருமைக்கு உரிய ரமணனின் இழப்பு கலைத்துறைக்கு பேரிழப்பாகும்.

வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் மட்டுமல்ல நானும் ஒரு கலைஞன் என்ற வகையில் சக கலைஞனின் இழப்பினால் துயர் உற்று இருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், நண்பர்கள் இசைப்பிரியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன். என குறிப்பிடப்பட்டு உள்ளது.

regi1.jpg?resize=600%2C800

http://globaltamilnews.net/2018/91201/

  • தொடங்கியவர்

கிண்கிணி நாதம் செவிகளில் கேட்கிறது மீட்டிய ரமணன் மீளாத்துயில்!

 

 
 
Image

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

காலம் வேகமாகவே ஓடிவிட்டது. நினைவுகள் யாவும் நேற்றுப் போல் இருக்கின்றன.

யாழ்.மத்தியகல்லூரியில் மாணவனாக இருக்கும் பொழுதே இசையால் ஈர்க்கப்பட்டு ரமணன் தனது கரங்களில் ‘கிற்றார்’ வாத்தியத்தை ஏந்தினார்.

யாழ். மண்ணில் கண்ணன் கோஷ்ரி புகழ் பெற்று விளங்கிய காலகட்டம்.

இசைவாணர் எம். கண்ணன் அவர்களைத் தனது இசைக்குருவாக ஏற்றுக்கொண்டார். அவரிடமே முறையாக ‘கிற்றார்’ இசை பயின்று தேறினார்.

யாழ்ப்பாணத்தில் இற்றைக்கு அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னர்,’கிற்றார்’ இசைத்துப் புகழீட்டியவர்கள், திரு.சகாதேவன், திரு.மகிமைநாதன்(அமரர் ) திரு.அருமைத்துரை(அமரர்),
திரு.திருக்குமார்(அமரர் ), திரு.வின்சன்,திரு.சீலன்(அமரர் ),திரு.பேணாட், திரு.ரங்கன் (அமரர் ),திரு.மாணிக்கவாசகர், திரு.சம்பந்தன்,திரு.சுந்தர் (குட்டி)ஆகியோர்.

அமரர்.திருக்குமார் அவர்களுடைய கிற்றார் இசை மீட்டல் ரமணன் அவர்களை மிகவும் கவர்ந்திருந்தது.

ஆரம்பத்தில் திருக்குமார் பாணியிலேயே கிற்றார் இசைத்து வந்த ரமணன் பின்னர் தனக்கென ஒரு தனிப்பாணியை அமைத்துக்கொண்டார்.

நோய் அவர் உடலைத்தாக்கி படுக்கையில் சரிந்திடவைக்கும் வரை ரமணனின் கரங்கள் அந்த கிண்கிணி நாதத்தை இசைத்துக் கொண்டே இருந்தன.

யாழ்ப்பாணத்தில் கண்ணன் கோஷ்ரி, அருணா இசைக்குழு,கலாலயா இசைக்குழு,ரங்கன் இசைக்குழு,மண்டலேஸ்வரன் இசைக்குழு என்பன இயங்கிவந்த காலகட்டம்.

இந்த இசைக்குழுக்களில் நிரந்தரமாக அங்கம் வகிக்கும் கலைஞர்கள் நிகழ்ச்சிக்குச் சமூகமளிக்க முடியாத வேளைகளில் அந்த இடத்தை ஒரு சில இசைக்கலைஞர்கள் பூர்த்தி செய்து வந்தார்கள்.

1975 ம் ஆண்டு யாழ்.கந்தர்மடம் பகுதியில் இயங்கி வந்த தனியார் கல்விநிலையத்தில் ஓர் இசை நிகழ்ச்சி.
இதில் பாடகர்கள் கே.எஸ்.பாலச்சந்திரன்,நடா ஜெயதேவன்,அன்ரன் டேவிட். இசைக்கலைஞர்கள் ரமணன்,அரியபுத்திரன்(பவா),சகாதேவன்,குருநாதன், எம்.எஸ்.நாதன்,மனோ, அமரர் சந்திரன்ஆகியோருடன் நானும் (எஸ்.கே.ராஜென்) ஒன்றிணைந்திருந்தோம்.

அன்றைய நிகழ்ச்சி நிறைவு பெற்றதன் பின்னர் மீண்டும் உதயமானது சுண்டுக்குழி ராஜன்ஸ் இசைக்குழு.

இந்த இசைக்குழுவை பொறியியலாளர் குணசேகரம் அவர்கள் மிகச்சிறப்பாக இரண்டு ஆண்டுகள் இயக்கி வந்தார். பின்னர் நிறுத்திவிட்டார். அப்பொழுது கே.எஸ்.பாலச்சந்திரன் அதில் பாடகராகத் திகழ்ந்தார்.


அதனால் சுண்டுக்குழி ராஜன்ஸ் இசைக்குழு என்ற பெயரில் தொடருவதற்கு குணசேகரம் அவர்களிடம் அனுமதி பெற்றார் கே.எஸ்.பாலச்சந்திரன். அவரே இயக்குனராவும் திகழ்ந்தார்.

வடக்கு,கிழக்கு மாகாண ஆலயங்கள் யாவற்றிலும் பல நூறு நிகழ்ச்சிகள்.
ஆண்டுவிழாக்கள், கலைவிழாக்கள்,வாணி விழாக்கள்,திருமண விழாக்கள்,பிறந்தநாள் விழாக்கள் என்பனவற்றில் இசைநிகழ்ச்சிகள் வழங்கினோம்.


இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் ரமணன் அவர்களின் கிற்றார் இசை தனித்துவம் பெற்றது. ரமணன் கிற்றார் இசை வல்லுனராவதற்கு கிடைக்கப்பெற்ற அரங்கங்கள் வழி கோலின.


கீ போட் இப்பொழுது - அப்பொழுது எக்கோடியன்.
இதனை இசைத்துவந்த பபா அவர்கள் வேலை மாற்றலாகி மட்டக்களப்புக்குச் செல்ல அந்த இடத்தை நிரப்பினார் திருமலை நீரோ இசைக்குழுவின்கலைஞர் கங்கா அவர்கள்.


1979 காலகட்டத்தில் ரமணன் சட்டப்படிப்பை மேற்கொள்ள கொழும்பு சென்றவேளை அங்கே மோகன்ராஜ் அவர்கள் தொடர்புகொண்டு அப்சராஸ் இசைக்குழுவில் இணைத்துக்கொண்டார்.

இலங்கை வானொலியில் அவ்வேளை நடைபெற்று வந்த பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சிக்கு மோகன்- ரங்கன் ஆகியோருடன்
ரமணன் அவர்களும் இசை மீட்டினார்.

அப்பொழுதுதான் ரமணன் அவர்களை அன்பு அறிவிப்பாளர் அப்துல்ஹமீத் அவர்கள் மோகன்-ரங்கன்-யாழ்.ரமணன் இணைந்த அப்சராஸ் குழுவினர் இசை வழங்கும் பாட்டுக்குப்பாட்டு என விழித்தார்.
தொடர்ந்து அவர் யாழ்.ரமணனாகவே திகழ்ந்தார்.

மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய ரமணன் அவர்களின் இசைப்பணி ராஜன்ஸ் இசைக்குழுவுடன் தொடர்ந்தது.


1983 வரை நாம் ஒன்றாக இருந்தோம்.
பாடகர் வி.பி.அருள்தாஸ் எம்மோடு இணைத்துக்கொண்டார்.
அவ்வப்பொழுது எம்.பாக்கியராஜா இணைந்துகொள்வார்.

பலாலி இராணுவ முகாமிலும் ராஜன்ஸ் இசைக்குழுவினர் யுத்தத்திற்கு முன்னரான காலகட்டத்தில் இசை நிகழ்ச்சி நடாத்தியிருந்தமையால் கப்ரின் டீன் அவர்களின் அறிமுகம் கிடைத்திருந்தது.

யுத்தம் ஆரம்பமான காலகட்டத்திலும் நாம் நிகழ்ச்சிகள்
நடாத்தி வந்தோம்.

நள்ளிரவு வேளைகளில் இராணுவத்தினரிடம் அகப்படுவோம். கப்ரின் டீன் அவர்களின் பெயரைச்சொல்லி தப்பித்துக் கொள்வோம்.

அவ்வேளை ரமணன் “எங்களால கப்ரின் டீன ட்ரான்ஸ்ச பண்ணுவாங்க இதத் தெரியாம நாங்கள் கப்ரின் டீன் என்போம். அப்ப தான் எங்களுக்குச் சாத்துவாங்கள் வாங்குவோம்” எனச்சொல்வார்.

அப்போது இசைக்குழுக்கலைஞர்கள் இராணுவத்தினரின் சோதனைகள், தாக்குதல்கள் என்பவற்றுக்கு உள்ளான கால கட்டம்.

இது போன்ற பல விடயங்கள். எல்லாமே நினைவலைகளாக எழுகின்றன.


1983க்குப் பின்னர் நம்மில் பலர் நாட்டை விட்டு வெளியேறினோம்.

லோகேஸ் அவர்கள்
சிறிது காலம் ராஜன்ஸ் இசைக்குழுவின் தொகுப்பாளராகத் திகழ்ந்தார்.

போராட்டம் உக்கிரம் பெற்றது. யாழ்.ரமணன் அவர்கள்
தேசத்திற்காகவும் இசைப்பணியாற்றினார்.

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்..
சுகுமார் பாடியது.

ஓ மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத் தா..

இது பலஸ்தீனவிடுதலைப் பாடலைத்தழுவி ரமணன் அவர்களே எழுதி இசையமைத்தது.

பூத்தகொடி பூவிழந்து தவிக்கிறது..
குமாரசாமி பாடியது.

நீரடித்து நீரிங்கு விலகாது அம்மா..
அமரர் கௌசி ரவிசங்கர் பாடியது.

குறிப்பிட்டுக் கூறத்தக்க இத்தகைய விடுதலை கானங்கள் உட்பட ஏறத்தாள 600 பாடல்களுக்கு ரமணன் இசையமைத்திருக்கிறார்.

பிச்சுமனம் திரைப்படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

இவ்வாறு தேசத்திற்கான பணியையும் மிக நிறைவாக ஆற்றியுள்ளார்.

பேச்சுவார்த்தை காலகட்டத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீண்டும் ராஜன்ஸ் இசைக்குழுவை இயக்கினார்.
அதன் இயக்குனராகத் திகழ்ந்தார்.

சட்டவாளராக இருந்த போதிலும் இசையின் மீதே அவர் மிகவும் நாட்டம் கொண்டிருந்தார்.
அதுவே அவரின் சுவாசமாக இருந்தது.
அவர் நேசித்த வந்த கிற்றார் இசையை மீட்ட முடியாமல் போகவே, தனது சுவாசத்தையும் அடக்கிக்கொண்டார்.

புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் அவரது இசைத்துறை நண்பர்கள் எல்லோரும் நாட்டிலே சந்தித்து எமது பழைய நினைவுகளை மீட்டுவோம் என ரமணன்
அவர்களுடன் பேசி வந்தோம்.
அது நிறைவேறாமலே ரமணன் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுவிட்டார்.

கிற்றார் இசை விற்பன்னர் யாழ்.ரமணன் இல்லாத யாழ்ப்பாணம்..

ஈழத்து இசையுலகில் ரமணன் புகழ் என்றென்றும் நிலை பெற்றிருக்கும்.

-எஸ்.கே.ராஜென்.

https://www.ibctamil.com/special/80/104605

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

 

மீட்டிய ரமணன் மீளா துயிலில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.