Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடுக்குநாறி மலைக்கு சென்றால் கைது செய்யப்படுவீர்; தொல்லியல் திணைக்களம்

Featured Replies

வெடுக்குநாறி மலைக்கு சென்றால் கைது செய்யப்படுவீர்; தொல்லியல் திணைக்களம்

 

 

நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என கூறியிருக்கும் தொல்லியல் திணைக்களம், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என நெடுங்கேணி பொலிஸார் ஊடாக கூறியிருக்கின்றது. 

vedukku_nari.jpg

இது குறித்து நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்செல்வன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், வெடுக்குநாறி மலையையும், அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதியை நெடுங்கேணி பிரதேச மக்கள் மிக நீண்டகாலமாக பாதுகாத்து வந்துள்ளனர். குறிப்பாக 2014 ஆம் ஆண்டு வெடுக்குநாறி மலையை உடைத்து கருங்கல் அகழ்வதற்காக சிலர் முயற்சித்தபோது மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து அதனை தடுத்திருந்தார்கள். 

இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி நெடுங்கேணி பிரதேச பொலிஸ் நிலையத்திலிருந்து எமக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு எம்மை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகத்தினர் வரவேண்டும் எனவும் கூறப்பட்டது. இதற்கமைய இன்று  காலை 10 மணிக்கு நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு நாங்கள் சென்றிருந்தோம். 

அப்போது தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகள் 4 பேர் அங்கு வந்திருந்தனர். அவர்கள் 4 பேரும் சிங்கள மொழி பேசுபவர்கள். அவர்கள் பேசுவதை பொலிஸார் எமக்கு மொழி பெயர்த்து கூறினார்கள். 

இதன்போது வெடுக்குநாறி மலை தமது ஆழுகைக்குள் வந்துள்ளதாகவும், வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதிக்குள் செல்ல கூடாதெனவும், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் நாளை ஆடி அமாவாசை பூசைக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டோம். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பொலிஸார் பேசியதன் அடிப்படையில் பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

http://www.virakesari.lk/article/38268

  • தொடங்கியவர்

வெடுக்குநாரி மலையில்- சிவனுக்குப் சிறப்புப் பூசை!!

 

 

unnamed-2-4-780x405.jpg

வெடுக்­கு­நாரி மலை­யில் உள்ள ஆதி இலிங்­கேஸ்­வ­ரர் ஆல­யத்­துக்கு வழி­பாட்­டுக்­குச் செல்­லக் கூடாது என்று பொலி­ஸார் தடை விதித்­துள்ள நிலை­யில் நேற்று அங்கு வழி­பா­டு­கள் நடந்­துள்­ளன.

நேற்று ஆடி அமா­வாசை தின­மா­த­லால் அங்கு சிறப்­புப் பூசை வழி­பா­டு­க­ளும் நடந்­துள்­ளன.

வவு­னியா, வடக்கு நெடுங்­கே­ணி­யில் உள்ள ஒலு­ம­டுக் கிரா­மத்­தில் இருந்து சற்­றுத் தொலை­வில் காட்­டுப் பகு­தி­யில் அமைந்­துள்­ளது வெடுக்­கு­நாரி மலை. அங்கு ஒவ்­வொரு வெள்­ளிக்­கி­ழ­மை­யும் மக்­கள் பூசை வழி­பா­டு­களை மேற்­கொள்­வது வழமை.

திடீ­ரென அந்­தப் பகுதி தமக்­கு­ரி­யது என்­றும், அங்கு எவ­ரும் செல்­லக் கூடாது என்­றும் தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் அறி­வித்­தது. நெடுங்­கேணி பொலிஸ் நிலை­யத்­துக்­கும் தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் இது தொடர்­பில் அறி­வித்­தது.

வெடுக்­கு­நாரி மலை­யி­லுள்ள ஆல­யத்­தின் நிர்­வா­கி­கள் பொலி­ஸா­ரால் அழைக்­கப்­பட்­ட­னர். அந்­தப் பகுதி தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­துக்­குச் சொந்­த­மா­னது என்­றும், நேற்று சனிக்­கி­ழமை முதல் எவ­ரும் அந்­தப் பகு­திக்­குள் அனு­மதி இன்றி நுழை­யக் கூடாது என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­ட­னர்.

நேற்று ஆடி அமா­வாசை தின­மா­த­லால் மக்­கள் அங்கு சென்று வழி­பா­டு­களை மேற்­கொண்­ட­னர். நெடுங்­கே­ணிப் பொலி­ஸா­ரும் கூடச் சென்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மக்­கள் விச­னம்
இந்த ஆல­யம் எமது வாழ்­வோடு பின்­னிப் பிணைந்­தது. எமது முன்­னோர்­கள் இங்கு வழி­பா­டு­களை மேற்­கொண்­ட­னர். இப்­போது திடீ­ரென தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் உரிமை கொண்­டா­டு­கின்­றது. எமக்கு இது சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

எம்மை இங்கு வழி­பாடு மேற்­கொள்­ளக் கூடாது என்று கூறு­வது மனித உரிமை மீறலே. நாம் மலைக்­கான பாதை­கள் அமைந்­துப் படி­க­ளும் அமைக்­க­வி­ருந்­தோம். அவை­யும் தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­தப் பகு­தி­யில் புதை­யல் இருப்­ப­தா­கக் கூறப்­பட்­டா­லும், நாம் வழி­பாடு செய்­வ­தற்­கும், அதற்­கும் எந்த சம்­பந்­த­மும் இல்லை. பௌத்த மய­மாக்­க­லின் ஒரு அங்­க­மாவே இது எமக்­குத் தென்­ப­டு­கின்­றது.

எம்மை தடுப்­பதை ஏற்க முடி­யாது. இதற்­குக் கட்­டா­யம் எதிர்ப்பு வெளி­யி­டு­வோம். எமது உரி­மையை நிலை­நாட்­டு­வோம். தமிழ் அர­சி­யல் பிர­தி­நி­தி­கள் இது தொடர்­பில் மௌனம் காக்­காது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று அந்­தப் பகுதி மக்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

 

unnamed-20.jpg
Shares
  •  
  •  
  •  
unnamed-5-5.jpg
Shares
  •  
  •  
  •  

 

 

unnamed-4-6.jpg
Shares
  •  
  •  
  •  
unnamed-3-6.jpg
Shares
  •  
  •  
  •  

 

 

unnamed-1-6.jpg

http://newuthayan.com/story/13/வெடுக்குநாரி-மலையில்-சிவனுக்குப்-சிறப்புப்-பூசை.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நெடுங்கேணி மக்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

 

Vedukkunari-Malai--720x440.jpg

நெடுங்கேணி- ஒலுமடு வெடுக்குநாறி மலைக்கும் அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயத்திற்கும் செல்லக்கூடாதென தொல்லியல் திணைக்களம் வழங்கியிருந்த உத்தரவை குறித்த திணைக்களம் நிபந்தனைகளுடன் தளர்த்தியுள்ளது. இந்த அனுமதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், வெடுக்குநாறி மலைக்கும் ஆலயத்திற்கும் செல்வதற்கும் தாம் அனுமதிப்பதாகவும், ஆனால் ஆலய புனரமைப்பு நடவடிக்கைகள் செய்வதாயின் தமது அனுமதியைப் பெறவேண்டும் என குறித்த திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிகுந்த போராட்டத்தின் பின்னர் நேற்று (சனிக்கிழமை) ஆடி அமாவாசை விரதத்திற்கு மட்டும் வெடுக்குநாறி மலைக்கும் ஆலயத்திற்கும் மக்கள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் வெடுக்குநாறி மலைக்கும் ஆலயத்திற்கும் செல்வதற்கு சில நிபந்தனைகளுடன் தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது

ஒலுமடு கிராமத்தில் உள்ள வெடுக்குநாறி மலை மற்றும் அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயம் ஆகியன தமது கட்டுப்பாட்டுக்குள் வருவதாக கடந்த 10 ஆம் திகதி அறிவித்த தொல்லியல் திணைக்களம் அங்கு செல்ல கூடாதெனவும் மீறி சென்றால் தண்டிக்கப்படுவீர்கள் எனவும் மக்களுக்கு கூறியிருந்தது.

http://athavannews.com/நெடுங்கேணி-மக்களுக்கு-நி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.