Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழைய முறையில் தேர்தலை நடாத்திக் காட்டுவோம்: ஹக்கீம் சூளுரை

Featured Replies

பழைய முறையில் தேர்தலை நடாத்திக் காட்டுவோம்: ஹக்கீம் சூளுரை

 

IMG_4893-720x450.jpg

தேர்தல் முறைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடாத்தி, வாக்கெடுப்பின் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று, பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடாத்திக்காட்டுவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மருதமுனையில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “புதிய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு சில கட்சிகளுக்குள் இழுபறி நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு முடிவுகட்டும் நோக்கில் நாடாளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, புதிய தேர்தல் முறையில் பிடிவாதமாக இருக்கின்ற கட்சிகளுக்கு எங்களது நிலைப்பாட்டை மிகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருக்கிறோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஜே.வி.பி.யும் புதிய முறையில் தேர்தலை நடாத்துவதற்கு பிடிவாதமாக இருக்கின்றன. தேர்தல் முறைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடாத்தி, வாக்கெடுப்பின் மூலம் ஒரு முடிவைக்கண்டு அவசரமாக மாகாணசபை தேர்தலை நடாத்த வேண்டுமென நாங்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறோம்.

எமது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லாவிடினும், அதனை ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு நிர்ப்பந்ததை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். எல்லாத் தரப்புகளிடமும் பேசிய வகையில், பழைய முறையில் தேர்தலை நடாத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை எடுத்துக்காட்டுவோம் என்பதை நான் அவர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.

நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடாத்தி, நடைபெறும் வாக்கெடுப்பில் பழைய தேர்தல் முறைக்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவோம். அதன்பின் பழைய தேர்தல் முறையில் விரைவாக மாகாணசபை தேர்தலை நடாத்துவோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பழைய முறையில் தேர்தலை நடாத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எங்களுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் அதிகாரங்களை பங்கிட்டு அவற்றை சிறுபான்மையினர் அனுபவிக்கவேண்டும் என்பதற்காக 13ஆம் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தோமா, அந்த இடங்களில் பேரின ஆளுநர்கள் ஆளுகின்ற நிலைமைதான் இப்போது வரப்போகிறது.

இதில் நாங்கள் இழுபறிபட்டுக்கொண்டிருந்தால் ஆளுநர்களின் கைகளில் ஆட்சியை கொடுத்துவிட்டு நாங்கள் பரிதவிக்கவேண்டிய நிலைமை வந்துவிடும். கிழக்கில் இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. வடக்கிலும் செப்டம்பர் மாதத்தின் பின்னர் இந்த நிலவரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். அதற்காக நாங்கள் எடுத்துள்ள முயற்சியில் நிச்சயம் வெற்றிகாண்போம்“ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/பழைய-முறையில்-தேர்தலை-நட/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.