Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுகவின் உண்மையான உடன்பிறப்புகள் என்னுடன்தான் உள்ளனர்; காலம் பின்னால் பதில் சொல்லும்: கருணாநிதி நினைவிடத்தில் அழகிரி பேட்டி

Featured Replies

திமுகவின் உண்மையான உடன்பிறப்புகள் என்னுடன்தான் உள்ளனர்; காலம் பின்னால் பதில் சொல்லும்: கருணாநிதி நினைவிடத்தில் அழகிரி பேட்டி

 

 

 
download%207

கருணாநிதி,அழகிரி, ஸ்டாலின் - கோப்புப் படம்

திமுகவின் உண்மையான விசுவாசமான தொண்டர்கள் என்னிடம்தான் உள்ளனர். இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும் என்று அழகிரி கூறியுள்ளார். கருணாநிதியின் நினைவிடத்தில் மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழியுடன் அழகிரி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தென் மாவட்ட திமுகவில் மு.க.அழகிரி மத்திய அமைச்சராகவும், தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்தபோது, இடைத்தேர்தலுக்கு தனி ஃபார்முலாவையே உருவாக்கினார்.

 
 

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் உள்ள குளறுபடிகளைக் கூறி ஸ்டாலினை விமர்சித்த அவர் 5 தொகுதிகள் கூட திமுக வெல்லாது என்று பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தத் தேர்தலில் திமுக ஒரு இடத்தைக்கூட வெல்லவில்லை.

பின்னர் 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவர் கருத்து கூறியிருந்தார். திமுகவிலிருந்து வேறு கட்சிக்குப் போவதாக கருத்து உலாவியபோது, 'நான் என்றும் திமுககாரன் தான்' என்று அடித்துக் கூறினார் அழகிரி.

திமுக 2016-ம் ஆண்டு தேர்தலில் தோற்ற பிறகு அழகிரிக்கு கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்தது. அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் ஸ்டாலின் பக்கம் சேர்ந்தனர். அழகிரியும் அரசியலில் ஆர்வமில்லாமல் ஒதுங்கியே இருக்கிறார். அதனால் அவரது ஆதரவாளர்களும் அமைதியாகி விட்டனர். திமுகவினர் அழகிரியைக் கண்டுகொள்வதில்லை. திமுகவில் ஸ்டாலினின் கை படிப்படியாக ஓங்கி செயல் தலைவர் பதவிக்கு வரும் நிலையிலும் பொறுமையாக இருந்தார்.

கருணாநிதி மறைந்த நிலையில் அழகிரி, ஸ்டாலின் கனிமொழி, தமிழரசு, செல்வி உள்ளிட்டோர் ஒற்றுமையாக சடங்குகளைச் செய்தனர். மறுநாள் மாலை அஞ்சலி செலுத்தும்போது கருணாநிதின் மகன், மகள்கள் மட்டும் ஒன்றாக ஒற்றுமையாக ஒன்றாக நின்று மாலையை நினைவிடத்தைல் வைத்து மரியாதை செலுத்தினர்.

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரது மறைவுக்கு பிறகு இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்வுகளில் அழகிரி, ஸ்டாலின் ஒன்றாக பக்கத்தில் நின்றிருந்தனர். ஆனாலும் ஒருநாள் கூட இருவரும் முகம் கொடுத்து பேசிக்கொள்ளவில்லை. கருணாநிதியின் மறைவுக்குப் பின் கட்சியில் அழகிரியின் பொறுப்பு என்ன என்ற கேள்வி எழுகிறது.

கட்சிக்குள் அழகிரிக்கு பொறுப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை அழகிரி ஆதரவாளர்களால் எழுப்பப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரைக்காண வந்த முக்கிய அரசியல் தலைவர்கள் அழகிரியையும் தனியே சந்தித்து பேசிவிட்டுத்தான் சென்றனர். இதனால் திமுகவில் அவருக்குள்ள முக்கியத்துவம் வெளிப்பட்டது.

இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் விரைவில் கூட உள்ளது. அழகிரிக்கு மீண்டும் முக்கியத்துவமான பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் இன்று காலை மு.க.அழகிரி தனது மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி உள்ளிட்டோருடன் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்ளிடம் அழகிரி கூறியதாவது:

என் அப்பாவிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக் கொண்டேன். என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்குத் தெரியாது. என்னுடைய தலைவர் கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம்தான் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அத்தனை விசுவாசிகளும் என் பக்கம் இருக்கிறார்கள். அவர்கள் என்னை ஆதரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும் என்று கூறி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.

பின்னார் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார்.

உங்கள் ஆதங்கம் கட்சி தொடர்பானதா? குடும்பம் தொடர்பானதா?

கட்சி தொடர்பானதுதான்.

தலைமைச் செயற்குழு நடைபெறுகிறது, அது பற்றி உங்கள் கருத்து?

நான் இப்போது திமுகவில் இல்லை. திமுக செயற்குழு பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். எனக்குத் தெரியாது.

மீண்டும் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதா?

அதுப்பற்றி எனக்குத் தெரியாது. என்னுடைய ஆதங்கத்தைத் தலைவரிடம் கூறியுள்ளேன்.

இவ்வாறு அழகிரி பதிலளித்தார்.

கருணாநிதி உயிருடன் இருந்தவரை அமைதிகாத்த மு.க.அழகிரி, அவரது மறைவுக்கு பின் பகீரங்கமாக திமுக தொண்டர்கள் தனக்குப் பின்னால்தான் உள்ளனர் என்று பேட்டி அளித்துள்ளது திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://tamil.thehindu.com/tamilnadu/article24675918.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

`அழகிரியால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளட்டும்!'  - ஸ்டாலின் தீர்க்கம்  

 

அழகிரியைச் சேர்த்தால், கட்சி நிர்வாகிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவார். அதிகாரத்தில் அவர் வைத்ததுதான் சட்டம் என்றாகிவிடும்.

`அழகிரியால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளட்டும்!'  - ஸ்டாலின் தீர்க்கம்  
 

தி.மு.க தலைவர் கருணாநிதி சமாதியில் அழகிரி வெளிப்படுத்திய ஆதங்கம், இன்னொரு தர்மயுத்தத்துக்கு வழிவகுத்திருக்கிறது. ' கருணாநிதியால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர் அழகிரி. அவரை மீண்டும் சேர்த்துக் கொண்டால், என்னுடைய தலைமைதான் கேள்விக்குள்ளாகும்' என்கிறாராம் செயல் தலைவர் ஸ்டாலின். 

சென்னையில் நாளை தி.மு.கவின் அவசர செயற்குழு கூட்டம் நடக்க இருக்கிறது. கட்சியின் தலைவர் இறந்துவிட்டதால், அவருக்கு இரங்கல் தெரிவிக்கும்விதமாகவே இந்தக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க மாநிலம் முழுக்க இருந்து செயற்குழு உறுப்பினர்கள் வருகை தர இருக்கின்றனர். இதன்பிறகு கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்து வரும் 1-ம் தேதிக்குள் அறிவிக்க இருக்கிறார் ஸ்டாலின். செயற்குழு தொடர்பான பணிகளில் அறிவாலய வட்டாரம் ஈடுபட்டு வரும் வேளையில், மெரினா சமாதிக்கு இன்று காலை வந்தார் அழகிரி. கருணாநிதி சமாதிக்கு மாலை போட்டுவிட்டு செய்தியாளர்களை சந்தித்தவர், 'கலைஞரின் விசுவாசமிக்க உடன்பிறப்புகள் என்னுடன்தான் இருக்கின்றனர். என்னுடைய ஆதங்கத்தைத் தெரிவிக்கவே வந்தேன்' என இரண்டே வரிகளில் பேட்டியை முடித்துவிட்டு கோபமான முகத்துடன் வெளியேறிவிட்டார். 

'பொதுக்குழுவில் அழகிரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்' என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நிலையில், ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி போர்க்கொடி உயர்த்தியிருப்பது குறித்து அறிவாலய நிர்வாகிகளிடம் பேசினோம். " காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட நேரத்திலேயே, அழகிரியை உள்ளே கொண்டு வருவது குறித்து செல்வி உள்ளிட்டவர்கள் பேசி வந்தனர். அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தையே பலரும் முன்வைத்தனர். கருணாநிதி மறைவுக்குப் பிறகு, 'கட்சியின் முக்கியமான மூன்று நாற்காலிகளான தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்றில் ஒன்றை எனக்கு ஒதுக்க வேண்டும்' என்ற கோரிக்கையை அழகிரி முன்வைத்தார். செல்வியும் அழகிரிக்கு ஆதரவாக இருந்தார். இதற்குப் பிரதான காரணம், ' ஸ்டாலினுக்குப் பிறகு கனிமொழி முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது' என்பதுதான். ஆனால், அழகிரியை உள்ளே சேர்ப்பதில் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் முட்டுக்கட்டையாக இருப்பதை அறிந்து கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். அவரது லிஸ்ட்டில் இருக்கும் முக்கியமானவர்கள், எ.வ.வேலு, பொன்முடி, நேரு, ராசா, கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்டோர். இவர்கள்தான் தன்னுடைய வருகைக்குத் தடையாக இருக்கிறார்கள் என்பது அழகிரியின் எண்ணம். மருத்துவமனையிலும் அழகிரியைப் பார்த்துதான், இந்த நிர்வாகிகள் ஒதுங்கிச் சென்றார்கள். 

 

 

அழகிரி

இந்தச் சண்டைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தபோது, கனிமொழி தரப்பினரும் தங்கள் தரப்பின் பலத்தை எடுத்துச் சொல்லும் வேலையில் இறங்கினர். ' ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார் கனிமொழி. அவரால் தென்மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை வாங்க முடியும். மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் நலன் என பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். அவருக்குப் பொருளாளர் பதவியைக் கொடுத்தால் மிகுந்த விசுவாசமாகச் செயல்படுவார்' என்றெல்லாம் பேசத் தொடங்கினர். 'அழகிரிக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். தென்மாவட்டத்துக்கு யாராவது ஒருவர் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால், 1977 தேர்தலில் கிடைத்த படுதோல்வியை சந்திக்க நேரிடும். அழகிரியைச் சேர்த்தால், கட்சி நிர்வாகிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவார். அதிகாரத்தில் அவர் வைத்ததுதான் சட்டம் என்றாகிவிடும். அழகிரியை ஒரேயடியாக ஓரம்கட்டிவிட்டால், கட்சியை எப்படியாவது நிலைநாட்டிவிடலாம்' எனவும் கட்சியின் சீனியர்கள் பேசத் தொடங்கினர். 

 

 

இதையெல்லாம் கவனித்த செயல் தலைவர் ஸ்டாலின், 'அவர்(அழகிரி) ஒரு போட்டியாளர் அல்ல. என்னுடைய குடும்பம்தான் என நான் எப்போதும் நினைக்கவில்லை. கலைஞரால் நீக்கப்பட்டவர் அழகிரி. அவரை மீண்டும் சேர்ப்பதால் என்னுடைய தலைமைதான் கேள்விக்குறியாகும். அவரைச் சேர்ப்பதால் எந்தவித பயனும் இல்லை. வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவதா..அல்லது இந்தப் பஞ்சாயத்தைப் பார்ப்பதா.. அழகிரி ஒன்றும் தவிர்க்க முடியாத சக்தி அல்ல. அவரால் செய்ய முடிந்ததைப் பார்த்துக் கொள்ளட்டும். எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்ற ரீதியில் தன் மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதாவது, 'தன்னுடைய தலைமையை நிரூபிக்கும் வகையில் ஒரு வெற்றியைக் கொடுத்துவிட்டு, அழகிரி விவகாரத்தைப் பார்த்துக் கொள்ளலாம்' என்பதுதான் அவருடைய மனநிலையாக இருக்கிறது. அதனால்தான், கருணாநிதி இறப்புக்குப் பிறகு ஓரிரு நாள்கள் மௌனமாக இருந்தவர், கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய முடிவைத் தெளிவாகக் கூறிவிட்டார். இதனை அழகிரி தரப்பினர் எதிர்பார்க்கவில்லை" என்றார் விரிவாக. 

சென்னை ரெஸிடென்சி ஓட்டலில் தங்கியிருக்கும் அழகிரி, நேற்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் இதுபற்றிப் பேசியவர், 'கட்சிக்குள் என்னை சேர்க்காதது குறித்த ஆதங்கத்தைத் தலைவரிடமே சொல்லிவிட்டு வருகிறேன்' எனக் கோபமான குரலில் பேசியிருக்கிறார். "நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணன் வேலையைக் காட்டுவார். செயல் தலைவர் செயல்படாத தலைவர் என அவர் பேசிவந்தார். அதனை நிரூபிக்கும் வகையில் இந்தத் தேர்தலை அவர் பயன்படுத்திக் கொள்வார். குடும்பத்தினர் அவ்வளவு கூறியும், அண்ணனுக்கு எதிராக ஒரு குரூப் வேலை பார்த்து வருகிறது. அவர்களையும் நேரம் வரும்போது அவர் கவனித்துக் கொள்வார்" என்கின்றனர் அழகிரி ஆதரவாளர்கள். 

https://www.vikatan.com/news/tamilnadu/133813-let-azhagiri-do-whatever-he-can-feels-stalin.html

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, நவீனன் said:

அழகிரி ஒரு போட்டியாளர் அல்ல. என்னுடைய குடும்பம்தான் என நான் எப்போதும் நினைக்கவில்லை. கலைஞரால் நீக்கப்பட்டவர் அழகிரி. அவரை மீண்டும் சேர்ப்பதால் என்னுடைய தலைமைதான் கேள்விக்குறியாகும். அவரைச் சேர்ப்பதால் எந்தவித பயனும் இல்லை. வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவதா..அல்லது இந்தப் பஞ்சாயத்தைப் பார்ப்பதா.. அழகிரி ஒன்றும் தவிர்க்க முடியாத சக்தி அல்ல. அவரால் செய்ய முடிந்ததைப் பார்த்துக் கொள்ளட்டும். 

 

தலைவரின்ட கட்சி இனி ..

e30c8c804046c329d340050de9bd69a0.jpg 

ஓரே டமாஸ்தான் .. ?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

`அழகிரியை நீக்கிய முடிவில் உறுதியாக இருந்தார் கருணாநிதி!'  - ஸ்டாலினுக்கு விளக்கிய பேராசிரியர்

 

இப்போது ஏதோ அழுத்தம் காரணமாக, அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்த்தால் தலைவரின் முடிவையே மறுபரிசீலனை செய்வதுபோல ஆகிவிடும்.

`அழகிரியை நீக்கிய முடிவில் உறுதியாக இருந்தார் கருணாநிதி!'  - ஸ்டாலினுக்கு விளக்கிய பேராசிரியர்
 

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார் மு.க.அழகிரி. 'தலைவர் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்வது நல்லதல்ல. அவரைச் சேர்க்காமல் இருப்பதே நல்லது' என ஸ்டாலினிடம் விளக்கியிருக்கிறாராம் பேராசிரியர் அன்பழகன். 

சென்னை, மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு இன்று காலை வந்த மு.க.அழகிரி, 'கருணாநிதியின் விசுவாசமிக்க தொண்டர்கள் என் பக்கம்தான் உள்ளனர்' எனக் கூறி அறிவாலயத்தை அதிரவைத்துவிட்டுச் சென்றார். அவரது இரண்டு வரி பேட்டி, குடும்பத்துக்குள் பலத்த விவாதமாகியிருக்கிறது. கருணாநிதி மறைவுக்குப் பிறகு, யார் யாருக்குப் பதவி கொடுக்க வேண்டும் என்பது குறித்து குடும்ப உறவுகளுக்குள் கருத்து மோதல் நடந்து வருகிறது. நாளை நடக்க இருக்கும் செயற்குழுவுக்குப் பிறகு, பொதுக்குழுவுக்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அதில், தி.மு.கவின் அதிகாரபூர்வ தலைவராகப் பொறுப்பேற்க இருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதில், அழகிரியின் ரீ-என்ட்ரி குறித்து குடும்பத்தினர் பலரும் வற்புறுத்தி வந்ததால், இதுகுறித்து பொதுச் செயலாளர் அன்பழகனுடன் விரிவாக விவாதித்தார் ஸ்டாலின். கட்சியின் நன்மை கருதி சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார் பேராசிரியர். 

அன்பழகன்அவர் பேசும்போது, 'அழகிரியை இரண்டு முறை கட்சியை விட்டே நீக்கினார் தலைவர். மீண்டும் தலைவரே அவரைச் சேர்த்திருந்தால் பரவாயில்லை. கட்சியைவிட்டு அவரை நீக்கிய பிறகு, அந்த விவகாரத்தில் தலைவர் உறுதியாக இருந்தார். 2014-ம் ஆண்டு இரண்டாம் முறை அவரை நீக்கிய பின்னரும், அடுத்த மூன்று ஆண்டுகள் தலைவர் ஆக்டிவ்வாக இருந்தார். அப்போதெல்லாம் அழகிரியைச் சேர்ப்பது குறித்து அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இப்போது ஏதோ அழுத்தம் காரணமாக, அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்த்தால் தலைவரின் முடிவையே மறுபரிசீலனை செய்வதுபோல ஆகிவிடும். அதனால்தான் அந்தக் காரியத்தை நாம் செய்யக் கூடாது. எனக்கு அதில் உடன்பாடு இல்லை' என உறுதியாகக் கூறிவிட்டார். இந்தக் கருத்தை ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டார். 

 

 

இதுகுறித்து ஸ்டாலினிடம் பேசிய சீனியர் நிர்வாகிகளும், 'தி.மு.கவுக்குள் அவர் இல்லை. ஏதோ புரட்சி செய்கிறேன் என அவர் கிளம்பினாலும், தனியாகக் கட்சியையெல்லாம் தொடங்கி நடத்த முடியாது. மீண்டும் ஒரு தி.மு.கவை அவரால் உருவாக்க முடியாது. அவர் புதிய கட்சியைத் தொடங்கினாலும் அதற்கு எந்தவித வரவேற்பும் கிடைக்காது. அழகிரியை மீண்டும் சேர்த்தால், தென்மாவட்டத்தில் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. அவர் வந்தால், மதுரையில் மீண்டும் ஆட்டம் தொடங்கிவிடும். இதனால் தமிழகம் முழுக்க கழகத்துக்குத்தான் கெட்ட பெயர் கிடைக்கும். அவர் வந்தால் கிடைக்கும் லாபத்தைவிட, நஷ்டம்தான் அதிகம் எனக் கூறியுள்ளனர். அவர் பக்கம் இருந்த பலரும் நம் பக்கம் வந்துவிட்டனர். எனவே, பேராசிரியர் சொல்வதுதான் சரி" என்ற ரீதியில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

 

 

ஆனால், அழகிரி தரப்பினரோ, " தென்மாவட்டத்தில் அழகிரி இருப்பது அனைத்து வகையிலும் தி.மு.க.வுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும். அவர் வந்துவிடக் கூடாது என்பதில் ஸ்டாலினைவிட, அவருடன் இருக்கும் சிலர் உறுதியாக இருக்கின்றனர். கட்சிக்குள் அழகிரி இல்லாவிட்டால், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கு நிச்சயம் பின்னடைவு ஏற்படும்" என்கின்றனர். 

https://www.vikatan.com/news/tamilnadu/133820-it-was-karunanidhis-decision-to-expel-azhagiri-anbazhagan-says-to-stalin.html

  • தொடங்கியவர்

ஆதங்கத்தில் அழகிரி... கனிமொழிக்குப் பதவி?- முடிவுக்கு வராத கோபாலபுரம் மோதல்! 

 

அழகிரி

 

கருணாநிதி மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வின் அடுத்த தலைவராகிறார் மு.க.ஸ்டாலின். கனிமொழிக்கு பொருளாளர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு அறிவாலய வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஆனால், மாநில அளவில் பதவி கேட்கும் அழகிரிக்கு இதுவரை எந்தப் பதவியும் வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, அடுத்த தலைவராகிறார் மு.க.ஸ்டாலின். அடுத்து யார் யாருக்கு பதவிகள் கொடுக்கலாம் என்று பொதுச் செயலாளர் அன்பழகனுடன் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 

 

 

இதுகுறித்து அறிவாலய வட்டாரங்கள் கூறுகையில், ' கருணாநிதியின் மறைவையடுத்து ஸ்டாலின் தலைவராவதற்கு, பொதுச் செயலாளரும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நாளை நடைபெற உள்ள அவசர செயற்குழு கூட்டத்தில், ஸ்டாலினுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட உள்ளது. கருணாநிதியின் படத் திறப்புவிழா, இரங்கல், நினைவுக் கூட்டம். பொதுக்குழு ஆகியவை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மகளிரணிச் செயலாளராக இருக்கும் கனிமொழிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே சுமுக உடன்பாடு இருந்துவருகிறது. இதில், பொருளாளர் பதவிக்கு முயற்சிசெய்துவருகிறார் கனிமொழி. இதற்கு, ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இந்நிலையில், அழகிரிக்கு முக்கியப் பதவியைக் கேட்டு அவரது தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். ஆனால், அதுதொடர்பாக கட்சித் தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் அழகிரி தரப்பினர் கடும் வருத்தத்தில் இருந்துவருகின்றனர்.

மேலும், முதுமை காரணமாக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக, பேராசிரியர் அன்பழகனும் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார். அதற்கு ஸ்டாலின் சம்மதிக்கவில்லை. பிறகு, அதுதொடர்பாக நீண்ட நேரம் ஆலோசனை நடந்தது'' என்றனர்.

 இந்த நிலையில், குடும்பத்துடன் அழகிரி, கருணாநிதி சமாதிக்கு அஞ்சலிசெலுத்த வந்தார். அப்போது, அவரின் பேச்சில் இந்த ஆதங்கம் பகிரங்கமாகவே வெளிப்பட்டது. அழகிரியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக ஸ்டாலின் தரப்பினர் கவனித்துவருகின்றனர். 

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கோபாலபுரத்தில் நடந்த பதவிப் பஞ்சாயத்தை அழகிரி, தன்னுடைய ஆதங்கத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அழகிரியை சமாதானப்படுத்த, கோபாலபுர உறவுகள்மூலம் தூதுவிடப்பட்டுள்ளது. ஆனால் அழகிரியோ, யாரிடமும் மனவிட்டு பேசவில்லையாம். அழகிரி தரப்பிலிருந்து மாநில அளவில் பதவி என்ற ஒற்றைக் கோரிக்கை விடப்பட்டுள்ளதாம். அதற்கு, ஸ்டாலினும் அன்பழகனும் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அழகிரியின் விவகாரம், நாளை நடைபெற உள்ள அவசர செயற்குழு கூட்டத்தில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/133812-clash-between-dmk-family.html

  • தொடங்கியவர்

என்னை தி.மு.க.வில் சேர்க்காததற்கு காரணம் இதுதான்! புதிர்போடும் அழகிரி

 
 
 

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தி.மு.க-வில் புயல் வீசத் தொடங்கிவிட்டது. 

அழகிரி

இன்று காலை மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு குடும்பத்துடன் சென்று அழகிரி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிசெலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ``நான் தற்போது தி.மு.க-வில் இல்லை. கலைஞர் கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள். என்ன ஆதங்கம் என்பது பின்னால் தெரியும். அதற்குக் காலம் பதில் சொல்லும். என்னுடைய ஆதங்கம் என்பது கட்சி தொடர்பானது. என் அப்பாவிடம் என்னுடைய ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன்.’ என்று பேசினார். இது தி.மு.க தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், ஆங்கில ஊடகத்துக்கு அழகிரி பேட்டியளித்துள்ளார். அப்போது, `நீங்கள் மீண்டும் தி.மு.க-வில் இணைந்து செயல்பட விரும்புகிறீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அழகிரி  `நான்  தி.மு.க-வுக்குள் வருவதில் மு.க.ஸ்டாலினுக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக நான் யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நான் தி.மு.க-வுக்குள் வந்தால் வலிமையான தலைவர் ஆகிவிடுவேன் என்று அச்சப்படுகிறார்கள். தி.மு.க-வில் கட்சிப்பொறுப்புகள் விற்கப்படுகின்றன. கட்சியின் நிர்வாகிகள் பலர் ரஜினிகாந்த்துடன் தொடர்பில் உள்ளனர். தற்போதுள்ள கட்சியின் தலைமை தி.மு.க-வை சீரழித்துவிடும். கலைஞர் கருணாநிதியின் ஆன்மா அவர்களை சும்மாவிடாது. கண்டிப்பாகத் தண்டிக்கும்’ என்று காட்டமாக கூறியுள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/133835-alagiri-speaks-out-about-his-political-entry.html

  • தொடங்கியவர்

`அது கலைஞரின் முடிவு' - அழகிரிக்குப் பதிலடி கொடுத்த ஜெ.அன்பழகன்! 

 
 

``அழகிரியைக் கட்சியிலிருந்து நீக்கிய முடிவு இப்போது இருக்கிறவர்கள் எடுக்கவில்லை. தலைவர் இருக்கும்போது எடுத்தது'' என தி.மு.க., எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார். 

 ஜெ அன்பழகன்

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் அவரின் மகன் மு.க.அழகிரி குடும்பத்தினருடன் சென்று இன்று அஞ்சலி  செலுத்தினார். அஞ்சலிக்குப் பின் பேசிய அழகிரி, ``நான் தற்போது தி.மு.க-வில் இல்லை. ஆனால், உண்மையான தி.மு.க விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கமே இருக்கிறார்கள். கட்சித் தொடர்பான என்னுடைய ஆதங்கத்துக்குக் காலம் பதில் சொல்லும்" எனக் கூறினார். நாளை தி.மு.க செயற்குழு நடக்கவுள்ள நிலையில், அழகிரியின் கருத்து கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை தி.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க., எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் அழகிரியின் கருத்துக்குப் பதிலளித்துள்ளார். 

 

 

அதில், ``கருணாநிதி மறைவில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. அழகிரி தற்போது கட்சியில் இல்லை. அவரது கருத்துக்குப் பதில் சொல்லக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. அவரைக் கட்சியை விட்டு நீக்கிய முடிவு இப்போது இருக்கக்கூடியவர்கள் எடுத்ததல்ல. தலைவர் கலைஞர் இருக்கும்போதே அவர் கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டவர். கட்சிக்காரர்கள் யாரும் அவருடன் தொடர்பில் இல்லை. தொடர்ந்து கட்டுக்கோப்பாக இருக்கிறோம். எனினும் இவ்விவகாரத்தில் நாளை கூடும் செயற்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் விரிவான பதில் கூறுவார்" எனத் தெரிவித்தார். ஒட்டுமொத்தத்தில் அழகிரியின் கருத்தால் தி.மு.க-வுக்குள் மீண்டும் புகைச்சல் உண்டாகியுள்ளது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/133841-janbazhagan-slams-azhagiri.html

  • தொடங்கியவர்

அடுத்தகட்ட ஆலோசனையில் அழகிரி! - புதிய கட்சி உதயமாகுமா?

 

அழகிரி

சென்னையில் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் அழகிரி. ' கட்சிக்குள் இணைவது குறித்து தி.மு.க தலைமை உரிய முடிவெடுக்கும் என அவர் நம்புகிறார். அப்படி எந்த முடிவும் எடுக்கப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிப்பார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

சென்னை, மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மாலை வைத்த கையோடு, ஸ்டாலினுக்கு எதிராகப் பேட்டி அளித்தார் அழகிரி. அவரது கருத்துக்குப் பதில் அளித்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், 'நாங்கள் ஒற்றுமையாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்கிறோம்' என்றார். மெரினாவில் இருந்து நேராக கோபாலபுரம் சென்ற அழகிரி, அங்கு தயாளு அம்மாளைச் சந்தித்துவிட்டு புறப்பட்டார். இதன்பிறகு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

 

 

இதுகுறித்து நம்மிடம் பேசும் அழகிரி தரப்பினர், 'அனைவரையும் அமைதியாக இருக்கும்படி அழகிரி தெரிவித்துள்ளார். கருணாநிதி உயிரோடு இருந்த சமயத்திலேயே அழகிரியை நீக்கிவிட்டதாகத் தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் கோபாலபுரத்தில் என்ன நடந்தது என்று தெரியாது. எதற்காக அழகிரி அமைதியாக இருந்தார் என்ற காரணமும் புரியாது. எத்தனையோ இக்கட்டான நேரங்களில் தி.மு.க.வை சிறப்பாக வழிநடத்தி வளர்ச்சியின் பாதையில் அழைத்துச் சென்றவர் கருணாநிதி. ஆனால், அவரின் மறைவுக்குப்பிறகும் தி.மு.க.வை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் அழகிரியின் நோக்கம். தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவுக்குப் பிறகு அடுத்தகட்ட நிலைப்பாட்டை எடுப்போம். தேவைப்பட்டால் கலைஞர் பெயரில் புதிய கட்சியைக்கூட தொடங்குவோம்" என்கின்றனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/133856-alagiri-to-announce-new-party-lauch-sources.html

 

திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு சென்ற அழகிரிக்கு வீட்டின் வாயிலில் நின்றிருந்த முன்னணி தலைவர்களும் ஸ்டாலினும் சடுதியில் ஒதுங்கி வழி விடக்கூடிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.