Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கீத் நொயார் கடத்தல் – மகிந்தவை விசாரணைக்கு அழைக்கிறது குற்றப் புலனாய்வுப் பிரிவு

Featured Replies

கீத் நொயார் கடத்தல் – மகிந்தவை விசாரணைக்கு அழைக்கிறது குற்றப் புலனாய்வுப் பிரிவு

 

mahinda-rajapaksha-300x200.jpgஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, எதிர்வரும் 17ஆம் நாள், வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகுமாறு, மகிந்த ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் ரவி செனிவிரத்னவினால், அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்வருமாறு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்கனவே நான்கு தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்கவில்லை.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்கே சென்று வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடமும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலத்தைப் பெற்றிருந்தனர்.

அப்போது அமைச்சராக இருந்த  தாமே, கீத் நொயார் கடத்தல் தொடர்பாக, சிறிலங்கா அதிபருக்கு முதலில் தெரியப்படுத்தியதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய, கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/08/15/news/32338

  • தொடங்கியவர்

மகிந்தவிடம் நாளை விசாரணை – வாக்குமூலம் அளிக்க இணங்கினார்

 

mahinda1-300x201.jpg‘த நேசன்’ நாளிதழின் இணை ஆசிரியராக இருந்த கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நாளை வாக்குமூலம் அளிப்பதற்கு இணங்கியுள்ளார்.

நாளை காலை 10 மணிக்கு, இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருப்பதாக, மகிந்த ராஜபக்ச நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.

உதவி காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரின் தலைமையில், கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்குச் செல்லும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழு, அவரிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்ளும்.

முன்னதாக நான்கு தடவைகள், மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட போதும் அவர் அதற்குப் பதிலளிக்காத நிலையிலேயே, மகிந்தவின் இல்லத்துக்கே சென்று விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, காவல்துறை ஊடாக வாக்குமூலம் அளிப்பதற்கு தயாராக இருப்பதாக முன்னர் தாம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் அனுப்பியதாகவும், இப்போது, அதனை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தப்படுவதாகவும், மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/08/16/news/32358

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.