Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் பெருந்திருவிழாவுக்கான – கொடிச்சீலை ஒப்படைப்பு!!

Featured Replies

  • தொடங்கியவர்

நல்லூர் மகோற்சவம்: தங்க மயிலேறி உலாவந்தார் முருகப்பெருமான்

 

nallur-day-19-2-720x450.jpg

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ஆம் நாள் திருவிழா, பெருமளவான பக்தர்கள் புடைசூழ மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இத்திருவிழாவில் முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்திலும் வள்ளி – தெய்வானை மயில் வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்

கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, தினமும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இத்திருவிழாவில் சுமார் ஒரு இலட்சம் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது ஆதவனின் விசேட செய்தியாளர் குறிப்பிட்டார்.

மகோற்சவ காலத்தில் நல்லூர் திருவிழா குறித்த முழுமையான தொகுப்பை, தினமும் இரவு 8.30இற்கு ஆதவன் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள்.

nallur-day-19-1.jpg

nallur-day-19-3.jpg

nallur-day-19-6.jpg

nallur-day-19-7.jpg

nallur-day-19-5.jpg

nallur-day-19-4.jpg

nallur-day-19-8.jpg

nallur-day-19-9.jpg

http://athavannews.com/நல்லூர்-மகோற்சவம்-தங்க-ம/

  • தொடங்கியவர்

நல்லூர் கந்தசுவாமி கோவில் 20ம் திருவிழா (கைலாசவாகனம் )

DSC_5549.jpg?resize=800%2C533
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 20ம் திருவிழா (கைலாசவாகனம்)  இன்று மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
 
படங்கள்: ஐ.சிவசாந்தன்
 DSC_5556.jpg?resize=800%2C533DSC_5565.jpg?resize=800%2C533DSC_5577.jpg?resize=800%2C533DSC_5595.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/94225/

  • தொடங்கியவர்

நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தங்கரத உற்சவம்….

நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தங்கரத உற்சவம் இன்று புதன்கிழமை நடைபெற்றது. கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாவின் 21ஆம் திருவிழாவான தங்கரத உற்சவத்தின் போது, வேல் பெருமான், வள்ளி, தெய்வானை சமேதரராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

 

மாலை 05 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் உள்வீதியுலா வந்து மாலை 6 மணிக்கு தங்கரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.

நேற்றைய திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருட்காட்சியை கண்டு களித்தனர்.

nallur-thangaratham2.jpg?resize=800%2C39nallur-thangaratham3.jpg?resize=720%2C48nallur-thangaratham4.jpg?resize=800%2C53nallur-thangaratham5.jpg?resize=533%2C80nallur-thangaratham6.jpg?resize=533%2C80nallur-thangaratham7.jpg?resize=533%2C80

படங்கள்: ஐ.சிவசாந்தன்

http://globaltamilnews.net/2018/94385/

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கடைசியாகக் காட்சியளிக்கும் படம் மிக நேர்தியாக எடுக்கபட்டுள்ளது ஒரு சிலருக்கு மட்டுமே இப்படியாகப் படம்பிடிக்கும் ஐடியா வரும். 
வாழ்துகள்

  • தொடங்கியவர்

நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழத் திருவிழா….

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

 

காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளிவீதியுலா வந்து சிறப்பாக மாம்பழ திருவிழா நடைபெற்றது.

நாரதர் சிவபெருமானுக்கும் , உமாதேவியாருக்கும் ஒரு மாம்பழத்தை கொடுத்தார். அதனை யாருக்கு கொடுப்பது என தீர்மானிக்க , முதலில் உலகை சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தை தருவோம் என சிவபெருமானும் உமாதேவியாரும் , பிள்ளையாருக்கும் , முருகனுக்கும் கூறினார்கள்.

உடனே முருகபெருமான் மயில் மீதேறி உலகை சுற்றி வர சென்ற போது , பிள்ளையார் சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றி வந்து நீங்களே என் உலகம் என கூறி மாம்பழத்தை பெற்றுக்கொண்டார்.

உலகை சுற்றி வந்த முருகனுக்கு மாம்பழம் கிடைக்காததால் தனது நகை உடை அனைத்தையும் துறந்து பழனி மலையில் போய் அமர்ந்தார். எனும் புராண கதையை மையமாக வைத்தே இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றது.

இன்றைய மாம்பழ திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இன்றைய தினம் முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நல்லூர் மகோற்சவ திருவிழாவின் சப்பர திருவிழா நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கும் தேர்த்திருவிழா நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 7 மணிக்கும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/94429/

  • தொடங்கியவர்

குதிரை வாகனத்தில் நல்லூரான் பவனி: இன்று சப்பரத் திருவிழா

 

வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இத்திருவிழாவில் முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை ஆகியோர் குதிரை வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த கண்கொள்ளா காட்சியை காண பக்தர்கள் அலையென திரண்டு வந்திருந்தனர்.

மகோற்சவம் நிறைவடைய இன்றும் மூன்று நாட்களே எஞ்சயுள்ள அதேவேளை, திருவிழாவின் முக்கிய அம்சங்களுள் ஒன்றான சப்பரத் திருவிழா இன்று மாலை இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் பெருந்திரளான பக்தர்கள் திரண்டுள்ளதாக எமது ஆதவன் செய்தியாளர் குறிப்பிட்டார்.

நாளை காலை 7 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதோடு, நாளை மறுதினம் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது. இறுதியாக எதிர்வரும் திங்கட்கிழமை பூங்காவனத் திருவிழா இடம்பெற்று மகோற்சவம் இனிதே நிறைவடையவுள்ளது.

25 நாட்களுக்கு நடைபெறும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் போது, ஒவ்வொரு நாளும் இடம்பெறும் திருவிழாவின் தொகுப்புகளை எமது ஆதவன் தொலைக்காட்சியில் நேயர்களுக்கு வழங்கி வந்திருந்தோம். அந்தவகையில், இன்று முதல் நல்லூர் மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளை எமது ஆதவன் தொலைக்காட்சியில் நேயர்கள் நேரலையாக பார்த்து மகிழுங்கள்.

nallur-day-22-2-1.jpg

nallur-day-22-1-1.jpg

nallur-day-22-4-1.jpg

http://athavannews.com/குதிரை-வாகனத்தில்-நல்லூர/

  • தொடங்கியவர்

நல்லூர் கந்தசுவாமி ஆலய சப்பரத் திருவிழா

DSC_6569.jpg?resize=800%2C533
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
 
படங்கள்: ஐ.சிவசாந்தன்
DSC_6545.jpg?resize=533%2C800  DSC_6602.jpg?resize=800%2C533DSC_6614.jpg?resize=800%2C533DSC_6705.jpg?resize=533%2C800

http://globaltamilnews.net/2018/94688/

  • தொடங்கியவர்

நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழா (படங்கள் இணைப்பு)

 

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தனின் தேர்திருவிழா இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

nallur03.jpg

nallur01.jpg

nallru02.jpg

04.jpg

 

03.jpg

 

யாழ்-நல்லூர் கந்தனின் தேர்திருவிழாவை காண்பதற்காக நாடளாவிய ரீதியல் மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/39962

 

 

நல்லூர் தேர்த்திருவிழாவில் அலையெனத் திரண்டுள்ள பக்கதர்கள்!!

 
41205864_676799629359954_123525246284831
 
 
 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.

அலையெனத் திரண்டுள்ள பக்தர்கள் மத்ததியில் தேர் வெளி வீதியுலா வந்த வண்ணம் உள்ளது.

41345263_676799519359965_28020466497093641330023_676798529360064_30116553345204241310714_676799609359956_66729743156563141301880_676798472693403_32923055615461241290363_676799682693282_74340635830271341269124_676798589360058_15205284126014841268436_676799842693266_29457387061971541267226_676799499359967_80824453322286041202491_676798542693396_11002507444030041168139_676799722693278_76064562473693341040148_676798602693390_26441539538722440778899_676798506026733_87272554510512241393484_676799659359951_830227740070877

https://newuthayan.com/story/08/நல்லூர்-தேர்த்திருவிழாவில்-அலையெனத்-திரண்டுள்ள-பக்கதர்கள்.html

  • தொடங்கியவர்

நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தத்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்தத்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார் , மற்றும் அம்மன் சமேதரராய் காலை 07 மணிக்கு ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தமாடி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தீர்த்த திருவிழாவின் போதும் வேல் பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார்.

 

இன்றைய தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர் .

இதேவேளை இன்றைய தினம் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. அதனுடன் ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடையவுள்ளது. நாளைய தினம் மாலை 5 மணிக்கு முருக பெருமானின் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது என்பது குறிபிடத்தக்கது

படங்கள்: ஐ.சிவசாந்தன்

DSC_7553.jpg?resize=533%2C800DSC_7563.jpg?resize=800%2C533DSC_7568.jpg?resize=800%2C533DSC_7584.jpg?resize=800%2C533DSC_7621.jpg?resize=800%2C533DSC_7638.jpg?resize=800%2C533DSC_7683.jpg?resize=800%2C533DSC_7720.jpg?resize=800%2C533DSC_7723.jpg?resize=533%2C800DSC_7740.jpg?resize=800%2C533DSC_7773.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/94830/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.