Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் அரச மாருந்தாக்கல் கூட்டுத் தபான கிளையினை திறந்து வைத்தார் ராஜித

Featured Replies

யாழில் அரச மாருந்தாக்கல் கூட்டுத் தபான கிளையினை திறந்து வைத்தார் ராஜித

 

 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் புதிய விற்பனை கிளையினை இன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்து வைத்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் புதிய விற்பனை கிளையினை திறந்து வைத்ததுடன் அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றினார்.

raji2.jpg

raj1.jpg

இதைத் தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்துக்கான புதிய கட்டடத்துக்கான கட்டட வேலைகளை ஆரம்பித்து வைத்து, வைத்தியசாலையில் நோயாளர் விடுதி போன்றவற்றை பார்வையிட்டதுடன் தாதியர் விடுதியினையும் திறந்து வைத்து அங்கு இடம்பெற்ற நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இந் நிகழ்வில் பிரதி சுகாதரத்துறை அமைச்சர், வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், மாவைசேனாதிராசா, மாகாணசபை உறுப்பினர் சயந்தன், சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/38580

  • தொடங்கியவர்

யாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து  பெருமிதம் கொள்கிறோம் - சி.வி.

 

யாழ். போதனா வைத்தியசாலையானது மிகக் குறைந்த வளங்களுடன் செயலாற்றுகின்றபோதும் அதன் சேவைகள் மிகப் பெரிய அளவில் மக்களுக்குக் கிடைப்பதையிட்டு நாம்  பெருமிதம் கொள்ள வேண்டும் என்று வட மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தாதிகள் விடுதி மற்றும் இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் 'அரச ஒசுசல' மருந்தகத் திறப்பு விழா யாழ்.போதனா வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தல‍ைமையில் இன்று இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

vik1.jpg

இருதய அறுவை சிகிச்சைகள் இடம்பெறுகின்ற நாடளாவிய அரச வைத்தியசாலைகளில் நான்கில் ஒரு இடத்தை யாழ். போதனா வைத்தியசாலையும் பெற்றுள்ளமை எமது இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களின் பிரதி உபகாரம் கருதாத சேவை மனப்பாங்கைப் எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. 

யாழ். போதனா வைத்தியசாலையில் இருதய அறுவைச்சிகிச்சை மேற்கொள்வதற்கான விசேடப் படுக்கை வசதிகள் இரண்டை மட்டுமே கொண்டுள்ள போதும் எமது வைத்திய நிபுணர் மிகச் சிறப்பாக இக் குறுகிய வளங்களுடன் சேவையாற்றுவது பாராட்டத்தக்க வேண்டிய விடயம். 

இந் நிலையில் அவ்வாறான சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது இங்கிருக்கும் அறுவைச் சிகிச்சை நிபுணர் நான் பதவிக்கு வந்த பின்னரே இங்கு வந்தார். அவரை மாற்ற வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. 

இரண்டு வருடங்களின் பின்னர் வடக்கு வைத்தியர்களை மாற்றம் செய்யும் பழக்கம் இங்கு போர்க்காலத்தில் அமுலில் இருந்தது. தற்போது அவ்வாறான முறை அவசியமில்லை. எனவே இவ்வாறான நற்சேவை செய்து வருபவர்களை தயவு செய்து தொடர்ந்தும் இங்கு சேவை செய்வதற்கு அனுமதியளியுங்கள். அதுபோன்றே ஏனைய துறைசார் வைத்திய நிபுணர்களும் இங்கு தமது சேவைகளைத் திறம்பட முன்னெடுத்து வருகின்றனர். 

எவ்வாறெனினும் யாழ். போதனா வைத்தியசாலையானது மிகக் குறைந்த வளங்களுடன் செயலாற்றுகின்றபோதும் அதன் சேவைகள் மிகப் பெரிய அளவில் மக்களுக்குக் கிடைப்பதையிட்டு நாம்  பெருமிதம் கொள்ள வேண்டும் என்றார்.

39289205_10156108402289130_7993271013615

இந் நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் பைஸல் காசிம் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, விஜயகலா மகஸே்வரன், சரவணபவன் மற்றும் சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/38586

  • தொடங்கியவர்

முன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

rajitha.png?resize=577%2C365
வடமாகாணத்திலுள்ள தமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் தற்போதைய அரசால் வழங்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மக்களின் முழு ஒத்துழைப்புடன்தான் நாம் ஆட்சியை அமைத்தோம். அந்த அடிப்படையில் வடபகுதி மக்களின் தேவைகள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் கவனமாக செயற்பட்டுவருகின்றோம். கடந்த முப்பது ஆண்டுகளில் எப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் தற்போது வடக்கில் உள்ளது. கடந்த ஆட்சியில் காணப்பட்ட இறுக்கமான கண்காணிப்புக்கள் எதுவும் தற்போது இல்லை. அத்தோடு தாம் விரும்பியவாறு சகலவற்றையும் செய்துகொள்ளும்வகையில் முழு உரிமையையும் நாம் வடக்குக்கு வழங்கியுள்ளோம்.

தற்போது பல காரணங்களுக்காக வடக்கிலுள்ளவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள். முன்னைய ஆட்சி காலங்களில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் கண்காணிக்கப்பட்டனர்.

ஆனால் தற்போது வடக்கில் இடம்பெறும் போராட்டங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். உதாரணத்திற்கு வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தாம் விரும்பியவற்றையெல்லாம் செய்யுமளவிற்கு தற்போது நிலமை உள்ளது. அதிகாரப் பகிர்வொன்றின் மூலமே பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என நாம் நம்புகின்றோம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுகின்றோம்.

புதிய அரசியலமைப்பு, புதிய தேர்தல் முறைமை, அதிகாரப்பகிர்வு என்பன இவற்றிற்கு அவசியமானவை. ஆனால் அதை ஏற்பதுத்துவது இலகுவான காரியமாக இல்லை. அனைவரையும் இணைத்து செயற்படவே நாம் விரும்புகின்றோம். இங்குள்ளவர்களும் வந்து எம்முடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல உதவ வேண்டும் என நான் கேட்கின்றேன் என்றார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் புதிய விற்பனை கிளை இன்று திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் வருகை தந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் புதிய விற்பனை கிளையை திறந்து வைத்ததுடன் அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றினார்.

இதைத் தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்துக்கான புதிய கட்டடத்துக்கான கட்டட வேலைகளை ஆரம்பித்து வைத்து, வைத்தியசாலையில் நோயாளர் விடுதி போன்றவற்றை பார்வையிட்டதுடன் தாதியர் விடுதியினையும் திறந்து வைத்து அங்கு இடம்பெற்ற நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதி சுகாதர அமைச்சர், வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, விஜயகலா மகேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் சயந்தன், சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

http://globaltamilnews.net/2018/91673/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.