Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர்பான 2அறிக்கைகள் UNHRCக்கு வருகின்றன

Featured Replies

இலங்கை தொடர்பான 2அறிக்கைகள் UNHRCக்கு வருகின்றன
 

image_8e2a60a4d2.jpg

 

இலங்கை தொடர்பான, இரண்டு அறிக்கைகள், அடுத்த மாதம் நடைபெற விருக்கின்ற ஐக்கிய நாடு சபையின் மனித உரிமை பேரவையில் கலந்துரையாடப்படவுள்ளன.

எழுந்தமானமான தடுப்பு பற்றிய செயற்குழுவின் அறிக்கையும் உண்மை நீதி, பரிகாரம் வழங்கள், மீளவும் இவை நடக்காது என்ற உறுதி வழங்கல் என்பன தொடர்பிலான விசேட அறிக்கையாளரின் அறிக்கையும் இந்த அமர்வின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பேரவையின் 39ஆவது அமர்வு செப்டெம்பர் மாதம் 10 திகதியிருந்து செப்டெம்பர் 28 திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இதன்போதே, இலங்கை பற்றிய இரண்டு அறிக்கைகள் கலந்துரையாடப்படவுள்ளன.

கட்டாயத் தடுப்பு மீதான ஐ.நா செயற்குழு, கடந்த வருடம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் பின்னர், இலங்கையிர் தனிநபர் சுதந்திரத்தை அனுபவிப்பதோடு, கணிசமான சவால்கள் உள்ளது எனவும் இது கட்டாயத் தடுப்புக்கு இட்டுச் சென்றுள்ளது எனவும் கூறியது.

நிபுணர்கள், ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளையும் கண்டனர். இதில் ஐ.நா மனித உரிமைகள் பொறி முறைகளை கலந்துரையாடல் என்பது சித்திரவதைக்கு எதிரான சமவாயத்தில் ஒப்பமிட்டதும் அடங்கும்.

ஆயினும், மனித உரிமைகள் தேசிய வேலைத்திட்டம் 2017, 2018 தொடர்பில் இலங்கையின் கடப்பாட்டை நிறைவேற்ற அவசர நடவடிக்கை தேவை எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தனிநபர் சுதந்திரத்துக்காக உரிமை சட்ட அமுலாக்கம் அதிகாரிகளாலும் பாதுகாப்புப் படையாலும் சட்டதுறை அதிகாரிகளும் மதிக்கப்படாது உள்ளதென நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலை, திறந்தவெளி முகாம்கள், நெறிபிறழ்ந்தோர், முதியோர் இல்லங்கள், மனநோய் நிறுவனங்கள் மற்றும் புனர்வாழ்வு முகாம்கள் என்பவற்றில் தனிநபர் சுதந்திரம் மறுக்கப்படுவதாக நிபுணர்கள் கூறியுள்ளார்.

அத்துமீறிய தடுத்துவைப்பு, தடுப்புக்கு எதிரான மாற்று இன்மை, காலங் கடந்த சட்டங்கள், ஒப்புதல் வாக்கு மூலத்தில் தங்கியிருத்தல் என்பன தொடர்பில் சீர்திருத்தங்கள் தேவையென நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீதிமன்றச் செயற்பாடுகள், அளவு கடந்த தாமதங்களால் பாதிக்கப்படுகின்றார்கள். சந்தேக நபர்கள் முடிவின்றி மறியலில் உள்ளமையும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர் என எடுத்துக் கொள்ளல் இன்றும் பூரணமாக இல்லை எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலங்கை-தொடர்பான-2அறிக்கைகள்-UNHRCக்கு-வருகின்றன/150-220449

  • தொடங்கியவர்

செப்.12 , 13 இல் ஜெனி­வாவில் இலங்கை குறித்த விவா­தங்கள்

7-31dc3e6fc8aab18e701d6b3c637d27b67ce57475.jpg

 

இரண்டு அறிக்­கை­களை எதிர்­கொள்ள வியூகம் அமைக்கும் பணியில் பிர­தான தரப்­புகள் 

(ரொபட் அன்­டனி)

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வை யின் 39 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 10 ஆம்­தி­கதி முதல் 28 ஆம்­தி­கதி வரை நடை­பெ­ற­வுள்ள  நிலையில் அதில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள இலங்கை குறித்த இரண்டு முக்­கிய அறிக்­கை­களை சமா­ளிக்கும் வியூ­கங்­களை அமைக்கும் முயற்­சி­களில் அர­சாங்கம் ஈடு­பட்டு வரு­கின்­றது.   

குறிப்­பாக ஜெனிவா மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­களை சந்­தித்து கடந்த மூன்று வரு­டங்­க­ளாக இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் மற்றும் அடை­யப்­பெற்­றுள்ள முன்­னேற்­றங்கள் தொடர்­பாக சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

10 ஆம்­தி­கதி ஆரம்­ப­மா­க­வுள்ள ஜெனிவா கூட்டத் தொட­ரின்­போது இலங்கை தொடர்­பாக இரண்டு முக்­கிய அறிக்­கைகள் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளன.

கடந்த வருடம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட இரண்டு விசேட ஐ.நா. நிபு­ணர்­களின் அறிக்­கை­களே இலங்கை தொடர்பில் இவ்­வாறு வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளன.

முத­லா­வ­தாக இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பான விசேட நிபு­ணரின் அறிக்கை 39/45.1 என்ற பெயரில் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது. இன்னும் சில தினங்­களில் இந்த அறிக்கை மனித உரிமை பேர­வையில் தாக்கல் செய்­யப்­படும். இது குறித்த விவாதம் எதிர்­வரும் 12 ஆம் திகதி ஜெனி­வாவில் நடை­பெறும்.

அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட உண்மை, நீதி,இழப்­பீடு மற்றும் மீள் நிக­ழாமை தொடர்­பான ஐக்­கி­ய­நா­டு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப்பின் இலங்கை குறித்த அறிக்­கையும் 39/53.1 என்ற தலைப்பில் மனித உரிமை பேர­வைக்கு சில தினங்­களில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இது தொடர்­பான விவாதம் ஜெனி­வாவில் 13 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

ஐக்­கி­ய­நா­டு­களின் இந்த இரண்டு விசேட நிபு­ணர்­களும் கடந்த வருடம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு அர­சாங்­கத்­த­ரப்பு, எதிர்­த­ரப்பு சிவில்­ச­மூக பிர­தி­நி­திகள் பாதிக்­கப்­பட்ட மக்கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர்.

வடக்கு, கிழக்கு பகு­தி­க­ளுக்கும் விஜயம் செய்த இந்த நிபு­ணர்கள் போருக்குப் பின்­ன­ரான நல்­லி­ணக்க நிலைமை தொடர்­பா­கவும் மீள்­நி­க­ழா­மையை உறு­திப்­ப­டுத்த அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் குறித்தும் ஆராய்ந்­தி­ருந்­தனர். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே இந்த இரு­வரின் அறிக்­கை­களும் இம்­முறை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன.

இம்­முறை 39ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான விவாதம் எதுவும் நடை­பெ­ற­மாட்­டாது. மாறாக குறித்த இரண்டு விசேட நிபு­ணர்­களும் இலங்கை தொடர்­பான தமது அறிக்­கை­களை சமர்ப்­பிக்­கும்­போது சர்­வ­தேச நாடுகள் இலங்கை குறித்து கேள்வி எழுப்பும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதே­போன்று எதிர்­வரும் 10 ஆம்­தி­கதி 39 ஆவது கூட்டத் தொடரின் முதல்நாள் அமர்வில் உரை­யாற்­ற­வுள்ள ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் இலங்கை தொடர்­பாக பிரஸ்­தா­பிப்பார் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் இம்­முறை கூட்­டத்­தொ­டரில் இலங்­கை­யி­லி­ருந்து அமைச்சர் மட்ட தூதுக்­கு­ழு­வினர் கலந்­து­கொள்­வார்­களா அல்­லது ஜெனிவா வதி­வி­டப்­பி­ர­தி­நிதி தலை­மை­யி­லான பிர­தி­நிதி கலந்­து­கொள்­வாரா என அறி­விக்­கப்­ப­ட­வில்லை. பெரும்­பாலும் வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன தலை­மை­யி­லான குழு இம்­முறை ஜெனிவா கூட்­டத்­தொ­டரில் பங்­கேற்­கலாம் என தெரி­ய­வ­ரு­கி­றது.

இது இவ்­வா­றி­ருக்க இம்­முறை 39 ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்­கை­யி­ல­ருந்து பல்­வேறு தரப்­புக்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ளன. குறிப்­பாக பாதிக்­கப்­பட்ட மக்­களின் தரப்­பி­லி­ருந்து பிர­தி­நி­திகள் கலந்து கொண்டு தமக்­கான நீதி தொடர்பில் வலி­யு­றுத்த உள்­ளனர்.

அத்­துடன் தென்­னி­லங்­கை­யி­லி­ருந்தும் பல்­வேறு அமைப்­புக்கள் ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளன. மேலும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமை பேரவை உறுப்பு நாடு­க­ளினால் இம்­முறை ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் பல்­வேறு உப­கு­ழுக்­கூட்­டங்கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­ட­வேண்டும் என்ற கோரிக்­கையை வலி­யு­றுத்தி இந்த உப­கு­ழுக்­கூட்­டங்கள் ஜெனிவா வளா­கத்தில் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.

இந்­தக்­கூட்­டங்­களில் சர்­வ­தேச மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் நாடு­களின் பிர­தி­நி­திகள் இலங்கை பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பினர் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜெனி­வாவில் நடை­பெற்ற 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக ஒரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது.

இலங்கை அரசாங்கமும் அந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது. அந்தப் பிரேரணையை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அமுல்படுத்த வேண்டுமென கூறப்பட்டிருந்தது. எனினும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆகும்போது குறித்த பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்படாததால் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த மேற்பார்வைக்கான அவகாசம் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ளமை குறப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.