Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரவில் கடன் பணத்தை வசூலிக்கும் நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள்

Featured Replies

இரவில் கடன் பணத்தை வசூலிக்கும் நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள்

 

வவுனியா கோவில்குளம், கோவில் புதுக்குளம் பகுதிகளிலுள்ள பெண்கள் வீதியில் ஒன்று கூடி நுண்நிதி நிறுவனத்தில் பெற்று கொள்ளப்பட்ட கடன் பணத்தைச் செலுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

குறித்த ஒன்று கூடல் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்தும் இரவு வேளைகளில் தமது வீடுகளுக்கு நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் வருவதற்கு தடை விதிக்குமாறும் பெற்று கொண்ட கடன் பணத்தைச் செலுத்தவதற்கான வழிமுறைகள் தற்போது காணப்படவில்லை எனவே அரசாங்கம் தமக்கான நிவாரணங்களை வழங்குமாறு கோரியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

மேலும் கோவில்குளம், கோவில் புதுக்குளம் பகுதிகளுக்குச் செல்லும் நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் பணத்தை வசூலிப்பதற்கு நீண்ட நேரமாக வீடுகளின் முன்னால் காத்திருந்து வருகின்றனர்.

இதனால் கடன் பெற்று கொண்ட குடும்பப் பெண்கள் தலைமறைவாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் சிலர் வீடுகளுக்குள் ஒழிந்து கொண்டு வெளியே சென்று விட்டதாக தெரிவித்து வருவதாகவும் நாளுக்கு நாள் கடன் பெற்று கொண்ட நிறுவனங்களின் கெடுபிடிகள் அதிகரித்துச் வருவதாகவும் குறிப்பிட்டனர்.

தொ்ர்ந்தும் நேற்று முன்தினம் குறித்த ஒரு நுண்நிதி நிறுவனத்தின் பணியாளர்கள் பெண் ஒருவரை அச்சுறுத்தியுள்ளதாகவும் இரவு 8 மணிக்கு பணத்தினை வசூலிப்பதற்காக வீடுகளுக்குச் சென்று வருவதாகவும் அதிலிருந்து தம்மை விடுவிப்பதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

அல்லது தமக்கான நிவாரணம் ஒன்றினைப் பெற்று தருமாறும் பொதுமக்கள் கோரிவருகின்றனர்.

மேலும் வவுனியாவில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக குளத்திலும், கிணறுகளிலும் தண்ணீர் இன்றி வீட்டில் வருமானம் இன்றியும் கணவருக்கு தொழிலின்றிய நிலையும் தற்போது அதிகரித்துச் செல்கின்றது.

இந்த நிலையில் நாளாந்தச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது, எனவே நுண்நிதி நிறுவனங்கள் தமது கடன் பணத்தை பெற்றுக்கொள்வதற்கு குடும்பப் பெண்கன் மீது பல்வேறு அச்சுறுத்தல்களையும் திணித்து வருகின்றது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இதனால் கடந்த வாரம் முதல் கோவில்குளம், கோவில் புதுக்குளம் பகுதிகளில் நுண்நிதி நிறுவனத்தில் பெற்ற கடன் பணத்தினைச் செலுத்த முடியவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

தொடர்ந்தும் இந்த கடன் நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு தமக்கான நிவாரணம் ஒன்றினை பெற்றுத்தருமாறு அப்பகுதியில் நேற்று மாலை ஒன்று கூடிய பெண்கள் கோரியுள்ளனர்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/190993?ref=home-imp-flag

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.