Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றிடத்திற்கு ஏற்ற தகைமை உடையவர்கள் வடக்கில்லை - விக்கி

Featured Replies

வெற்றிடத்திற்கு ஏற்ற தகைமை உடையவர்கள் வடக்கில்லை - விக்கி

 

 
 

தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வடக்கு மாகாணசபை அநீதி இழைத்துள்ளதாக பலர் கூறிவருகின்றனர். உண்மையில் வெற்றிடத்திற்கு ஏற்ற தகைமை உடையவர்கள் இல்லை என்பதால் தான், அதை நிரப்ப முடியாமல் இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கும் வாராந்த கேள்வி பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 குறித்த கேள்வி பதிலில் முதலமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

“பதவி வெற்றிடங்கள் என்பது ஒரு நிலை. வேலை வாய்ப்பற்றவர்கள் என்பது பிறிதொரு நிலை. இரண்டையும் சேர்த்து எம்மைக் குறை கூறாதீர்கள்.

download__5_.jpg

குறிப்பிட்ட பதவி வெற்றிடங்களுக்கு வேலைவாய்ப்பற்றவர்கள் தகைமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். வேலையற்றிருப்போர் யாவரும் எமக்கிருக்கும் பதவி வெற்றிடங்களை நிரப்பத் தகைமை பெற்றவர்கள் என்று நினைத்து எம்மைக் குறை கூறுவது முறையாகாது.

பல வெற்றிடங்களை நிரப்பத் தேவையான தகைமை உடையவர்கள் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். இது கல்வித் தேர்ச்சியில் உயர் நிலை அடைந்தவர்களுக்கும் பொருந்தும், கல்வி நிலையில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி பயின்று உயர் நிலையை அடையும் பலர் வெளிநாடுகளுக்குச் செல்வது உங்களுக்குத் தெரியும். அவர்களால் நிரப்பக்கூடிய வெற்றிடங்களும் எமது வெற்றிடப் பட்டியலில் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் இல்லாததால் குறிப்பிட்ட வெற்றிடங்களை நிரப்ப முடியாதிருக்கின்றது. அதே போல் தொழிற்கல்வி கற்று சில தொழில்களில் தேர்ச்சி பெற்ற பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைகள் தேடிச் செல்வதால் இங்கு ஏற்படும் வெற்றிடங்கள் பல தொடர்ந்து நிரப்பப்படாது இருப்பதையும் நீங்கள் உணர வேண்டும்.

தொழில்த் திறன் உள்ளவர்கள் இல்லாததால் வடமாகாணம் படும் அவஸ்தையை நீங்கள் உணர வேண்டும். தாதிகளுக்கு வெற்றிடம் உண்டு. தகுந்த தமிழில் பேசும் தாதிகள் இல்லாததால் நாம் மாகாணத்திற்கு வெளியில் இருந்து தாதியரை அழைத்து வந்து வெற்றிடங்களை நிரப்புகின்றோம். நிரப்பிய பின்னரும் வெற்றிடங்கள் பல உண்டு.” என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/38726

  • தொடங்கியவர்

தடைகளை நீக்கி தகுந்தவர்களை உள்ளேற்பது அத்தனை சுலபமான காரியமல்ல: முதலமைச்சரின் பதில்

 

 

வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பிலான ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

இதன்படி ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியும் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.

கேள்வி - வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த அமைச்சுக்கள் திணைக்களங்களில் 7510 அங்கீகரிக்கப்பட்ட பதவி வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் பல ஆண்டுகளாக இவற்றை நிரப்பமுடியாதது ஏன்?

பதில் - மொத்தம் 6338 வெற்றிடங்கள் இருப்பதாகத் தெரியவருகின்றது. அவற்றுள் மத்திய அரசினால் நிரப்பப்பட வேண்டியவெற்றிடங்கள் 3329. மாகாண அரசினால் நிரப்பப்பட வேண்டியவை 3009.

இந்த வெற்றிடங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுகின்றன. இளைப்பாறல்கள், இடமாற்றங்கள், பதவி விலகல்கள், இறப்புக்கள் என பல காரணங்களால் இந்த வெற்றிடங்கள் ஏற்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் வெற்றிடங்கள் உருவாவதில்லை. நாளாந்தம் இவை மாறிக்கொண்டே இருப்பன. ஒவ்வொரு சேவையிலும் கணிசமான அளவு வெற்றிடங்கள் ஏற்பட்ட பின்னரே சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம் ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டும் தகைமையுடையோர் முன்னிலையாகாத சந்தர்ப்பங்கள் உண்டு. உதாரணத்திற்கு மொழி பெயர்ப்பாளர்களை குறிப்பிடலாம்.

மேசன்மார்கள், குழாய் பழுதுபார்ப்பவர்கள், மரவேலை செய்வோர், தையல்காரர்கள் எனப் பலரின் வெற்றிடங்கள் கவனத்திற்கு வந்துள்ளன. எனினும் காலத்திற்குக் காலம் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு கொண்டே உள்ளன.

உதாரணத்திற்கு நேற்றைய தினம் நாம் 110 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நியமனங்கள் கையளித்தோம். ஒவ்வொரு வருடமும் இவ்வாறு வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

தற்போது எம்மால் நிரப்பப்பட வேண்டியவை 3009. ஆனால் புதிதாக நேற்று நியமனம் கொடுக்கப்பட்டவர்களும் அந்த தொகையினுள் அடங்குகின்றனர். தவணைக்குத் தவணை நாம் கொடுத்து வந்து கொண்டிருக்கின்ற நியமனங்கள் பற்றிய முழு விபரங்களையும் கோரியுள்ளேன். அவை கிடைத்ததும் உங்களுக்கு தெரியப்படுத்துவேன்.

மாகாணசபையின் நிர்வாகத்தில் இருக்கும் பதவிகள் அனைத்தினது தொகை 40422. இவ்வளவு ஆளணியும் மத்திய அரசினாலும் மாகாண அரசினாலும் நிரப்பப்படுகின்றன. மாகாண அரசினால் நிரப்பப்பட வேண்டிய ஆளணியில் 31.07.2018 அன்று வெற்றிடமாக நிரப்பப்பட வேண்டிய ஆளணியினர் 3009.

கேள்வி - வடக்கில் பலஆயிரக் கணகக்கில் இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்பற்றிருக்கும் நிலையில் இவ்வாறு பெருந்தொகையான பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றமையால் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வடக்கு மாகாணசபை அநீதி இழைத்துள்ளதே?

பதில் - பதவி வெற்றிடங்கள் என்பது ஒருநிலை. வேலை வாய்ப்பற்றவர்கள் என்பது பிறிதொருநிலை. இரண்டையும் சேர்த்து எம்மைக் குறை கூறாதீர்கள்.

அதாவது குறிப்பிட்ட பதவி வெற்றிடங்களுக்கு வேலைவாய்ப்பற்றவர்கள் தகைமைவாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு வாகனசாரதி வெற்றிடம் ஒன்று இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். ஐம்பது பேர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேலையின்றி இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஐம்பது பேருக்கும் சாரதி தேர்ச்சிப் பத்திரம் இல்லை என்றால் என்ன செய்வது?

பதவி வெற்றிடமாக இருக்கும் ஐம்பது பேரும் வேலையற்றிருப்பார்கள். ஆகவே வேலையற்றிருப்போர் யாவரும் எமக்கிருக்கும் பதவி வெற்றிடங்களை நிரப்ப தகைமை பெற்றவர்கள் என்று நினைத்து எம்மை குறை கூறுவது முறையாகாது.

பல வெற்றிடங்களை நிரப்பத் தோதான தகைமை உடையவர்கள் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். இது கல்வித் தேர்ச்சியில் உயர் நிலை அடைந்தவர்களுக்கும் பொருந்தும். கல்வி நிலையில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி பெற்று உயர் நிலையை அடையும் எம்முள் பலர் வெளிநாடுகளுக்குச் செல்வது உங்களுக்கு தெரியும். அவர்களால் நிரப்பக் கூடிய வெற்றிடங்களும் எமது வெற்றிட பட்டியலில் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் இல்லாததால் குறிப்பிட்ட வெற்றிடங்களை நிரப்ப முடியாதிருக்கின்றது. அதேபோல் தொழிற் கல்வி கற்று சில தொழில்களில் தேர்ச்சி பெற்ற பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைகள் தேடிச் செல்வதால் இங்கு ஏற்படும் வெற்றிடங்கள் பல தொடர்ந்து நிரப்பப்படாது இருப்பதையும் நீங்கள் உணரவேண்டும்.

தொழில் திறன் உள்ளவர்கள் இல்லாததால் வடமாகாணம் படும் அவஸ்தையை நீங்கள் உணர வேண்டும். தாதிகளுக்கு வெற்றிடம் உண்டு. தகுந்த தமிழில் பேசும் தாதிகள் இல்லாததால் நாம் மாகாணத்திற்கு வெளியில் இருந்து தாதியரை அழைத்து வந்து வெற்றிடங்களை நிரப்புகின்றோம்.

நிரப்பிய பின்னரும் வெற்றிடங்கள் பல உண்டு. நீங்கள் கூறும் வேலையற்றவர்களை நாம் தாதியர்களாக நியமிக்கலாமா?

அவர்களுக்கு அரசாங்கம் எதிர்பார்க்கும் தகைமை இருக்க வேண்டும். தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வடக்கு மாகாண சபை அநீதி இழைத்துள்ளதா அல்லது வடக்குமாகாணசபைக்குத் தமிழ் இளைஞர் யுவதிகள் அநீதி இழைத்துள்ளார்களா? இலகுப் பாடங்களைப் படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகள் பலர் வேலை வாய்ப்பின்றி இருப்பது அவர்கள் எமது வெற்றிடங்கள் பலவற்றை நிரப்பத் தகுதி இல்லாததன் காரணத்தால். இதனால் தான் எமது தேவைகளுக்கு ஏற்பவும் கல்வி புகட்டப்பட வேண்டும் என்று கூறிவருகின்றோம்.

கேள்வி - வடக்கில் வேலைவாய்ப்புக்களை வழங்கும் சந்தர்ப்பம் இருந்தும் அவற்றை சரியாக பயன்படுத்த வடக்கு மாகாணசபை தவறியுள்ளமை வடக்கு மாகாண சபையின் செயற்றிறன் அற்ற செயற்பாடாக கருத முடியாதா?

பதில் - முன்னைய கேள்விகளுக்கு நாம் கூறிய காரணங்கள் உங்களுக்கு எமது இடர் நிலையையும் இக்கட்டான நிலையையும் உணர்த்தி இருக்கும். எமது வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் போன்றவர்கள் தான் இவ்வாறான குற்றங்களை முன் வைத்து வருகின்றனர்.

அடுத்த தேர்தலுக்கான முனகல்கள் இவை. முன்பும் வெற்றிடங்கள் இருந்தன. இவர்களோ நீங்களோ கேட்கவில்லை. திடீரென்று பதவி முடியும் காலத்தில் இவற்றை எழுப்பக் காரணம் என்ன?

வாசகர்கள் பதில் அறிவார்கள். வேலை வாய்ப்புக்களை வழங்க இருக்கும் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது தவறான கருத்து. நாம் காலத்துக்குக் காலம் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கைகளை எடுத்தே வருகின்றோம்.

அதில் பல சிக்கல்கள், தடைகள் எமக்கிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் இன்னமும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் கீழ்தான் பதவி வகித்துவருகின்றோம்.

நேற்றைய தினந்தான் சுகாதாரத் தொண்டர்கள் பலர் வந்து என்னை சந்தித்தார்கள். அவர்களுள் பலர் அடிப்படைக் கல்வித்தகைமை அற்றவர்கள். ஆனால் பல வருடகாலம் தொண்டர்களாகத் தொழில் புரிந்து வருபவர்கள்.

வெற்றிடங்களுக்கு வெளியில் இருந்து கல்வித் தகைமை பெற்றவர்களைக் கொண்டு நிரப்பலாம். அப்போதுசுகாதாரத் தொண்டர்கள் பலர் தெருவிற்குச் செல்லவேண்டிவரும்.

தற்போது எமது புள்ளிவிபரங்கள் அவர்கள் செய்யும் வேலைகளையும் வெற்றிடங்களாகவே காட்டுகின்றன. ஆனால் அவர்கள் தொண்டர்களாக கடமையாற்றுகின்றார்கள்.

அவர்களை வேலைகளில் ஈடுபடுத்த பல தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கின்றது. அவர்களின் கல்வித் தகைமையை, வயதெல்லையைத் தாண்டிய அவர்களின் வயது என்று பலவற்றை நாம் தாண்டியே அவர்களுக்கு நியமனங்கள் அளிக்க வேண்டிவரும்.

தொண்டர் ஆசிரியர்கள் பலர் தமது தொடர்ந்த சேவையினை நிரூபிக்க முடியாத நிலையில் நியமனம் பெற முடியாதவர்களாக இருந்தார்கள். காணாமல் போனமையே அதற்குக் காரணம்.

அவர்களிடமிருந்து சில நிபந்தனைகளுக்கு அமைவாக சத்தியப் பத்திரங்கள் பெற்று நியமனங்களை வழங்கலாம் என்று நானே சிபார்சு செய்து அண்மையில் பல இடர்பாடுகளுக்கு பின்னர் அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.

எத்தனை சத்தியாக்கிரகங்கள், ஆர்ப்பாட்டங்கள், சண்டை, சச்சரவுகள் என்பவற்றைத் தாண்டி அவர்கள் தமது நியமனங்களை பெற்றார்கள் என்று அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

அவர்களுள் நியமனம் பெற்ற ஒருவர் வந்து' உங்கள் செயலினால் தான் எமக்கு நியமனம் கிடைத்தது' என்று என்னிடம் கூறும் போது கண்ணீர் வடித்தார்.

அதே நபர் சென்ற வருட இறுதியில் என் அலுவலக அறையில் கத்திக் கூப்பாடு போட்டு தர்க்கித்தவர். ஆனால் அவரின் மேல் எனக்குக் கோபம் வரவில்லை. அனுதாபமும் அன்புமே மேலோங்கியிருந்தது.

அதை அவர் புரிந்து கொண்டிருந்ததால் தான் வேலை கிடைத்ததும் கண்ணீர் உகுத்தார். நாங்கள் செயற்றிறனுடன் தான் செயற்படுகின்றோம். வெளியில் இருந்துகுற்றம் சுமத்துவது இலகுவானது.

தடைகளை நீக்கி, தகைமையை உறுதி செய்து, தகுந்தவர்களை உள்ளேற்பது அத்தனை சுலபமான காரியமல்ல.

 

http://www.tamilwin.com/statements/01/191083?ref=home-feed

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.