Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜகார்த்தா ஆசியப் போட்டிகள் 2018: கோலாகல தொடக்கம்

Featured Replies

ஜகார்த்தா ஆசியப் போட்டிகள் 2018: கோலாகல தொடக்கம்

 

 
asian11

ஆசியப் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற வாணவேடிக்கை.


* வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள்
* வாண வேடிக்கைகள்
* நீரஜ் சோப்ரா தலைமையில் இந்தியா அணிவகுப்பு

18-ஆவது ஆசியப் போட்டிகள் 2018 சனிக்கிழமை மாலை ஜகார்த்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது.
முதல் ஆசியப் போட்டிகள் கடந்த 1951-இல் புதுதில்லியில் தொடங்கி நடைபெற்றது. அதன்பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவின்படி 18-ஆவது ஆசியப் போட்டிகள் இந்தோனேஷியாவுக்கு ஒதுக்கப்பட்டன.
இதன் வரலாற்றிலேயே முதன்முறையாக இரு நகரங்களில் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங்கில் போட்டிகள் நடக்கின்றன. 45 நாடுகளைச் சேர்ந்த 10000 வீரர் வீராங்கனைகள், அதிகாரிகள், நிர்வாகிகள் இதில் பங்கேற்றுள்ளனர். ஆசியப் போட்டித் தொடக்க விழா சனிக்கிழமை ஜகார்த்தாவின் ஜெலரோ பங் கர்னோ விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஷேக் அகமது அல் பஹாத் அல் சபா தலைமை தாங்கினார்.
மோட்டார் பைக்கில் வந்த அதிபர்: விழா தொடங்குவதற்கு முன்பு ஹெல்மெட் அணிந்த நபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக விளையாட்டரங்கில் நுழைந்தார். பின்னர் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மோட்டார் பைக்கில் இருந்தில் அதிபர் விடோடோ இறங்கி மேடைக்குச் சென்றார்.
சரியாக மாலை 5.30 மணிக்கு விழா தொடங்கியது. முதலில் 2200 குழந்தைகள் பங்கேற்ற வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. முதலில் ஆப்கானிஸ்தான் அணியினர் அணிவகுத்து வந்தனர். இந்திய அணிக்கு இளம் தடகள வீரரும், காமன்வெல்த் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா தலைமை தாங்கி கொடியை ஏந்தி வந்தார். இந்திய அணியினர் நீல நிற கோட் சூட் அணிந்து கம்பீரமாக நடந்து வந்தனர். மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த 6000 வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டு சீருடைகளில் அணிவகுத்து வந்தனர். 
இறுதியாக போட்டியை நடத்தும் இந்தோனேஷி வீரர்கள் அணிவகுத்து வந்தனர். பின்னர் அந்நாட்டின் பிரபல பாடகி வியா வல்லேன் ஆசிய போட்டியின் அதிகாரப்பூர்வ பாடலை பாடி அசத்தினார். மற்றொரு பாடகர் டுலுஸ் தேசிய கீதத்தை பாடினார். 
அதைத் தொடர்ந்து இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக போட்டிகளை தொடங்கி வைத்தார். அவரது மனைவி ஐரியனா விடோடோ, துணை அதிபர் ஜுஸுப் கல்லா உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தோனேஷியாவின் கலாசாரம், கலை சிறப்புகளை பிரதிபலிக்கும் கண்ணைக் கவரும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்நாட்டு பாட்மிண்டன் வீராங்கனை லூசியா பிரான்ஸிஸ்கா சுசு சுசாந்தி ஆசிய போட்டி ஜோதியை ஏற்றி வைத்தார். தொடக்க விழாவுக்கு 120 மீ நீளம், 30 மீ அகலம், 26 மீ உயரம் கொண்ட மலைப் போன்ற பின்னணியுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டிருந்தது.

போட்டி துளிகள்
ஆசியப் போட்டிக்கு இந்தியா சார்பில் 572 வீரர், வீராங்கனைகள் உள்பட 804 பேர் குழு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்திய அணிகள் சிறப்பான வெற்றிகளைக் குவிக்க பிரதமர் மோடி, விளையாட்டுத் துறை அமைச்சர் ரத்தோர், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் சுட்டுரை (டுவிட்டர்) மூலம் வாழ்த்து 
தெரிவித்துள்ளனர்.
ஒலிம்பிக் சங்க செயல்பாடுகளில் அரசின் தலையீடு இருந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த குவைத் அணி பங்கேற்க ஓசிஏ அனுமதி அளித்தது.

ஒருங்கிணைந்த கொரிய அணிகள்

korea.jpg
பரம வைரிகளாக திகழ்ந்த தென்கொரியா-வடகொரிய நாடுகள் இடையே தற்போது அமைதி நிலவி வரும் நிலையில் இரு அணிகளும் ஒன்றிணைந்து அணிவகுப்பில் பங்கேற்றனர். ரோயிங், கூடைப்பந்து, டிராகன் போட் பந்தயம் போன்றவற்றில் இரு நாடுகளும் இணைந்த அணிகளை களமிறக்குகின்றன.

http://www.dinamani.com/sports/sports-news/2018/aug/19/ஜகார்த்தா-ஆசியப்-போட்டிகள்-2018-கோலாகல-தொடக்கம்-2983092.html

  • தொடங்கியவர்

ஆசிய மெய்வல்லுனர் போட்டி: 5 பதக்கங்களை சுவிகரித்து முதலிடத்தில் கொரியா!

 

 

asian-game.jpg

ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளின் முதலாம் நாளான இன்று பதக்கப்பட்டியலில் கொரியா முதலிடத்தை பெற்றுள்ளது. கொரியா இதுவரை 2 தங்கம், 2 வெள்ளி அடங்கலாக 5 பதக்கங்களை சுவிகரித்து முதலிடத்தை பெற்றள்ளது.

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்த பட்டியலில், 2 தங்கம், 2 வெண்கலம் அடங்களாக 4 பதக்கங்களை பெற்று சீன இரண்டாவது இடத்தில் நீடிக்கின்றது.

1982 ஆம் ஆண்டில் இருந்து பதக்கப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்து வரும் சீனா இந்த முறையும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆரம்பித்துள்ளது.

ஆசிய மெய்வல்லுனர் வீர, வீராங்கணைகளுக்கு இடையில் நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா மற்றும் இலங்கை உள்பட 45 நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்த போட்டிகளில் சுமார் 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தமது திறமைகளை வெளிபடுத்தி வருகின்றனர்.

இந்த போட்டியில் கபடி, ஸ்குவாஷ், சீட்டாட்டம் உள்ளிட்ட ஒலிம்பிக்கில் இல்லாத எட்டு வகையான விளையாட்டுகளும் இடம்பெறுகின்றன.

அதேநேரம், தடகளம், வில்வித்தை, டென்னிஸ், பட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, கால்பந்து, ஒக்கி, நீச்சல், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட 40 வகையான போட்டிகளும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஆசிய-மெய்வல்லுனர்-போட்டி/

  • தொடங்கியவர்

ஆசிய விளையாட்டு – 14 பதக்கங்களுடன் சீனா முதலிடம்

 

Asian-Games-18th-2018-Jakarta-Palemnang.jpg

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்த போட்டியில் 6 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 14 பதக்கங்களை சுவீகரித்து சீனா முதலிடத்தை பெற்றுள்ளது. பதக்கப்பட்டியலியலில், 3 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் அடங்களாக 11 பதக்கங்களைப் பெற்று ஜப்பான் இரண்டாவது இடத்தில் நீடிக்கின்றது.

மூன்றாவது இடத்திலுள்ள கொரியா 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 8 பதக்கங்களை பெற்றுள்ளது. இந்தோனேஷியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முறையே மூன்றாம், நான்காம் இடத்தில் உள்ளன.

ஆசிய விளைாயட்டு வீர, வீராங்கனைகளுக்கு இடையில் நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா மற்றும் இலங்கை உட்பட 45 நாடுகள் பங்கேற்றுள்ளன. இப்போட்டிகளில் சுமார் 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஆசிய-விளையாட்டு-முதல்-நா/

  • தொடங்கியவர்

சபாஷ்: ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

bajrang-punia-g

பஜ்ரங் பூனியா   -  படம்: பிடிஐ

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப்போட்டியில், மல்யுத்தப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் வீரர் சிராஜுதின் கசாநோவை 13-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வென்றார் பூனியா.

 

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 40 விளையாட்டு போட்டிகளில் 572 பேர் பங்கேற்றுள்ளனர்.

ஜகார்த்தா விளையாட்டு மையத்தில் இன்று ஆடவருக்கான 65கிலோ ப்ரீஸ்டையில் மல்யுத்தப் போட்டி நடந்தது. இதில்

இந்தியவீரர் பஜ்ரங் பூனியாவை எதிர்த்து களமிறங்கினார்உஸ்பெகிஸ்தான் வீரர் சிராஜுதின் கசாநோவ்.

இதில் உஸ்பெகிஸ்தான் வீரர் சிராஜுதின் கசாநோவை 13-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வென்றார் பூனியா. தங்கப்பதக்கம் வென்ற பூனியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

24வயதான பூனியா ரயில்வேதுறையில் பணியாற்றி வருகிறார். சர்வதேச அளவில் 65 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் 2-ம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/sports/article24731604.ece

  • தொடங்கியவர்

ஆசிய விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் தங்கம் வென்று வினேஷ் போகத் சாதனை:  துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு இரு வெள்ளி பதக்கங்கள்

 

 
vigneshjpg

வெற்றி உற்சாகத்தில் வினேஷ் போகத்தை தூக்கி சுமந்தபடி மைதானத்தை வலம் வந்த பயிற்சியாளர்கள்.

ஆசிய விளையாட்டுப் போட்டி மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்று சாதனை படைத்தார். துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் தீபக் குமார், லக்சய் ஷியோரன் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 

இறுதி சுற்றில் தீபக் குமார் 247.7 புள்ளிகள் சேர்த்து 2-வது இடம் பிடித்தார். சீனாவின் ஹாரோன் யங் 249.1 புள்ளிகள் குவித்து ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். சீன தைபேவின் ஷாவ்சுவான் லூ 226.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரரான ரவி குமார் 205.2 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்தார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சண்டிலா இறுதி சுற்றில் 186 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

ஆடவருக்கான ட்ராப் பிரிவில் இந்தியாவின் லக்சய்  39 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். சீன தைபேவின் குன்பி யங் 48 புள்ளிகள் குவித்து சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். கொரியாவின் டெயேமிங் அஹ்ன் 30 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இந்தியாவின் மற்றொரு வீரரான மனவ்ஜிங் சிங் சாந்து 26 புள்ளிகளுடன் 4-வது இடம்பிடித்தார்.

பாட்மிண்டனில் தோல்வி

பாட்மிண்டனில் மகளிருக்கான அணிகள் பிரிவில் இந்தியா கால் இறுதியில் ஜப்பானிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

முதலில் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-18, 21-19 என்ற நேர் செட்டில் முதல் நிலை வீராங்கனையான அகானே யகுச்சியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 41 நிமிடங்களில் முடிவடைந்தது. இதனால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் பிரிவில் ஷிக்கி ரெட்டி, ஆர்த்தி சுனில் ஜோடி 15-21, 6-21 என்ற நேர் செட்டில் யுகி புகுஷிமா, சயாகா ஹிரோடா ஜோடியிடம் வீழ்ந்தது. இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது.

இதன் பின்னர் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெவால் 11-21, 25-23, 16-21  என்ற செட் கணக்கில் ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் போராடி நோஸோமி ஒகுஹராவிடம் தோல்வியடைந்தார். இதனால் இந்திய அணி 1-2 என பின்தங்கிய நிலையில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் இரட்டையர் பிரிவில் சிந்து, அஸ்வினி பொன்னப்பா ஜோடி 13-21, 12-21 என்ற நேர் செட்டில் மிசாகி மட்சுடோமோ, அயாகா தகாஹஸி ஜோடியிடம் வீழ்ந்தது.

முடிவில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு தென் கொரியாவின் இன்ஜியான் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றிய நிலையில் இம்முறை கால் இறுதியுடன் வெளியேறியுள்ளது.

ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்திய அணி கால் இறுதியில் இந்தோனேஷியாவை எதிர்த்து விளையாடியது. முதலில் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி காந்த் 21-23, 22-20, 10-21 என்ற செட் கணக்கில் அந்தோனி சினிசுகாவிடம் தோல்வியடைந்தார்.

இதையடுத்து நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி ஜோடி 21-19, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் போராடி கெவின் சஞ்ஜெயா, மார்கஸ் கிடியோன் ஜோடியிடம் தோல்வியை சந்தித்தது. 0-2 என பின்தங்கிய நிலையில் ஒற்றையர் ஆட்டத்தில் ஹெச்.எஸ்.பிரணாயி 21-15, 21-19 என்ற நேர் செட்டில் ஜோனாதன் கிறிஸ்டியை தோற்கடிக்க சிறிது நம்பிக்கை பிறந்தது. ஆனால் இதையடுத்து நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி  14-21, 18-21 என்ற நேர் செட்டில் பஹார் அல்பியான், முகமது ஜோடியிடம்

வீழ்ந்தது. இதனால் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

கபடி

மகளிர் கபடியில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் 33-23 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்தியா 43-12 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியிருந்தது. இந்திய அணி தனது ஆட்டங்களில் இன்று இலங்கை மற்றும் இந்தோனேஷியாவுடன் மோதுகிறது.

ஆடவர் பிரிவு கபடியில் இந்தியா தனது 3-வது ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்த்து விளையாடியது. இதில் 7 முறை சாம்பியனான இந்திய அணி 23-24 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஆசிய விளையாட்டில் 28 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி தற்போதுதான் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நேற்றுமுன்தினம் 50-21 என்ற கணக்கில் வங்கதேசத்தையும், 44-28 என்ற கணக்கில் இலங்கையையும் வீழ்த்தியது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று தாய்லாந்துடன் மோதுகிறது.

மல்யுத்தம்

மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவு பிரீஸ்டைலில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டியில், ஜப்பானின் ஐரி யுகியை எதிர்த்து விளையாடினார். இதில் வினேஷ் போகத் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பூஜா தண்டா அரை இறுதியில் 0-10 என்ற கணக்கில் இருமுறை உலக சாம்பியனான வட கொரியாவின் ஜோங் மயோங்கிடம் தோல்வியடைந்தார். இதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பூஜா வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜப்பானின் கட்சுகி சககாமியை எதிர்கொண்டார். இதில் பூஜா 1-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதேபோல் 62 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சாக் ஷி மாலிக், கிர்கிஸ்தானின் டையன்பெகோவாவை எதிர்த்து விளையாடினார். இதில் சாக் ஷி மாலிக் தொடக்கத்தில் 4-0 என முன்னிலை வகித்தார். ஆனால் கடும் சவால் கொடுத்து டையன் பெகோவா 6-4 என்ற முன்னிலையை பெற்றார். கடைசி கட்டத்தில் சாக் ஷி மாலிக் தற்காப்பில் கவனம் செலுத்தியதால் நெருக்கமான கட்டத்தில் 7-8 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். அரை இறுதியில் தோல்வியடைந்த

சாக் ஷி மாலிக் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில், கொரியாவின் ரிங் ஜோங் சிம்னுடன் மோதினார். இதில் சாக் ஷி மாலிக் 2-12 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

53 கிலோ எடைப் பிரிவு பிரீஸ்டைல் கால் இறுதியில் இந்தியாவின் பிங்கி 0-10 என்ற கணக்கில் மங்கோலியாவின் சுமியாவிடம் தோல்வியடைந்தார். ஆடவருக்கான 125 கிலோ எடைப் பிரிவு பிரீஸ்டைலில் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சுமித் மாலிக் 0-10 என்ற கணக்கில் ஈரானின் பர்விஸ் ஹபிபஸ்மான்ஜிடம் தோல்வியடைந்தார். எனினும் பர்விஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியதால் ரப்பேஜ் முறையில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் விளையாடுவதற்கு தகுதி பெற்றார் சுமித் மாலிக்.

இதில் சுமித் மாலிக் முதல் ஆட்டத்தில் 7-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ஒலெக் போல்டினை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் சுமித் மாலிக் 0-2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் டேவிட் மோட்ஸ்மான்ஸ்விலியிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.

வாலிபால்

ஆடவருக்கான வாலிபாலில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங் காங் அணியை வீழ்த்தியது. ஆடவருக்கான ஹேண்ட்பாலில் இந்தியா 45-19 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 6-0, 7-6 என்ற நேர் செட்டில் ஹாங் காங்கின் ஹாங் கிட் வாங்கை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் 6-2, 6-0 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் ரபிக் பிட்ரியாடியை தோற்கடித்தார். இதேபோல் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல் ஜோடி 6-1, 6-1 என்ற நேர் செட்டில் நேபாளத்தின் பஜ்ராஜ்சாரியா, அபிஷேக் பஸ்டோலா ஜோடியை வீழ்த்தியது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் குமுல்யா பீட்ரைஸை எளிதாக வென்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் கர்மான் கவுர் தாண்டி 6-1, 6-0 என்ற நேர் செட்டில் மங்கோலியாவின் ஜர்கல் அல்டன்சர்னியை தோற்கடித்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, பிரார்த்தனா தாம்ப்ரே ஜோடி 6-0, 6-0 என்ற நேர் செட்டில் பாகிஸ்தானின் சாரா மெஹ்பூப் கான், உஷ்னா சுகைல் ஜோடியை வீழ்த்தியது.

ஹாக்கியில் அபாரம்

ஆடவர் பிரிவு ஹாக்கியில் இந்தியா முதல் ஆட்டத்தில் இந்தோனேஷியாவை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியா 17-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் மன்தீப் சிங், சிம்ரன்ஜித் சிங், தில்பிரீத் சிங் ஆகியோர் தலா 3 கோல்களும், ரூபிந்தர் பால் சிங் 2 கோல்களும், அமித் ரோஹிதாஸ், விவேக் சாகர் பிரசாத், எஸ்.வி.சுனில், லலித் குமார் உபாத்யாய், ஆகாஷ்தீப் சிங், ஹர்மான்பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

8-வது இடம்

செபக் டக்ராவில் ஆடவருக்கான ரெகு அணிகள் பிரிவில் இந்திய அணி 21-16, 19-21, 21-17 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்திய அணி இந்தப் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.  2-வது நாளின் முடிவில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் 8-வது இடம் வகித்தது. சீனா 15 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலத்துடன் மொத்தம் 36 பதக்கங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

https://tamil.thehindu.com/sports/article24742444.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் வெண்கல பதக்கம் வென்றார்

 
அ-அ+

பெண்களுக்கான ப்ரீஸ்டைல் 68 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் 10-0 என வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார். #AsianGames2018

 
 
 
 
மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் வெண்கல பதக்கம் வென்றார்
 
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான மல்யுத்தம் போட்டிகள் இன்று நடைபெற்றன. ப்ரீஸ்டைல் 68 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் காலிறுதி ஒன்றில் மங்கோலிய வீராங்கனை டுமென்ட்செட்கெக்-ஐ எதிர்கொண்டார். இதில் திவ்யா கக்ரன் 1-11 என தோல்வியடைந்தார்.

201808211831558951_1_divya002-s._L_styvpf.jpg

டுமென்ட்செட்கெக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் அவரிடம் காலிறுதியில் தோல்வியடைந்த திவ்யா கக்ரன் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்த சீன தைபேயின் வென்லிங் சென்னை எதிர் கொண்டார். இதில் திவ்யா கக்ரன் 10-0 என வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/21183156/1185466/Indian-wrestler-Divya-Kakran-claims-bronze-in-women.vpf

  • தொடங்கியவர்

ஆசியப் போட்டிகள் 2018: வரலாறு படைத்தார் இந்திய ‘தங்க’ வீராங்கனை ரஹி சர்னோபத்

 

 
rahi

ரஹி சர்னோபத் தங்கம் வென்றதையடுத்து இந்திய மூவர்ணக்கொடியை பெருமிதத்துடன் பிடித்துள்ள காட்சி. | பிடிஐ.

 இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 25மீ ஏர்பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளார் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத்.

25மீ ஏர்பிஸ்டல் இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் நபஸ்வான் யாங்பைபூன் என்பவரை வீழ்த்தினார். இருவரும் 34 புள்ளிகளில் சமனில் இருந்த போது ஆட்டம் மிகவும் பரபரபான கட்டத்தை எட்டியது.

 

இதனையடுத்து ஷூட் ஆஃப் கட்டத்தின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது, இருவருமே தலா 4 முறை இலக்கைச் சரியாகச் சுட்டனர். இதனையடுத்து இன்னொரு ஷூட் ஆஃப்புக்குச் சென்றது ஆட்டம். இதில் ராஹி 3 முறை இலக்கை சரியாக குறிவைத்துச் சுட, தாய்லாந்து வீராங்கனை 2 முறையே சரியாகச் சுட்டார்.

இதனையடுத்து துப்பாக்கிச் சுடுதலில் ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற வரலாற்றை நிகழ்த்தினார் ரஹி சர்னோபத், இவர் கோலாப்பூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் வெண்கலம் வென்ற வீராங்கனை தென் கொரியாவின் கிம் மின்ஜங் ஆவார்.

இறுதிப் போட்டியில் ரஹி முன்னிலையில் இருந்தார். முதல் 10 ஷூட்டுமே இலக்கை அருமையாக தடம் பிடித்தது. 6-வது சீரிஸில் 5 ஷாட்களையும் இலக்கு தவறாமல் சுட்டார். கடைசியில் இவர் பரபரபான ஆட்டத்தில் பதற்றமடையாமல் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி சாதனை படைத்தார்.

நேற்று 10மீ பிஸ்டல் பிரிவில் 16 வயது வீரர் சவுரவ் சவுத்ரி தங்கம் வென்றார். இவருடன் சரிசமமாக இறுதிச் சுற்றுக்கு வந்த மற்றொரு திறமை வாய்ந்த வீராங்கனை மனுபாக்கர் 6வதாக முடிந்தார்.

2013-ல் இதே ரஹி சர்னோபத் உலகக்கோப்பையில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியவர். இவருக்கு கடந்த ஆண்டு பயங்கர முழங்கை காயம் ஏற்பட்டது அதிலிருந்து மீண்டு வந்து தற்போது தங்கச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

https://tamil.thehindu.com/sports/article24752816.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

  • தொடங்கியவர்

நீச்சலில் சீன வீராங்கனை உலக சாதனை

 

 

ஆசிய விளை­யாட்டுப் போட்­டி­களில் பெண்­க­ளுக்­கான நீச்­சலில் 50 மீற்றர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் சீனாவின் லு ஸியாங் 26.98 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.chaina.jpg

 

இதற்கு முன்பு சீனாவின் ஜாவ் ஜிங் 2009 ஆம் ஆண்டு உலக சம்பியன்­ஷிப்பில் 27.06 வினா­டி­களில் இலக்கை எட்­டி­யதே உலக சாத­னை­யாக இருந்­தது.

அதே­வேளை, நீச்சல் சம்­பியன் பெல்ப்ஸை வீழ்த்­திய சிங்­கப்­பூரின் ஸ்கூலிங் நேற்று நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான 100 மீற்றர் போட்­டி­யில் தங்கப் பதக்கம் வென்­ற­மையும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/38997

வெளியேற்றப்பட்டது இலங்கை நீச்சல் அணி

 

 
 

இந்தோனேசியாவில் இடம்பெற்று வரும் ஆசிய விளை­யாட்டுப் போட்­டி­களில் 4x100 நீச்சல் போட்டிப் பிரிவில் இலங்கை அணியின் எதிர்­பார்ப்பை வீரர்கள் போட்டி நிறைவடையும் முன்னரே தகர்த்­து­விட்­டனர்.swim.jpg

 

காரணம் போட்டி விதி­களை மீறி­ய­தனால் இலங்கை அணியை போட்டி நடு­வர்கள் போட்­டி­யி­லி­ருந்து வெளி­யேற்­றினர்.

இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் நடை­பெற்ற கொமன்வெல்த் போட்­டி­க­ளின்­போதும் இலங்கை அணி போட்டி விதி­களை மீறிய குற்­றத்­திற்­காக வெளி­யேற்­றப்­பட்­டி­ருந்­த­மையும் நினைவுகூரத்தக்கது.

இந்தப் போட்­டியில் இலங்கை அணி சார்­பாக மெத்­தியூ அபே­சிங்க, கைல் அபே­சிங்க, செரந்த டி சில்வா மற்றும் அக­லங்க பீரிஸ் ஆகியோர் கலந்­து­கொண்­டனர். 

இந்த அணி நீச்சல் தடா­கத்தில் 6 ஆவது வரி­சையில் போட்டியிட்டது.

இதில் போட்­டியை ஆரம்­பித்த மெத்­தியூ அபே­சிங்க சிறந்த தொடக்­கத்தைக் கொடுத்து இரண்­டா­மி­டத்தைப் பெற்று தனது 100 மீற்­றரை வெற்றி­க­ர­மாக நிறை­வு­செய்தார். 

ஆனாலும் மெத்­தியூ எல்­லைக்­கோட்­டுக்கு வர­முன்னரே இரண்டாவது வீர­ரான கைல் அபே­சிங்க தடா­கத்­திற்குள் குதித்ததே போட்டியிலிருந்து இலங்கை அணி வெளியேற காரணமாக அமைந்தது.

இலங்கை நீச்சல் பயிற்­சி­யாளர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த நான்கு பேரும் ஒன்­றாக சேர்ந்து பயிற்சி மேற்­கொள்­ளா­த­தே இந்த தவ­றுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/38996

  • தொடங்கியவர்

51 தங்கப் பதக்கங்களை பெற்று சீனா முதலிடத்தில்

 
t24nfr10_23082018_MSS_CMY.jpg

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா 51 தங்கப்பதக்கங்களுடன் நெருங்க முடியாத இடைவெளியுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இதுவரை மொத்த 24 நாடுகள் ஏதேனும் ஒரு பதக்கத்தை வென்ற நிலையில் இலங்கையால் நேற்று மாலை வரை எந்த ஒரு பதக்கத்தையும் வெல்ல முடியவில்லை.

சீனா 51 தங்கம், 36 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 106 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தல் இருக்கும் ஜப்பான் சீனாவை விடவும் 29 தங்கப் பதக்கங்களை குறைவாக பெற்றுள்ளது.

 

 
 

இதன்படி ஜப்பான் 22 தங்கம், 25 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 76 பதக்கங்களை வென்றுள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் தென் கொரியா மொத்தம் 15 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

இரண்டு வாரங்கள் கொண்ட ஆசிய விளையாட்டு விழாவில் சுமார் 17,000 வீர, வீராங்கனைகள் 40 விளையாட்டுகளில் பங்கேற்று வருகின்றனர். இந்தோனேசிய வரலாற்றி இடம்பெறும் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டி இதுவாகும்.

http://www.thinakaran.lk/2018/08/24/விளையாட்டு/26382/51-தங்கப்-பதக்கங்களை-பெற்று-சீனா-முதலிடத்தில்

  • தொடங்கியவர்

ஆசிய விளையாட்டில் 6 தங்கம் வென்று ஜப்பான் நீச்சல் வீராங்கனை சாதனை

 
அ-அ+

ஜப்பான் நீச்சல் வீராங்கனை ரிகாகோ, ஆசிய விளையாட்டில் நீச்சலில் 6 தங்கம் வென்ற முதல் நபர் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். #AsianGames2018

 
 
 
 
ஆசிய விளையாட்டில் 6 தங்கம் வென்று ஜப்பான் நீச்சல் வீராங்கனை சாதனை
 
ஜகர்தா:

18-வது ஆசிய விளையாட்டில் ஜப்பான் நீச்சல் வீராங்கனை 18 வயதான ரிகாகோ இகீ, நீச்சல் குளத்திற்குள் பாய்ந்தால் பதக்கத்தோடு தான் வெளியே வருகிறார். 50 மீட்டர், 100 மீட்டர் பட்டர்பிளை, 50 மீட்டர், 100 மீட்டர் பிரிஸ்டைல், 4 x 100 மீட்டர் மெட்லே தொடர் நீச்சல், 4x 100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சல் என்று 6 தங்கப்பதக்கங்களை அள்ளியிருக்கிறார். இதன் மூலம் ஒரு ஆசிய விளையாட்டில் நீச்சலில் 6 தங்கம் வென்ற முதல் நபர் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.

நடப்பு ஆசிய விளையாட்டில் நீச்சலில் மட்டும் ஜப்பான் 19 தங்கம் உள்பட 52 பதக்கம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரிய துப்பாக்கி சுடுதல் வீரர் சோ ஜின்-மான் 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 7 தங்கம் வென்றிருந்தார். ஒரு ஆசிய விளையாட்டில் அதிக தங்கம் வென்ற சாதனையாளராக அவர் நீடிக்கிறார். #AsianGames2018

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/25050214/1186342/Rikako-Ikee-captures-record-sixth-Asian-Games-swim.vpf

  • தொடங்கியவர்

ஆசிய விளையாட்டுப்போட்டி: பதக்கபட்டியலில் சீனா முன்னிலை!

 

asian-game.jpg

இந்தோனேசியாவில் இடம்பெற்றுவரும் ஆசிய விளையாட்டுப்போட்டியில், 72 தங்கப்பதங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 153 பதக்கங்களைப் பெற்று சீனா தொடர்ந்தும் பதக்கப்பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறது.

அதேநேரம், 109 பதக்கங்களைப் பெற்று ஜப்பான், இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப்போட்டிகள் தற்போது இந்தோனேசியாவில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகிறது.

கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமான இந்தப்போட்டியில் ஆரம்பம் முதல் சீனாவின் ஆதிக்கமே மேலோங்கிக் காணப்பட்டது.

அந்தவகையில், சீனா தற்போதுவரை 72 தங்கப்பதக்கங்கள், 51 வெள்ளிப் பதக்கங்கள், 30 வெண்கலப்பதக்கங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 153 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் தொடர்ந்தும் முன்னிலையில் இருந்துவருகிறது.

இதனைத் தொடர்ந்து ஜப்பான் 34 தங்கப்பதக்கங்களையும், 31 வெள்ளிப் பதக்கங்களையும் 44 வெண்கலப்பதக்கங்கள் என 109 பதக்கங்களைப் பெற்று இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

மேலும், 25 தங்கங்கள், 26 வெள்ளிகள், 33 வெண்கலப்பதங்களைப் பெற்று 84 மொத்தப் பதக்கங்களுடன் கொரியா மூன்றாம் இடத்தில் உள்ளது.

அதேநேரம், இந்தப் பட்டியலில் இந்தியா, 7 தங்கப்பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள், 17 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 29 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் 8 ஆவது இடத்தில் இருந்துவருகிறது. இந்தப் பட்டியலில் முதல் 30 இடங்களுக்குள் இலங்கை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஆசிய-விளையாட்டுப்போட்டி/

  • தொடங்கியவர்

ஆசிய விளையாட்டுப் போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 வெள்ளிப் பதக்கம்

 

 
e91f66e7P1475166mrjpg

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு நேற்று 2 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. இதேபோல மகளிர் 100 மீட்டர், 400 மீட்டர் ஆடவர், மகளிர் பிரிவில் 3 வெள்ளிப் பதக்கங்கள் என ஒரே நாளில் இந்தியா 5 வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றியது.

ஆசிய விளையாட்டுப் போட்டி கள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலேம்பங் நகரங்களில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆடவர் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் முகமது அனாஸ் 45.69 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி 2-வது இடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

 

கத்தார் நாட்டைச் சேர்ந்த வீரர் ஹசன் அப்தலேலா 44.89 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடத்து தங்கம் வென்றார்.

மகளிர் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 2-வது இடம்பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். அவர் 50.59 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். பஹ்ரைன் வீராங்கனை சல்வா நாசர் 50.09 விநாடிகளில் ஓடிவந்து தங்கம் வென்றார்.

ஹிமா தாஸ் 50.59 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தது, இந்திய அளவில் புதிய தேசியச் சாதனையாகும். இதே போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் 11.32 விநாடிகளில் ஓடி 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஆசிய விளையாட்டின் 100 மீட்டர் பிரிவில் இந்தியா 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பதக்கம் வென்றுள்ளது. 1998-ல் இந்திய வீராங்கனை ரச்சிதா மிஸ்ட்ரி வெண்கலம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குதிரையேற்றம்

குதிரையேற்ற போட்டியின் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் பவாத் மிர்ஸா 26.40 புள்ளிகளைப் பெற்று 2-வது இடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

ஜப்பான் வீரர் ஓய்வா யோஷியாகி 22.70 புள்ளிகளுடன் தங்கமும், சீன வீரர் ஹுவா டியான் அலெக்ஸ் 27.10 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.

அணிப் பிரிவு

குதிரையேற்றப் போட்டியின் அணிப் பிரிவில் இந்தியாவின் ராக்கேஷ் குமார், ஆசிஷ் மாலிக், ஜிதேந்தர் சிங் ஆகியோர் அடங்கிய அணி 121.30 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இதே பிரிவில் ஜப்பான் முதலிடமும், தாய்லாந்து அணி 3-வது இடமும் பிடித்தன.

சிந்து, சாய்னா

பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

மகளிர் ஒற்றையர் கால் இறுதியில் சாய்னா நெவால் 21-18, 21-16 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனாக் இந்தனானை வீழ்த்தினார். அரை இறுதியில் அவர், தாய் டிஸு யிங்கைச் சந்திக்கிறார்.

மற்றொரு கால் இறுதியில் பி.வி.சிந்து 21-11 16-21 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்து வீராங்கனை நிட்சனோன் ஜிந்தபோலை தோற்கடித்தார். சிந்து, சாய்னா ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளதால் அவர்களுக்கு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

ஹாக்கி

ஹாக்கி போட்டியில் இந்திய ஆட வர் அணி தனது லீக் ஆட்டத்தில் 5-3 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

400 மீட்டர் தடைஓட்டம்

மகளிர் 400 மீட்டர் தடை ஓட் டத்தின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் அனு ராகவன், ஜவுனா முர்மு ஆகியோர் முன் னேறியுள்ளனர்.

இறுதிச் சுற்றுக்கான தகுதி ஓட்டத்தில் அனு ராகவன் 56.77 விநாடிகளில் பந்தய இலக்கை எட்டினார்.

ஜவுனா முர்மு 59.20 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

வில்வித்தை

ஆடவர் வில்வித்தை காம் பவுண்ட் அணி பிரிவில் இந்திய மகளிர், ஆடவர் அணி இறுதிச் சுற்றை எட்டி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளன.

ஆடவர் அரை இறுதிச் சுற்றில் சுற்றில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, அமன் சைனி, ரஜத் சவு கான் ஆகியோர் அடங்கிய அணி 230-227 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வென்றது. மகளிர் அரை இறுதிச் சுற்றில் இந்தியாவின் சுரேகா ஜோதி வென்னம், முஸ்கான் கிரார், மது மிதா குமார் ஆகியோர் அடங்கிய அணி 225-222 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தியது.

குத்துச்சண்டை

குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனை சர்ஜுபாலா தேவி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அவர் பிளைவெயிட் 51 கிலோ பிரிவில் 5-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் மடினா கபோரோ வாவை தோற்கடித்து கால் இறு திக்குத் தகுதி பெற்றார்.

ஆடவர் வெல்டர்வெயிட் 69 கிலோ பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் மனோஜ் குமார் கிர்கிஸ்தான் வீரர் அப்துர்ரக்மான் அப்துரக்மனோவிடம், தோல்வி யடைந்தார்.

லைட்வெயிட் 60 கிலோ பிரிவில் இந்திய வீரர் சிவா தாபா, சீன வீரர் ஜுன் ஷானிடம் தோல்வி கண்டார்.

ஹேண்ட்பால்

ஹேண்ட்பால் பிரிவில் இந்திய ஆடவர் அணி, சீன தைபேயிடம் தோல்வி கண்டது. சீன தைபே 35-31 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

கனோயிங் படகுப் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணியினர் தோல்வி கண்டு வெளியேறினர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8-ம் நாளான நேற்று இந்தியா 7 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்களுடன் 9-வது இடத்தில் இருந்தது. சீனா 78 தங்கம், 59 வெள்ளி, 37 வெண்கலங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

https://tamil.thehindu.com/sports/article24789353.ece

கைக்கு எட்டிய பதக்கத்தை நழுவவிட்ட தமிழக வீரர்

e91f66e7P1475163mrjpg

ஆசிய விளையாட்டுப் போட்டி யின் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கைக்கு எட்டிய வெண் கலப் பதக்கத்தை தமிழக வீரர் ஜி. லட்சுமணன் நழுவவிட்டார்.

நேற்று ஆடவருக்கான 10 ஆயி ரம் மீட்டர் ஒட்டப்பந்தயம் நடை பெற்றது. இதன் இறுதிச் சுற்றுக்கு இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஜி. லட்சுமணன் உள்பட 13 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

 

இதில் பஹ்ரைன் வீரர் ஹசன் சானி 28 நிமிடம் 35:54 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். மற்றொரு பஹ்ரைன் வீரர் ஆப்ர ஹாம் செரோபென் 29 நிமிடம் 00:29 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். தமிழக வீரர் லட்சுமணன் 29 நிமிடம் 44:91 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்தார்.

ஆனால் போட்டியின்போது லட்சுமணன் தனது டிராக்கிலிருந்து மாறி தடத்துக்கு வெளியே கால் வைத்ததால் தகுதியிழப்பு செய்ததாக அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் 3-வது இடம் பிடித்தும் பதக்கம் வெல்ல முடியாமல் போய்விட்டது.

இதைத் தொடர்ந்து, 4-ம் இடம் பிடித்த சீனாவின் சாங்காங் ஷாவோ வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

https://tamil.thehindu.com/sports/article24789355.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.