Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விலைவாசி அதிகரிப்பை எதிர்கொள்ள எளிமையாக வாழப் பழகவேண்டும் வடக்கு முதலமைச்சர் எடுத்துரைப்பு

Featured Replies

விலைவாசி அதிகரிப்பை எதிர்கொள்ள  எளிமையாக வாழப் பழகவேண்டும்

வடக்கு முதலமைச்சர் எடுத்துரைப்பு

 

 

gdfgdf.jpg

விலை­வாசி நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்ற நிலை­யில், ஆடம்­பர வாழ்க்கை முறை­மை­க­ளைத் தவிர்த்து எளி­மை­யான வாழ்க்கை முறைக்குத் திரும்­பு­வ­தன் மூல­மும் உற்­பத்­தியைப் பெருக்க உழைப்­ப­தன் மூல­மும் சுக­மா­ன­தும் சுதந்­தி­ர­மா­ன­து­மான ஒரு வாழ்க்கை முறை­மையை முன்­னெ­டுக்­க­லாம். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் ஆத்­தி­சூடி வீதி­யில் உள்ள கலை­ம­கள் சன­ச­மூக நிலை­யத்­தின் 65ஆவது ஆண்டு விழா­வும், பிர­தேச மக்­கள் நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் நிகழ்­வும் நேற்று மாலை நடை­பெற்­றது. இந்த நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே முத­ல­மைச்­சர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

வாழ்க்­கைச் செலவு

மத்­திய வர்க்க மக்­கள் நாளாந்த நுகர்­வுப் பொருள்­க­ளின் விலை­களை ஈடு செய்ய முடி­யாத நிலை­யில் உள்­ள­னர். பொருள்­க­ளின் விலை­கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றன. எமது ரூபா­வின் மதிப்பு பன்­னாட்டு ரீதி­யில் மிகக் குறைந்து வரு­கின்­றது. எமது வாழ்க்கை முறை­யை­மாற்ற வேண்­டிய ஒரு சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

இது கிராம மட்ட மக்­க­ளுக்­கும் பொருந்­தும். அரசு இலகு கடன்­களை அறி­மு­கப்­ப­டுத்தி வரு­கிறது. ஆனால் கடன் வாங்கி வாழும் முறையை எமது மக்­கள் பலர் வர­வேற்­ப­தில்லை. ‘கடன் பட்­டார் நெஞ்­சம் போல் கலங்­கி­னான் இலங்கை வேந்­தன்’ என்ற கம்­ப­ரா­மா­யண வரி­க­ளைக் கேட்டு வாழ்ந்து வந்­த­வர்­கள் எம்­ம­வர். அவர்­கள் சிந்­த­னை­கள் வித்­தி­யா­ச­மாக அமைந்­தி­ருப்­ப­தைக் காண­லாம்.

கிரா­மிய ரீதி­யாக ஒவ்­வொரு கிராம மக்­க­ளும் தங்­கள் தங்­கள் ஆடம்­பர வாழ்க்கை முறை­மை­க­ளைத் தவிர்த்து எளி­மை­யான வாழ்க்கை முறைக்கு திரும்­பு­வ­தன் மூல­மும் உற்­பத்­தியை பெருக்க உழைப்­ப­தன் மூல­மும் சுக­மா­ன­தும் சுதந்­தி­ர­மா­ன­து­மான ஒரு வாழ்க்கை முறை­மையை முன்­னெ­டுக்­க­லாம் என்று அவர்­கள் நம்­பு­கின்­றார்­கள்.

இவ்­வா­றான கருத்தை எமது கிரா­மிய மட்ட பாரம்­ப­ரிய முறை­யில் வாழ்ந்து வரும் முதி­யோரே பரிந்­து­ரைக்­கின்­ற­னர். இந்த வழி ஆரம்­பத்­தில் சற்­றுக் கசப்­பா­கக் கூட அமை­யக்­கூ­டும். ஆனால் தூர­நோக்­கின் அடிப்­ப­டை­யில் இது எமக்கு பல வெற்­றி­களை அள்­ளித்­த­ரு­வன என்று நம்­ப­லாம்.

இளை­யோர் சிந்­தனை

எமது இளை­யோ­ரைத் தமது இயல்­பான உய­ரிய சிந்­த­னை­களை மேற்­கொள்­ள­வி­டாது தடுக்­கும் நோக்­கு­டன் அவர்­க­ளுக்­குப் போதைப்­பொ­ருள் பாவனை, கலா­சார சீர­ழிவு முறை­கள், ஆடம்­பர வாழ்க்கை முறைமை, படா­டோப உந்­து­ரு­ளிப் பவனி, வாள்­வெட்­டுக் கலா­சா­ரம், கொலை, களவு போன்­றவை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

எங்கே எமது இளை­ஞர்­கள் மீண்­டும் சுதந்­தி­ரத் தாகம் கொண்டு ஒன்­று­பட்டு விடு­வார்­களோ என்ற பயம் அர­சுக்கு இப்­பொ­ழு­து­மி­ருக்­கின்­றது. இந்த நிலை மாற்­றப்­ப­டு­வ­தற்கு எமது இளை­யோர் சிந்­த­னைத்­தெ­ளிவு ஏற்­ப­டக்­கூ­டிய விதத்­தில் தக்க அறி­வு­ரை­கள் கிடைக்க வழி­வ­குக்க வேண்­டும். அவர்­கள் சோம்­பி­யி­ருக்க அனு­ம­திக்­காது முயற்­சி­யா­ளர்­க­ளாக மாற்­றப்­ப­ட­வேண்­டும்.

உழைக்­கும் எண்­ணம் இல்லை

போரி­னால் பாதிக்­கப்­பட்ட எமது மக்­க­ளின் துய­ரைத் துடைப்­ப­தற்கு கடல் கடந்த நாடு­க­ளில் உள்ள அவர்­க­ளின் உற­வு­க­ளும், சமூக அமைப்­பு­க­ளும், அரசு சாரா நிறு­வ­னங்­க­ளும், பரோ­ப­கா­ரி­க­ளும், தன­வந்­தர்­க­ளும் பல்­வேறு உத­வி­க­ளைப் புரிந்து வரு­கின்­றார்­கள் என்­பது உண்மை தான்.

எமது மக்­க­ளும் இவ்­வா­றான உத­வி­கள் கிடைக்­கப்­பெ­று­கின்ற போது தமது துன்­பச் சுமை­க­ளில் இருந்து சற்று விடு­பட்டு இவ் உத­வி­க­ளு­டன் வாழத் தலைப்­பட்­டுள்­ளார்­கள். ஆனால் அதன் விளைவு எம்­முட் பல­ரின் மத்­தி­யில் உழைக்க வேண்­டும் என்ற எண்­ணம் இல்­லாது போய்­விட்­டது. தற்­போது கிடைக்­கின்ற உத­வி­கள் தொடர்ச்­சி­யா­கக் கிடைக்­கும் என்று உறு­திப்­ப­டுத்­தப்­பட முடி­யா­தவை.

இந்த உத­வி­கள் நிறுத்­தப்­ப­டு­கின்ற போது எம் மக்­கள் உத­வி­யற்­ற­வர்­க­ளாக உழைக்க வழி தெரி­யா­த­வர்­க­ளாக விடப்­ப­டு­வார்­கள். அப்­போது அவர்­கள் குறுக்கு வழி­க­ளில் பணத்­தைத் தேட முய­ல­வேண்­டி­யி­ருக்­கும். இன்­றைய பல கொலை, கொள்­ளை­கள் போன்­றவை இவ்­வாறு கைவி­டப்­பட்­ட­வர்­க­ளால் இயற்­றப்­ப­டு­கின்­றதோ என்ற சந்­தே­கம் எழா­ம­லில்லை.

பல்­லைக்­காட்டி  பணம் வாங்­கு­கின்­ற­னர்

வெளி­நா­டு­க­ளில் வசிக்­கின்ற எமது உற­வு­கள் இங்கு வரு­கை­த­ரு­கின்ற போது தமக்கு மிக வச­தி­யான நாள்­க­ளைத் தெரிவு செய்து கொண்டே இங்கு வரு­கை தருவார்­கள். மேலை நாடு­க­ளில் குளிர் கூடு­கின்ற போது அவர்­கள் இங்கே வருகை தரு­கின்­றார்­கள்.

அதே­நே­ரம் எமது பிள்­ளை­கள் அந்­தக் காலப் பகு­தி­யில்த்­தான் அவர்­க­ளது க.பொ.த. உயர்­த­ரப் பரீட்­சைக்­கான இறுதி ஆயத்த முயற்­சி­க­ளிலோ அல்­லது பரீட்­சை­க­ளிலோ தோற்­றிக் கொண்­டி­ருப்­பார்­கள். வரு­கின்ற உற­வி­னர்­க­ளுக்கு அதைப் பற்­றி­யெல்­லாம் கவலை இல்லை.

அவர்­கள் மூன்று கிழமை மட்­டில் இங்கு வந்து தங்­கி­யி­ருந்து அரட்டை அடித்து உல்­லா­ச­மாக பொழு­தைப் போக்­கி­விட்டுத் திரும்­பு­கின்ற போது அவர்­களை ஆத­ரித்த நன்­றிக் கட­னுக்­காக அந்த வீட்­டுப் பைய­னுக்கு உந்­து­ருளி வாங்­கு­வ­தற்கு மூன்று லட்­சம் ரூபா பணத்­தைக் கொடுத்­து­விட்­டுச் செல்­வார்­கள்.

எம்­ம­வர்­க­ளும் வாயெல்­லாம் பல்­லாக இழித்­த­படி அப்­ப­ணத்தை வேண்டி உந்­து­ருளி வாங்­கி­விட்டு பின்­னர் அதற்­குப் பெற்­றோல் நிரப்­பு­வ­தற்கே பண­மின்றி ஐம்­பது ரூபாய்க்­குப் பெற்­றோல், நூறு ரூபாய்க்­குப் பெற்­றோல் என்று சிர­மப்­பட்­டுக்கொண்டு திரி­வார்­கள். நான் இங்கு எத­னை­யும் மிகைப்­ப­டுத்திக் கூற­வில்லை.

நான் இங்கு அறிந்து கொண்­டுள்ள யதார்த்­தத்தை மட்­டுமே எடுத்­துக் கூறு­கின்­றேன். மூன்று லட்­சம் ரூபா உந்­து­ருளி வாங்­கி­னால் அதற்­குப் பெற்­றோல் அடிக்­கப் பணம் இல்லை. ரூ50 ஆயி­ரம் கைத்­தொ­லை­பேசி வாங்­கு­கின்­றார்­கள். ஆனால் தொலை­பே­சி­யில் பேசு­வ­தற்கு காசு இல்லை. இது தான் இன்­றைய இளை­ஞர்­க­ளின் நிலை. இந்த இழி­நி­லை­கள் மாற்­றப்­பட வேண்­டும்.

சோம்பேறிகள்

மற்­ற­வர்­க­ளின் உத­வியை எதிர்­பார்த்­தி­ருப்­பது ஈற்­றில் எம்மை சோம்­பே­றி­க­ளாக்­கும் அல்­லது சோரம் போன­வர்­க­ளாக்­கும். இன்று நாம் வஞ்­சிக்­கப்­பட்­டி­ருக்­கும் நிலைக்­குக் கார­ணம் நாங்­களே. நாங்­கள் உத­வி­கள் பெறும் போது எமக்­கு­ உதவிசெய்பவர்­கள் எம்­மி­டம் எதனை எதிர்­பார்க்­கின்­றார்­கள் என்று ஆராய வேண்­டும்.

அர­சி­யல் ரீதி­யா­கப் பார்த்­தோ­மா­னால் நாங்­கள் எங்­கள் தேர்­தல் அறிக்­கை­க­ளில் எதைக் கூறி­யி­ருப்­பி ­னும் அவற்றை நாம் விட்­டுக் கொடுக்க வேண்­டும் என்றே இவ்­வாறு உதவி புரி­ப­வர்­கள் எதிர்­பார்க்­கின்­றார்­கள். கொழும்­பில் எம்­ம­வர் விட்­டுக்­கொ­டுக் கும் பெருந்­தன்­மை­யின் சூட்­சு­மம் பற்றி இப்­பொ­ழுது நீங்­கள் அறிந்­தி­ருப்­பீர்­கள்– – என்­றார்.

https://newuthayan.com/story/10/விலைவாசி-அதிகரிப்பை-எதிர்கொள்ள-எளிமையாக-வாழப்-பழகவேண்டும்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.