Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபை அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக தவராசா சாடல்!

Featured Replies

வட மாகாண சபை அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக தவராசா சாடல்!

 

thavarasa001-720x450.jpg

வட மாகாண சபை தொடர்ந்தும் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதாக வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடயம் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதன் மூலம் நிரூபனமாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில், பாடசாலைகள் தவிர்ந்த வட மாகாண சபையின் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் மொத்தமாக 7 ஆயிரத்து 510 வெற்றிடங்கள் உள்ளன

சிரேஸ்ட நிலையில் 590 வெற்றிடங்களும், மூன்றாம் நிலையில் 123, இரண்டாம் நிலையில் 4ஆயிரத்து 672 வெற்றிடங்களும், ஆரம்ப நிலையில் 2 ஆயிரத்து 63 வெற்றிடங்களும், சேவை நிலை குறிப்பிடப்படாத 62 வெற்றிடங்களும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆயிரத்து 791 ஆக இருந்த வெற்றிடப் பட்டியல், 2016 டிசம்பரில் 2,957 ஆகக் குறைந்த நிலையில், தற்போது அது 7ஆயிரத்து 510 ஆக உயர்வடைந்துள்ளது.

இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது மத்திய அரசாங்கத்தினால் ஆட்சேர்ப்புச் செய்யப்படல் வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்யவில்லை என அவர்கள் மேல் குற்றம் சுமத்தி விட்டு நாம் தப்பித்துக் கொள்ள முடியாது.

மக்கள் மீது உண்மையில் அக்கறை கொண்டவர்களாக இருப்பின் இவ் வெற்றிடங்களை நிரப்புமாறு அதற்கான நியாயப்பாடுகளுடன் தொடர்ச்சியான அழுத்தங்களை மத்தியின் சம்பந்தப்பட்ட அமைச்சுகளிற்குக் கொடுத்திருத்தல் வேண்டும்.

அவ்வாறாக நியாயப்பாடுகளுடனான அழுத்தங்களை முதலமைச்சர் அல்லது ஏனைய அமைச்சர்கள் பிரயோகித்தமைக்கான ஆதாரங்களாக கடிதங்களை அல்லது கூட்ட அறிக்கைகளினை அவர்களினால் சமர்ப்பிக்க முடியுமா? என என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

3ஆயிரத்து 9 வெற்றிடங்கள் நேரடியாக மாகாண சபையினால் நிரப்பப்பட வேண்டியதாயினும், துறைசார் திணைக்களங்களிற்குரிய சேவைப் பிரமாணக் குறிப்புக்கள் தயாரிக்கப்படாமையினாலும், மாகாண சபையின் அசமந்தப் போக்கினாலும் இவை நிரப்பப்படவில்லை என அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

http://athavannews.com/வட-மாகாண-சபை-அசமந்தப்-போக/

  • தொடங்கியவர்

இய­லாத் தன்­மையை  மறைக்­கவே பொய்­யு­ரைக்­கி­றார்  விக்கி

குற்­றஞ்­சு­மத்­து­கி­றார் எதிர்க்­கட்­சித் தலை­வர் தவ­ராசா

epdp.thavarasa-tna.jpg

மாகா­ண­ச­பை­யின் வினைத்­தி­ற­ னற்ற செயற்­பாட்­டைச் சுட்­டிக் காட்­டு­வதை, தேர்­தலை நோக்­கா­கக்­கொண்­டது என்று வடக்கு முத­ல­மைச்­சர் கூற முனை­வது இய­லாத் தன்­மையை மூடி மறைப்­ப­தற்­கான வர்­ணம் என்று குற்­றஞ்­சாட்­டி ­யி­ருக்­கி­றார் எதிர்க் கட்­சித் தலை­வர் தவ­ராசா.

‘‘வடக்கு மாகாண சபை­யில் உள்ள வெற்­றி­டங்­கள் தொடர்­பில்­கூட முத­ல­மைச்­சர் உண்­மையை உரைக்­க­வில்லை. வெற்­றி­டத்தை நிரப்­பு­வ­தற்கு மாகாண சபை எடுத்த ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­கள் என்ன என்­பதே எனது இந்­தக் கூற்­றின் நியா­யத் தன்மை.

‘இந்த வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்கு மாகாண சபை­யி­னால் அர்த்­த­முள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை’ என்று இது தொடர்­பில் கணக்­காய்­வா­ளர் நாய­கத்­தின் அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளமை அதை நிரூ­பிக்­கின்­ற­தாக அமை­கின்­றது’’ என்று வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் தெரி­வித்­துள்­ளார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் கடந்த சனிக்­கி­ழமை வெளி­யிட்ட கேள்வி, பதில் ஊடக அறிக்­கை­யில், வடக்கு மாகாண நிர்­வா­கத்­தில் காணப்­ப­டும் வெற்­றி­டங்­களை நிரப்­பத் தகு­தி­யா­ன­வர்­கள் இங்கு இல்லை என்று குறிப்­பிட்­டி­ருந்­தார். கொழும்பு அர­சி­னால் வெற்­றி­டங்­க­ளில் ஒரு தொகுதி நிரப்­பப்­ப­ட­வேண்­டும் என்­றும் தெரி­வித்­தி­ருந்­தார்.

வெற்­றி­டங்­கள் நிரப்­பப்­ப­டாமை வடக்கு அர­சின் செயற்­றி­றன் இன்மை என்று கூற முடி­யாது என­வும், அப்­ப­டித் தெரி­விப்­ப­தா­னது தேர்­தலை இலக்­கா­கக் கொண்ட செயற்­பாடு என்­றும் கூறி­யி­ருந்­தார்.

இது தொடர்­பில் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா தானே தயா­ரித்து அனுப்­பி­யுள்ள கேள்வி – பதில் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

கேள்வி: – தேர்­தலை இலக்கு வைத்தே மாகாண சபை மீதான குற்­ற­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­ப­டு­வ­தாக முத­ல­மைச்­சர் தெரி­வித்­துள்­ளார். நீங்­கள் தான் மாகாண சபை மீதான பல குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­ப­வர் என்ற வகை­யில் இது தொடர்­பில் தங்­கள் கருத்து என்ன?

பதில்: மாகாண சபை­யின் வினைத்­தி­றன் அற்ற செயற்­பா­டு­களை நான் 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ச்­சி­யாக எடுத்­துக் கூறி­வ­ரு­கின்­றேன். அர­ச­மைப்பு ரீதி­யாக மாகாண சபைக்­கு­ரிய முக்­கிய வகி­பா­கம் நிறை­வேற்­றுச் செயற்­பாட்­டுக்­குப் பொறுப்­பாக இருக்­கும் முத­ல­மைச்­ச­ரும் அமைச்­ச­ர­வை­யும் மாகாண சபைக்கு பொறுப்பு கூறல்­வேண்­டும் என்­ப­தா­கும்.

சபை­யில் என்­னால் கேட்­கப்­ப­டும் கேள்­வி­க­ளுக்கு முத­ல­மைச்­சரோ, அமைச்­சர்­களோ பொறுப்­பா­கப் பதில் வழங்­கு­வது கிடை­யாது. மக்­க­ளுக்­குப் பொறுப்­புக் கூற வேண்­டி­ய­வர்­கள் என்ற முறை­யில் மாகாண சபை­யின் வினைத்­தி­றன் அற்ற செயற்­பா­டு­களை ஊட­கங்­கள் வாயி­லாக மக்­க­ளுக்­குத் தெரி­விக்க வேண்­டி­யது எனது கட­மை­யெ­னக் கருதி செயற்­ப­டு­கின்­றேன். இத­னைத் தேர்­தலை நோக்­காக கொண்­டது எனக் கூற முனை­வது இய­லாத் தன்­மையை மூடி மறைப்­ப­தற்­கான வர்­ணம்.

உண்­மையை உரைக்­க­வில்லை

வடக்கு மாகாண சபை­யில் உள்ள வெற்­றி­டங்­கள் தொடர்­பில்­கூட முத­ல­மைச்­சர் உண்­மையை உரைக்­க­வில்லை. இதில் முக்­கிய விட­யம் இந்த வெற்­றி­டங்­களை யார் நிரப்­பு­வது, எவ்­வாறு நிரப்­பு­வது என்­பது அல்ல.

மாறாக இவற்­றினை நிரப்­பு­வ­தற்கு மாகாண சபை எடுத்த ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­கள் என்ன என்­பதே ஆகும். எனது இந்­தக் கூற்­றின் நியா­யத் தன்­மையை ‘இவ் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்கு மாகாண சபை­யி­னால் அர்த்­த­முள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை’ என்று இது தொடர்­பில் கணக்­காய்­வா­ளர் நாய­கத்­தின் அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளமை நிரூ­பிக்­கின்­ற­தாக அமை­கின்­றது.

உத்­தி­யோ­க­பூர்வ தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை பாட­சா­லை­கள் தவிர்ந்த வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சு­கள் மற்­றும் திணைக்­க­ளங்­க­ளில் உள்ள வெற்­றி­டங்­க­ளா­வன, மூத்த நிலை 590, மூன்­றாம் நிலை 123, இரண்­டாம் நிலை 4,672, ஆரம்ப நிலை 2 ஆயி­ரத்து 63, சேவை நிலை குறிப்­பி­டா­த­வர்­கள் 62 பேர் என மொத்­த­மாக 7 ஆயி­ரத்து 510 ஆகும்.

2015ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் 4 ஆயி­ரத்து 791 ஆக இருந்த வெற்­றி­டப் பட்­டி­யல் 2016ஆம் ஆண்டு டிசெம்­ப­ரில் 2 ஆயி­ரத்து 957 ஆகக் குறைந்து இன்று 7 ஆயி­ரத்து 510 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது. 2015ஆம் ஆண்டு டிடி­சம்­ப­ரி­லி­ருந்து கடந்த ஜூன் மாதம் வரை இரண்­டாம் நிலை­யில் 2 ஆயி­ரத்து 742 நிய­ம­னங்­க­ளும் ஆரம்ப நிலை­யில் 189 நிய­ம­னங்­க­ளும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மூத்த நிலை மற்­றும் மூன்­றாம் நிலை அதி­கா­ரி­கள் மற்­றும் இரண்­டாம் நிலை அலு­வ­லர்­க­ளில் சில சேவை­க­ளைச் சேர்ந்­த­வர்­கள். கொழும்பு அர­சி­னால் ஆள்­சேர்ப்­புச் செய்­யப்­பட வேண்­டி­ய­வர்­கள். இங்கு முக்­கி­ய­மா­கக் கவ­னிக்க வேண்­டி­யது கொழும்­பி­னால் ஆள்­சேர்ப்­புச் செய்­யப்­ப­டல் வேண்­டும் என்­ப­தற்­காக அவர்­கள் செய்­ய­வில்லை என அவர்­கள் மேல் குற்­றம் சுமத்தி விட்டு நாம் தப்­பித்­துக் கொள்ள முடி­யாது.

அக்­க­றை­யில்லை

மக்­கள் மீது நாம் உண்­மை­யில் அக்­கறை கொண்­ட­வர்­க­ளாக இருப்­பின் வெற்­றி­டங்­களை நிரப்­பு­மாறு அதற்­கான நியா­யப்­பா­டு­க­ளு­டன் தொடர்ச்­சி­யான அழுத்­தங்­களை கொழும்பு அர­சின் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சு­க­ளுக்­குக் கொடுத்­தி­ருத்­தல் வேண்­டும்.

அவ்­வா­றாக நியா­யப்­பா­டு­க­ளு­ட­னான அழுத்­தங்­களை முத­ல­மைச்­சர் அல்­லது ஏனைய அமைச்­சர்­கள் பிர­யோ­கித்­த­மைக்­கான ஆதா­ரங்­க­ளாக கடி­தங்­களை அல்­லது கூட்ட அறிக்­கை­க­ளினை அவர்­க­ளி­னால் சமர்ப்­பிக்க முடி­யுமா? என வினவ விரும்­பு­கின்­றேன்.

சில வெற்­றி­டங்­கள் தகு­தி­யான விண்­ணப்­ப­தா­ரி­கள் இன்மை கார­ண­மாக நிரப்­பப்­ப­ட­வில்லை என்­ப­த­னை­யும் நியா­ய­பூர்­வ­மான கருத்­தாக ஏற்­றுக் கொள்­ள­லாம். ஏனைய 3 ஆயி­ரத்து 9 வெற்­றி­டங்­கள் நேர­டி­யாக மாகாண சபை­யி­னால் நிரப்­பப்­பட வேண்­டி­யவை. துறை­சார் திணைக்­க­ளங்­க­ளுக்­கு­ரிய சேவைப் பிர­மா­ணக் குறிப்­புக்­கள் தயா­ரிக்­கப்­ப­டா­மை­யி­னா­லும், மாகாண சபை­யின் அச­மந்­தப் போக்­கி­னா­லும் இவை நிரப்­பப்­ப­ட­வில்லை.

வடக்கு கிழக்கு ஒன்­றாக இருந்து வடக்கு மாகா­ணம் தனி மாகா­ண­மாக உரு­வாக்­கப்­பட்­ட­தன் பின்பு. இரண்­டாம் நிலை, ஆரம்ப நிலை­க­ளிற்­கான சில துறை சார் ஊழி­யர்­க­ளின் சேவைப் பிர­மா­ணக் குறிப்­பு­க­ளினை இன்­னும் வடக்கு மாகா­ணத் திணைக்­க­ளங்­கள் ஆக்­க­வில்லை. வடக்­கு­மா­காண சபை­யின் செயற்­றி­ற­னின்­மையே இதற்­கு­ரிய கார­ணம் – என்­றுள்­ளது.

https://newuthayan.com/story/10/இய­லாத்-தன்­மையை-மறைக்­கவே-பொய்­யு­ரைக்­கி­றார்-விக்கி.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.