Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாக் கடலில் குவியும் உயிரியல் கழிவுகள்

Featured Replies

குடாக் கடலில் குவியும் உயிரியல் கழிவுகள் 

pagetamil-hos-780x405.jpg

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­ யின் ஆபத்­தான கழி­வு­க­ளான உயி­ரி­ யல் கழி­வு­களை அகற்­றும் தனி­யார் நிறு­வ­னம் அவற் றைச் சுத்­தி­க­ரிப்­புச் செய்­யாது கட­லுக்­குள் நேர­டி­ யா­கக் கொட்­டு­கின்­றது என்று யாழ்ப்­பா­ணம் மாந­ கர சபை­யில் நேற்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. அந் தக் குற்­றச்­சாட்­டில் உண்மை இருப்­ப­தாக யாழ். மாந­ கர சபை ஆணை­யா­ள­ரும் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைின் அமர்வு நேற்று நடை ­பெற்­றது. அதில் உறுப்­பி­னர் ம.அருள்­கு­ம­ரன் இந்­தக் குற்­றச்­சாட்டை முன்­வைத்­தார். அவர் தெரி­வித்­தா­வது:

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­னை­யின் உயி­ரி­யல் கழி­வு­களை அகற்­றும் பொறுப்பு தனி­யார் நிறு­வ­னம் ஒன்­றி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த நிறு­வ­னம் உயி­ரி­யல் கழி­வு­க­ளைச் சுத்­தம் செய்­யாது நேர­டி­யா­கக் கட­லுக்­குள் கொட்­டு­கின்­றது. இது மிக ஆபத்­தான விட­யம். இந்­தச் செயற்­பாட்­டால் கடல் வளம் பாதிக்­கப்­ப­டும். கடற்­றொ­ழில் செய்­ப­வர்­க­ளுக்­கும் ஆபத்தை ஏற்­ப­டும்.

மருத்­து­வ­மனை நிர்­வா­கம் இந்த நிறு­வ­னத்­துக்கு அதிக கட்­ட­ணம் செலுத்­து­கின்­றது. ஆனால் அந்த நிறு­வ­னம் தனது பணி­யைச் சரி­யா­கச் செய்­யாது சிறைச்­சா­லைக்கு அண்­மித்த பகுதி ஊடா­கக் கழி­வு­களை கட­லுக்­குள் கொட்­டு­கின்­றது. இந்த விட­யத்­தில் மாந­கர சபை­யி­னர் நேர­டி­யா­கத் தலை­யிட முடி­யா­துள்­ள­போ­தும், மருத்­து­வ­மனை நிர்­வா­கத்­து­டன் பேசி உரிய தீர்வை உடன் காண வேண்­டும் -என்­றார்.

சபை உறுப்­பி­னர் முன்­வைத்த குற்­றச்­சாட்டு உண்­மை­யா­னது. நாமும் இது தொடர்­பில் ஆராய்ந்து பார்ந்­தோம். மருத்­து­வ­மனை உயி­ரி­யல் கழி­வு­கள் நேர­டி­யா­கக் கொட்­டப்­ப­டு­கின்­றன. இது தொடர்­பில் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்க முடி­யாத நிலை­யில் உள்­ளோம். அதற்­கான சட்­ட­வலு எம்­மி­டம் இல்லை என்று சபை ஆணை­யா­ளர் தெரி­வித்­தார்.

இது தொடர்­பாக மருத்­து­வ­ம­னைப் பணிப்­பா­ள­ருக்கு எழுத்து மூல­மாக அறி­விக்­கப்­ப­டும் என்று சபை முதல்­வர் தெரி­வித்­தார்.

இந்­தக் குற்­றச்­சாட்­டுக்­கான பதி­லைப் பெற யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் பணிப்­பா­ளர் எஸ்.சத்­தி­ய­மூர்த்­தி­யைத் தொலை­பேசி ஊடா­கத் தொடர்பு கொள்ள முயற்­சித்­த­போ­தும் அது பய­ன­ளிக்­க­வில்லை.

https://newuthayan.com/story/09/குடாக்-கடலில்-குவியும்-உயிரியல்-கழிவுகள்.html

  • தொடங்கியவர்

குடாக்கடலில் குவியும் உயிரியல் கழிவுகள்- விரைவில் மாற்று நடவடிக்கை!!

39762464_10217169603658560_5474917867319

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் உயிரியல் கழிவுகள் சுத்திரகரிக்கப்படாமல்  குடாக் கடலில் கொட்டப்படுவதை மருத்துவமனைப் பணிப்பாளர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பில் இன்று நேரடியாக ஆய்வு செய்த மருத்துவப் பணிப்பாளர் பி.சத்தியமூர்த்தி, விரைவில் கழிவகற்றல் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை குடாக்கடலில் மருத்துவமனைக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பில் உதயன் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

39755246_10217169609298701_2737725408463
39752034_10217169602618534_7533389778398
 
39914754_10217169603058545_2467246454268

https://newuthayan.com/story/14/குடாக்கடலில்-குவியும்-உயிரியல்-கழிவுகள்-விரைவில்-மாற்று-நடவடிக்கை.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.