Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனவர்களின் உறவினர்களால் வவுனியா மாவட்ட செயலகத்தில் குழப்பம்

Featured Replies

காணாமல் போனவர்களின் உறவினர்களால் வவுனியா மாவட்ட செயலகத்தில் குழப்பம்

01MAIN20082018Page1Image0006-7f28b5da52f01c28580a97893425c27f25f83e96.jpg

 

ஓமந்தை,

பொதுமக்களிடம் மன்னிப்பு கோரிய அரச அதிபர் பணிமனை

வவுனியாவில் காணாமல் போனோர் அலு வலகத்தின் அமர்வு இடம்பெறாமையினால் காணாமல் போனோரின் உறவினர்களால் மாவட்ட செயலகத்தில் குழப்பம் ஏற்பட்டது டன் சம்பவம் குறித்து மாவட்ட செயலகமும் மன்னிப்பு கோரியது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதா வது,  

காணாமல்போனோர் அலுவலக பிரதிநிதிகளினால் வவுனியா மாவட்டத்தில் காணாமல்போனோரின் குடும்ப அங்கத்தவர்களுடனான கூட்டம் நேற்று நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமாரினால் காணாமல்போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் இருந்தும் பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர். எனினும் 10 மணியைக் கடந்தும் கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நகர சபை மண்டப வளாகத்தில் குழப்பத்தில் ஈடுபட்டதுடன் , காணாமல்போனோர் அலுவலக உத்தியோகத்தர்களையும், அரசாங்க அதிபரையும் கடுமையாக பேசியதுடன் தமிழ்தேசியகூட்டமைப்பின் மக்கள்பிரதிநிதிகள் மீதும் கடுமையானவார்த்தை பிரயோகங்களை பாவித்துதிட்டித்தீர்த்தனர்.

நீண்டநேரமாகியம் தம்மையாரும் வந்துசந்திக்காத காரணத்தினால் நகரசபை மண்பத்திலிருந்து கண்டிவீதிவழியாக வவுனியாமாவட்டசெயலகம் வரை அவர்கள் ஊர்வலமாக நடந்து சென்றனர்.

செயலகத்தின் பிரதான வாயிலை காவலாளிகள் மூடியமையால் கோபமடைந்த மக்கள் கதவைதள்ளி உள்செல்லமுனைந்தனர். பின்னர் மாவட்ட செயலக அதிகாரிகள் பணித்தமைக்கமைய கதவுதிறக்கப்பட்டது. பின்னர் உள்ளே சென்ற மக்களை அரசாங்க அதிபர் இன்மையால் உதவி மாவட்டசெயலர் ந.கமலதாஸ், மற்றும் உதவி திட்டமிடல்பணிப்பாளர் திருமதி வி.கிருபாசுதன்ஆகியோர் சந்தித்திருந்தனர்.

அவர்களுடன் முரண்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தாம் நீண்ட தூரங்களில் இருந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வதாகவும் எமக்கு முன்னரே அறிவித்திருக்கலாம் தானே என்றும் குழப்பத்தில்ஈடுபட்டனர்.

அரசாங்கமும் சரி, அரச அதிகாரிகளும் சரி,தமிழ் கூட்டமைப்பினரும் சரி அனைவருமே எம்மைகைவிட்டுள்ளனர்.நாம் ஏற்கனவே போரால் பலவற்றை இழந்து தற்போது எமதுபிள்ளைகளயும் இழந்துள்ளோம். அவர்கள்மீண்டும் கிடைக்கமாட்டார்களா என்றஏக்கத்தில் அலைகின்ற எம்மை அனைவரும் ஏமாற்றும் நிலைமையே இன்றுகாணப்படுகின்றது. என்று கடுமையாக கருத்துக்கள் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துரைத்த உதவி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,

 அரசு ஒரு விடயத்தை செயற்படுத்த முன்வரும்போது நாமும் அதற்குரிய ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும், உங்களுக்கான தீர்வுகளை வழங்கவேண்டும் என்றே நாமும்செயற்பட்டோம். அத்துடன் காணமல்போனோர் அலுவலகத்திலிருந்து கூட்டம்நிறுத்தப்பட்டதாக எமக்கு அறியத்தரப்பட்டுள்ளது. நாம் கடந்த 9 ஆம் திகதி அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் அதுதொடர்பாக கடிதம் மூலம்தெரியப்படுத்தியுள்ளோம். எனினும் மக்களுக்கு உரிய முறையில் தகவல் கிடைக்கவில்லை அது தவறானது. அதற்காக அனைவர் சார்பாகவும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கின்றேன் என்றுகூறினார்.

எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் முரண்பட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.