Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை

Featured Replies

வலி.தெற்குப்  பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை

 

 
 

யாழ்.குப்பிளான் வடக்குப் பகுதியிலுள்ள வலி.தெற்குப் பிரதேச சபையின் ஐக்கியதேசியக் கட்சியின் பெண் உறுப்பினரொருவரின் வீட்டில்  யாருமில்லாத வேளையில்  உட்புகுந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். 

011__1_.jpg

பட்டப்பகல் வேளையில் வீட்டில் யாருமில்லாத வேளையில் வீட்டின் கூரை ஓட்டை உடைத்து உள்ளே இறங்கிய கொள்ளையர்கள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.குப்பிளான் வடக்குப் பகுதியிலுள்ள வலி.தெற்குப் பிரதேச சபையின் ஐக்கியதேசியக் கட்சியின் பெண் உறுப்பினரொருவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக வலி.தெற்குப் பிரதேச சபையின் பெண் உறுப்பினரின் கணவரான சி.கணேசகுமார்  கருத்துத் தெரிவிக்கையில்,

011__2_.jpg

எனது பிள்ளைகளை உறவினர்களின் வீட்டில் விட்டுவிட்டு பகல் 11 மணிக்கு யாழ்.நகரில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக எனது மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்றேன்.

இந்தநிலையில் பிற்பகல் 01 மணியளவில் மீண்டும் வீட்டிற்கு வருகை தந்து கேற்றைத் திறந்து பார்த்த போது வீடு உடைத்துத் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. 55 ஆயிரம் ரூபா பணம், பெறுமதியான புதிய கைத்தொலைபேசி, இரண்டு கைக்கடிகாரம், பத்தாயிரம் ரூபா பெறுமதியான கவரிங் நகைகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

வீட்டிற்கு அருகில் குடியிருப்புக்கள் பல காணப்படும் நிலையில் வழமையாக நாங்கள் வெளியே சென்று வருவது வழமை. ஆனால், இன்றுதான் எதிர்பாராத விதமாக இவ்வாறான கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. வீடு முழுவதும் சல்லடையிடப்பட்டுத் தேடுதல் நடந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன என்றார்.

011__3_.jpg

இதேவேளை, குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சுன்னாகம் பொலிஸார் இன்று பிற்பகல் சம்பவ இடத்திற்கு  சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

http://www.virakesari.lk/article/38906

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.