Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர்ந்தும் ஏமாற்றாமல்- தமிழ் மக்களின் காணிகளை விடுவியுங்கள்- மைத்திரி முன் மாவை!!

Featured Replies

தொடர்ந்தும் ஏமாற்றாமல்- தமிழ் மக்களின் காணிகளை விடுவியுங்கள்- மைத்திரி முன் மாவை!!

SAM_0483-780x405.jpg

தற்போதுள்ள கூட்டரசு எம்மைத் தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டும். தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்கப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கோரிக்கை விடுத்தார்.

மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதில் முதன்மை விருந்தினராக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்வில் உரையாற்றிய மாவை எம்.பி., மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக வலி.வடக்கில் மயிலிட்டிப் பகுதியில் உள்ள காணிகள் இந்த வருடத்துக்குள் விடுவிக்கப்பதற்கான நடவடிக்கையை அரச தலைவர் முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

https://newuthayan.com/story/11/தொடர்ந்தும்-ஏமாற்றாமல்-தமிழ்-மக்களின்-காணிகளை-விடுவியுங்கள்-மைத்திரி-முன்-மாவை.html

  • தொடங்கியவர்

வருட இறுதிக்குள் தீர்வை தாருங்கள்….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

maithi-mavai.jpg?resize=800%2C600

 

மயிலிட்டி துறைமுக புனரமைப்புக்காக அடிக்கல் நாட்டும் விழா நடக்கும் இந்த நேரத்தில் மயிலிட்டி மக்கள் சொந்தமண்ணில் வாழாது கண்ணீருடன் இடம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். அந்த மக்களின் கண்ணீருடன் தான் நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுகம் அடிக்கல் நாட்டும் விழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. அதன் போது அந்நிகழ்வின் பிரதம விருந்தனரான ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா முன்னிலையில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், மயிலிட்டி மக்கள் தங்களுடைய சொந்த மண்ணில் வாழ்வதற்காக பல்வேறு தியாகங்களை செய்தார்கள். பல போராட்டங்களை செய்தார்கள். அதனால் இன்று மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பு செய்யப்படவுள்ளதுஇ அதற்கான அடிக்கல்லை ஜனாதிபதி நாட்டியுள்ளார்.

ஆனால் மயிலிட்டி மக்களுக்கு சொந்தமான மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பு செய்யப்படுவதற்கான விழா எடுக்கப்படும் நிலையில் மயிலிட்டி மக்கள் தமது சொந்த நிலத்தில் வாழ இயலாதவர்களாக இருக்கின்றார்கள்.

30 வருடங்களாக சொந்த மண்ணில் வாழ இயலாமல் இடம்பெயர்ந்து அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுடைய கண்ணீருடன் தான் இந்த மேடையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். அவர்களுடைய துயரத்தை மறந்து என்னால் பேச இயலாது.

எங்களுடைய மக்கள் இந்த மண்ணை மீட்பதற்காக நூற்றுக்கணக்கான போராட்டங்களை நடாத்தியுள்ளார்கள். அதன் விளைவாக இன்று மயிலிட்டி துறைமுகம் விடு விக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் போதாது. இந்த மண்ணில் இன்று ஒரு பெரிய விழா நடாத்தப்படுகிறது. ஆனால் இந்த மண்ணுக்கு சொந்தமான மக்கள் இங்கே இல்லை. ஜனாதிபதி வருகையின்போது எங்களுடைய மண்ணுக்காக நாங்கள் போராடவேண்டும் என கேட்டு மக்கள் என்னிடம் வந்தார்கள்.

நான் உடனடியாகவே பிரதமருடன் பேசினேன். 30 வருடங்களாக சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் இடம்பெயர்ந்து அவலங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மக்களுடைய கண்ணீரை சிந்தித்து பாருங்கள் என பிரதமருக்கு நான் கூறியிருக்கிறேன்.

அவர்கள் இல்லாத இந்த விழாவை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அந்த மக்களின் கண்ணீருடனேயே நான் இந்த மேடையில் நிற்கிறேன்.

அவர்கள் பட்ட துன்பங்களை, போராட்டங்களை, தியாகங்களை மறந்து நான் பேச இயலாது. தங்களுடைய சொந்த மண்ணில் வாழ விடுங்கள் என கேட்ட மக்கள் மீது புலனாய்வாளர்கள் தாக்குதல் நடாத்தினார்கள்.

கழிவு ஒயிலை ஊற்றினார்கள். அந்த நாளை நாங்கள் மறக்க தயாரில்லை. ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னர் ஜனாதிபதியான நீங்கள் பேசினீர்கள் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது மஹிந்த ராஜபக்சவுக்கு தெரிந்திருந்தால் இறந்திருப்பேன் என. அவ்வாறான சந்தர்ப்பத்தை நாங்களும், எங்கள் மக்களும் பல தடவைகள் சந்தித்திருக்கிறோம். நாங்கள் கேட்காமல் எங்கள் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள். அந்த நன்றியை மறக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

இந்த வருடத்திற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வினை காணும் முடிவை துணிந்து எடுங்கள். மக்களுடைய நிலங்களை மக்களிடம் கொடுங்கள். நாங்கள் இன்னும் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

6 மாதங்களில் மக்களின் காணிகளை விடுவிப்பேன் என்றீர்கள் இன்றளவும் அது பூரணமாக நடக்கவில்லை. ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என தமிழில் ஒரு பழமொழி உள்ளது. அதனை நெஞ்சில் நிறுத்தி செயற்படுங்கள் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/92420/

 

 

இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு கண்டால் சிறு­பான்­மை­யினர் உங்­க­ளுடன் இருப்பர்

 

(எம்.நியூட்டன்)

ஜனா­தி­பதிக்கு எடுத்­து­ரைத்த மாவை.சேனா­தி­ராஜா 

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை இந்த வரு­டத்­துக்குள் காண­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். காணி ­வி­டு­விப்பு தொடர்பில் கால அட்­ட­வணை வரை­யப்­ப­ட­வேண்டும். இவ்­வா­றான விட­யங்­களைச் செய்தால் சிறு­பான்­மை­யின மக்கள் உட்­பட ஏனைய மக்­களும் கட்­சி­களும் ஜனா­தி­ப­தி­யு­ட­னேயே இருப்­பார்கள் என்று இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு, காணி விடு­விப்பு போன்­ற­வற்றை நீங்கள் இந்த ஆண்­டுக்குள் செய்தால் சிறு­பான்­மை­யின மக்கள் உங்­க­ளுடன் இருப்­பார்கள். மக்கள் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யினர் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் உங்­க­ளையே வெற்­றி­பெ­றச்­செய்­வார்கள் என்றும் அவர் குறிப்­பிட்டார்.   

யாழ்.மயி­லிட்டி மீன்­பி­டித்து துறை­முகம் புன­ர­மைப்­புக்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று ஜனா­தி­ப­தியின் பங்­கேற்பில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். மாவை சேனா­தி­ராஜா எம்.பி. அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்

வடக்கில் வலி­காமம் வடக்கு பிர­தே­ச­மா­னது பாது­காப்பு பகு­தி­யாக பிர­க­டனம் செய்­யப்­பட்­டி­ருந்­தது. தற்­போது ஒரு சில பகு­தி­களைத் தவிர ஏனைய பிர­தே­சங்கள் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

நானும் 28 வரு­டங்­க­ளுக்கு பின்னர் எனது சொந்த ஊருக்கு வந்­துள்ளேன். மயி­லிட்டி மீன்­பிடித் துறை­முகம் உட்­பட இப்­ப­கு­தியின் கரை­யோ­ரப்­ப­கு­தி­களில் இருந்து தினமும் 300, 400 லொறி­களில் கடல் உண­வு­களைக் கொண்டு செல்லும் வழமை இருந்­தது. தற்­போது இந்த நடை­முறை இல்லை. இந்த நடை­முறை ஏக காலத்தில் நடை­பெ­ற­வேண்டும் என்று கோரு­கின்றேன்.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்­பெ­று­கின்ற வேளையில் இப்­ப­குதி மக்கள் மீளக்­கு­டி­ய­மர்­வ­தற்கு முழு­மை­யாக இவ்­விடம் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் இந்த நிகழ்வு எதற்­காக நடக்­கின்­றது என்­பது பலரின் கேள்­வி­யாக உள்­ளது. இப்­ப­கு­தி­களை விடு­விக்­க­வேண்டும் என 100 இக்கும் மேற்­பட்ட போராட்­டங்கள் இடம்­பெற்­றன. காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் மக்கள் விடு­த­லை­பெ­ற­வேண்டும் என்றும் பல போராட்­டங்கள் நடை­பெற்­றன. பல உயிர்த்­தி­யா­கங்கள் இடம்­பெற்­றன.

இந்த நிகழ்வு இடம்­பெ­ற­வுள்ள சூழலில் உங்­க­ளுக்கும் பிர­த­ம­ருக்கும் தொலை­பேசி மூலம் இப்­ப­குதி முழு­மை­யாக விடு­விக்­க­வேண்டும் என கோரிக்கை முன்­வைத்தேன். இந்த இடங்கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் என பல போராட்­டங்கள் நடை­பெற்­ற­வே­ளையில் தற்­போது பிர­த­ம­ராக இருக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அன்று எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருந்­த­போது இப்­போ­ராட்­டத்தில் கலந்­து­கொண்டார். அவர் அங்­கி­ருந்­து­சென்ற பின்னர் இரா­ணு­வப்­பு­ல­னாய்­வா­ளர்­களால் போராட்­டத்தில் குழப்பம் விளை­விக்­கப்­பட்­டது. வாக­னங்­களில் சென்­ற­வர்­கள்­மீது கழிவு ஒயில்கள் வீசப்­பட்­டன. இந்த விட­யங்­களை இன்றும் நான் ஞாப­கப்­ப­டுத்தி உங்கள் முன்­வைக்­கின்றேன். நான் கூறும் விடை­யங்­களை மொழி­பெ­யர்ப்­பாளர் சரி­யாக மொழி­பெ­யர்ப்பார் என்று நம்­பு­கின்றேன்.

1981 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் நான் ஒரு முறை கைது செய்­யப்­பட்டேன். இரா­ணுவம் தான் என்னைக் கைது செய்­தது. எனக்கு ஏன் என்று தெரி­யாது. கைது செய்­யப்­பட்டு பலாலி இரா­ணுவ முகாம் கொண்­டு­வ­ரப்­பட்டு தாக்­கப்­பட்டு ஆணை­யி­றவு இரா­ணுவ முகா­மிற்கு கொண்டு செல்­லப்­பட்டு அன்று இரவு எனதும் என்­னுடன் கைது செய்த இரு­வ­ரதும் கைகள் கட்­டப்­பட்டு கொலை செய்­வ­தற்கு கொண்டு சென்­ற­போது தொலை­பேசி அழைப்பு வந்­தது.

எங்­களை விசா­ரணை செய்­வ­தற்கு வரு­வ­தாக கூறி­ய­மை­யினால் உயிர் தப்­பினோம். இதற்குக் காரணம் மொழி­பெ­யர்ப்பில் ஏற்­பட்ட குழ­று­ப­டி­யாகும். இந்­தி­யாவில் இருந்து அமிர்­த­லிங்­கத்தின் மரு­மகன் வருகை தந்­தி­ருந்தார். அவர் ஒரு கடித்­தினை தந்தார். அந்தக் கடி­தத்தில் அப்பா தம்­பியை ஓர் இடத்தில் சந்­தித்தார் என்று இருந்­தது இதனை மொழி­பெ­யர்த்து அப்பா அமிர்­த­லிங்கம் தம்பி பிர­பா­கரன் இவ்­விடம் சந்­தித்­தார்கள் கூறப்­பட்­டது. மொழி­பெ­யர்ப்பில் இவ்­விடம் என்­பது மாவை­யிடம் என்று வந்­தது. இதனால் தான் அந்தப் பிரச்­சினை ஏற்­பட்­டது. இவ்­வாறு பல சம்­வங்கள் ஏற்­பட்­டன.

இன்று அந்த இரா­ணுவ முகாமில் நான் சந்­த­தித்து மக்­க­ளு­டைய விட­யங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யாடி வரு­கின்றேன். இரா­ணு­வத்­தி­னரும் மக்­களின் காணி­களை விடு­விப்­பது தொடர்பில் உண்­மை­யான செயற்­பாட்டில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். பல ஒத்­து­ழைப்பை தந்­து­கொண்­டி­ருக்­கின்­றார்கள். எந்த இரா­ணுவ முகாமில் நான் தாக்­கப்­பட்­டேனே அந்த இடத்தில் நின்று பல விட­யங்­க­ளுக்­காக இரா­ணு­வத்­திடம் கலந்­து­ரை­யாடி வரு­கின்றேன்.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் இங்கு வந்து உரை­யாற்­று­கையில் ஜனா­தி­பதித் தேர்­தலில் நான் போட்­டி­யி­டு­வது தெரிந்தால் என்னைக் கொன்று விடு­வார்கள் என்று கூறப்­பட்­டது. இத்­த­கைய பிரச்­சி­னை­களை நாங்­களும் மக்­களும் பல தட­வைகள் சந்­தித்­துள்ளோம். ஆட்சி மாற்­றத்­திற்கு நாங்கள் கேளா­மலே மக்கள் அமோ­க­மாக பல எதிர்­பார்ப்­புக்­க­ளுடன் வாக்­க­ளித்­துள்­ளார்கள். நீங்கள் எவ்­வாறு மகிந்த ராஜ­ப­க்ஷ­வினால் அடக்­கப்­பட்­டீர்கள். அதை­விட மோச­மாக இரா­ணுவ அடக்­கு­றைக்குள் நாங்கள் இருந்­துள்ளோம். இதன் கார­ண­மா­கத்தான் நீங்கள் ஜனா­தி­ப­தி­யாக உள்­ளீர்கள்.

எனினும் 3 ஆண்­டுகள் ஆகியும் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு இன்னும் காணப்­ப­ட­வில்லை. முழு­மை­யாக எங்­களின் நிலங்கள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. நம்­பிக்­கை­யுடன் உங்­க­ளிடம் இருந்து எதிர்­பார்க்­கின்றோம். காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் என்ற அறி­விப்பை வெ ளியி­டு­வீர்கள் என்று எதிர்­பார்க்­கின்றோம். இந்த நாட்டைப் பாது­காக்­க­வேண்டும் என்றால் தமிழ்­மக்கள் மீண்டும் போரா­டக்­கூ­டாது என்றால் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­ப­ட­வேண்டும். அதற்­கான முயற்­சி­கள்­எ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஐக்­கிய தேசி­யக்­கட்சி சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் உங்­களின் தலை­மையில் எதிர்க்­கட்­சி­யாக இருக்­கின்ற நாங்­களும் பூரண ஆத­ரவு தரு­கின்றோம். இனப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு அர­சியல் அமைப்­பினை உரு­வாக்­க­வேண்டும். தற்­போது முக்­கி­ய­மான ஒரு சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது. இனப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வேண்டும். இது குறித்து பாரா­ளு­மன்­றமே தீர்­மானம் எடுத்­துள்­ளது. புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இச் சந்­தர்ப்பம் இனிமேல் எப்­படி இருக்கும் என்று ஆருடம் கூற­வ­ர­வில்லை. ஆனால் நீங்கள் எங்கள் மக்­களின் நம்­பிக்­கை்­க­கு­ரி­ய­வ­ராக உள்­ளீர்கள். எங்கள் மக்கள் உங்­களைத் தெரி­வு­செய்து ஜனா­தி­ப­தி­யாக்­கி­யி­ருக்­கி­றார்கள். ஆனால் நாங்கள் கண்ணீர் விட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றோம். "ஏழையின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்­பா­னது என்று ஒரு பழ­மொ­ழி­யுள்­ளது. இது போரை­விட பலம் வாய்ந்­தது. கண்ணீர்.. இதனை தப்­பாக மொழி­பெ­யர்த்து தென்­னி­லங்­க­கைக்கு சொல்­ல­வேண்டாம். நாங்கள் துப்­பாக்கி தூக்­கப்­போ­கிறோம் என்று கூற­வேண்டாம். இப்­ப­டித்தான் பல விட­யங்கள் உள்­ளன. விஜ­ய­க­லாவும் இதனால் தான் மாட்­டிக்­கொண்­டி­ருக்­கிறார். எங்கள் வலி­களை புரிந்­து­கொள்ள வில்லை. எங்­க­ளு­டைய கண்ணீர் சர்­வ­தேசம் முழு­வதும் பலம் வாய்ந்த சக்­தி­யாக இருக்­கின்­றது. நீங்கள் உங்­க­ளு­டைய நெஞ்­சினில் தாங்கி பல விட­யங்­களைச் செயற்­ப­டுத்­துங்கள் மக்கள் இன்­னமும் நம்­பிக்கை வைத்­துள்­ளார்கள். இந்த ஆண்­டுக்குள் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண பல­மா­கவும் தைரி­ய­மா­கவும் தீர்­மானம் எடுங்கள். அதற்கு நாங்­களும் ஒத்­து­ழைப்பு தருவோம்.

மயி­லிட்டி உட்­பட ஏனைய இடங்கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும். நாங்கள் இன்று கொண்­டி­ருக்கும் நல்­லி­ணக்கம் என்ற பெயரை தெற்­கி­லுள்ள தீவி­ர­வா­தி­களும் பத­வி­மோகம் கொண்­ட­வர்­களும் பிள­வு­ப­டுத்த நினைக்­கின்­றார்கள். குலைக்­கப்­பார்க்­கி­றார்கள். இந்த அர­சாங்­கத்­திற்கு நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் வந்­த­போது உங்­க­ளுடன் நாம் கலந்­து­ரை­யா­டினோம். உங்­க­ளு­ட­னேயே இருந்தோம். மேலும் இன்­ன­மொரு விட­யத்­தினை நினை­வு­ப­டுத்­து­கின்றேன். நானும் எதிர்­கட்சி தலைவர் சம்­பந்­தனும் சந்­தித்து உங்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினோம். மகா­வ­லிக்குப் பொறுப்­பாக இருக்கும் நீங்கள் மகா­வலி நீரை வட­ப­கு­திக்கு கொண்டு வரு­வ­தாயின் அதற்கு வெ ளியுள்ள மக்­களை குடி­யேற்­ற­வேண்டாம். இது நடை­பெ­று­கின்­றது என உங்­க­ளுக்கு எச்­ச­ரி­க­கை­யாக சொன்னோம். அப்­போது அவ்­வாறு செய்­ய­மாட்டேன் எனக் கூறி­னீர்கள். ஆனால் தற்­போது ஊட­கங்­களில் உள்ள செய்­தி­களைப் பாருங்கள் மகா­வலிப் பிர­தே­சங்­களில் தெற்கைச் சேர்ந்­த­வர்கள் அத்­து­மீறி தமிழ் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களில் குடி­யேற்­றப்­ப­டு­கின்­றார்கள்.அவர்­க­ளுக்கு மகா­வலி அதி­கார சபை அதற்­கான படி­வங்­களைக் கொடுத்­துள்ளார். இதனைத் தடுத்து நிறுத்­துங்கள். எந்த மக்கள் எந்த நிலத்­திற்குச் சொந்­த­மா­ன­வர்­களே அந்த மக்­க­ளுக்கு காணிகள் வழங்­கப்­ப­ட­வேண்டும்.

இன்று நல்ல நிகழ்வு நடந்­துள்­ளது. இந்த ஆண்­டுக்குள் இந்தப் பிரச்­சி­னைக்கு சிறந்த தீர்வு காணப்­ப­ட­வேண்டும். இதற்கு ஒரு எல்லை வேண்டும். நாங்கள் இனியும் காத்­தி­ருக்க முடி­யாது. காணி விடு­விப்­புக்கு ஒரு அட்­ட­வணை போடப்­ப­ட­வேண்டும் உங்­க­ளுக்கு ராஜ­பக்­ச­வினால் ஏற்­பட்ட ஆபத்­தினை விட எதிர்­கா­லத்தில் அதை­விட பெரிய ஆபத்­துக்கள் எங்­க­ளுக்கு ஏற்­படும். அறிக்கைகள் விடுவித்து அரசியல் செய்யவில்லை. இந்த மண்ணில் எங்களுடைய இரத்தம் வியர்வை மக்கள் விடுவிப்பிற்காக நிலத்தின் விடுவிப்புக்காக சிந்தியுள்ளன. மக்களை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பப்படவேண்டும். இன்று அடிக்கல் வைத்துள்ளீர்கள். அதேபோன்று காங்கேசன்துறை துறைமுகமும் இந்திய அரசாங்கத்தினால் புனரமைத்து விடுவிக்கப்படவுள்ளது. பலாலி விமான நிலையம் செயற்படவுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கும் பிரதமருக்கும் இந்தியாவிற்கும் நன்றி சொல்கின்றோம். நிலங்களைப் பறிக்காது மக்களிடம் ஒப்படைக்கவேண்டும். விவசாயம் மீன்பிடி வளப்படுத்தப்படவேண்டும். இதன்மூலம் நல்லிணக்கம் வரவேண்டும். இன்று ஒரு எல்லைக்குள் வந்துள்ளோம் நீங்களும் ஒரு எல்லைக்குள் வந்துள்ளீர்கள். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணி விடுவிப்பு போன்றவற்றை நீங்கள் இந்த ஆண்டுக்குள் செய்தால் சிறுபான்மையின மக்கள் உங்களுடன் இருப்பார்கள். மக்கள் ஐக்கிய தேசியக்கட்சியினர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் உங்களையே வெற்றிபெறச்செய்வார்கள் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-23#page-1

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.