Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினப் படுகொலை நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் தனது இரண்டாவது புத்த விகாரையை அமைத்துவரும் சிங்களப் பேரினவாதம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் படுகொலை நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் தனது இரண்டாவது புத்த விகாரையை அமைத்துவரும் சிங்களப் பேரினவாதம்.

2009 இல் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை திட்டமிட்ட இனக்கொலையொன்றின்மூலம் கொன்றொழித்த சிங்களப் பேரினவாதம், அப்படுகொலை நடைபெற்ற அடையாளங்களை மறைப்பதற்கும், அப்பகுதிமீதான தனது ஆக்கிரமிப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளவும் தனது மத இன அடையாளங்களை நிறுவி வருகிறது.

இதன் ஒரு அங்கமாக, இனப்படுகொலையின் முக்கிய பாத்திரங்களில் ஒருவரான மகிந்த 2012 இல் வட்டுவாகல் பகுதியில் ஒரு விகாரையை நிறுவியிருந்தார். இறுதி இனக்கொலை அரங்கேறிய முள்ளிவாய்க்காலிலிருந்து 5 கிலோ மீட்டர்கள் தொலைவில் இது அமைந்திருக்கிறது. தற்போது இரண்டாவது தேரவாத விகாரை முள்ளிவாய்க்கால், கப்பலடிப் பகுதியில் நிறுவப்பட்டு வருகிறது. இதற்கென்று பல ராணுவத்தினர் அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, கடந்த இரு வாரங்களாக இந்த நடவடிக்கை மிகவும் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.

தமிழர் தாயகத்தின்மீதான திட்டமிட்ட ஆக்கிரமிப்பென்பது இரு பேரினவாதக் கட்சிகளுக்கும் இடையே எந்தவித வேற்றுமையும் இல்லாது நடைபெற்று வருவதையே இது காட்டுகிறது.

மேலும், ஐ. நா உற்பட்ட பல சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் கூட இந்த திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்குத் துணைபோவதோடு, பாதிக்கப்பட்ட தமிழினம் தொடர்பாக இதுவரை எவருமே கேள்விகேட்கவில்லை என்பது வேதனை.

தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் தொல்பொருள் ஆய்வுகளில் தமிழ் மாணவர்களை ஈடுபடுத்திவரும் சிங்களப் பெளத்த பேரினவாதம், அவர்களைக் கொண்டே தமிழரின் வரலாற்றுச் சின்னங்களை அழிக்கவும், மாற்றவும் முனைவதுகண்டு அம்மாணவர்கள் விசனப்படுவதுடன், இந்த நடவடிக்கையிலிருந்து தம்மை தொலைவுபடுத்தவும் எத்தனித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம் தமிழ்நெட்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.