Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று

Featured Replies

வட மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று

 

 
 

வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. 

north.jpg

இந்த அமர்வின் போது, இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவும் இலங்கை மீது இராணுவத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா.பாதுகாப்புச் சபையை வலியுறுத்துமாறும், வடகிழக்கு பிரதேசத்தில்  ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுசன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு உதவுமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை கோருகின்ற பிரேரணை  விவாதிக்கப்படவுள்ளது.

அத்துடன் இன்று நடைபெறவுள்ள அமர்வில் குறித்த பிரேரணையை நிறைவேற்றுவதற்காக சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளவாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/39389

  • தொடங்கியவர்

விக்கியின் கோரிக்கையை மீறி காற்றாலை விவகாரம் சபைக்கு

 
 

north.jpg

 

 

 
 
 
 

பளை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள காற்­றாலை தொடர்­பில் கணக்­காய்­வா­ளர் நாய­கத்­தின் அவ­தா­னிப்­புக்­களை மாகாண சபை­யின் இன்­றைய அமர்­வில் எடுத்­துக் கொள்­ள­வேண்­டாம் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கோரி­யி­ருந்­தார்.

சபை நட­வ­டிக்­கைக் குழு இந்த விவ­கா­ரத்தை நேற்று ஆராய்ந்­தது. சபை­யின் இன்­றைய அமர்­வில் அதனை எடுத்­துக் கொள்­வது என்று அந்­தக் குழு தீர்­மா­னித்­துள்ளது.  வடக்கு மாகாண சபை­யின் 130ஆவது

அமர்வு இன்று வியா­ழக் கிழமை நடை­பெ­ற­வுள்­ளது. இன்­றைய அமர்­வுக்­கான நிகழ்சி நிரல் உறுப்­பி­னர்­க­ளுக்கு கடந்த வாரம் அனுப்பி வைக்­கப்­பட்­டது.

அதில், மாகா­ணப் பொதுக் கணக்­குக் குழு­வின் அறிக்கை சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 2016ஆம் ஆண்­டுக்­கான கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­தி­யின் அறிக்­கை­யின் அவ­தா­னிப்பே, கணக்­குக் குழு­வின் அறிக்­கை­யா­கச் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பளை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள காற்­றாலை தொடர்­பி­லேயே கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­பதி அவ­தா­னம் அமைந்­துள்­ளது. காற்­றாலை அமைத்­துள்ள நிறு­வ­னத்­தின் சமூ­கக்­கூட்­டுப் பொறுப்பு நிதி அப்­போ­தைய விவ­சாய அமைச்­ச­ராக இருந்த பொ.ஐங்­க­ர­நே­ச­னின் அமைச்­சுக்கு வழங்­கப்­ப­டும் வகை­யில் ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இந்த விவ­கா­ரங்­கள் தொடர்­பி­லேயே கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­தி­யின் அவ­தா­னம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த விட­யத்தை இன்­றைய சபை அமர்­வில் விவா­தத்­துக்கு எடுத்­துக் கொள்­ள­வேண்­டாம் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அவைத் தலை­வ­ருக்கு கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தார். அந்­தக் கடி­தத்­தின் பிரதி வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் எல்­லோ­ருக்­கும் அனுப்­பப்­பட்­டி­ருந்­தது.

சபை அமர்­வுக்கு முதல் நாள், சபை­யில் எடுக்­க­வேண்­டிய விட­யங்­கள் தொடர்­பில் ஆராய்­வது சபை நட­வ­டிக்­கைக் குழு­வின் பணி­யா­கும். ஆளும் மற்­றும் எதிர்­கட்சி உறுப்­பி­னர்­கள் 7 பேரை உள்­ள­டக்கி இந்­தக் குழு அமைந்­துள்­ளது.

முத­ல­மைச்­ச­ரின் கடி­தம் தொடர்­பில் சபை நட­வ­டிக்­கைக் குழு நேற்று ஆராய்ந்­தது. முத­ல­மைச்­ச­ரின் கோரிக்­கையை நிரா­க­ரித்த சபை நட­வ­டிக்­கைக் குழு, காற்­றாலை விவ­கா­ரத்தை சபை­யின் இன்­றைய அமர்­வில் எடுத்­துக் கொள்­ளத் தீர்­மா­னித்­துள்­ளது.

https://newuthayan.com/story/10/விக்கியின்-கோரிக்கையை-மீறி-காற்றாலை-விவகாரம்-சபைக்கு.html

  • தொடங்கியவர்

காற்றாலை கணக்காய்வு தொடர்பில் சபையில் தர்க்கம்

 
 
northern_provincial_council-720x480-1-1.
1
SHARES
 

பளையில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை குறித்த கணக்காய்வுகளின் அலதானிப்புக்கள் தொடர்பில் காரசாரமான பேச்சுக்கள் இடம்பெற்று வருகிறது.

விடயம் தொடர்பில் தொடர்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஐங்கரநேசன் மற்றும் அஸ்மினுக்கிடையில் வாய்த் தர்க்கம் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாணசபையின் அமர்வு இடம்பெற்று வருகிறது.

https://newuthayan.com/story/12/காற்றாலை-கணக்காய்வு-தொடர்பில்-சபையில்-தர்க்கம்.html

  • தொடங்கியவர்

அனந்தியின் செயல் அவையின் சிறப்புரிமையை மீறுகிறது – அவைத்தலைவர்

 
 
ananthi-sashitharan.jpg
 

அண்மையில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஊடகமொன்றுக்கு வழங்கிய செய்தி அவையின் சிறப்புரிமையை மீறும் செயல் என்று அவைத் தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தங்போது ஆரம்பமாகி இடம்பெற்று வரும் அமர்வின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை அமர்வுகளின்போது, கூச்சலும் குழப்பமுமே இடம்பெற்று வருகிறது.
இதனால் எந்தவித தீர்மானங்களையும் எடுக்க முடியவில்லை.

அமர்வின்போது தெரிவிக்கவுள்ள விடயங்களை 15 நாள்களுக்கு முன்பதாகவே சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஆனால் முதலமைச்சர் தனது தீர்மானங்களை மட்டும் அமர்வின் நாளில் குறிப்பிடுகிறார்
இவ்வாறு அனந்தி சசிதரன் செய்தி ஒன்றை ஊடகத்துக்கு வழங்கியிருந்தார்.

இதன்போது அமைச்சர் அனந்தி சசிதரன் அமர்வில் இல்லை என்பத குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/story/10/அனந்தியில்-செயல்-அவையின்-சிறப்புரிமையை-மீறும்-செயல்-அவைத்தலைவர்.html

 

 

 

நியதிச்சட்டங்களை சர்வேஸ்வரன் வாசித்ததில் சபையில் குழப்பம்

 
 
northern-province.jpg
 

முதலமைச்சர் சபைக்கு வராததை அடுத்து அவர் சாரபில் வட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் வீடமைப்பு தொடர்பிலான நியதிச்சட்டங்களை சபையில் வாசித்தார்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சபை உறுப்பினர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

https://newuthayan.com/story/11/நியதிச்சட்டங்களை-சர்வேஸ்வரன்-வாசித்ததில்-சபையில்-குழப்பம்.html

 

முதலமைச்சர் இன்றி அமர்வு ஆரம்பம்

 

வடக்கு மாகாண சபையின் 130 அமர்வு தற்போது ஆரம்பித்து இடம்பெற்று வருகிறது.

இந்த அமர்வில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை.

வேறு நிகழ்வொன்றுக்கு செல்லவுள்ளதால் இதில் பங்குபற்ற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

https://newuthayan.com/story/10/முதலமைச்சர்-இன்றி-அமர்வு-ஆரம்பம்.html

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.