Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் இன்று அரசைக் கவிழ்க்க கூட்டு எதிரணியின் பலப்பரீட்சை

Featured Replies

கொழும்பில் இன்று அரசைக் கவிழ்க்க கூட்டு எதிரணியின் பலப்பரீட்சை

 

mahinda-trinco-3-300x199.jpgகொழும்பு நகரத்தின் செயற்பாடுகளை முடக்கி , சிறிலங்கா அரசாங்கத்துக்கு சவால் விடும் வகையில், கூட்டு எதிரணி இன்று கொழும்பில் பாரிய மக்கள் பேரணியை நடத்தவுள்ளது. இதற்கு இரகசியமான முறையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமைதியான முறையில் தாம் இந்தப் பேரணியை நடத்தவுள்ளதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ள போதிலும், அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் போன்ற முக்கியமான இடங்களை முற்றுகையிட்டு அவற்றின் செயற்பாடுகளை முடக்கும் இரகசியத் திட்டம் கூட்டு எதிரணியிடம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறை  தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், சட்டத்தை மீறினால் கடுமையான நடவடிக்கையில் இறங்கும் என்றும் காவல்துறை மா அதிபர் எச்சரித்துள்ளார்.

எனினும் கூட்டு எதிரணி இந்தப் பேரணியை எங்கு நடத்தவுள்ளது என்று இன்னமும் அறிவிக்கவில்லை.

அரசாங்கம் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவை பெற்று விடும் என்று காரணம் கூறிய கூட்டு எதிரணி, நேற்று பேரணி நடக்கும் இடம் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது.

எனினும், பேரணி நடக்கவுள்ள இடத்தை இன்னமும் இரகசியமாக வைத்திருப்பதால், சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

அதேவேளை, இன்று கொழும்பு நகரத்தை முடக்கி அரசாங்கத்தை நிலைகுலைய வைப்போம் என்று கூட்டு எதிரணியின் தலைவர்கள் சபதமிட்டுள்ளனர்.

இந்த பேரணியின் மூலம் ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று நாமல் ராஜபக்ச கூறியிருக்கிறார்.

கூட்டு எதிரணி வெளியிடத்தில் இருந்து பெருமளவானோரை ஒன்று திரட்டி கொழும்பு நகரத்தை முடக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சிறிலங்கா காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/09/05/news/32709

  • தொடங்கியவர்

கொழும்பில் ஆயிரக்கணக்கில் பொலிஸார் குவிப்பு!

 

police-colombo.jpg

கூட்டு எதிரணியினர் நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ள நிலையில் இன்று (திங்கட்கிழமை) பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.

நல்லாட்சி அரசிற்கு எதிராக நாளை கூட்டு எதிரணியினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டத்தில் சுமார் 5 இலட்சத்துக்கும் அதிமானோர் கலந்துகொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்துவார்கள் என கூட்டு எதிராணியினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொலிஸாரும் தலைநகரில் பாதுகாப்பினை பலப்படுத்தும் முகமாக ஆயிரக்கணக்கான பொலிஸாரை வரவழைத்துள்ளனர்.

மேலும் இந்த போராட்டத்தினை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பொலிஸாரைக்கொண்டு அடக்க முயற்சி செய்வதாகவும் கூறி இன்று நாடாளுமன்றில் கூச்சல் குழப்பத்தை கூட்டு எதிரணியினர் ஏற்படுத்தியிருந்தனர்.

இருப்பினும் அவ்வாறான எந்தவொரு செயற்பாடுகளும் எடுக்கப்படவில்லை என பிரதமர் உட்பட சட்டம் ஒழுங்கு அமைச்சரும் தெரிவித்திருந்ததுடன், இந்த நாட்டில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

colombo-pilice3.jpg

colombo-pilice.jpg

http://athavannews.com/கொழும்பில்-ஆயிரக்கணக்கி/

  • தொடங்கியவர்

12 மணிக்கு பின்னரே அறிவிப்போம் : கூட்டு எதிரணி 

 

 

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று நடத்த உள்ள மக்கள் எழுச்சி பேரணி எவ்விடத்தில் ஆரம்பமாகும் என்பதை இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னரே அறிவிப்போம் என கூட்டு எதிரணி சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

jana_balaya.jpg

ஒன்றினைந்த எதிர்க்கட்சி இன்று கொழும்பில் முன்னெடுக்க உள்ள அரசாங்கத்துக்கு எதிரான பேரணி, கொழும்பில் எந்த இடத்தில் ஆரம்பமாகும் என இதுவரையில் அறிவிக்காது இரகசியத்தை பேணி வருகிறது கூட்டு எதிரணி,

இந்நிலையில் கூட்டு எதிரணி வெளியிட்டுள்ள  ஊடக அறிக்கையில்,

பேரணியில் பங்கேற்க உள்ள எமது ஆதரவாளர்கள் கொழும்பை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

திட்டமிட்ட வகையில் எமது பேரணி இன்று நடைபெறும்.

இன்று பகல் 12 மணிக்கு பின்னரே பேரணி ஆரம்பமாகும் இடத்தை அறிவிப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/39768

படையினர் சிவில் உடையில் பேரணிக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்த சதி : ரகிசய தகவல் கிடைத்துள்ளதாக மஹிந்த அறிவிப்பு

 

 

கொழும்பில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள மக்கள் எழுச்சி எதிர்ப்பு பேரணியில், பாதுகாப்பு படையினர் சிலர் சிவில் உடையில் ஆர்ப்பாட்ட பேரணிக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள மஹிந்த,

mahindha.jpg

"வன்முறைகளை தூண்டவே பாதுகாப்பு படையினர்  இச் சதித் திட்டங்களில் ஈடுபட உள்ளனர். ஆனால் நாம் எந்த வன்முறைகளிலும் ஈடுபடமாட்டோம். 

இலட்ச கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட உள்ளமையால் அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே வன்முறைகளை தூண்டி ஆர்ப்பாட்டத்தை குழப்ப முயற்சி செய்கின்றனர்" என தெரிவித்துள்ளார்

இவ்விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் வினவிய போது,

"இது முற்றிலும் பொய்யான விடயமாகும். ஆர்ப்பாட்டத்தை குழப்பி வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட பாதுகாப்பு படையினருக்கு எவ்வித தேவையும் இல்லை. பொதுமக்களையும், அரச சொத்துக்களையும் பாதுகாப்பதே எமது கடமையாகும் என்றார்.

http://www.virakesari.lk/article/39771

  • தொடங்கியவர்

மஹிந்தவும், கோத்தாவும் 3 மணிக்கு களமிறங்குகின்றனர் :இடம் இதுதான்..!

 

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆரம்பமாகலாம் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

mahindha_and_gotta.jpg

இதேவேளை காலிமுகத்திடலை நோக்கி கொழும்பு புறக்கோட்டை வழியாக செல்ல உள்ள எதிர்ப்பு பேரணியில் இன்று மாலை 3 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் கொழும்பு புறக்கோட்டை அரச மர சந்திக்கு அருகில் பேரணில் இணைந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிள்ளன.

http://www.virakesari.lk/article/39778

 

மஹிந்த அணியின் பேரணி : அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!!!

 

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கொழும்பில் நடத்த உள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக அமெரிக்க பிரஜைகள் பாதுகாப்பாக இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

USE_Request_.jpg

மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்துகொள்ளுமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/39781

 

அலரிமாளிகையை முற்றுகையிட திட்டமா? 

 

அலரிமாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிடலாம் என்ற அச்சம் காரணமாக கொழும்பில் கொள்ளுபிட்டியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

prestsd.jpg

அரசாங்க வட்டாரங்களும் பொலிஸாரும் இதனை தெரிவித்துள்ளனர்

அலரிமாளிகையை முற்றுகையிடுவதற்கு திட்டமிடப்படடுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என அவர்கள் தெரிவித்துள்ளனர்

இதன் காரணமாக மேலதிக பொலிஸார் கொழும்பு நகரத்தின் மத்தியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸார் கலகமடக்கும் படையினருடன் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/39779

  • தொடங்கியவர்

ஒரே பார்வையில் – ஒன்றிணைந்த கூட்டு எதிரணியின் “மக்கள் பலம் கொழும்புக்கு” எதிர்ப்பு பேரணி…

 

 

Party-Leader-of-the-Joint-Opposition-Par

கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணியின் பிரதான கூட்டம் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இடம்பெற உள்ளது. பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இருந்து மஹிந்த ராஜபக்ஸ, கோத்தபாய ராஜபக்ஸ இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று பிற்பகல் 02.00 மணிக்கு மக்கள் பலம் கொழும்புக்கு எதிர்ப்பு பேரணி ஆரம்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிரக்கட்சியின் கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்ப்பு பேரணி ஏற்பாட்டாளர்கள்கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

கொழும்பில் இன்று நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வீதிகள்…

jana-balaya-2.jpg?resize=650%2C433

கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணிக்காக பல பகுதிகளில் இருந்திம் வருகை தரும் மக்கள் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒன்று கூடவுள்ளனர்.  பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை, அரமர சந்திப் பகுதியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இந்த பேரணியில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பேரணியில் கலந்து கொள்வதற்காக ஆமர் வீதி, டெக்னிகல் சந்தி, ஒல்கோட் மாவத்தை ஊடாக சில மாவட்ட மக்கள் லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரை மக்கள் பேரணியாக வருகை தர உள்ளனர்.  மேலும் சிலர் மருதானை, டீ.ஆர். விஜேவர்தன மாவத்தை ஊடாகவும், சிலர் கொம்பனிவீதி ஊடாகவும் லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரை நடை பயணமாக வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மாகாண ரீதியாக பிரிந்து 06 ஊர்வலங்களாக லேக் ஹவுஸ் சுற்றுவட்டப் பகுதியில் ஒன்று கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இருந்து 18 பேருந்துகள் – யாழிருந்து 2 பேருந்துகள்…

bus-slk.jpg?resize=780%2C519

கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள “மக்கள் பலம் கொழும்புக்கு” பேரணியில் கலந்து கொள்வதற்காக கொழும்பிற்கு வெளி இடங்களில் இருந்து பேருந்துகள் மூலம் மக்கள் சென்ற வண்ணமுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.  எவ்வாறாயினும் இன்று அலுவலக நாள் என்ற போதிலும் கொழும்பு நகர வீதிகள் நெரிசலற்று இருந்ததை அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் அலரி மாளிகை மற்றும் விஷேட மேல் நீதிமன்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்துள்ளது.  இந்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்வதற்காக வடக்கில் இருந்து 18 பேருந்துகள் வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் இருந்து 02 பேருந்துகளில் சுமார் 100 பேர் கொழும்புக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குருணாகலில் இருந்து சுமார் 750 பேருந்துகள் வருகை தருவதாக முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் கூறியுள்ளதுடன், கண்டியில் இருந்து 186 பேருந்துகள் வருகை தருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ கூறினார்.  எவ்வாறாயினும் இதுவரை கொழும்பில் எவ்வித போக்குவரத்து நெரிசலோ அல்லது ஏதாவது அசம்பாவிதங்களோ பதிவாகவில்லை அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு இன்று தூங்கா நகரமாக மாறும்….

semasingha.jpg?resize=650%2C433

´மக்கள் பலம் கொழும்பிற்கு´ ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.  இன்று (05.09.18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்ட பேரணி மூலம் எந்தவொருநபரையும் கஷ்டத்திற்கு உட்படுத்துவது நோக்கம் இல்லை எனவும் இருப்பினும் பிரதமரும் ஜனாதிபதியும் கஷ்டத்திற்கு உள்ளாவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கொழும்பிற்கு வருவதானால் கொழும்பு இன்று தூங்கா நகரமாக மாறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு காவற்துறைப் பாதுகாப்பு

Pr-House.jpg?resize=650%2C433

´மக்கள் பலம் கொழும்பிற்கு´ ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தற்போது காவற்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவற்துறையினர்  மற்றும் தண்ணீர் பவுஸர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அத்துடன் காலி முகத்திடலிலும் காவற்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://globaltamilnews.net/2018/94334/

  • தொடங்கியவர்

அண்ணனின் ஆலோசனையுடன் சற்று முன்னர் களமிறங்கினார் கோத்தா!!!

 

 
 

பொது எதிரணியின் “மக்கள் பலம் கொழும்புக்கு”  பேரணியில் கொழும்பு கோட்டையில் சற்றுமுன்னர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறங்கியுள்ளார்.

 gottabaya_at_rally.jpg

விஜயராம மாவத்தையில் முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்று கலந்துரையாடிய பின்னரே பேரணியில் கோத்தபாய ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/39802

  • தொடங்கியவர்

சற்றுமுன்னர் கோட்டையில் களமிறங்கினார் கதாநாயகர் மஹிந்த!!!

 

பொது எதிரணியின் “மக்கள் பலம் கொழும்புக்கு” பேரணியில் கொழும்பு புறக்கோட்டை அரசமர சந்தியில்  சற்றுமுன்னர் களமிறங்கியுள்ளார் கதாநாயகரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

mahindha_at_rally.jpg

40984391_523166314812623_845307987433934

http://www.virakesari.lk/article/39807

  • தொடங்கியவர்

சுற்றிவளைக்கப்படப்போகின்றதா மைத்திரியின் அலுவலகம் ? (புதிய வீடியோக்கள்)

 

 

 

 

https://www.ibctamil.com/events/80/105695?ref=imp-news

  • தொடங்கியவர்

"மது பானத்தை காட்டி கூட்டத்தை சேர்ப்பதால்  ஆட்சியை மாற்ற முடியாது"

 

 
 

மது பானத்தை அருந்த கொடுத்து கூட்டத்தை சேர்ப்பதால் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

pro.jpg

கொழும்புக்கு கூட்டத்தை அழைத்து வந்ததனூடாக அரசாங்கத்தை மாற்ற முடியுமா? ஜனாதிபதியை மாற்ற முடியா? பிரதமரை மாற்ற முடியுமா? ஜனாதிபதி தொடர்பில் தீர்மானிக்க நாள் ஒன்று வரும் அது இன்றை தினம் அல்ல. 

2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் அப் போதே நாட்டின் ஜனாதிபதி யார் எனவும் பிரதமர் யார் எனவும் அமைச்சர்கள் யார் எவும்  தீர்மானிக்கப்படும். 

கொள்ளைச் செயற்பாடுகளை நாட்டுக்குள் மீண்டும் உருவாக்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதியும் பொது எதிரணியினரும் இன்று முயற்சிகளை மேற்கொண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்றார். 

http://www.virakesari.lk/article/39826

 

 

 

சத்தியக்கிரகம் ; சம்பவ இடத்தில் மஹிந்த ; தொடர்கிறது போராட்டம்

 

மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் சத்தியக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். 

mahind1.jpg

அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் முன்னெடுத்து வரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கொழும்புக்கு வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பின் பல வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

lack_houser.jpg

lot1.jpg

குறிப்பாக லேக்கவுஸ் சுற்றுவட்டத்தினை முழுமையாக மறித்திருந்த இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியை ஆக்கிரமித்து, அப் பகுதிக்கான போக்குவரத்தை ஸ்தம்பிதமடையச் செய்துள்ளதுடன் அப் பகுதியில் மெழுகு வர்த்திகளை ஏந்திய வண்ணம் சத்தியகிரகப் போராட்டமொன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். 

m87.jpg

அத்துடன் லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

m10.jpg

m9.jpg

http://www.virakesari.lk/article/39824

  • தொடங்கியவர்

மஹிந்தவின் “அரபு வசந்தம்“ கனவு கொழும்பில் புஷ்வாணம் – அமைச்சர் மனோ கிண்டல்!

 

முட்டாள் தனமான கோசங்களுடனேயே மஹிந்த ஆதரவாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“ஜனபலய’ அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் மூலம் இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட வரலாறு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/மஹிந்தவின்-அரபு-வசந்தம்/

  • தொடங்கியவர்

சர்ச்சையில் சிக்கிய ஆர்ப்பாட்ட புகைப்படங்கள் – கேலி செய்த ரஞ்சன்

 

ranjan-gota.jpg

கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பசந்த யப்பா அபேவர்தன ஆகியோர் பகிர்ந்த போராட்ட புகைப்படங்களை நீக்கியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டு எதிரணியினர் இன்று (புதன்கிழமை) நடத்திய போராட்ட புகைப்படங்களை கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பசந்த யப்பா அபேவர்தன ஆகியோர் தமது சமூக வலைத் தளங்களில் பகிர்ந்திருந்திருந்தார்கள்.

குறித்த பகிர்வு தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக “உங்களுக்கு தெரியும் இந்த போராட்டம் மிகப்பெரிய தோல்வியடைந்துள்ளது என்று, இவ்வாறு நாமல் ராஜபக்ஷ அணியினர் பகிர்ந்த புகைப்படம் நுகேகொட பேரணியில் எடுக்கப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம்.

இது கடந்த 2015 ஆம் ஆண்டை விட உங்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. எனவே எப்படி நுகேகொட பேரணி புறக்கோட்டையாக மாறியது என தெரியவில்லை” என கேலி செய்திருந்தார்.

இதனை அடுத்து குறித்த இருவரின் சமூக வலைத்தள பகிர்வும் நீக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விடயம் பெரிதும் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

zsderer.jpg

zsergzr.jpg

http://athavannews.com/சர்ச்சையில்-சிக்கிய-ஆர்ப/

  • தொடங்கியவர்

விடியும் வரை நடத்தவிருந்த சத்தியாக்கிரகம் நள்ளிரவுக்கு முன்னரே முடிந்தது

 

jana-balaya-colombo-4-300x200.jpgகொழும்பில் நேற்று மாலை கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட ‘மக்கள் சக்தி கொழும்பு நோக்கி’ பேரணியைத் தொடர்ந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகம் இன்று விடிகாலை வரை தொடரும் என்று மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்த போதும், நள்ளிரவுக்கு முன்னரே முடிந்து போனது.

நேற்று மாலை பேரணியில் பங்கேற்றவர்களின் மத்தியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிய போது,

“இந்தப் பேரணி மிகவும் வெற்றியளித்துள்ளது. விடிகாலை வரை இந்தப் போராட்டம் தொடரும், பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதும், பெருந்தொகையானவர்கள் கொழும்பில் ஒன்று கூடினார்கள்.

தடைகள் ஏற்படுத்த ஏற்படுத்த கூட்டு எதிரணி பலமடையும், இதுபோன்ற போராட்டங்களை கூட்டு எதிரணி எதிர்காலத்திலும் நடத்தும்” என்று கூறியிருந்தார்.

எனினும், மகிந்த ராஜபக்சவுடன் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை மாலை 7 மணியுடன் குறையத் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் 3000 பேர் வரையிலேயே அங்கு அமர்ந்திருந்தனர்.

இந்தநிலையில் நள்ளிரவுக்கு முன்னரே- சுமார் 11.30 மணியுடன் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த கூட்டு எதிரணியின் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் விடியும் வரை நடத்தவிருந்த போராட்டம், நள்ளிரவுக்கு முன்னரே முடிந்து போனது.

jana-balaya-colombo-8.jpgjana-balaya-colombo-10.jpg

http://www.puthinappalakai.net/2018/09/06/news/32732

  • தொடங்கியவர்

“மக்கள் பலம் கொழும்புக்கு” முடிவுற்றது – வீதித் துப்புரவு பணியில் போராட்டக்காரர்கள்..

janabalaya5.jpg?resize=800%2C600

கூட்டு எதிரணியினரின் “மக்கள் பலம் கொழும்புக்கு” போராட்டமானது இன்று இரவு முடிவுக்கு வந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் வீதிகளை துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டமையை காணக்கூடியதாக இருந்தது.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் மக்கள் பலம் கொழும்புக்கு  போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஈடுபட்டிருந்தனர். இதன்போது பல வீதிகள் முற்றுகையிடப்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டின் பல பகுதிகளிளும் இருந்து சென்ற போராட்டக்காரர்கள் கொழும்பின் லோடஸ் சுற்றுவட்டாரப் பகுதியில் ஒன்று கூடினர். இந்நிலையில் இன்று நடுநிசியில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

 janabalaya2.jpg?resize=800%2C600janabalaya3.jpg?resize=800%2C600janabalaya4.jpg?resize=800%2C600janabalaya5.jpg?resize=800%2C600janabalaya6.jpg?resize=800%2C600janabalaya7.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/94404/

 

“ஜனபலய” ஒருவர் பலி ; மதுபோதையால் 81 பேரும் உணவு ஒவ்வாமையால் 8 பேரும் வைத்தியசாலையில் அனுமதி

 

கூட்டு எதிரணியின் “ஜனபலய” போராட்டம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

yaa.jpg

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்கார்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் மது அருந்தியதால் ஏற்பட்ட விளைவால் சுமார் 81 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 8 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக புாராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையில் இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அம்பியுலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கொழும்பில் பல்லேறு இடங்களில் வந்திறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இறுதியில் லேக்கவுஸ் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜக்ஷ ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/39831

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது ஆட்சியை பிடித்து மிச்சம் இருக்கும் கோவணத்தையும் சீனாக்கரனிடம் அடமானம் வைத்துவிடவேண்டும் ....

  • கருத்துக்கள உறவுகள்

09_B0_B334-51_CC-4_ADE-881_C-_C6807_CA68

Edited by Kavi arunasalam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.