Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைப்பாட்சி முறையின் கீழான அரசியல் தீர்வு வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Featured Replies

இணைப்பாட்சி முறையின் கீழான அரசியல் தீர்வு வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

 

selvam-mp-720x450.jpg

இணைப்பாட்சி முறையின் கீழான அரசியல் தீர்வு வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற ரீதியில் எதையும் பேசலாம் என்று நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவரினால் வெளியிடப்படும் கருத்துக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சார்பான கருத்துக்களாக அமைய வேண்டும்.

சுமந்திரன் நினைக்கின்ற கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாக சொல்லக்கூடாது என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு என்பதோடு இதனை அவரிடமும் வலியுறுத்தியுள்ளோம். மேலும் சுமந்திரனுடைய கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாக வருகின்ற போது அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகதான் அமைய வேண்டும்.

தமிழ் மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி வெற்றி பெற்றிருந்தார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆக்கபூர்வமான ஆதரவு ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசிற்கு வழங்கப்பட்டு வந்திருந்தாலும் கூட அவர்கள் சிங்கள பேரினவாதிகளின் கட்சிகளின் தலைவர் என்பதையும் ஆட்சி நடாத்துவது சிங்கள பேரினவாத கட்சிகள் என்பதனையும் நாங்கள் மறந்துவிடக்கூடாது.

இந்த நாட்டிலே அரசியல் சார்ந்த அல்லது அரசியலோடு இணைந்த சிங்கள இனவறி சக்திகள் பல்வேறு அமைப்புக்களிலும், துறைகளிலும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சிங்கள பௌத்த நாடு என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றனர். இதன் விளைவாகத்தான் அரசாங்களத்தின் ஆதரவோடு விகாரைகள் முளைக்கின்றன.

எங்களுடைய மக்களுடைய புராதன வரலாற்று ஆலயங்களில் வழிபடுவதற்கான உரிமை கூட மறுக்கப்படுகின்றன. ஆரசாங்கம் விரும்பினால் இவற்றை எல்லாம் நிறுத்த முடியும். ஆனால் அரசாங்கம் விரும்பவில்லை என்பது ஒன்று அரசினால் முடியாமல் இருப்பது வேறு ஒன்று.

ரணில் விக்ரமசிங்கவின் கட்சியோ, மைத்திரிபால சிறிசேனவின் கட்சியின் ஒரு பிரிவோ அல்லது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கூட்டு எதிரணியோ ஆட்சிக்கு வருவதற்கு அல்லது வந்த பின்னர் ஆட்சியை தக்க வைப்பதற்கு சிங்கள பெரும்பான்மை இனத்தினுடைய ஆதரவுதான் தேவை என்ற ஜதார்த்தத்தை உணர்ந்தவர்களாகவே செயற்படுகின்றனர்.

இன்னமும் இந்த நாட்டிலே இனவாதம் முற்றாக அணைக்கப்படவில்லை இதனாலேயே அவ்வப்போது அது கொழுந்துவிட்டு எரியச்செய்கின்றது. இதனால்தான் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். எங்களிற்கு இணைப்பாட்சி முறையின் கீழான அரசியல் தீர்வு வேண்டும். அத்தகைய தீர்வின் ஊடாக சுயாட்சியை பெறமுடியுமாக இருந்தால் எங்களது மரபு வழி தாயகத்தில் எங்களை நாங்களே ஆளுகின்ற நிலைமை ஏற்படுமேயானால், எங்களுடைய விவகாரங்களை நாங்களே கையாழுகின்ற நிலைமை ஏற்படுமேயானால் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

அரசியல் அதிகாரம் இல்லாத நிலையிலே சிங்கள பேரினவாத கட்சிகள் எவையாக இருந்தாலும் ஆட்சிக்கு வரும் போது எங்களது ஆதரவு தேவைப்படுகின்றது அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்படுகின்றனர். எனவே சிங்கள பேரினவாதிகளின் தயவிலோ இரக்கத்திலோ தங்கி நிற்கின்ற நிலைமை நீடிக்க முடியாது“ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/இணைப்பாட்சி-முறையின்-கீழ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.