Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று கைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜேகுணரத்ன

Featured Replies

இன்று கைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜேகுணரத்ன

 

Vice-Admiral-Ravindra-Wijegunaratne-300xசிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு நகரப் பகுதியில், 2008-09 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத், நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உதவினார் என்று அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டு நீதிவான் லங்கா ஜெயரத்ன ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அட்மிரல் விஜேகுணரத்னவை இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையக்தில் முன்னிலையாகுமாறும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் முன்னிலையாகாவிடின், அதிகாரிகள் அவரது இல்லத்துக்குச் சென்று கைது செய்வார்கள் என்றும் சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/09/10/news/32793

  • தொடங்கியவர்

11 இளைஞர்கள் கடத்தல் – நேவி சம்பத் – விஜயகுணவர்த்தன CIDயில் முன்னிலையாகவில்லை….

Ravinthra-Gunawarththana.png?resize=800%

முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) இன்று முன்னிலையாகவில்லை.

 

ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்டவிரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் பிரதான சந்தேகநபரான நேவி சம்பத் எனப்படும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டிஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சிக்கு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவை விசாரணைக்கு இன்று காலை 10 மணிக்கு முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிTஅறிவித்திருந்தது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்கை தொடர்பிலான விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.விஜேகுணரத்ன தற்போது மெக்சிகோவில் இருப்பதால் அவரால் இன்று குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாக முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் இடம்பெறும் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விஜேகுணரத்ன மெக்சிக்கோவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஜேகுணரத்ன நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில், இன்று வரை தாம் அறிந்திருக்கவில்லை என குற்ற புலனாய்வு பிரிவி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/95023/

  • தொடங்கியவர்

நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே சிஐடிக்கு அறிவித்தார் அட்மிரல்

 

Vice-Admiral-Ravindra-Wijegunaratne-300xவெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற பின்னரே,  தனது அதிகாரபூர்வ பயணம் தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கோட்டே நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நேற்றுக்காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்பாக, வாக்குமூலம் அளிக்க வருமாறு அட்மிரல் விஜேகுணரத்னவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அவர் கட்டார் விமான சேவை மூலம், மெக்சிகோவுக்கு புறப்பட்டுச் சென்றிருந்தார். வரும் 19ஆம் நாளே அவர் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

சிறிலங்கா அரசின் பிரதிநிதியாக மெக்சிகோவின் தேசிய நாள் நிகழ்வுகளில் அட்மிரல் விஜேகுணரத்ன பங்கேற்கவுள்ளார்.

இந்தப் பயணம் குறித்து, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாற்று நாள் ஒன்றை தருமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் பேச்சாளர் கூறியிருந்தார்.

ஆனால், அட்மிரல் விஜேகுணரத்ன நேற்று அதிகாலையே வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார் என்றும், அதன் பின்னர் நேற்றுக் காலையே அதுபற்றி தமக்கு தெரியப்படுத்தப்பட்டது என்றும் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி கூறியுள்ளார்.

‘எதிர்வரும் 19ஆம் நாளுக்குப் பின்னர் வாக்குமூலம் பெறுவதற்கு மாற்று நாள் ஒன்றை அவர் கோரியிருக்கிறார்.

அதிகாரபூர்வ பயணமாக அவர் சென்றுள்ளார் என்பதை கருத்தில் கொண்டு, அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு புதிய நாள் நிச்சயிக்கப்படும்” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/09/11/news/32825

  • தொடங்கியவர்

“முப்படை அலுவலக பிரதானி வெளிநாடு சென்றமை தொடர்பில் ஜனாதிபதி பதிலளிக்க வேண்டும்”

 

(எம்.ஆர்.எம்.வஸீம்)

முப்படைகளின் அலுவலக பிரதானி வெளிநாடு சென்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி பதிலளிக்கவேண்டும் என சமூக  நிதிக்கான மக்கள் அமைப்பின் இணை அமைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.janaral.jpgமுப்படைகளின் அலுவலக பிரதானி அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன குற்றப்புலனாய்வு விசாரணைக்கு ஆஜராகாமல்  வெளிநாடு சென்றுள்ளமை தொடர்பில்  கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில்,

ஐந்து  மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும்  காணாமல் ஆக்கியமை தொடர்பில்  பிரதான சந்தேகநபரான நேவி சம்பத் எனபப்டும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி  ஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சிக்கு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி மறைந்திருக்க உதவியமை தொடர்பிலான விசாரணைக்கு நேற்றைய தினம் வருமாறு முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அத்மிரால் ரவீந்ர விஜேகுணரத்னவுக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் அறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்தது.  

என்றாலும் நேற்றைய தினம் அவர் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு ஆஜராகாமல்  வெளிநாடு சென்றுள்ளார். 

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தபோதும் முப்படைகளின் அலுவலக பிரதானி அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன ஜனாதிபதியின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு செல்ல முடியாது.

அதனால் பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் அவரின் வெளிநாட்டு பயணம் தொடர்பில் ஜனாதிபதி பதிலளிக்க வேண்டும் எனறார்.

http://www.virakesari.lk/article/40136

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.