Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஆயுதங்களுடன் கடத்தப்பட்டது பொலிஸாரின் வாகனம்

Featured Replies

யாழில் ஆயுதங்களுடன் கடத்தப்பட்டது பொலிஸாரின் வாகனம்

 

 
 

கொடிகாமம் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை இனந்தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

police.jpg

வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள் பொலிஸாரின் ஆயுதங்கள் இருந்தன என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மணல் கடத்தலைப் பிடிக்கச் சென்றிருந்த வேளை, பொலிஸாரைத் தாக்கிவிட்டு வாகனம் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சம்பவத்தையடுத்து பெருமளவு பொலிஸார் தென்மராட்சிப் பிரதேசத்துக்கு வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வாகனத்தை தேடும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

http://www.virakesari.lk/article/40222

  • தொடங்கியவர்

பொலிஸாரின் வாகனத்தைக் கடத்தியவர் கைது!!

 
jaffna-police-vehicles-yaalaruvi.jpg
 

யாழ்ப்பாணம் கொடிகாமம்  பொலிஸாரின் வாகனத்தைக் கடத்திய  நபர்  இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மோத­லைத் தடுக்­கச் சென்ற பொலி­ஸா­ரின் துப்­பாக்­கி­யைப் பறித்து, பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வ­ரு­டன் பொலிஸ் வாக­னத்­தைக் கடத்­திய  சம்­ப­வம் ஒன்று நேற்று இரவு  யாழ்ப்­பா­ணம் கொடி­கா­மம், பாலா­விப் பகு­தி­யில் இடம்­பெற்­றது.

இந்­தச் சம்­ப­வத்­தால் சாவ­கச்­சேரி, கொடி­கா­மம்  பொலி­ஸார் பாலா­விப் பகு­தி­யில் குவிக்­கப்­பட்­ட­ னர். இத­னால் அங்கு பதற்­றம் ஏற்­பட்­டது. பொலி­ஸா­ரு­டைய தேடு­தல் நட­வ­டிக்­கை­க­ளும் இடம்­பெற்­றன.

கொடி­கா­மம் பாலா­விப் பகு­தி­யில் திரு­மண வீடு ஒன்­றில் குழப்­பம் ஏற்­பட்டு மோதல் இடம்­பெ­று­கி­றது என்று பொலிஸ் அவ­சர சேவை இலக்­க­மான 119க்கு தக­வல் கிடைத்­துள்­ளது.

இதன்­படி,  கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யத்­தில் இருந்து  ஒரு ஜீப் வண்­டி­யில் நான்கு பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்­குச் சென்­றுள்­ள­னர்.  ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் வாக­னத்­தில் இருக்க மூன்று பேர் வாக­னத்­தில் இருந்து இறங்கி அங்கு இடம்­பெற்ற  மோத­லைத் தடுத்து மோத­லில் ஈடு­பட்­ட­வர்­க­ளைக் கைது செய்ய முற்­பட்­ட­னர்.

இதன்­போது அங்கு நின்­ற­வர்­க­ளுக்­கும் பொலி­ஸா­ருக்­கும் இடை­யில் முறு­கல் நிலை ஏற்­பட்­டது. கைது நட­வ­டிக்­கையை நிறுத்­து­மாறு பொலி­ஸா­ரைக் கோரி­யுள்­ள­னர். எனி­னும் பொலி­ஸார் மோத­லில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்ய முயன்­ற­னர். அவர்­க­ளில் ஒரு­வர் பொலி­ஸா­ரைத் தாக்­கி­விட்டு, விரைந்­து சென்று நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த பொலி­ஸா­ரின் ஜீப் வண்­டியை எடுத்­துக் கொண்டு சென்­றுள்­ளார்.

ஜீப் வண்­டி­யின் பின்­னால் இருந்த பொலிஸ் உத்­தி ­யோ­கத்­தர் சிறிது தூரத்­தில் அதி­லி­ருந்து குதித்து தான் வைத்­தி­ருந்த துப்­பாக்­கி­யால் மேல் வெடி வைத்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. வாகனத்­தைக் கடத்­திய சம்­ப­வத்தை அடுத்து  அங்கு நின்­ற­வர்­க­ளின் மோட்­டார் சைக்­கி­ளைப் பெற்­றுக்­கொண்டு  ஜீப் வண்­டியை துரத்­திச் சென்­ற­னர் பொலி­ஸார்.

ஜீப் கடத்­தப்­பட்ட இடத்­தி­லி­ருந்து சுமார் ஒரு கிலோ மீற்­றர் தூரத்­தில் உள்ள பாலாவி கந்­த­சு­வாமி கோவி­ல­டி­யில் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. பொலி­ஸார் ஜீப்பை மீட்டனர். எனி­னும் அதைக் கடத்­திச் சென்­ற­வர் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

அவ­ரைக் கைது செய்ய சாவ­கச்­சேரி, கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யங்­க­ளில் இருந்து பொலி­ஸார் பறந்­த­னர்.  சம்­பவ இடத்­தில் தேடு­தல்­களை மேற்­கொண்­ட­னர். இத­னால் அங்கு நேற்று இரவு பதற்­ற­மும், பய­மும் ஏற்­பட்­டது.

இந்த நிலையில்  வாகனத்தை கடத்தியவர்  இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாலாவி தெற்கு  கொடிகாமத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

https://newuthayan.com/story/08/பொலிஸாரின்-வாகனத்தைக்-கடத்தியவர்-கைது.html

  • தொடங்கியவர்

பொலிஸாரின் ஜீப் கடத்தல்- நால்வர் சற்றுமுன்னர் கைது!!

 
 
80-780x405.jpg
 

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸாரின் வாகனத்தைக் கடத்திய குற்றச்சாட்டில் சற்றுமுன்னர் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோத­லைத் தடுக்­கச் சென்ற பொலி­ஸா­ரின் துப்­பாக்­கி­யைப் பறித்து, பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வ­ரு­டன் பொலிஸ் வாக­னத்­தைக் கடத்­திய  சம்­ப­வம் ஒன்று நேற்று இரவு  யாழ்ப்­பா­ணம் கொடி­கா­மம், பாலா­விப் பகு­தி­யில் இடம்­பெற்­றது.

இந்­தச் சம்­ப­வத்­தால் சாவ­கச்­சேரி, கொடி­கா­மம்  பொலி­ஸார் பாலா­விப் பகு­தி­யில் குவிக்­கப்­பட்­ட­ னர். இத­னால் அங்கு பதற்­றம் ஏற்­பட்­டது.

இதன்­போது அங்கு நின்­ற­வர்­க­ளுக்­கும் பொலி­ஸா­ருக்­கும் இடை­யில் முறு­கல் நிலை ஏற்­பட்­டது. கைது நட­வ­டிக்­கையை நிறுத்­து­மாறு பொலி­ஸா­ரைக் கோரி­யுள்­ள­னர். எனி­னும் பொலி­ஸார் மோத­லில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்ய முயன்­ற­னர். அவர்­க­ளில் ஒரு­வர் பொலி­ஸா­ரைத் தாக்­கி­விட்டு, விரைந்­து சென்று நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த பொலி­ஸா­ரின் ஜீப் வண்­டியை எடுத்­துக் கொண்டு சென்­றுள்­ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகவே நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

https://newuthayan.com/story/11/பொலிஸாரின்-ஜீப்-கடத்தல்-நால்வர்-சற்றுமுன்னர்-கைது.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.