Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படும் அபாயம்- இலங்கை தொடர்பான ஐநா குழு கருத்து

Featured Replies

இலங்கையில் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படும் அபாயம்- இலங்கை தொடர்பான ஐநா குழு கருத்து

 

 
 

இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை குறித்த ஐநாவின் முக்கிய குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பலர் எதிர்பார்த்ததை விட முன்னேற்றத்தின் வேகம் மிகவும் மெதுவானதாகவே காணப்படுகின்றது என ஜேர்மனி மசடோனியா மொன்டினீக்ரோ பிரிட்டன் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

முக்கியநடவடிக்கைகளை எடுப்பதில் போதிய முன்னேற்றம் காணப்படாததால் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது என நான்கு நாடுகளும் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக ஈடுபாட்டை வெளிப்படுத்துவதையும் காணாமல்போனோர் குறித்த அலுவலகம் செயற்படத்தொடங்கியுள்ளதையும் இலங்கை குறித்த முக்கிய குழு வரவேற்றுள்ளது.

இலங்கை அரசாங்கம் இழப்புஈடு தொடர்பான அலுவலகத்தை உடனடியா ஏற்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை தொடர்பான குழு  படையினரிடமுள்ள நிலங்களை விடுவிக்கும் நடவடிக்கையையும் வரவேற்றுள்ளது.

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம் இலங்கை அரசாங்கம் கடந்த கால விவகாரங்களை கையாள்வதற்கு தேசிய பொறுப்புக்கூறல் பொறிமுறை முக்கியமானது என்பதை ஏற்றுக்கொண்டது எனவும் இலங்கை தொடர்பான குழு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த பொறிமுறைகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச தராதரத்திலான சட்டங்களை கொண்டுவரும் நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை எனவும் இலங்கை தொடர்பான குழு தெரிவித்துள்ளது.

மனித உரிமை பணியாளர்கள் தாக்கப்படுவது துன்புறுத்தப்படுவது குறித்த சமீபத்தைய அறிக்கைகள் கவலையை அளித்துள்ளது எனவும் இலங்கை குறித்த குழு தெரிவித்துள்ளது.

geneva.jpg

உறுதியான தலைமைத்துவம் மற்றும் தெளிவான கால அட்டவணையுடனான  செயற்திட்டம் ஆகியவற்றின் மூலம் இந்த அரசாங்கம் தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பில் முன்னேற்றத்தை காண்பிக்க முடியும் எனவும் இலங்கை தொடர்பான குழு  தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/40270

  • தொடங்கியவர்

"பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கவும்"

 

 
 

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டமூலம் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைவதானதாக இருக்க வேண்டும் என தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு இன்று ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் தெரிவித்துள்ளது. 

unhrc.jpg

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை  உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தை கோருகின்றோம் என்றும் அக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

ஜெனிவாவில் நடைபெற்று வரும்   ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடரின்   இன்றைய அமர்வில்   இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே  தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின்  செயற்குழு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/40296

  • தொடங்கியவர்

புதிய சட்டமூலம் எப்படி அமையவேண்டும்?

 

(நமது நிருபர்)

தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பான ஐ.நா.செயற்குழு யோசனை

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடி யாக நீக்குமாறு அரசாங்கத்தை கோருகின்றோம். மேலும் அதற்கு பதிலாக கொண்டு வரப்படும் புதிய சட்டமூலமானது சர்வதேச தரத்துக்கு அமைய இருக்கவேண்டும் என்று தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்  குழு நேற்று ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தது.   

 

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய அமர்வில் இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பான ஐக்கியநாடுகளின் செயற்குழு பிரதிநிதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்;

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாங்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்து கொழும்பு, நீர்கொழும்பு, வவுனியா, அநுராதபுரம், திருமலை, மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளுக்கு எமது செயற்குழு விஜயம் செய்தது.

அதுமட்டுமன்றி பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள், இராணுவ மற்றும் கடற்படை முகாம்கள் , மகளிர் மற்றும் முதியோருக்கான இல்லங்கள் போன்ற 30க்கு மேற்பட்ட இல்லங்களுக்கு எமது குழு விஜயம் மேற்கொண்டது. இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் ஆரோக்கியமான மாற்றங்கள் தொடர்பில் எமது செயற்குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.

  எப்படியிருப்பினும் இலங்கையின் குற்றவியல் நீதிக்கட்டமைப்பின் சில சிக்கல்களை எமது செயற்குழு அடையாளம் கண்டது. குறிப்பாக தடுத்துவைத்தல் தொடர்பான விடயங்களை கண்டறிந்தோம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைதுகள் குறைந்துள்ள நிலையிலும் இந்த சட்டம் பல கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது. உடனடியாக இந்த சட்டத்தை நீக்குமாறு அரசாங்கத்தை கோருகின்ற ஐ.நா. செயற்குழு அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டமூலமானது சர்வதேச தரங்களுக்கு அமைய இருக்கவேண்டுமென வலியுறுத்துகிறது.

அதுமட்டுமன்றி தற்போது இந்த சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறுமாயின் அதுதொடர்பில் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் 18 வயதுக்குறைந்த 14 ஆயிரம் சிறுவர் மற்றும் சிறுமியர்கள் 371 சிறுவர் காப்பகங்களில் தமது சுதந்திரத்தை இழந்து இருக்கின்றனர். அவற்றில் 33 நிலையங்கள் மட்டுமே அரசாங்கத்தினால் இயக்கப்படுகின்றன. இலங்கையின் சட்ட கட்டமைப்பானது சிறுவர்கள் விடயத்தில் சர்வதேச நியமங்களை கொண்டிருக்கவில்லை எனத் தெரிகிறது.

அதுமட்டுமன்றி பெண்களுக்கான புனர்வாழ்வு, முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு உள்ளிட்ட கட்டமைப்பிலும் சில பிரச்சினைகளை நாம் காண்கின்றோம். பல சந்தர்ப்பங்களில் மக்கள் தமது சுதந்திரங்களை இழக்கின்றனர். மிரியான குடியகல்வு தடுப்பு நிலைய வசதிகள் தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தியிருக்கின்றோம். ஒரு குடியகல்வு சட்டத்தின் கீழ் ஒருவர் தடுத்துவைக்கப்பட்டால் அவருக்கு சரியான வசதிகளும் மரியாதையும் வழங்கப்படவேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-13#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.