Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் கொடூர வாள்வெட்டு மற்றும் துப்பாக்கி சூடு! நால்வர் மருத்துவமனையில்!

Featured Replies

முல்லைத்தீவில் கொடூர வாள்வெட்டு மற்றும் துப்பாக்கி சூடு! நால்வர் மருத்துவமனையில்!

 

 
 
Image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு குளம் பகுதியில் நேற்று (11) இரவு 11.00 மணியளவில் ஆறுபேர் கொண்ட கும்பல் வாள்களுடன் வீடுபுகுந்து வீட்டில் இருந்து தாய், தந்தை பிள்ளை ஆகியோர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது நாட்டு துப்பாகிசூட்டுக்கு இலக்கான வாள்வொட்டு கும்பலை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் மருத்துவ மனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்:- கைவேலி மருதமடு குளம் பகுதியில் வீடு ஒன்றிற்குள் புகுந்த ஆறு பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல் தாக்குதல் வீட்டில் இருந்த தாய் தந்தை மகன் மீது கண்மூடித்தனமாக வாள் வெட்டு தாக்குதுல் நடத்தியுள்ளது.

இதன்போது வீட்டில் இருந்த 45 வயதுடைய செல்வகுமார் 43 வயதுடைய செ.குசேலகுமாரி மற்றும் 21 வயதுடைய மகனான செ.கோபிநாத் ஆகியோர் வாள்வெட்டுக்கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் இரவு வேளை வாள் வெட்டவந்த கும்பல் மீது நாட்டுத்துப்பாகிகொண்டு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது வாள்கள் கொண்டு வெட்ட வந்த கும்பலை சேர்ந்த 4ஆம் வட்டாரம் கோம்பாவில்லினை சேர்ந்த 22 வயதுடைய திருச்செல்வம் கபிலன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனை கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவ மனையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வாள்வெட்டில் காயமடைந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிசிக்சைக்காக மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

வாள்வெட்டில் காயமடைந்த தாயார் புதுக்குடியிருப்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்.

குறித்த வாள்வெட்டு மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/106041?ref=imp-news

  • தொடங்கியவர்

காதல் விவகாரம் ; வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற இளைஞன் வீட்டாரின் துப்பாக்கி சூட்டில் பலி! 

 

 
 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு குளம் பகுதியில் கடந்த 11 ஆம் திகதி அன்று இரவு வீடுபுகுந்த ஆறுபேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட வாள்வெட்டு சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த புதுக்குடியிருப்பு இளைஞன் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.01.jpgஇச்சம்பவம் பற்றி தெரியவருகையில்,

புதுக்குடியிருப்பு சிவநகரினை சேர்ந்த இளைஞர் மாணிக்கபுரத்தினை சேர்ந்த  யுவதி ஒருவரை காதலித்து திருமணம்செய்துள்ளார்.  

குறித்தயுவதி ஏற்கனவே கைவேலி  மருதமடுகுளம் பகுதியினை சேர்ந்த செ.கோபிநாத் என்ற இளைஞனை காதலித்துள்ளார். 

இந்தநிலையில் முன்னாள் காதலனான குறித்த இளைஞன் முன்னாள் காதலியுடன் இருந்த புகைப்படத்தினை முகநூலில் வெளியிட்டுள்ளார். 

கோபிநாத்தின் முன்னாள் காதலியை தற்போது  திருமணம் செய்துள்ள  இளைஞன் குறித்த படத்தினை முகநூலிலிருந்து  அகற்றுமாறு வற்புறுத்தி வந்துள்ளதுடன் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த படங்களை முகநூலிலிருந்து அகற்றாது முன்னாள் காதலன் இருந்துள்ள நிலையில் ஆத்திரமடைந்த முன்னாள் காதலியின்  தற்போதைய கணவர் தனது  நண்பர்களை  ஒன்றிணைத்து தனது மனைவியின் முன்னாள் காதலனான மருதமடுகுளம் பகுதியினை சேர்ந்த செ.கோபிநாத் என்ற இளைஞனின் வீட்டிற்கு கடந்த 11 ஆம் திகதி இரவு வாள்களுடன் சென்று முதலில் வீட்டின் வெளியில் உறங்கிக்கொண்டிருந்த 21 அகவையுடைய கோபிநாத் மீது வாளால் வெட்டிவிட்டு பின்னர் அவரது தந்தையான 45 அகவையுடைய செல்வக்குமார் மீதும் வாளால் வெட்டிவிட்டு வீட்டுக்குள் புகுந்த நபர்கள் தயாரான 43 அகவையுடைய செ.குசேலகுமாரி மீதும் வாளால் வெட்டியுள்ளார்கள்.

இந்தவேளை வீட்டில் இருந்த பெண் பிள்ளைகள் இருவரும் வீட்டின் அறைக்குள் சென்று கதவினை பூட்டிக்கொண்டுள்ளதால் அவர்கள் தப்பித்து கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

நள்ளிரவு வேளை நடைபெற்ற இந்த வாள்வெட்டு சம்பவத்தின் போது வீட்டில் இருந்தவர்கள் வீட்டில் உள்ள நாட்டு துப்பாக்கியினை எடுத்து வாள்வெட்டுக்கு வந்த இளைஞர்கள்  மீது சுட்டுள்ளார்கள். 

இதில் ஒருவர்  படுகாயமடைந்த நிலையில் அவருடன் சேர்ந்து வந்தவர்கள்  சிறிது தூரம் இழுத்துச் சென்று அங்கே விட்டுவிட்டு ஏனைய  ஐந்து பேரும் தப்பி சென்றுள்ளார்கள்.

இச் சம்பவத்தினை தொடர்ந் து கிராம மக்களால் பொலிசாருக்கு தகவல்  கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிசார் காயமடைந்த நால்வரையும் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.

 துப்பாக்கிசூட்டிற்கு இலக்கான இளைஞன் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கே சிகிச்சை பலனின்றி இன்றுகாலை  மரணமடைந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வாள்வெட்டிற்கு இலக்கான குடும்பத்தினை சேர்ந்த மூவரும் மாவட்ட மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தையாரான செல்வக்குமார் மேலதிக சிகிச்சைக்காக  யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகி இன்றையதினம் மரணமடைந்த  02 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 28 அகவையுடைய திருச்செல்வம் கபிலன் என்ற இளைஞன் பல்கலைக்கழகம் தெரிவான மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைதுசெய்துள்ளார்கள்.

அவர்களில் முதன்மையான  புதுக்குடியிருப்பு சிவநகரினை  சேர்ந்த 22 அகவையுடைய நபர் ஒருவரும் புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவரும், 22 அகவையுடை ஆனந்தபுரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவரும் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இந்த குழுவினை சேர்ந்த இருவரை கைதுசெய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை இந்த சம்பவத்தின் போது துப்பாக்கிசூடு யார் நடத்தினார்கள் என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்த பொலிசார் வாள்வெட்டிற்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதினால் அவர்களிடம் இருந்து வாக்குமூலத்தினை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/40330

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.