Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமலாக்கப்பட்டோர் அனைவரும் புலிகளுடன் தொடர்புபடையவர்கள் : அதற்காக பாதுகாப்பு பிரதானியை தண்டிக்க முடியாது

Featured Replies

காணாமலாக்கப்பட்டோர் அனைவரும் புலிகளுடன் தொடர்புபடையவர்கள் : அதற்காக பாதுகாப்பு பிரதானியை தண்டிக்க முடியாது

 

(ஆர்.யசி)

பாதுகாப்பு படைகளின் பிரதானி மீதான குற்றச்சாட்டில் , காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவருமே விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள், ஆயுத மோதலின் போதே பிரதான புலிகள் காணாமல் போனார்கள். 02.jpgஇவர்கள் குறித்து பாதுகாப்பு படைகளின் பிரதானியை தண்டிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுயாதீன அணி  தெரிவித்துள்ளது. 

கடத்தப்பட்டவர்கள் மாணவர்களா, அல்லது வேறு யாருமா என  தெரியாது. ஆனால் இந்த காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு, கடத்தல், கொலை, கைதுகள் என அனைத்துமே விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவை   எனவும் அவ்வணி குறிப்பிட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுயாதீன அணியினர் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே    பாராளுமன்ற உறுப்பினர்களான  டிலான் பெரேரா, எஸ்.பி திசாநாயக ஆகியோர் இதனை குறிப்பிட்டனர் .

http://www.virakesari.lk/article/40373

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் தரப்பால் சிங்களத்திற்கு கொடுக்கப்படும் அவகாசங்களினால்  தான் ..... இப்படியான தினாவெட்டு யுக்திகளை தயாரிக்கின்றார்கள்.

  • தொடங்கியவர்

காணாமல் ஆக்கப்பட்ட – அனைவரும் புலிகளே!!

 
 
Untitled-103-620x405.jpg
 

பாது­காப்­புப் படை­க­ளின் பிர­தானி மீதான குற்­றச்­சாட்­டில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் அனை­வ­ருமே விடு­த­லைப்­பு­லி­க­ளு­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள். ஆயுத மோத­லின்­போதே புலி­கள் காணா­மல் போனார்­கள். அவர்­க­ளுக்­கா­கப் பாது­காப்பு படை­க­ளின் பிர­தா­னியைத் தண்­டிக்க நினைப்­பது கண்­டிக்­கத்­தக்­கது.

இவ்வாறு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் சுயா­தீன அணி தெரி­வித்­துள்­ளது.

கடத்­தப்­பட்­ட­வர்­கள் மாண­வர்­களா அல்­லது வேறு யாருமா என்று தெரி­யாது. ஆனால் இந்­தக் காலத்­தில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச் சூடு, கடத்­தல், கொலை, கைது­கள் என்று அனைத்­துமே விடு­த­லைப் புலி­க­ளு­டன் தொடர்­பு­பட்­டவை என­வும் அந்த அணி குறிப்­பிட்­டுள்­ளது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் சுயா­தீன அணி கொழும்­பில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்­ளது.

அந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டிலான் பெரேரா தெரி­வித்­த­தா­வது:-
போர்க் குற்­றங்­கள் குறித்த நட­வ­டிக்­கை­க­ளில் இரா­ணு­வம் மீது கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை முன்­னெ­டுக்க வேண்­டும் என்று வடக்­கின் அர­சி­யல்­வா­தி­யான சிவா­ஜி­லிங்­கம் கூறி­யுள்­ளார்.

ஆனால் இரண்டு தினங்­க­ளுக்கு முன்­னர் அமெ­ரிக்க அரச தலை­வர் கூறி­யது என்ன?. அமெ­ரிக்க இரா­ணு­வம் மீது எந்­தப் பன்­னாட்டு நீதி­மன்­ற­மும் நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது என்று கூறி­விட்­டார். பன்­னாட்டு நீதி­மன்­றம் இறந்­து­விட்­டது என்­பதை தெரேசா மேயும் கூறி­விட்­டார்.

எமது நாட்­டி­லும் இரா­ணு­வம் மீதும், முன்­னாள் அரச தலை­வர் மகிந்த, முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் மீதும் இரா­ணுவ குற்­றங்­களை சுமத்தி தண்­டிக்க முயற்­சித்த பன்­னாட்­டுத் தலை­வர்­களே இன்று அவர்­க­ளின் நாட்­டில் பன்­னாட்டு நீதி­மன்­றத்­துக்கு இட­மில்லை என்று கூறி­விட்­ட­னர்.

வடக்­கின் அர­சி­யல்­வா­தி­கள் இப்­போ­தா­வது இந்­தக் கருத்­துக்­க­ளைக் கைவிட்டு நல்­லி­ணக்­கப் பய­ணத்­துக்கு இடம் கொடுக்க வேண்­டும். மகிந்த ராஜ­பக்­ச­வுக்­கும் – இந்­தியத் தலைமை அமைச்­ச­ருக்­கும் இடை­யில் ஏற்­பட்ட சந்­திப்­பின் மூல­மாக இந்த நாட்­டில் மீண்­டும் மக்­க­ளாட்சி அரசு உரு­வா­கும் வாய்ப்­பும் நம்­பிக்­கை­யும் எழுந்­துள்­ளது. அதனை தமிழ் தலை­மை­கள் சீர­ழித்­து­விட வேண்­டாம் என்று கேட்­டுக்­கொள்­கின்­றோம் – என்­றார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எஸ்.பி.திசா­நா­யக தெரி­வித்­த­தா­வது:-
இந்த நாட்­டின் பாது­காப்பு அமைச்­சர் அரச தலை­ வர் மைத்­திரி. ஆனால் பாது­காப்பு படை­க­ளின் பிர­தானி மீது பல்­வேறு விமர்­ச­னங்­கள் எழு­கின்­றன. பாது­காப்பு படை­க­ளின் பிர­தா­னி­யைக் கைது செய்ய அரசு முயற்­சித்து வரு­கின்­றது. இதன் பின்­ன­ணி­யில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே உள்­ளார்.

காணா­மல் போனோர் அனை­வ­ரும் விடு­த­லைப் புலி­கள். போர்க் கால­கட்­டத்­தில் நாட்­டுக்கு எதி­ராக சதி செய்­த­வர்­கள். இப்­போது கடத்­தல் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­பட்ட பாது­காப்பு படை­யி­னர் மீது குறி வைக்­கப்­ப­டு­கின்­றது. இரா­ணு­வம் மீது தவ­றான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து பாது­காப்பை பல­வீ­னப்­ப­டுத்த முயற்­சித்து வரு­கின்­ற­னர்.

புல­னாய்வு பிரி­வி­னர் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து நாட்­டின் பாது­காப்பை பல­வீ­னப்­ப­டுத்த நட­வைக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது. குற்­றச்­சாட்டு முன்­வைக்­கும் நபர்­க­ளின் பின்­ன­ணியை ஆராய வேண்­டும்.

சரத் பொன்­சேகா யார் என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும். இரா­ணு­வத்­தில் உள்ள பெண்­கள் விட­யத்­தில் அவர் நடந்து கொண்ட விட­யங்­கள், ஏனைய நட­வ­டிக்­கை­கள் குறித்து முறைப்­பா­டு­ கள் பல உள்­ளன. எமது இரா­ணு­வம் ஒழுக்­க­மான இரா­ணு­வ­மா­கும். மியன்­மார் போன்ற நாடு­களை போல எமது நட்டு இரா­ணு­வம் ஒரு­போ­தும் செயற்­பட்­ட­தில்லை.

அரச தலை­வர் இந்த செயற்­பா­ டு­கள், அர­சி­யல்­வா­தி­க­ளின் செயற்­பா­டு­கள் குறித்து கவ­னம் செலுத்த வேண்­டும். உட­ன­டி­யாக சரத் பொன்­சே­கா­வின் பத­வி­க­ளைப் பறித்து அமைச்­சுப்­ப­த­வி­யை­யும் பறிக்க வேண்­டும்.

அரச தலை­வ­ரின் பாது­காப்பு அமைச்­சின் பாது­காப்பு பிர­தா­னி­க­ளைத் தண்­டிக்க முயற்­சிப்­பது இறு­தி­யில் அரச தலை­வரை நெருக்­க­டிக்­குள் தள்­ளும் செயற்­பா­டாக அமை­யும்.- என்­றார்.

கேள்வி -– – வடக்­கில் பொது­மக்­கள் இரா­ணுவ தரப்­பி­டம் தஞ்­சம் புகுந்த நிலை­யில் காணா­மல் போயுள்­ள­னர் என்­றும் பல குற்­றச்­சாட்­டுக்­கள் உள்­ளன?. இதை இல்­லை­யெ­னக் கூறு­கின்­றீர்­களா?

பதில் – – அவ்­வா­றான சம்­ப­வங்­க­ளும் உள்­ளன. அதை நாம் மறுக்­க­வில்லை. எமக்­குத் தெரி­யாத பல சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றி­ருக்க முடி­யும். அவற்றை நாம் கண்­டிக்­கின்­றோம். வடக்­கில் பொது மக்­கள் தண்­டிக்­கப்­பட்­டால் அத­னைக் கண்­டிக்­கின்­றோம். ஆனால் போர்க் கால­கட்­டத்­தில் பொது­மக்­களை வலுக்­கட்­டா­ய­மாக பிர­பா­க­ரன் சிறைப்­பி­டித்து வைத்­தி­ருந்­தார்.

பிர­பா­க­ரன் மூல­மாக அதி­க­மாக கொல்­லப்­பட்­டது தமிழ் தலை­வர்­களே என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது. காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் குறித்த ஆணைக்­கு­ழு­வின் செயற்­பா­டு­களை நாம் ஆத­ரிக்­கின்­றோம். அப்­போது நாம் அர­சில் இருந்து முழு­மை­யாக ஆத­ரவு தெரி­வித்­தோம். பாது­காப்பு பிர­தானி மீதான குற்­றச்­சாட்­டில் காணா­மல் ஆக்­கப்­பட்ட அனை­வ­ருமே புலி­கள் என்­ப­தையே நாம் கூறு­கின்­றோம் -– என்­றார்.

https://newuthayan.com/story/10/காணாமல்-ஆக்கப்பட்ட-0அனைவரும்-புலிகளே.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.