Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளையர்கள் எங்களுக்கு சட்டம், ஒழுங்கை கற்பிக்கமுடியாது சர்வதேச மன்னிப்புச் சபையைச் சாடுகிறார் வீரவன்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு சட்டம், ஒழுங்கை கற்பிக்கமுடியாது சர்வதேச மன்னிப்புச் சபையைச் சாடுகிறார் வீரவன்ச

வெள்ளையர்கள் எங்களுக்கு சட்டம் ஒழங்கு பற்றிக் கற்பிக்க முடியாது. சட்டவரம்புக்கு உட்படாத நாடாக இலங்கையைக் காட்ட முயல்கிறது சர்வதேச மன்னிப்புச் சபை.

இலங்கை கிரிக்கெட் அணிமீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி விடுதலைப் புலிகளுக்கு உதவதேவ அவர்கள் முயற்சிக்கின்றனர். இவ்வாறு சர்வதேச மன்னிப்புச் சபையைக் கண்டித்தார் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.

மேற்கிந்தியாவில் இடம்பெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கட் அணி சட்ட ஒழுங்கின்படி செயற் பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப் புச் சபை தெரிவித்திருந்தது.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இது தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றினார். அப்போதே அவர் மேற்கண்டவாறு சர்வதேச மன்னிப்புச் சபையைச் சாடினார்.

இலங்கை கிரிக்கட் அணி தற்போது இடம்பெற்று வருகின்ற உலக்கிண்ணக் கிரிக்கட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிகளை ஈட்டியுள்ளது. உலகக் கிண்ணத்தை எமது அணி கைப்பற்றும் வாய்ப்பு நிறையவே உண்டு.

ஆனால், வெள்ளைக்காரர்கள் அந்த வெற்றிகளைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. சர்வதேச மன்னிப்புச்சபை பல சர்வதேச அமைப்புகளுடன் சேர்ந்து இலங்கை அணி வீரர்களின் மனநிலையைப் பாதிக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

வெள்ளையர்களின் இந்தச் செயற்பாடுகளுக்கு எதிராக இந்த நாட்டு மக்கள் பொங்கியெழ வேண்டும். சர்வதேச மன்னிப்புச் சபையை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து அரசின் சார்பில் அமைச்சர் ஜெராஜ் பெர்னாண்டோபுள்ளேயும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சர்வதேச மன்னிப்புச் சபைக்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

-உதயன்

அதானே! இராணுவ ஆயத தளபாடங்களையும், கடனையும், பொருள் உதவிகளையும் சிறீ லங்கா பேரினவாத அரசிற்கு கொடுத்துவிட்டு வெள்ளக்காரன்கள் வாயைப் பொத்திக் கொண்டும், கடலை சாப்பிட்டுக் கொண்டும், சூரியக் குளியல் எடுத்துக் கொண்டும் சும்மா இருக்க வேண்டும். சிறீ லங்கா சிங்கள பேரினவாதத்திற்கு உப்படியெல்லாம் சட்டம், ஒழுங்கை கற்பிக்க முயற்சிக்கக் கூடாது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது இந்த வில்லுப்பாட்டுக்கு ஆமாப் போடுவாங்களே அதே மாதிரி நீங்க செய்கிறது எல்லாவற்றிக்கும் ஆமாப் போட்டுக்கொண்டிருந்தால் உங்க நண்பன், உண்மையை சொல்லத் தொடங்கி விட்டால் உங்க எதிரி அப்படித்தானே?

இலங்கை கிரிக்கட் அணி தற்போது இடம்பெற்று வருகின்ற உலக்கிண்ணக் கிரிக்கட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிகளை ஈட்டியுள்ளது. உலகக் கிண்ணத்தை எமது அணி கைப்பற்றும் வாய்ப்பு நிறையவே உண்டு.

ஆனால், வெள்ளைக்காரர்கள் அந்த வெற்றிகளைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. சர்வதேச மன்னிப்புச்சபை பல சர்வதேச அமைப்புகளுடன் சேர்ந்து இலங்கை அணி வீரர்களின் மனநிலையைப் பாதிக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

வெள்ளையர்களின் இந்தச் செயற்பாடுகளுக்கு எதிராக இந்த நாட்டு மக்கள் பொங்கியெழ வேண்டும். சர்வதேச மன்னிப்புச் சபையை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்றார்.

தமிழரின் உரிமை போராட்டம் குறித்து இலங்கை அரசின் பிரச்சாரம் எந்த அளவுக்கு உண்மை என்பதை இனியாவது இந்த வெள்ளையர்கள் புரிந்து கொள்வார்களா?

சர்வதேச ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் இந்த செய்தி அவர்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கைகளை செய்யுங்கள்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைவிட நகைச்சுவை என்னவென்றால், வருடவருடம் நோர்வே அரசு, ஜேவிபிக்கு நிதியுதவி செய்கின்றது( கோடிக்கணக்கில், செய்து இவர்களின் வாயைப் பொத்த வைக்க). ஆனால் நிதி முடிகின்றபோது, நோர்வேயைப் பார்த்து குரைக்க வெளிக்கிடுவார்கள்.

இப்போது உலக நாடுகளைப் பார்த்து இவர்கள் போடும் கூச்சலும், அவ்வாறன ஒன்றே. பின்பு இவர்களைச் சாந்தப்படுத்த வெளிநாட்டு அரசாங்கங்கள், நிதியுதவி செய்வார்கள், செய்ய வைப்பதற்கான அறிக்கையே இது.

இலங்கையரசியல்வாதி ஒருவர் சொன்னது போன்று, விமல்வீரவன்சா தலைமுடியைப் பதப்படுத்துவதற்கு கூட, வெளிநாட்டுக் காசு தான் தேவைப்படுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதானே காட்டு மிராண்டிகளுக்கு என்னெண்டு மனிதவுரிமையை வெள்ளையர்கள் படிப்பிப்பார்கள் நரபலி எடுத்தவர்களல்லா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர்களில், இரண்டு விதமாக முன்பு பிரிவினைகள் இருந்தன. ஒன்று கண்டிச்சிங்களவன்( அவனை மேல் சிங்களவன் என்பார்கள்) இதர இடங்களில் வசித்தவர்கள் கீழ்ச் சிங்களவர்கள். கீழ்ச் சிங்களவர்கள் நரமாமிசம் உண்ணும் பழக்கமுள்ளவர்களாக முன்பு இருந்தார்களாம்.

அந்த வம்சவழியில் வந்தவர்கள் தான், அம்பாந்தோட்டையில் பிறந்த மகிந்த ராசபக்சாவும், விமல்வீரவன்சவும். முன்பு சிங்களவர்களின் பிணத்தைத் தின்றார்கள். இப்போது தமிழனின் பிணத்துக்கு அலைகின்றார்கள்.

சர்வதேச ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் இந்த செய்தி அவர்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கைகளை செய்யுங்கள்!

இப்படியான வேலைகள் தான் உடனடியாக செய்யவேண்டும்,ஆதரங்களுடன்......

சர்வதேச ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் இந்த செய்தி அவர்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கைகளை செய்யுங்கள்!

வெகு விரைவாக முனைப்புடன் செய்ய வேண்டிய செயலிது.

நரமாமிச பட்சணிகளுக்கு சட்டம் ஒழுங்கு ஒரு கேடா?

ஈழத்திலிருந்து

ஜானா

அமெரிக்கத் தூதுவர் ரொபேட் ஓ பிளாக் ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்க சந்திப்பு

சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேட் ஓ பிளாக் (Robert O Blake) ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சந்திப்பானது இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சந்திப்பில் தற்போது எழுந்துள்ள இராணுவ மற்றும் அரசியல் நெருக்கடிகள் குறித்தே கலந்துரையாடப்பட்டுள்ளது.

பதிவு.

சோமவன்ச இப்பிடியெல்லோ செய்து போட்டார், அமெரிக்கர்கள் என்றால் வெள்ளைக்காரர் இல்லையோ??? விமலுக்கு எதிராக சோமவன்ச செய்துபோட்டாரே....................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.