Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்­தீ­வில் வறட்­சி­- குதி­ரை­கள் உள்­ளிட்ட கால்­ந­டை­கள் இறப்பு!!

Featured Replies

நெடுந்­தீ­வில் வறட்­சி­- குதி­ரை­கள் உள்­ளிட்ட கால்­ந­டை­கள் இறப்பு!!

 
 
neduntheevu_horse-1-600x400.jpg

 

 

நெடுந்­தீ­வில் வறட்­சி­யின் கொடு­மை­யால் குதி­ரை­கள் உள்­ளிட்ட கால்­ந­டை­கள் பெரும்­பா­திப்பை எதிர்­கொண்­டுள்­ளன. அங்­குள்ள குதி­ரை­கள் உரிய பரா­ம­ரிப்பு இன்­மை­யால் தொடர்ந்து உயி­ரி­ழந்து கொண்­டி­ருக்­கின்­றன என்று பிர­தேச மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர். இந்த விட­யத்­தில் செய்­ய­வேண்­டி­ய­வற்­றைச் செய்­துள்­ளோம்.

மேல­திக நட­வ­டிக்­கை­கள் பற்­றிய திட்­டங்­கள் எது­வும் அதி­கா­ரி­க­ளி­டம் இல்லை அவர்­களே கூறு­கின்­ற­னர்.

நெடுந்­தீ­வில் இது­வரை 10 குதி­ரை­கள் உயி­ரி­ழந்­துள்­ளன என்று பிர­தேச மக்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் நெடுந்­தீ­வி­லேயே குதி­ரை­கள் காணப்­ப­டு­கின்­றன. இங்கு வரு­கின்ற சுற்­று­லாப் பய­ணி­க­ளும் ஆர்­வத்­து­டன் அவற்­றைப் பார்த்­துச் செல்­கின்­ற­னர்.

குதி­ரை­களை அழி­வி­லி­ருந்து காப்­பற்ற எந்த முயற்­சி­க­ளும் மேற்­கொள்­ளப்­பட வில்லை.

இதன் விளை­வாக நாளாந்­தம் ஒரு குதிரை வீதம் உயி­ரி­ழந்து – அழிந்து கொண்­டி­ருக்­கின்­றது. குதி­ரை­களை அழி­வி­லி­ருந்து பாது­காக்­க­வும், அவற்­றைப் பேண­வும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று அந்­தப்­ப­குதி மக்­கள் கோரு­கின்­ற­னர்.

நெடுந்­தீ­வுப் பகு­தி­யில் குதி­ரை­க­ளுக்­கான லயம் காணப்­ப­டு­கின்­றது. தற்­போ­தைய வறட்­சி­யைக் குதி­ரை­கள் எதிர்­கொள்­ள­மு­டி­யாது அந்­த­ரித்­துத் திரி­கின்­றன. மேய்ச்­ச­லுக்­குப் புல் இல்­லா­த­தோடு குடிப்­ப­தற்­குப் போதிய தண்­ணீ­ரும் இல்­லா­த­தால் இது­வரை சுமார் 10க்கும் மேற்­பட்ட குதி­ரை­கள் உயி­ரி­ழந்­துள்­ளன.

எனவே, அரச திணைக்­க­ளங்­கள் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு குதி­ரை­க­ளைப் பாது­காப்­ப­தற்­கும் அவற்றை உரிய முறை­யில் பரா­ம­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டு­மென்று பிர­தேச பொது­மக்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

”நெடுந்­தீ­வுப் பிர­தேச செய­ல­கத்­தின் ஊடா­கக் குதி­ரை­க­ளுக்­குத் தண்­ணீர் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. ஆனால் தற்­போ­தைய வறட்சி கார­ண­மாக அண்­மைய நாள்­க­ளா­கக் குதி­ரை­கள் இறந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. தண்­ணீரை மட்­டும் குடித்து அவை உயிர் வாழ­மாட்­டா­தவை. குதி­ரை­க­ளுக்­குத் தேவை­யான புற்­கள் இல்லை. இதுவே முதன்­மைப் பிரச்­சி­னை­யாக உள்­ளது. அது தொடர்­பில் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­யின் கவ­னத்­துக்­குக் கொண்டு சென்­றுள்­ளோம்” என்று நெடுந்­தீவு பிர­தேச சபைச் தவி­சா­ளர் ரொஸாந் தெரி­வித்­தார்.

”நெடுந்­தீ­வில் உள்ள குதி­ரை­க­ளுக்­குத் தண்­ணீர் பிர­தேச செய­ல­கம் ஊடாக வழங்­கப்­ப­டு­கி­றது. ஆனால் அவற்­றுக்­கான புற்­கள், உண­வு­கள் வழங்க எந்த ஏற்­பா­டும் இல்லை. இத­னால் குதி­ரை­கள் இறக்­கின்­றன. அது­மட்­டு­மல்­லாது வயது முதிர்ந்த குதி­ரை­கள் இறந்து கொண்­டி­ருக்­கின்­றன” என்று வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­கள அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

”நெடுந்­தீ­வில் வறட்சி கார­ண­மா­கக் குதி­ரை­கள் மட்­டும் பாதிப்­ப­டை­ய­வில்லை. இங்கு வாழ்­கின்ற ஆயி­ரத்து 428 குடும்­பங்­க­ளும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அவர்­க­ளுக்­குக் குடி­தண்­ணீரை தாரப்­பிட்­டி­யி­லி­ருந்து எடுத்­து­வந்து விநி­யோ­கிக்­கின்­றோம். ஆனால் இந்த நிலைமை தொடர்ந்­தால் குடி­தண்­ணீர் இல்­லாத ஆபத்­துக்கு வர­லாம் என்ற ஆபத்து உள்­ளது. நாம் மாவட்­டச் செய­ல­கத்­தின் ஊடாக வறட்சி நிவா­ர­ணம் விவ­சா­யி­க­ளுக்கு வழங்கி வரு­கின்­றோம். ஆனால் அங்­குள்ள ஏனைய மக்­க­ளும் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்­தப் பிர­தே­சத்­தில் உள்ள குதி­ரை­க­ளில் வயது முதிர்ந்த குதி­ரை­கள் வறட்­சி­யைத் தாங்க முடி­யாது உயி­ரி­ழந்­துள்­ளன.

அது­மட்­டு­மல்­லாது தற்­போது உள்ள குதி­ரை­க­ளும் தண்­ணீரை மட்­டும் குடித்து வாழ்­வ­தால் மெலிந்த நிலை­யில் ஆபத்தை எதிர்­நோக்கி உள்­ளன. வறட்­சி­யால் குதி­ரை­கள் மட்­டு­மல்­லாது மாடு­க­ளும் உயி­ரி­ழந்­துள்­ளன. இது­வ­ரை­யில் 15 மாடு­கள் இறந்­துள்­ளன. மழை இல்­லாத நிலைமை தொடர்ந்­தால் பாதிப்பு அதி­க­மா­கும்” என்று நெடுந்­தீ­வுப் பிர­தேச செய­லா­ளர் தெரி­வித்­தார்.

https://newuthayan.com/story/10/நெடுந்­தீ­வில்-வறட்­சி­-குதி­ரை­கள்-உள்­ளிட்ட-கால்­ந­டை­கள்-இறப்பு.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.