Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமரர் அமிர்தலிங்கத்தின் 91 ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை

Featured Replies

சிங்களத் தலைவர்களின் மனநிலை மாறவில்லை- சித்தார்த்தன் எம்.பி.!!

 
 
siththar001.jpg
 
 
 

தமிழ் மக்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்­கக் கூடாது என்ற மன­நி­லை­யி­ லேயே சிங்­க­ளத் தலை­வர்­கள் இருந்து வரு­கின்­ற­னர். அவர்­க­ளது அந்த மன­நி­லை­யில் சிறு­துளி மாற்­றம் கூட இன்­னும் ஏற்­ப­ட­வில்லை. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­ மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­தன் தெரி­வித்­தார்.

முத­லா­வது தமிழ் எதிர்க்­கட்­சித் தலை­வர் அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்­தின் 91ஆவது பிறந்­த­நாள் நிகழ்வு யாழ்ப்­பா­ணம் பொது­நூ­லக மண்­ட­பத்­தில் நேற்று மாலை இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

வட­க்குக் கி­ழக்­கில் ஒவ்­வொரு தமிழ்க் கிரா­மத்­தி­லும் அம­ரர் அமிர்­த­லிங்­கத்­தின் கால்­கள் பதிந்­துள்­ளன. மக்­க­ளோடு மக்­க­ளாக இருந்த ஒரே­யொரு தலை­வர் அவர் மட்­டுமே. இந்­திய வம்­சா­வளி மக்­க­ளின் குடி­யு­ரிமை பறிக்­கப்­பட்­ட­போது அதற்கு எதி­ரா­கக் குரல் கொடுத்­த­து­டன் இங்­குள்ள சிறு­பான்மை இனம் சுதந்­தி­ர­மாக வாழ கூட்­டாட்­சித் தீர்வு தான் ஒரே வழி என்று கூறி­யி­ருந்­தார்.

ஜி.ஜி.பொன்­னம்­ப­லம் ஒற்­றை­யாட்­சியை ஏற்­றுக்­கொண்ட போதும் அதனை நிரா­க­ரித்து கூட்­டாட்­சிக்­கா­கப் போரா­டி­ய­வர் அமிர்­த­லிங்­கம் மட்­டுமே. 1980ஆம் ஆண்­டு­க­ளில் மாவட்ட சபையை அவர் ஏற்­றுக் கொண்­டார். மக்­கள் படும் துய­ரங்­க­ளா­லும் முத­லில் இந்த அதி­கா­ரத்­தை­யா­வது பெறு­வோம் என்ற நோக்­கி­லேயே அவர் அதனை ஏற்­றுக்­கொண்­டார. இதனை முதல் படி­யாக வைத்­துப் பய­ணித்­தார்.

முன்­னைய காலத்­தி­லும் சரி இப்­போ­தும் சரி சிங்­கள தலை­வர்­கள் கடந்த 70 ஆண்­டு­க­ளாக ஒரே கொள்­கை­யில் உள்­ள­னர். அதி­கா­ரங்­களை வழங்­கக் கூடாது என்­ப­தில் உறு­தி­யாக உள்­ள­னர். இப்­போது உள்­ள­வர்­க­ளி­டத்­தி­லும் சிறி­த­ளவு கூட மாற்­றம் ஏற்­ப­ட­வில்லை. ஆனால நாமும் எமது இனத்­துக்­காக தொடர்ந்­தும் போராட வேண்­டிய நிலை­யில் இருக்­கின்­றோம் – என்­றார்.

https://newuthayan.com/story/08/சிங்களத்-தலைவர்களின்-மனநிலை-மாறவில்லை-சித்தார்த்தன்-எம்-பி.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அரசியல் தீர்வு விடயத்தில் அரசுடன் பேசுவது தனிப்பட்ட வியாபாரம் அல்ல - வரதராஜப்பெருமாள்

 

(எம்.நியூட்டன்)

தனிப்பட்ட வியாபாரம் அல்ல.  இது இரகசியமானது அல்ல. மக்களின் பிரச்சினை மக்களுக்குத்தான் கூறவில்லை என்றாலும் உங்களிடமுள்ளவர்களுக்காவது கூறுங்கள் என வட கிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

varadarajapperumal.jpg

முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமரர் அமிர்தலிங்கத்தின் 91 ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றபோது நினைவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், 

அரசியல் தீர்வு விடையத்தில் அரசாங்கத்துடன் பேசுகின்றர்கள் அதில் என்ன இருக்கிறது என்ன நடக்கின்றது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். அது தான் சிரமமாக இருப்பினும் உங்களுடன் கூட உள்ளவர்களுக்காவது தெளிவுபடுத்தவேண்டும்.

இன்று என்ன தீர்வு அரசாங்கத்துடன் பேசுகின்றார்கள் என்றால் ஒருவருக்கும் தெரியாது. தனிநாட்டுக்குப் போக முடியாது. சமஷ்டிக்குள் போக முடியாது. அதி உச்சமான விடையத்தை கேட்கமுடியாது. என்றால் என்னதான் தேவை என்பதை சொல்லவேண்டும். 

தனிப்பட்ட வியாபாரம் அல்ல.  இது இரகசியமானது அல்ல. மக்களின் பிரச்சினை மக்களுக்குத்தான் கூறவில்லை என்றாலும் உங்களிடமுள்ளவர்களுக்காவது கூறுங்கள்.

வடக்கு கிழக்கு முதலமைச்சராக என்னைக் கூறுகின்றார்கள். ஆனால் இது வந்த போது அண்ணன் அமிர்தலிங்கத்தையே இதனை ஏற்றுக்கொள்ளுமாறு கோரினோம். ஆனால் இதனை ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது விருப்பத்திற்கு மாறாகவே அதனை அவர் ஏற்றுக்கொள்ளிவல்லை. அன்று அவர் அதனை ஏற்றிருந்தால் அவர் தான் வடக்கு கிழக்கின் முதல் முதலமைச்சராக இருப்பார். அவ்வாறு வந்திருப்பாராகஇருந்தால் வடக்கு கிழக்கு மாகாணம் என்பது இன்றும் இருந்திருக்கும். இன்று அவர் உயிருடன் இருந்திருப்பார். பாதுகாக்கப்பட்டிருப்பார் என்றார்.

http://www.virakesari.lk/article/40561

  • தொடங்கியவர்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 91வது பிறந்தநாள் நினைவுப் பேருரை.

 

 

zzzzzzzzzzzzzz.jpg?resize=640%2C280
 
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 91வது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வு அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் தலைவர் நவாலியூர் க.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30மணியளவில் யாழ். பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா (முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), சிறப்பு விருந்தினராக தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட் தலைவர், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்), கௌரவ விருந்தினராக அ.வரதராஜப்பெருமாள் (முன்னாள் முதலமைச்சர் வடக்கு கிழக்கு மாகாணசபை) ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
 
அத்துடன் மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், சுகிர்தன் ஆகியோரும், நடராஜா (பனம்பொருள் அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர்) ராஜேந்திரம் (மாவட்ட அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர்), மகேஸ்வரி ஆகியோருடன் அ.அமிர்தலிங்கம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரோடு நெருக்கமாக பழகியவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
 
இந்நிகழ்வின்போது வடமாகாணம் முழுவதிலுமான பாடசாலைகளில் நடைபெற்ற அ.அமிர்தலிங்கம் அவர்கள் பற்றிய பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றவருக்கு தங்கப்பதக்கமும், இரண்டாம் இடத்தைப் பெற்றவருக்கு வெள்ளிப் பதக்கமும், மூன்றாம் இடத்தைப் பெற்றவருக்கு வெண்கலப்பதக்கமும் வழங்கப்பட்டதோடு, அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர் மற்றும் கௌரவ விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன. நன்றியுரையினை அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையைச் சேர்ந்த தங்கமுகுந்தன் ஆற்றினார்.
P1500826-4.jpg?resize=640%2C426P1500865.jpg?resize=640%2C360P1500911.jpg?resize=640%2C360

 

 

http://globaltamilnews.net/2018/95993/

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்தின் அரசியல்வாரிசுகள்.. யார் யார் என்று இதில பார்ப்பீங்க.

ஒருத்தர்.. வவுனியா சித்திரவதை முகாம்கள் புகழ் சித்தார்த்தன்.

மற்றவர் முன்னாள் மண்டையன் குழுக்கள் புகழ் வரதராஜப் பெருமாள். 

இதில் அமிர்தலிங்கம் என்ற விணாப்போனது.. இரத்தக்கறை படியாத சனநாய் அக வாதியாம். வந்திட்டுதுங்கள். கடந்த 10 வருசமா இவை செய்யுற அரசியலே இதுதான்.. தங்களுக்குள் தாங்களே கூட்டம் போட்டு பேசிக் கொள்வது. இவர்களின் பேச்சை சிங்கள தேசத்து தெருநாய் கூட கேட்பதில்லை. ?

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

வலிந்துகொண்டுவரப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - சித்தார்த்தன் 

 

 

(எம்.நியூட்டன்) 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலிந்து கொண்டுவரப்பட்டது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி தான்  தெளிவான சிந்தனையுடன் கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு உருவாக்கப்பட்ட கட்சியாகும் என  பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார், 

sitharthanm.jpg

இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கத்தின் 91 ஆவது பிறந்தநாள் விழா யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் அங்கு தெரிவித்ததாவது, 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலிந்து கொண்டுவரப்பட்டது. ஆனால்  தமிழர் விடுதலைக் கூட்டணி தான் தலைவர்களுடன் பேச்சுவார்தை நடத்தப்பட்டு உருவாக்ப்பட்ட கூட்டணி. அது மிக விஸ்தீரணமாக மிக நீண்டகாலம் தமிழ் மக்களுக்கான போராட்டங்கள், விடுதலை நோக்கிய பாதை போன்ற மிகத் தெளிவான சிந்தனையுடன் பற்றுறுதியுடன் சென்று கொண்டிருந்தது.

அண்ணன் அமிர்தலிங்கத்தை இன்று நினைவுகூருகின்ற வேளையில் தமிழ் மக்களுக்காக விட்டுச் சென்ற கொள்கைகள் விதிகள் கோட்டுபாடுகளை நாங்கள் ஞாபகப்படுத்த வேண்டும். 

அவை பாடமாக இருக்க வேண்டும். அந்தப் பாடத்தில் இருந்து நாங்கள் எங்களைத் திருத்தி தொடர்ந்து செல்ல வேண்டும். நாங்கள் பாடம் படிக்கின்றோம். ஆனால் திருந்துவதாக இல்லை. இதனை மாற்றுவதன் மூலம் சரியான அரசியல் தீர்வு ஒன்றை பெற வேண்டும். இதற்கு ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றார். 

http://www.virakesari.lk/article/40560

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.