Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் அச்சுறுத்தியதாக பெண் ஊடகவியலாளர் முறைப்பாடு

Featured Replies

வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் அச்சுறுத்தியதாக பெண் ஊடகவியலாளர் முறைப்பாடு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

4937.jpg?resize=693%2C800

 

வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் என அறிமுகப்படுத்திய ஒருவர் தொலைபேசி ஊடாக தன்னை அச்சுறுத்தினார் என யாழில் உள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவர் யாழ். காவல்நிலையத்தில் ; முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதேவேளை எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ் மக்கள் அதிரும் படியான செய்தி வரும் , அதை பிரசுரிக்க தயாராக இருங்கள் எனவும் தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில்.இருந்து வெளிவரும் பத்திரி;கை ஒன்றில் வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் தொடர்பான செய்தி வெளிவந்து இருந்தது.

குறித்த செய்தியானது தனக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது எனவும் , அந்த செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் காவல் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தார்.

ஆத்துடன் குறித்த உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் ஒன்றிணைந்து உறுப்பினர் தொடர்பிலான செய்தி வெளிவந்த பத்திரிகையின் பிரதிகள் சிலவற்றையும் , அப்பத்திரிக்கை பிரதி போன்று பெரியளவில் பிரதி செய்யப்பட்டதையும் தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடாத்தி இருந்தனர். அந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உறுப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடாத்தி உறுப்பினரின் உருவ பொம்மையை எரித்தனர்.

அவை தொடர்பிலான செய்தியையும் குறித்த பத்திரிக்கை வெளியிட்டு இருந்தது. அதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை 14ஆம் திகதி வடமாகாண சபை உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் மீண்டும் குறித்த பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடாத்தினார்கள்.

அந்த போராட்டம் தொடர்பிலான செய்தியினை குறித்த பத்திரிகை பிரசுரிக்கவில்லை. அது தொடர்பில் குறித்த மாகாண சபை உறுப்பினரின் ஊடாக இணைப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திய நபர் குறித்த பத்திரிகையின் அலுவலக செய்தியாளருக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு ஏன் அந்த போராட்டம் தொடர்பிலான செய்திகளை வெளியிடவில்லை என கேட்டுள்ளார்.

அதற்கு செய்தியாளர் , அது தொடர்பில் பிரதம ஆசிரியரிடம் கேளுங்கள் என பதிலளித்துள்ளார். அதற்கு அந்நபர் ‘நீங்கள் முதலமைச்சர் சொல்வதனை கேட்டு எழுதிக்கொண்டு இருங்கோ .. 30ஆம் திகதி யாழ்ப்பாணமே அதிருகிற மாதிரி ஒரு சம்பவம் நடக்கும். அதனை எழுத தயாராக இருங்கள்’ என அச்சுறுத்தி உள்ளார்.

குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் யாழ். காவல் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த அலுவலக செய்தியாளர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை முறைப்பாடு செய்தமை தொடர்பில் ஊடகவியலாளர் தெரிவிக்கையில் ,தொலைபேசி ஊடாக எனக்கு அச்சுறுத்தியமையை விட எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணமே அதிர்கிற மாதிரி சம்பவம் நடக்க போவதாக கூறியுள்ளார். எனவே ஏதேனும் பெரியளவிலான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.

ஏனெனில் அன்றைய நாளில் தான் யாழில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட நாளாகும். அதனால் அந்த சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு இனக்கலவரத்தை தூண்டு செயலில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனரா எனும் சந்தேகமும் எழுந்ததால் தான் அது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்தேன்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு நான் சந்தேகிப்பது போல் ஏதேனும் சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளனவா என்பதனை கண்டறிய வேண்டும் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/95930/

  • தொடங்கியவர்

ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துவது ஊடக சுதந்திரத்தை இல்லாமல் செய்யும்

 

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

media-threat.jpg?resize=800%2C333

 

ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துவது ஊடக சுதந்திரத்தை இல்லாமல்ச் செய்யும் நடவடிக்கையாகும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்றின் அலுவலக செய்தியாளர் ஒருவர் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக செயலாளர் என தன்னை அறிமுகம் செய்து கொண்ட நபரால் மிரட்டப்பட்டமையை கண்டித்து மேற்கண்டவாறு கூறினார்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாண குடாநாட்டு ஊடகங்கள் மீது சில வங்குரோத்து அரசியல்வாதிகளும் அவர்களுடன் சேர்ந்து திரிபவர்களும் அச்சுறுத்தல்களை பல்வேறு வழிகளில் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடராகவே நேற்று குறித்த பத்திரிகையின் அலுவலக செய்தியாளர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதையும் குறித்த செய்தியாளர் தனது பாதுகாப்பிற்காக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையும் பார்க்கின்றோம்.

ஏனெனில் ஊடகங்களின் உண்மை செய்திகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இவ்வாறானவர்களினால் தான் மக்களின் அபிவிருத்தி திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.அச்சுறுத்தல்கள் தொடர்வதனால் மக்களுக்கு சரியான தகவல்களை எடுத்து செல்ல ஊடகங்களால் முடிவதில்லை.தற்போதைய சூழ்நிலையில் எந்த தரப்பும் ஊடகங்களின் செய்திகளினால் ஏதாவது பாதிப்புகள் எதிர்கொண்டால் அதற்கான பல ஜனநாயக வழிமுறைகள் பல உள்ளன.

இதை விடுத்து காட்டுவாசிகள் போன்று நடந்து கொள்வதானது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.ஜனநாயக நாடுகளில் முக்கிய தூண்களில் ஒன்றாக உள்ள ஊடகம் மதிக்கப்பட வேண்டும்.ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். இதை விடுத்து ஊடகங்களை அச்சுறுத்துவது அச்சு ஊடகங்களின் பிரதிகளை எரிப்பது ஊடகவியலாளர்களை மிரட்டி கேவலப்படுத்துவது எத்தரப்பினாலும் ஏற்க முடியாததாகும்.

தற்போதய அரசாங்கம் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக சகல தரப்பினரதும் அபிப்பிராயங்களையும் அறிய முக்கியத்துவம் கொடுத்துள்ளது எனவே இவ்வாறான கேவலமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை சம்பந்தப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்

http://globaltamilnews.net/2018/95968/

  • தொடங்கியவர்

பெண் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!

 

media-720x450.png

வட.மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் என அறிமுகப்படுத்திய ஒருவர் தொலைபேசி ஊடாக தன்னை அச்சுறுத்தினாரென யாழிலுள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் “எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ் மக்கள் அதிரும்படியான செய்தி வரும். அதை பிரசுரிக்க தயாராக இருங்கள்” என சந்தேகநபர் தெரிவித்ததாகவும் அப்பெண் ஊடகவியலாளர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வட.மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் தொடர்பான செய்தி வெளிவந்திருந்தது.

குறித்த செய்தியானது தனக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது எனவும் அந்த செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் சம்பந்தப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

அதேவேளை குறித்த உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் ஒன்றிணைந்து உறுப்பினர் தொடர்பிலான செய்தி வெளிவந்த பத்திரிகையின் பிரதிகள் சிலவற்றையும், அப்பத்திரிக்கை பிரதி போன்று பெரியளவில் பிரதி செய்யப்பட்டதையும் தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடத்தியிருந்தனர்.

அந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உறுப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சிலர் போராட்டம் நடத்தி உறுப்பினரின் உருவ பொம்மையை எரித்தனர்.

அவை தொடர்பிலான செய்தியையும் குறித்த பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை வட.மாகாண சபை உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் மீண்டும் குறித்த பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடாத்தினார்கள்.

அந்தப் போராட்டம் தொடர்பிலான செய்தியினை குறித்த பத்திரிகை பிரசுரிக்கவில்லை. அது தொடர்பில் குறித்த மாகாண சபை உறுப்பினரின் ஊடாக இணைப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திய நபர் குறித்த பத்திரிகையின் அலுவலக செய்தியாளருக்கு தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு ஏன் அந்த போராட்டம் தொடர்பிலான செய்திகளை வெளியிடவில்லை என கேட்டுள்ளார்.

அதற்கு செய்தியாளர், அது தொடர்பில் பிரதம ஆசிரியரிடம் கேளுங்கள் என பதிலளித்துள்ளார். அதற்கு அவரை அச்சுறுத்தியுள்ளார். குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, அலுவலக செய்தியாளர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://athavannews.com/தொலைபேசியில்-பெண்-ஊடகவிய/

  • தொடங்கியவர்

பெண் ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலுக்கு யாழ். ஊடக அமையம் கண்டனம்

 

 
 

வலம்புரி நாளிதழின் செய்தியாளரிற்கு வடமாகாணசபை உறுப்பினர் ஒருவரது உதவியாளரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

jaffna_press.jpg

யாழ்.ஊடக அமையம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகங்களுக்கு  அனுப்பி வைத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

அதிலும் குறிப்பாக பெண்கள் தமிழ் ஊடகத்துறையில் காலடியெடுத்து வைக்க அச்சப்பட்டு பின்னடிக்கின்ற சூழலில் இத்தகைய போக்கு ஆரோக்கியமானதாக அமையப்போவதில்லையென்பதையும் சுட்டிக்காட்ட ஊடக அமையம் விரும்புகின்றது.

ஏற்கனவே சிறுகும்பல் ஒன்றினால் அண்மையில் வலம்புரி நாளிதழின் பிரதி எரிக்கப்பட்டமை தொடர்பில் இனங்களிடையே தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தும் சூழல் பற்றி யாழ்.ஊடக அமையம் எச்சரிந்திருந்ததை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

அதேவேளை ஊடகங்களையும்  ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துவது ஊடக சுதந்திரத்தை இல்லாமல்செய்யும் நடவடிக்கையாகும் என புரிந்துணர்வுடன் கண்டனத்தை பதிவு செய்துள்ள யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் அவர்களிற்கு எமது நன்றியறிதல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் அரச படைகளாலும் அவர்களது பங்காளிகளாலும் ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் மற்றும் ஊடக அலுவலகங்கள் மீதும் அரங்கேற்றப்பட்ட தாக்குதல்கள், கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போகச்செய்யப்படுதல்களால் நாம் இழந்தவை அதிகம். 

குறிப்பாக ஊடகத்துறையிலிருந்து பெருமளவிலானோர் வெளியேறும் சூழலும் இதனால் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது சூழல் மாறி அண்மைக்காலமாக தமிழ் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் சில வங்குரோத்து அரசியல்வாதிகளும் அவர்களின் அல்லக்கைகளும் அச்சுறுத்தல்களை பல்வேறு வழிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடராகவே வலம்புரி பத்திரிகை அலுவலக செய்தியார் ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதையும் குறித்த செய்தியாளர் தனது பாதுகாப்பினை கோரியிருப்பதனையும் நாம் பார்க்கின்றோம்.

அச்சுறுத்தல்கள் மிக்கதொரு சூழலில் மக்களுக்கு உண்மைத் தகவல்களை எடுத்துச் செல்ல ஊடகங்களால் முடியாதென்பது சொல்லித் தெரியவேண்டியதொன்றல்ல.

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் -முஸ்லிம் மக்களது இணைந்த வாழ்வு தவிர்க்க முடியாத பின்னிப்பிணைந்ததொன்று. காலம் காலமாக அதனை சிதைத்துவிடும் நடவடிக்கைகள் அரசினாலும் அதனது முகவர்களாலும் அரங்கேற்றப்பட்டே வருகின்றது.

தற்போதைய சூழலில் யாழில் அரங்கேறும் அண்மைய சம்பவங்கள் அதனை மீள உறுதிப்படுத்துவதாகவே கருதவேண்டியுள்ளது.

மீண்டும் இரு இன மதத்தலைவர்களிடமும் இத்தகைய சதிகாரக் கும்பல்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்க கோருவதுடன் மத, இன நல்லிணக்கத்தை பேண உண்மையாகவும் நேர்மையுடன் சதிகாரர்களை புறந்தள்ளி இணைந்து செயற்பட முன்வருமாறு வேண்டுகின்றோம் என அந்த அறிக்கையில் மேறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/40563

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.