Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு

Featured Replies

625.0.560.320.160.600.053.800.700.160.90

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தமிழ் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது கடமைகளை முடித்து விட்டு  பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற வேளையில் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் நேற்றுக் காலை அவரது பாதணிகள் திருகோணமலை கடற்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று  பகல் அவரது சடலம் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண்ணான விரிவுரையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் விரிவுரையாளரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .

http://tamilleader.org/2018/09/22/தமிழ்-பெண்-விரிவுரையாளர்/

  • தொடங்கியவர்

பெண் விரிவுரையாளர் கொலையில் சந்தேகநபர் ஒருவர் கைது

பெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணை செய்த போது பெண் விரிவுரையாளரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகம் ஏற்பட்டு கைது செய்யப்பட்டுள்ளாார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் நேற்று திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

http://tamilleader.org/2018/09/22/பெண்-விரிவுரையாளர்-கொலைய/

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு பல்கலைகழக பெண் விரிவுரையாளர் கொல்லப்பட்டார்!

September 22, 2018
42220215_489034528239858_476579436704038

கிழக்கு பல்கலைகழக பெண் விரிவுரையாளர் ஒருவர் நேற்று கடலில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது தெரிந்ததே. இவரது கொலை தொடர்பாக நிலவிய மர்மத்திற்கு விடை கிடைத்துள்ளது. அவர் தற்கொலை செய்திருக்கலாமென முன்னர் கருதப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை பொலிசார் உறுதிசெய்துள்ளனர்.

கொலை சந்தேகநபரை திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

 

சந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது, பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளரான வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண்ணாண நடராசா போதநாயகி என்பவரே கொல்லப்பட்டிருந்தார்.

இவர் கொல்லப்படுவதற்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கலாமென்ற கோணத்திலும் விசாரணையை நகர்த்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும், முழுமையான விசாரணைகளின் பின்னரே எதையும் உறுதியாக தெரிவிக்கலாமென்றும் அறிவித்துள்ளனர்.

இதேவேளை கொல்லப்பட்ட பெண்ணின் மரணவிசாரணை நிறைவடைந்துள்ளது.

திருகோணமலை மாவட்ட மேலதிக நீதவான் சம்பா ரத்னாயக்க முன்னிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. பெண்ணின் சடலம் அவரின் கணவரினால் அடையாளம் காட்டப்பட்டது.

குறித்த பெண் விரிவுரையாளரின் உறவினர்களிடமும் நீதவான் விசாரணைகளை நடத்தினார். இந்த விசாரணைகளின் போது பெண்ணின் மரணம் குறித்து எந்த தகவலும், சந்தேகமும் உறவினர்கள்ளிடம் இருக்கவில்லை.

சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் 3 மாத கர்ப்பிணி என்பதால் அவரது பிரேத பரிசோதனை விசேட சட்ட வைத்திய அதிகாரியொருவரின் ஊடாக இடம்பெற வேண்டும் என நீதவான் இதன் போது உத்தரவிட்டுள்ளார்.

 

விசேட சட்ட வைத்திய அதிகாரியொருவர் உள்ள வைத்தியசாலையொன்றை கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அடையாளப்படுத்தும் பட்சத்தில் அதற்கான அனுமதியை பெற்றுத் தர முடியும் என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு குடும்பத்தினர் வைத்தியசாலையொன்றை தெரிவிக்க தவறும் பட்சத்தில் வைத்தியசாலையொன்றை தெரிவு செய்து நாளைய தினத்திற்குள் அறிவிக்குமாறு திருகோணமலை தலைமைய காவல்துறையினருக்கு நீதவான் உத்தரவிட்டார்

அதுவரை சடலத்தை திருகோணலை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்குமாறு நீதவான் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

உறவினர்கள் சடலத்தை கையேற்ற போதிலும் அதனை எரிக்கக் கூடாது புதைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்,

மேலும் மரணம் மீதான சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறும்.

 

http://www.pagetamil.com/16876/

சில தகவல்கள் இவரின் கணவர் ஆணாதிக்கவாதி எனவும் சந்தேக புத்தி உள்ளவர் எனவும் .. இவர் சமூக ஊடகத்தில் இறுதியாக எழுதிய கவிதையை வைத்தும்.. இவரின் நண்பி எழுதிய தகவல்களை வைத்தும் வெளிவருகின்றன.. :(

  • தொடங்கியவர்
18 hours ago, அபராஜிதன் said:

சில தகவல்கள் இவரின் கணவர் ஆணாதிக்கவாதி எனவும் சந்தேக புத்தி உள்ளவர் எனவும் .. இவர் சமூக ஊடகத்தில் இறுதியாக எழுதிய கவிதையை வைத்தும்.. இவரின் நண்பி எழுதிய தகவல்களை வைத்தும் வெளிவருகின்றன.. :(

39748483_1933307693397894_4396268669521362944_n.jpg?_nc_cat=104&oh=c2b6907d8c8921b5b046a61213d27d2f&oe=5C607615

வருடம் ஒன்றாகி விட்ட்து, உன் கதை கேட்டு, இன்று நீயும் இல்லை, உன் கதையும் இல்லை சகோதரியே....

நான் கவிஞருமல்ல,இது கவிதையுமல்ல.......
அன்பெனும் கூரிய ஆயுதத்தால் 
கொடூரமாக தாக்கப்பட்ட
ஒரு பெண்ணின் புலம்பலும் கண்ணீரும்.....

பெண்ணாய் பிறந்ததொன்றே யாம் செய்த பெரிய பாவம் என
சில பெண்கள் புலம்பிய போது
பெரிதாக உணரவில்லை
அதன் அர்த்தமதை....

அர்த்தமது ஆழமாக உணரப்பட்டதால்
இப்போது இயம்புகின்றேன்.....

"நல்லவன்" என்ற தகுதி மட்டுமே போதுமாயிருந்தது....
நான் உன்னை தேர்ந்தெடுப்பதற்கும்
நீ என்னுள் நிரந்தரமாய் ஐக்கியமாவதற்கும்....

அத்தகுதியும், உன் மேல் கொண்ட அளவு கடந்த நம்பிக்கையுமே
இன்றென்னை அணுஅணுவாய்
கொல்கிறது......

அதீத அன்பு அருகதையற்றோர் மீது
காட்டப்படுவதால் தானோ என்னவோ
அது ஆயுதமாய் எம்மீது எறியப்படுகிறது...

அன்பே உருவானவர்கள் நாமெல்லோரும்....
இதில் ஆணென்ன பெண்னென்ன
சமத்துவமறிந்து சமமாய் நடத்த தெரியாதெனின் அவர் மானிடரே அல்லர்.

உங்களுக்கு உண்மையாய், உயிராய்
இருக்கும் பெண்ணவளை
உயர்வாய் எண்ணாவிடினும்
ஓர் உயிருள்ள ஜீவனாய் உணர்வுள்ள உயிராய் மதியுங்கள்....
அவள் உயிர் பிரியும் வேளையிலும்
உன்னை எண்ணி மட்டுமே கலங்குவாள்....

மாறாக அவளை கள(ல)ங்கப்படுத்த எண்ணினால், இப்பிறவியிலல்ல எப்பிறவியிலும்
எல்லையில்லா அவள் அன்பை
எள்ளளவும் பெற மாட்டீர் என்பது
திண்ணம்.......

(NK .Potha 20.08.2017)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.