Jump to content

இந்தியாவின் தளராத பொருளாதாரமும் தடுமாறும் ரூபாவும்


Recommended Posts

இந்தியாவின் தளராத பொருளாதாரமும் தடுமாறும் ரூபாவும்

Untitled-5-3fa6153d244549dcd826d333f9069f8af01d0e5d.jpg

 

இந்­தி­யாவின் பொரு­ளா­தாரம் 2018-இன் இரண்டாம் காலாண்டில் 8.2வீதம் வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளது. இது உலகின் பெரிய நாடு­களில் மிக அதிக அள­வி­லான வளர்ச்­சி­யாகும். ஒரு நாட்டின் பொரு­ளா­தாரம் அதிக அளவில் வளர்ச்­சி­ய­டையும் போது வட்டி வீதம் அதி­க­ரிக்­கப்­படும் என்ற எதிர்­பார்ப்பில் அந்த நாட்டின் நாண­யத்தின் பெறு­மதி அதி­க­ரிக்கும். ஆனால், இந்­திய ரூபாவின் பெறு­மதி தொடர்ந்து வீழ்ச்­சி­ய­டைந்து கொண்டே இருக்­கின்­றது. மற்ற வளர்­முக நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் , இந்­திய ரூபாவின் வீழ்ச்சி குறை­வா­ன­தாக இருந்­தாலும் இந்­திய ரூபாவின் வீழ்ச்சி பெரிய அர­சியல் பொரு­ளா­தாரத் தாக்­கத்தை இந்­தி­யாவில் ஏற்­ப­டுத்தும். பொரு­ளா­தார வளர்ச்சி என்­பது மதிப்­பீடு மட்­டுமே. பெரும்­பாலும் சரி­யான கணிப்­பீ­டாக இருப்­ப­தில்லை. விவ­ரங்­கெட்ட புள்ளி விப­ரங்கள் 

2017ஆம் ஆண்டு இந்­தியப் பொரு­ளா­தாரம் 7.7 வீதம் வளர்ந்­த­தாக இந்­திய புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­வித்­தன. ஆனால் 2017இல் இந்­தி­யாவின் ஏற்­று­மதி வள­ரவே இல்லை, இந்­திய வங்­கிகள் கடன் வழங்­கு­வது மந்த நிலை­யி­லேயே இருந்­தது. இந்­தியத் தொழிற்­துறை உற்­பத்தி வள­ர­வில்லை. இதனால் இந்­தியப் பொரு­ளா­தாரம் 7.7வீதம் வளர்­கின்­றது என்­பது உண்­மைக்கு மாறா­ன­தாக இருக்­கின்­றது என்றார் விஜய் ஆர் ஜோஸி (Emeritus Fellow of Merton College, Oxford and Reader Emeritus in Economics, University of Oxford). இந்­தியப் பொரு­ளா­தாரம் வளர்ந்தும் அதன் நாணயப் பெறு­மதி அதி­க­ரிக்­காமல் இருப்­ப­தற்கும் இந்­தியா தனது பொரு­ளா­தார வளர்ச்சி தொடர்­பான பிழை­யான அல்­லது பொய்­யான புள்­ளி­வி­ப­ரங்­களை வெளி­யி­டு­வது கார­ண­மாக இருக்­கலாம். சீனா உட்­பட பல வளர்­முக நாடுகள் தமது பொரு­ளா­தார வளர்ச்சி தொடர்­பாக பொய்­யான அல்­லது தவ­றான புள்­ளி­வி­ப­ரங்­களை வெளி­யி­டு­வ­தாகப் பல பொரு­ளா­தார நிபு­ணர்கள் நம்­பு­கின்­றனர். Morgan Stanley Investment Management என்ற முத­லீட்டு முகாமை நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் இந்­தி­ய­ரான ருச்சிர் ஷர்மா இது பற்றி இண்­டியன் எக்ஸ்­பி­ரஸில் 2015 இல் ஒரு கட்­டுரை வரைந்­துள்ளார். 2014-ஆம் ஆண்டு இந்­தியப் பொரு­ளா­தாரம் 6.9 வீதம் பொரு­ளா­தார வளர்ச்­சி­ய­டைந்­தது என்ற மோச­மான பகிடிக்கு உல­கமே சிரிக்­கி­றது என்­பது அவ­ரது கட்­டுரைத் தலைப்பு. 2018 செப்­டெம்பர் 17-ஆம் திகதி திங்­கட்­கி­ழமை 8.2% வளரும் இந்­தி­யாவின் ரூபாவின் மதிப்பு ஒரு புறம் சரிந்து கொண்­டி­ருக்க , மறு­புறம் 6.2% வளர்ச்­சி­ய­டையும் சீனாவின் பங்குச் சந்தை 2014-ஆம் ஆண்டின் பின்னர் மோச­மான வீழ்ச்­சியைக் கண்­டது.

பேரியப் பொரு­ளியல் (Macro-Economic) சிக்கல்  

இந்­திய நடை­மு­றைக்­க­ணக்குப் பற்­றாக்­குறை 0.7 வீதத்­தி­லி­ருந்து 1.வித­மாக அதி­க­ரித்­துள்­ள­மையும், இந்­திய ரூபா அமெ­ரிக்க டொல­ருக்கு எதி­ராக 2018 செப்­டெம்பர் வரை 14வீதம் வீழ்ச்­சி­ய­டைந்­த­மையும் 2018.-09-.15 இந்­தி­யாவின் வெளி­நாட்டுச் செலா­வணிக் கையி­ருப்பு $426பில்­லி­ய­னி­லி­ருந்து $399பில்­லி­ய­னாகக் குறைந்­த­மையும், அரச நிதிப்­பற்­றாக்­குறை 6.5 வீத­மாக இருத்­தலும் இந்­தியா ஒரு பேரியப் பொரு­ளியல் (Macro Economic) சிக்­கலில் மாட்­டி­யுள்­ளதைச் சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

இந்­திய நிதி­ய­மைச்சர் 2018 செப்­டெம்பர் 15-ஆம் திகதி அறி­வித்த நட­வ­டிக்­கைகள்:

1. அத்­தி­யா­வ­சி­ய­மற்ற இறக்­கு­ம­தி­களைக் கட்­டுப்­ப­டுத்­துதல்.

உயர்ந்­த­விலைக் கார்கள், வீட்டுச் சாத­னங்கள் இலத்­தி­ர­னி­யல் ­க­ரு­விகள் போன்­ற­வற்றின் இறக்­கு­ம­திகள் மீது கட்­டுப்­பாடு விதிக்­கப்­படும்

2. அந்­நிய முத­லீட்டை இல­கு­வாக்­குதல்

இந்­தி­யாவில் வெளி­நாட்­டி­னர் முத­லீடு செய்­வ­தற்கு உள்ள கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்­து­வ­துடன் வெளி­நா­டு­களில் குடி­யு­ரிமை பெற்று வாழும் இந்­தி­யர்கள் செய்யும் முத­லீட்டை இல­கு­வாக்­கு­தலும் செய்­யப்­படும்.

3. வெளி­நாட்டு நாண­யத்தில் இந்­திய நிறு­வ­னங்­களைக் கடன் பட அனு­ம­தித்தல்.

இந்த நட­வ­டிக்­கை­களின் பின்­னரும் 2018-.09-.17 ரூபா 1% வீழ்ச்­சி­ய­டைந்­தது. 2018-.09-.15 இந்­தி­யாவின் வெளி­நாட்டுச் செலா­வணிக் கையி­ருப்பு $426பில்­லி­ய­னி­லி­ருந்து $ 399 பில்­லி­ய­னாகக் குறைந்­தது.

மசாலா கட­னீடு (Masala Bonds)

உல­கெங்கும் உள்ள பெரிய தனியார் நிறு­வ­னங்கள் தமக்குத் தேவை­யான நிதியை வங்­கி­க­ளி­ட­மி­ருந்து பெறு­வது மட்­டு­மல்ல , கட­னீ­டுகள் (Bonds) மூல­மா­கவும் நிதி திரட்­டு­வ­துண்டு. வளர்ச்­சி­ய­டைந்த நாடு­களில் இது சாதா­ரணம். இந்­தியா தனது தனியார் நிறு­வ­னங்­களை இந்­திய ரூபாவில் கட­னீ­டு­களை வழங்க 2015இல் அனு­ம­தித்­துள்­ளது. பொது­வாக நாணய மதிப்பு ஏற்ற இறக்­கத்தால் ஏற்­படும் பாதிப்­பு­களைத் தவிர்க்க அமெ­ரிக்க டொலரில் தனியார் நிறு­வ­னங்கள் கட­னீ­டு­களை முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு வழங்கும். இந்­திய ரூபா மோச­மான மதிப்­பி­ழப்பைச் சந்­திக்கும் போது வெளி­நாட்டு நாண­யங்­களில் கடன் வாங்­கிய இந்­திய தனியார் நிறு­வ­னங்கள் கடும் பாதிப்பைச் சந்­திக்க வேண்­டி­யி­ருக்கும். இதைத் தவிர்க்­கவே இந்­திய ரூபாவில் கட­னீ­டுகள் வழங்க இந்­திய காப்­பொ­துக்க வங்கி அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இந்த கட­னீ­டு­களை உலக நிதி நிறு­வ­னங்கள் மசாலா கட­னீ­டுகள் எனக் கிண்­ட­லாக அழைக்­கின்­றன. டொலர் கட­னீ­டு­களில் நாணய மதிப்பு ஏற்ற இறக்­கத்தால் ஏற்­படும் பாதிப்­பு­களை கடன்­படும் நிறு­வ­னங்­களே தாங்­கிக்­கொள்ள வேண்­டி­யி­ருக்கும். ஆனால், மசாலா கட­னீ­டு­களில் கடன் கொடுப்­ப­வர்­களே நாணய மதிப்­பி­றக்­கத்தால் கலங்க வேண்­டி­யி­ருக்கும்.

முன்னாள் வேறு இன்னாள் வேறு  

முன்னாள் இந்­திய நிதி­ய­மைச்சர்  

ப. சிதம்­பரம் ரூபாவின் வீழ்ச்­சிக்கு எதி­ராக மோடி அரசு எடுத்த நட­வ­டிக்­கைகள் காலம் கடந்­த­வை­யாக உள்­ளன என்­ற­துடன் ,அரசு அரை மன­து­ட­னேயே இந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டது என்றார். ஆனால், 2013-ஆம் ஆண்டு அவர் நிதி­ய­மைச்­ச­ராக இருந்த போது இந்­திய ரூபா பெறு­மதி வீழ்ச்­சி­ய­டைந்த போது அதை­யிட்டுக் கல­வ­ர­ம­டையத் தேவை­யில்லை என்­றவர் ப சிதம்­பரம். ஒரு நாட்டின் நாண­யத்தின் பெறு­மதி குறையும் போது அதன் ஏற்­று­மதி அதி­க­ரிக்க வாய்ப்­புண்டு என்­பது பொது­வான பொரு­ளியல் விதி­யாகும்.

வளரும் பொரு­ளா­தார நாடு­களின் பொதுப்­பி­ரச்­சினை

தற்­போது எல்லா வளர்­முக நாடு­களின் நாண­யத்தின் பெறு­மதி அமெ­ரிக்க டொல­ருக்கு எதி­ராக குறை­வ­டை­கின்­றது. மற்ற நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இந்­திய ரூபா குறைந்த அள­வி­லேயே வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. அதி­க­ரிக்கும் அமெ­ரிக்க வட்டி வீதம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அறி­வித்­துள்ள வர்த்­தகப் போர், உல­க­மெங்கும் பரவும் இறக்­கு­ம­தி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் போன்­ற­வற்றால் உலகப் பொரு­ளா­தா­ரத்தில் ஒரு நம்­பிக்­கை­யின்மை உரு­வா­கி­யுள்­ளது. அதனால் வளர்­முக நாடு­களின் நாண­யங்­களின் பெறு­ம­திகள் வீழ்ச்­சி­ய­டை­கின்­றன.

 பெரி­யண்­ண­னுடன் பிரச்­சினை

படைத்­துறை அடிப்­ப­டையில் நெருங்கும் இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் பொரு­ளா­தார அடிப்­ப­டையில் வில­கியே நிற்­கின்­றன. அமெ­ரிக்­காவின் நீண்­ட­கால நட்பு நாடு­க­ளையே கண்­ட­படி விமர்­சிக்கும் ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் இந்­தி­யாவைக் கேந்­தி­ரோ­பாய பங்­காளி என்றே அழைக்­கின்றார். ஆனால், இந்­தி­யாவின் பொரு­ளா­தாரம் இன்­னமும் மூடப்­பட்ட நிலையில் இருப்­ப­தாக அவர் கரு­து­கின்றார். அவ­ரது வர்த்­தகப் போர் இலக்­கு­களில் இந்­தி­யாவும் ஒன்று. இந்­தியா ஈரா­னி­ட­மி­ருந்து எரி­பொருள் இறக்­கு­மதி செய்­வதை டொனால்ட் ட்ரம்ப் விரும்­ப­வில்லை.

 இந்­திய எரி­பொருள் தேவையின் 80% இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றது. சவூதி அரே­பி­யாவும் பாகிஸ்­தானும் நெருக்­க­மான உறவை வைத்­தி­ருப்­பதைச் சமா­ளிக்க இந்­தி­யா­விற்கு ஈரானின் நட்பு அவ­சியம். உலக எரி­பொருள் விலை அதி­க­ரிப்பு இந்­தியப் பொரு­ளா­தா­ரத்­திற்கு மட்­டு­மல்ல , இந்­திய ஆளும் கட்­சிக்கும் பாத­க­மாக அமையும். அதைச் சரி­செய்ய பொரு­ளா­தாரத் தடைக்கு உள்­ளா­கி­யி­ருக்கும் ஈரா­னி­ட­மி­ருந்து எரி­பொருள் வாங்­கு­வதை இந்­தியா விரும்­பு­கின்­றது. ஈரா­னி­ட­மி­ருந்து எரி­பொருள் வாங்­கினால் அதற்­கான கொடுப்­ப­ன­வுகள் ஈரானைப் போய்ச் சேராமல் அமெ­ரிக்கா தடைகள் செய்­யலாம். அதைத் தவிர்க்க ஈரான் மீது பொரு­ளா­தாரத் தடை விதிக்­காத ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் உத­வியை இந்­தியா நாடி­யுள்­ளது.

                 அதை எந்த வகையில் அமெ­ரிக்கா பார்க்கும் என்­பது கேள்­விக்­கு­ரிய ஒன்றே.

இந்­தியா மட்­டு­மல்ல.....

கடந்த ஐந்து ஆண்­டு­களில் அமெ­ரிக்க டொல­ருக்கு எதி­ராக ஆர்­ஜென்­டீ­னாவின் நாணயம் 546வீதம், துருக்­கியின் லிரா 221வீதம், பிரே­ஸிலின் ரியால் 84 வீதம், தென் ஆபி­ரிக்­காவின் ரண்ட் 51 வீதம், மெக்­சிக்கன் பெசோ 47 வீதம், மலே­ஷிய ரிங்கிட் 27 வீதம் வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருக்­கையில் இந்­திய ரூபா 16வீதம் மட்­டுமே வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. இந்­திய ரூபாவின் வீழ்ச்சி சமா­ளிக்கக் கூடி­யது என்­கின்­றனர் , இந்­திய ஆட்­சி­யா­ளர்கள்.

பன்­னாட்டு நாணய நிதியம்

2018 செப்­டெம்பர் 18-ஆம் திகதி பன்­னாட்டு நாணய நிதியம் வெளி­யிட்ட அறிக்­கையில்:

1. மற்ற நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் , இந்­தியப் பொரு­ளா­தாரம் ஒரு மூடப்­பட்ட பொரு­ளா­தாரம்.

2. 2018இன் இரண்­டாம காலாண்டில் இந்­தி­யாவின் பொரு­ளா­தார உற்­பத்­தியில் ஏற்­று­ம­தியின் பங்கு அதி­க­ரித்­துள்­ளது. இந்­திய ரூபாவின் மதிப்­பி­ழப்பு இதை மேம்­ப­டுத்தும்.

3. இந்­திய நாண­யங்­களைச் செல்­லு­ப­டி­யற்­ற­தாக்­கி­யமை, ஜீ.எஸ்.டி. வரி­வி­திப்பு ஆகிய இரண்டு தடை­க­ளையும் இந்­தியப் பொரு­ளா­தாரம் தாண்டி விட்­டது. இனி வளர்ச்சிப் பாதையில் அது தொடரும்.

4. இந்­தியப் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு மக்­களின் கொள்­வ­னவு அதி­க­ரிப்பும் முத­லீட்டு அதி­க­ரிப்பும் இனி பங்­க­ளிப்புச் செய்யும்.

5- தற்­போது நடந்து கொண்­டி­ருக்கும் இந்­தியப் பொரு­ளா­தா­ரத்தை எண்­மியப் படுத்­து­தலும் நிய­மப்­ப­டுத்­து­தலும் அதிக வரி வசூ­லிப்புச் செய்ய உத­வு­வதால் இந்­திய அரச நிதிப் பற்­றாக்­குறை சீர­டையும்.

பன்­னாட்டு நாணய நிதி­யத்தின் கருத்­துக்­களை பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்கள் ஏற்­றுக்­கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. வளர்­முக நாடு­களின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு வெளி­நாட்டு முத­லீ­டுகள் அவ­சி­ய­மா­ன­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. நரேந்­திர மோடியின் பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளுக்கு 2017-ஆம் ஆண்டு 86வீதம் இந்­தி­யர்கள் நம்­பிக்கை வைத்­தி­ருப்­ப­தாக கருத்து வெளி­யிட்­டனர் . 2018-ம் ஆண்டு அது 56 வீத­மாகக் குறைந்து விட்­டது. இந்­தி­யாவில் நிகர வெளி­நாட்டு முத­லீடு குறைந்து கொண்டே செல்­கின்­றது. முத­லீட்­டா­ளர்கள் இந்­தி­யாவில் இருந்து வெளி­யே­று­வ­தற்­கான கார­ணங்கள்:

1. அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றியம், ஜப்பான் ஆகி­ய­வற்றின் பொரு­ளா­தா­ரங்கள் வளர்ச்­சி­ய­டையத் தொடங்­கி­யதால் அவற்றின் நடுவண் வங்­கிகள் அள­வுசார் இறுக்­கத்தைச் (QUANTITATIVE TIGHTENING) செய்யத் தொடங்­கி­யுள்­ளன. அதா­வது தமது நாடு­களின் வங்­கி­க­ளி­டை­யே­யான நாணயப் புழக்­கத்தைக் கட்­டுப்­ப­டுத்த தொடங்­கி­விட்­டன. அதனால் அவற்றின் நாண­யங்­களின் பெறு­மதி தொடர்ந்து அதி­க­ரிக்கும். அந்த நாடு­களின் வட்­டியும் அதி­க­ரிக்கும். இந்­தி­யாவில் முத­லீடு செய்­வ­திலும் பார்க்க உறுதியான அரசியல் நிலைப்பாடுடைய நாடுகளில் முதலீடு செய்வதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்புகின்றார்கள்.

2. 2019-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்தியப் பாராளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலின் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதை தற்போது உறுதியாகச் சொல்ல முடியாத நிலை இருப்பதால் ஓர் உறுதியற்ற நிலை இந்தியாவில் தோன்றியுள்ளது.

3. உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது இந்தியாவில் பணவீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.

ஆனால் , இந்தியாவில் கட்டிடங்களில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அக்கறை காட்டுகின்றார்கள். அதற்கு அவர்கள் பல சிவப்பு நாடாக்களைக் கடக்க வேண்டியுள்ளது.

ரூபாவின் மதிப்பிறக்கம் இந்தியாவின் ஏற்றுமதியைக் கூட்டுவதற்கு தரமான பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்திய ஏற்றுமதி பெரும்பாலும் மூலப்பொருட்களாகவே இருக்கின்றது. தொழில்துறை உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான உட்கட்டுமானங்கள் இந்தியாவில் போதிய அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு இதுவரைகாலமும் முன்வைக்கப்பட்டது. உலக வங்கி இந்திய உட்கட்டுமானத் துறையில் பல பசுந்தளிர்களைக் காணக் கூடியதாக இருக்கின்றது .

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-23#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனடாவில் உள்ள ஒரு   கடற்கரையில்....  மலசலம் கழித்து விட்டு,   மண்ணால்  மூடி விட்டுப் போகும் அளவுக்கு கொஞ்சம் முன்னேறி இருக்கின்றார்கள் என அறிந்தேன். 😂
    • கனடாவில் (Canada) உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்தியா (India) தெரிவித்துள்ளது. இந்த கருத்தை வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (07) வெளியிட்டுள்ளார்.  அத்துடன், கடந்த ஆண்டில், கனடாவில் உள்ள இந்திய இராஜதந்திரிகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களை அதிகளவில் எதிர்கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு  இந்தநிலையில் தமது உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்ட போதும், கனேடிய தரப்பால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  அதேவேளை, கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, இந்திய பேச்சாளர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.  அத்துடன், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் வன்முறைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். https://tamilwin.com/article/indian-diplomats-in-under-surveillance-in-canada-1730990907#google_vignette
    • ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் காலமானார்    ஈழத்தின் முதுபெரும் கவிஞரும் எழுத்தாளருமான மு. பொன்னம்பலம்  (மு. பொ) நேற்று புதன்கிழமை (06) கொழும்பில் காலமானார். மறைந்த எழுத்தாளர் மு. தளையசிங்கத்தின் சகோதரரான மு.பொ. 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தார்.  இவர் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலவற்றை எழுதி, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ஆவார்.   1968இல் வெளியான “அது” கவிதைத் தொகுதியே இவரது முதல் நூலாகும்.  அகவெளிச் சமிக்ஞைகள், விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள், யதார்த்தமும் ஆத்மார்த்தமும், கடலும் கரையும், நோயில் இருத்தல், திறனாய்வு சார்ந்த பார்வைகள், பொறியில் அகப்பட்ட தேசம், சூத்திரர் வருகை, விசாரம், திறனாய்வின் புதிய திசைகள், முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை முதலான நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார். எழுத்தாளர் மு. பொன்னம்பலத்தின் மறைவு ஈழத்து இலக்கியத்துறைக்கே பேரிழப்பாக கருதப்படுகிறது.  https://www.virakesari.lk/article/198112
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.