Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருதிக் கொடைக்கு- துப்பாக்கியுடன் வந்த நபர்!!

Featured Replies

குருதிக் கொடைக்கு- துப்பாக்கியுடன் வந்த நபர்!!

 

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தியாகி  திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு  குருதிக் கொடை நிகழ்வு இன்று நடைபெற்றது.

அதில்  துப்பாக்கியுடன் ஒருவர் சற்றுமுன்னர் நுழைந்ததால் அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளது.

https://newuthayan.com/story/11/யாழ்ப்பாணம்-போதனா-மருத்துவமனையில்-பதற்றம்.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் சற்று முன்னர் பதற்றம்!

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு குருதிக் கொடை நிகழ்வு இன்று இடம்பெற்றது.

அதன்போது துப்பாக்கியுடன் ஒருவர் சற்றுமுன்னர் நுழைந்ததால் அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களுக்காக பட்டினித் தீயில் தன்னை உருக்கி ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் நினைவாக யாழ்.இந்துக் கல்லூரியில் குருதிக்கொடை முகாம் இன்றைய தினம் காலை 9.00 மணி தொடக்கம் இடம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

2012 க.பொ.த உயர்தரப் பிரிவு மாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் இந்த இரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வருடா வருடம் திலீபனின் நினைவேந்தல் காலத்தில் இவ் இரத்தான முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் அனைவரையும் இதில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி இன்று நடைபெற்ற குருதிக்கொடை நிகழ்வின்போது துப்பாக்கியுடன் ஒருவர் நுழைந்ததால் அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சிவில் உடையில் வந்த நபர் ஒருவர் தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியினை எடுத்து தன்னுடன் வந்த மற்றொரு நபரிடம் கொடுத்துள்ளார்.

இதனால் இரத்ததானம் வழங்கும் இடத்தில் குழப்பம் உருவானது. பின்னர் ஆயுதத்துடன் வந்த நபர் இரத்தானம் வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதேவேளை துப்பாக்கியுன் வந்திருந்தவர் இராணுவ புலனாய்வாளரா? என கேள்வி எழுந்துள்ளது.

தியாகி திலீபன் யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவர். அங்கு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, சிறந்த பெறுபேறு பெற்று யாழ்.மருத்துவபீடத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/106586?ref=imp-news

  • தொடங்கியவர்

தியாக தீபம் திலீபனின் நினைத்து இரத்ததானம் வழங்கினார் இராணுவ புலனாய்வாளர்…

 

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்த தான முகாமில் இராணுவ புலனாய்வு துறையை சார்ந்த ஒருவர் இரத்த தானம் வழங்கியுள்ளார். யாழ்.இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த இரத்த தான முகாம் நடைபெற்றது.

 

அதன் போது இரத்த தான முகாம் நடைபெறும் மண்டபத்திற்கு சென்றிருந்த இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவர் அங்கு எதற்காக இரத்த தான முகாம் நடைபெறுவதாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் போது அங்கிருந்தவர்கள் தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தை முன்னிட்டு இரத்த தானம் நடத்தப்படுவதாக கூறியுள்ளனர். அதனை அடுத்து இருவரில் ஒருவர் தனது இடுப்பு பகுதியில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து தன்னுடன் வந்தவரிடம் கையளித்து விட்டு தானும் இரத்த தானம் வழங்க முன் வந்தார்.

அதனை அடுத்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது அவர் இரத்த தானம் வழங்க தகுதியுடையவர் என மருத்துவர் பரிந்துரைத்ததன் பின்னர் அவர் இரத்த தானம் வழங்கினார்.

குறித்த இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த நபரின் செயற்பாடு அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் , குறித்த புலனாய்வு பிரிவு உத்தியோகஸ்தருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர் என தெரிவிக்கப்படுகின்றது

http://globaltamilnews.net/2018/96900/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.