Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம்

Featured Replies

தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம்

 

cm-john-amarathunge-300x201.jpgதலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, சிறிலங்காவின் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த உலக சுற்றுலா நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

”வடக்கு மாகாணத்துக்குப் பயனளிக்கும் என்பதால், இந்தத் திட்டம் குறித்து அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது.

பலாலியில் இருந்து கட்டுநாயக்கவுக்கு உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டால், யாழ்ப்பாணத்துக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும்.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறைறை அபிவிருத்தி செய்வதற்காக, சிறிலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின், உப  பணியகம் ஒன்று விரைவில் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், நாட்டுக்குத் திரும்பி, வடக்கின் சுற்றுலாத் துறையில் முதலீடு செய்ய வேண்டும்.

cm-john-amarathunge.jpg

வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, புலம்பெயர் தமிழர்களைச் சந்திக்கும் போது, அவர்களைத் திரும்பி வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

அது அவர்களுக்கும், அவர்களின் சமூகத்துக்கும்அ உதவியாக இருக்கும். வடக்கு மாகாணத்துக்கு சுற்றுலாத்துறை ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார்.

http://www.puthinappalakai.net/2018/09/28/news/33125

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, சிறிலங்காவின் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். 

அங்கு முறையான தீர்வு எட்டப்படாமல் இங்கு தேவை இல்லாத சட்ட சிக்கலை உருவாக்குவினம் ..  அங்கு  தமிழ்ர்களை அடித்தால் இங்கு தன்னாலே நெறி கட்டும்.  தீர்வு எட்டப்படும் வரையில் அங்கேயே இருப்பதுதான் சிறப்பு .?

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.