Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் 141 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு – தொடரும் அகழ்வு பணிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் கடந்த 21 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை(1) 77 ஆவது தடவையாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவண ராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. தற்போது வரை 141 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் 135 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்வு செய்யப்பட்டுள்ளது. -தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளமையினால் அகழ்வு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.

DSC_0012.jpg?resize=800%2C533DSC_0018.jpg?resize=800%2C533DSC_0026.jpg?resize=800%2C533

 

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் 30 வீதம் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழியில் 148 எலும்புக்கூடுகள்

by in செய்திகள்

mannar-grave-2-300x192.jpg

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் 30 வீதமான பகுதியே தோண்டப்பட்டுள்ளதாகவும், இதுவரை அங்கிருந்து 148 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில்,

“இதுவரையில் புதைகுழியில் 30 வீதமான பகுதியே எமது குழுவினரால் அகழப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதிகளில் அகழ்வுப் பணிளை முடிக்க இன்னும் ஒரு மாதமோ, அதற்கு அதிகமான காலமோ தேவைப்படலாம்.

புதைகுழியின் விளிம்புகளை பார்க்கும் போது இன்னும் அதிகமான சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

12 மீற்றர் நீளமும், 8 மீற்றர் அகலமும் கொண்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், இதுவரை 148 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 17 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையவை.

நானும், சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்சவும் எதிர்கொண்ட சில பிரச்சினைகளால், ஒருவாரகாலம் இடைநிறுத்தி வைக்கப்பட்ட அகழிவுப் பணி மீண்டும் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆய்வு செய்ய வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு நிதிப் பிரச்சினை உள்ளது. இதற்கு நிதி உதவி வழங்குமாறு, சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளோம்.

வெளிநாட்டில் ஆய்வுச் சோதனைகளை மேற்கொள்வதற்கு நிதி வழங்குவதாக காணாமல் போனோருக்கான பணியகம் வாய்மொழியாக கூறியுள்ளது. ஆனால் இதுபற்றிய முன்னேற்றங்கள் குறித்து எமக்கு இன்னமும் ஏதும் தெரியப்படுத்தப்படவில்லை.

எலும்புக்கூடுகளின் மாதிரிகளை வெளிநாட்டுக்கு சோதனைக்காக அனுப்புவதற்கு முன்னர் நீதியமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றம் ஆகியவற்றின் அனுமதியை பெற வேண்டும்.

எலும்புக்கூடுகளின் மாதிரியை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ள இரண்டு மணிநேரம் போதும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.net/2018/10/02/news/33215

  • கருத்துக்கள உறவுகள்

E8_CDFC9_B-55_CC-4388-_A527-_DA2_FB0_C3_

Edited by Kavi arunasalam

சொறிலங்காவின் கொலைகார புலனாய்வு குழுவின் திசை திருப்பல் முயற்சிகளை முறையடித்து சிறப்பாக மன்னாரில் விசாரணையை முன்னெடுத்து வந்த நீதிபதியை சிலமாதங்களுக்குள் சொறிலங்காவின் நீதித்துறை தூக்கிவிட்டது.

தற்போது திசை திருப்பல் முயற்சிகளுக்கு ஜால்றா போடும் ஒரு நீதிபதி நியமிக்கப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் வெளிவந்த -17 சிறுவர்களின் எலும்புக் கூடுகள்!!

பதிவேற்றிய காலம்: Oct 3, 2018

மன்னார் “சதொச” மனிதப் புதைகுழியில் 30 வீதமான பகுதியில் நடத்தப்பட்டுள்ள அகழ்வின்போது இது வரையில் 148 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அகழ்வராய்ச்சிக்குப் பொறுப்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

அகழ்வு மேற்கொள்ளப்பட்ட முனைகளில் இன்னும் எலும்புக்கூடுகள் இருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றது. இன்னும் ஒரு மாதம் அளவிலான காலப்பகுதியில் தொடர்ந்து அகழ்வு மேற்கொள்ளப்படும். .

 

அகழ்வில் இது வரையில் 17 சிறுவர்களுடைய எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

 

https://newuthayan.com/story/10/மன்னாரில்-வெளிவந்த-17-சிறுவர்களின்-எலும்புக்-கூடுகள்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.