Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடுக்குநாறிமலைக்கு வந்த கூட்டுஎதிரணியுடன் பிரதேச மக்கள் முறுகல்! இனவாதச் செயற்பாடுகளை தூண்டும் முயற்சியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறிமலைக்கு வந்த கூட்டுஎதிரணியுடன் பிரதேச மக்கள் முறுகல்! இனவாதச் செயற்பாடுகளை தூண்டும் முயற்சியா?

October 3, 2018
42984861_1170924156395099_65117512849980

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் ,தேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர ஆகியோர் இன்றைய தினம் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.

அத்துடன் கூட்டு எதிரணியோடு சென்றிருந்த தொல்லியல் திணைக்களத்தைச்சேர்ந்த இருவர் முற்றுமுழுதாக சிங்களத்தில் வரலாற்றுக்களை திரிவுபடுத்தி பல பொய்யான தகவல்களை அவர்களுக்கு கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இறுதியில் கூட்டு எதிரணியினருக்கும் ஆலயத்தை சூழ்ந்த மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பாதுகாப்போடு அழைத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சிங்களத்தில் தொல்லியல் திணைக்களம் கூட்டு எதிரணியினருக்கு கூறிய சில பொய்யான விடயங்கள் கூறப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தின் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் இந்த கோயிலை இந்த பகுதி மக்கள் உருவாக்கியுள்ளதாகவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் தேவநம்பிய தீஸன் காலத்தை சேர்ந்தது என்றும் 1977ம் ஆண்டு இந்த மலையில் புத்த விகாரை ஒன்று இருந்ததாகவும் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன்  விகாரையை பயங்கரவாதிகள் அழித்துள்ளனர் என்றும் இந்த மலை முற்றுமுழுதாக பௌத்த மக்களுக்கே சொந்தம்
என்றும் இந்த மலைக்கு சிங்கள பெயர் ஒன்று இருக்கின்றது என்றும் கூறியதுடன் அதற்கு தாம்  ஆய்வு செய்ய மக்கள் தடையாக இருப்பதாகவும் அவர்கள் கூட்டு எதிரணிக்கு கூறியதாகவும் துரைராசா தமிழ்ச்செல்வன் கூறுகின்றார்.

இதேவேளை வருகை தந்த கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் உரையாடப்போவதாகவும்  உங்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ததைக்க சொல்லுங்கள் என்றும் சவால் விடுத்துச் சென்றுள்ளதாக பிரதேச பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் வருகை தந்த பிக்கு வாகனத்தை விட்டு இறங்கவில்லை என்றும் இறுதியில் ஆலய நிர்வாகத்தால் ஆலயத்தின் பூர்வீகம் தொடர்பில் சில ஆவணங்களைக் காட்டிய போது “இதுகள் லூசுகள்” என்று அவமதிப்புச் செய்துவிட்டு காவல்துறையினரின் பாதுகாப்போடு வாகனத்தில் ஏறி சென்றதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

42971975_1170923979728450_67601286510202  43009878_1170924079728440_1891019391135343046246_1170924123061769_42413795259187
 
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஓரிரு வருடங்களில் முழு வட கிழக்கும் பெளத்த,இஸ்லாமியமயமாயிருக்கும்...இதை தடுத்து நிறுத்த ஒருவராலும் முடியாது அங்குள்ள மக்கள் ஒன்றுபட்டு போராட்டத்தில் ஈடுபடடாலே தவிர ...மிகவும் வேதனைக்குரிய விஷயம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, ரதி said:

இன்னும் ஓரிரு வருடங்களில் முழு வட கிழக்கும் பெளத்த,இஸ்லாமியமயமாயிருக்கும்...இதை தடுத்து நிறுத்த ஒருவராலும் முடியாது அங்குள்ள மக்கள் ஒன்றுபட்டு போராட்டத்தில் ஈடுபடடாலே தவிர ...மிகவும் வேதனைக்குரிய விஷயம் 

தமிழ்ச்சனங்களுக்கு நல்லது செய்யப்போறன் எண்டு சொல்லி எல்லாத்தையும் நாசமறுத்த கொண்ணர்  கருணா!  இப்பவும் மப்பிலையோ.....இல்லாட்டி கோமாவிலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

தமிழ்ச்சனங்களுக்கு நல்லது செய்யப்போறன் எண்டு சொல்லி எல்லாத்தையும் நாசமறுத்த கொண்ணர்  கருணா!  இப்பவும் மப்பிலையோ.....இல்லாட்டி கோமாவிலையோ?

 

என்ட அண்ணர் தான் திரும்ப வர வேண்டும் என சொல்றிங்கள்?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

 

என்ட அண்ணர் தான் திரும்ப வர வேண்டும் என சொல்றிங்கள்?

 

 பதவி அதிகாரம் இருக்கேக்கை ஒரு கோதாரியும் செய்யேல்லையாம்....இனியென்ன கோதாரிக்கு? :204_closed_umbrella:
சம்பந்தனை மாதிரி நாலுவருசத்துக்கொருக்கால் சனத்தை பேக்காட்டுற பிளான் போலை கிடக்கு  ?

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.