Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழு நிறுவப்படாமை குறித்து கூட்டமைப்பு, பிரித்தானியாவிடம் எடுத்துரைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழு நிறுவப்படாமை குறித்து கூட்டமைப்பு, பிரித்தானியாவிடம் எடுத்துரைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் பாரிய தாமதம் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், பிரித்தானியாவிடம் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கைக்கு சென்றுள்ள பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் மார்க் பீல்ட் இன்று(வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போதே சம்பந்தன் இந்த விடயத்தை எடுத்து கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மாற்றம் உள்ளதாக இந்த சந்திப்பில், அமைச்சர் மார்க் பீல்டிடம், சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.

மேலும், காணி பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் ஆகிய விடயங்களில் குறிப்பிடத்தக்க தாமதம் நிலவுவதாகவும் அவர், கூறியுள்ளார்.

இந்த விடயங்கள் தாமதங்களின்றி செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டியவை எனவும் சம்பந்தன், அமைச்சர் மார்க் பீல்ட்டிடம் எடுத்து கூறியுள்ளார்.

மேலும் உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழு இன்னமும் நிறுவப்படாமை கவனிக்கப்படவேண்டிய விடயம் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அதிகாரப்பகிர்வு கோரிக்கையானது ஒரு அரசியல் யாப்பினூடாக தீர்க்கப்பட வேண்டியது அவசியம் எனவும் கூட்டமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பிளவுபடாத, பிரிக்கமுடியாத ஒருமித்த இலங்கையில் தீர்வொன்றை எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டிய சம்பந்தன், இதற்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் அரச தலைவர்கள் மத்தியில் அரசியல் விருப்பு குறைவாக காணப்படுவதாக தெரிவித்தார்.

அதேவேளை அநேக விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டபோதிலும் இன்னும் ஒரு தயக்க நிலை அரச தலைவர்கள் மத்தியில் காணப்படுவதாகவும், சுமந்தரன் தெரிவித்தார்.

மேலும், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கம் பாரிய தாமதத்தை கொண்டுள்ளதாகவும் கூட்டமைப்பின் தலைவர் எடுத்துரைத்துள்ளார்.

சுமார் ஒரு மணித்தியாலம் இடம் பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

 

http://athavannews.com/உண்மையை-கண்டறிவதற்கான-ஆண/

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சம்பந்தன் ஐயா!
உங்களது வயோதிபம் சம்பந்தமாக நான் எதுவுமே  சொல்ல வரவில்லை.


ஆனால் உங்கள் அரசியல் அனுபவம் இன்றிருக்கும் அரசியல்வாதிகள் எவருக்கும் வரப்போவதில்லை.

ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் ஒரு ஆசான்.

நீங்கள் சொன்னால் யாரும் செவிமடுத்து கேட்கின்றார்கள்.

கேட்பார்கள்.

இதை விட நீங்கள் ஒரு எதிர்க்கட்சி தலைவர். அந்த  அரியாசனம் எல்லோருக்கும் வருவதில்லை.

சந்தர்ப்பமும் வருவதில்லை.

அதை பயன்படுத்துங்கள். நீங்கள் ஈழத்தவர்க்கு அரசியலில் ஆயுதபலம் போன்றவர்.  

கடமையுணர்ந்து காலம் தாழ்த்தாமல் செய்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வணக்கம் சம்பந்தன் ஐயா!
உங்களது வயோதிபம் சம்பந்தமாக நான் எதுவுமே  சொல்ல வரவில்லை.


ஆனால் உங்கள் அரசியல் அனுபவம் இன்றிருக்கும் அரசியல்வாதிகள் எவருக்கும் வரப்போவதில்லை.

ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் ஒரு ஆசான்.

நீங்கள் சொன்னால் யாரும் செவிமடுத்து கேட்கின்றார்கள்.

கேட்பார்கள்.

இதை விட நீங்கள் ஒரு எதிர்க்கட்சி தலைவர். அந்த  அரியாசனம் எல்லோருக்கும் வருவதில்லை.

சந்தர்ப்பமும் வருவதில்லை.

அதை பயன்படுத்துங்கள். நீங்கள் ஈழத்தவர்க்கு அரசியலில் ஆயுதபலம் போன்றவர்.  

கடமையுணர்ந்து காலம் தாழ்த்தாமல் செய்வீர்களா?

சம்பந்தனுக்கு... காது, கேட்காமல் போய்... பல காலம் ஆகி விட்டது.  
இதெல்லாம்... செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப் பார்த்து.. நீங்க.. உங்க மக்களுக்கு உண்மையா பேசுறீங்கன்னு.. பிரித்தானியா திருப்பிக் கேட்ட என்ன பண்ணுறது..?!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.