Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தாவாதிகளின் இடைக்கால அரசாங்க இடைச்செருகல் ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவாதிகளின் இடைக்கால அரசாங்க இடைச்செருகல் ஏன்?

இலங்கைஅரசியல்வாதிகளிடம் இருந்து தினசரி ஏதாவது செய்திகள் கிட்டத்தான் செய்கின்றன.

அந்தவரிசையில் இடைக்காலஅரசாங்கத்தை அமைக்கும்முயற்சி என்ற புதிய செய்தி கிட்டியிருக்கிறது.

மகிந்தாவாதிகளின் முக்கியமுகமும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்காதான் இந்தஇடைக்கால அரசாங்கம் என்ற இடைச்செருகலை நேற்று செய்திருந்தார்.

கதை கதையாம் காரணமாம் காரணத்தில் ஒரு தோரணமாம் தோரணத்தில் ஒரு தொங்கட்டானாம் என்ற பாணியில் அவரது பட்டியல்கள் போடப்பட்டன.

அரசாங்கம் சமர்ப்பிக்கும் வரவு - செலவுத்திட்டம் எனப்படும் பாதீட்டை தோற்கடிப்பது.

அதன்பின்னர் தமது அணியின் தலைமையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உதவியுடன் இடைக்காலஅரசாங்கமொன்றை உருவாக்குவது.

அதனை ….மைத்திர தலைமை. மஹிந்தபிரதமர். என்ற வகையில் கட்டியெழுப்புவதென அவரது பலே பலே திட்டங்கள் இருந்தன.

ஆனால் இதற்கு முன்னரும் இவ்வாறு மகிந்தாவாதிகள் ஆட்சிக்கவிழப்பு நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற சவடால்களை சில தடவைகள் எறிந்தனர்.

ஆனால் பின்னர் அந்த நகர்வுகளில் சுருண்டு கொண்டனர்.

அந்தவகையில் இந்த முறை எஸ்.பி. திஸாநாயக்கா எடுத்து விட்ட இடைக்கால அரசாங்க சூளுரையும் முட்டுச்சந்தில் முட்டிக்கொண்டு நிற்கக்கூடும்.

தமிழ்பேசும் கட்சிகள் உட்பட, நாட்டிலுள்ள சகல முற்போக்குசக்திகளும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பிரிவும் ரணில் குழாமின் கொள்கைகளில் ஏமாற்றமும் அதிருப்தியும் கொண்டிருப்பதால் அவர்களெல்லாரும் புதிய இடைக்கால அரசாங்கத்துக்கு வந்து விடுவார்கள் என மகிந்தாவாதிகள் கூறும் கணக்கு வெறும் கணக்காகவும் மாறக்கூடும்

ஏனெனில் மகிந்தாவாதிகளிடம் உள்ள தினேஷ் குணவர்தன வாசுதேவ நாணயக்கார விமல் வீரவன்ச உதய கம்மன்பில ஆகியோரின் குட்டிக்கட்சிகளுடன் ஆறுமுகம் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் கொங்கிரஸ் ஆகிய கட்சிகளை மட்டுமே இடைக்கால அரசாங்கம் கட்சிகளை திஸாநாயக்காவால் பட்டியலிடமுடிந்தது

ஆனால் தமிழ் முஸ்லிம், கட்சிகளும் இந்த இடைக்கால அரசாங்கத்துக்கு ஆதரவாக இருப்பதாக அவர் கூறினாலும் அவ்வாறான தமிழ்பேசும் கட்சிகள் எவை என்பதை அவரால் பகிரங்கமாக சொல்ல இயலவில்லை. இதனால் இதனை ஒரு சவடால் வீச்சாகவும் அடையாளப்படுத்தலாம்.

ஆனால் மகிந்தாவாதிகளின் சவடால்களுக்கு அப்பால் இலங்கைத்தீவின் பொருளாதாரம் சிக்கலில் நல்லாட்சி அரசாங்கம் பெரும் சவால்களை எதிர்நோக்குவது யதார்த்தம்

இதற்கு ஆதாரமாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் தினசரி வீழ்ச்சி ஆதாரமாகிறது. டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையின் வரலாற்றில், அரசியல் ரீதியில் தமிழ்மக்களின் மனங்களில் கொழும்பு ஆட்சி நிர்வாகத்தின் நாணயம் நீண்ட காலமாக வீழ்சியுற்று காண்பபட்டாலும்

இலங்கையின் வரலாற்றில் இதற்கு முன்னர் இந்த அளவுக்கு அதன் ருபாய் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்ததும் இல்லை. ஆனால் இப்போது அது நடந்துவிட்டது.

2015 ஜனவரியில் நல்லாட்சி உருவான காலகட்டத்தில் அமெரிக்க டொலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 131 ரூபாய்க்கு மேல் இருந்தது. ஆனால், தற்போது அதன் நிலை 170 ரூபாய்க்கு அதிகமாக நிலையில் உள்ளது

இதனால் இப்போது தான் நாட்டின் ஏற்றுமதித்துறையை மேம்படுத்துவதங்குரிய ஞான நிலை குறித்து நாட்டி தேசிய பொருளாதார சபை விழிக்கின்றது

அரச மற்றும் தனியார் துறையினர், பல்கலைக்கழக உபவேந்தர்கள் உட்பட்ட குழாம் மைத்திரியின் செயலகத்தில் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து பேசுகிறார்கள்

எதனை திடிரென ஏற்றுமதி செய்வது இனவெறுப்பு, அதிகாரபகிர்வு ஒவ்வாமை பௌத்த கடும்போக்கு ஆகியன ஏற்றுமதிப்பண்டங்களின் வடிவில் இருந்தால் ஆவது அவற்றை அபிரிமிதமாக ஏற்றுமதி செய்து அன்னிய செலாவணியை ஈட்டிக்கொள்ளலாம். ஆனால் அவ்வாறான ஏற்றுமதிகளை எந்த நாடு தான் ஏற்றுக்கொள்ளும்

இலங்கைத்தீவின் ஏற்றுமதி - இறக்குமதிகளில் நகைப்புக்கு இடமாக முரண்நிலைகளும் உள்ளன.

நாற்புறமும் கடலால் சூழப்பட;ட அந்தத்தீவு ரின் மீன்கள் எனப்படும் கொள்கலன்; மீன்களை இறக்குமதி செய்யும் முரண்நிலை நீண்டகாலமாவே தொடர்கிறது.

அந்தத்தீவில் பிடிக்கப்படும் மீன்களை கொள்கலன்களில் அடைக்கும் தொழிற்துறை குறித்து சிந்திப்பதில்லை மாறாக மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பின்னஅங்கிருந்து தகர மீன்களை இறக்குமதி செய்கிறது.

ஆனால் கடலால் சூழப்பட்ட அந்தத்தீவின் அரசியல்வாதிகளிடம் இவ்வாறான சிந்தனையில்லை. மாறாக மீன்பிடிப்பு தொழிற்துறையை விருத்திசெய்கிறோம் என வடக்கு உட்பட்ட தமிழ்தாயக கடற்தொழிலாளர்களின் வயிறுகளில் அடிக்கவென மட்டும் தெற்கில் இருந்து வலைஞர் கூட்டங்கள் புறப்படுவதற்கு அரசியல் அங்கீகாரங்கள் கிட்டிக்கொள்கின்றன.

எனினும் வடக்கு, கிழக்குமக்களின் சட்டபூர்வஉரித்துடைய காணிகள், அம்மக்களுக்குக் கட்டாயம் வழங்கப்படவேண்டுமெனவும் அனைத்துப்பிரச்சினைகளையும் தீர்த்து, இவ்வாண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் காணிகளை விடுவிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும், வடக்குக்கிழக்கு அபிவிருத்திதொடர்பாக ஜனாதிபதி செயலணி அமர்வுகளில் மைத்திரிபால பணிப்புரை விடுத்துள்ளதான செய்திகள் கிட்டியுள்ளன.

ஜனாதிபதி ஊடகப்பிரிவால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை இதனைத்தெரிவித்தது

காணிவிடுவிப்பில் கிட்டிய முன்னேற்றங்களை அடுத்த மாதம் இடம்பெறும் வடக்கு, கிழக்கு ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் முன்வைக்கும் படி மைத்திரி சொன்னதாக அவரது ஊடகப்பிரிவு ஊதித்தள்ளியுள்ளது.

இந்த செயலணிக்கூட்டத்தில் வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள பாடசாலைகளுக்குச் சொந்தமான காணிகளையும் கட்டடங்களை விடுவிப்பது தொடர்பாகவும் பேசப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மைத்திரி கடந்த 3 ஆந்திகதி நடத்திய இந்த செயலணிக்கூட்டத்தில் வடக்கு கிழக்கு ஆளுநர்கள் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் முப்படைத்தளபதிகள் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ஆனால் தெற்கில் இருந்து இவ்வாறான உத்தரவாதங்கள் ஏற்கனவே பல தடவைகள் வழங்கபட்டுள்ளன ஆனால் ஏற்றங்கள் இல்லை.

இதேபோல தமிழர் தாயகத்திலும் ஏற்றங்களுக்குரிய சிந்தனோபாவம் வரட்சி நிலையிலேயே உள்ளது. அங்கும் எங்குபார்த்தாலும் இழுபறிகள்.

விடுதலைப்புலிகளின் தளபதிகளான குமரப்பா- புலேந்திரன் நினைவுத்தூபி அமைக்கும் நகர்வில் இருந்து வடமாகாணசபை அமர்கள் வரை தர்க்கங்களும் கருத்தியல் மோதல்களும் தொடர்கின்றன.

வடமாகாணசபையால் தயாரிக்கப்பட்ட நீர்ஆய்வு அறிக்கையை மையப்படுத்தி நேற்று முதலமைச்சர் விக்னேஸ்வரனும் எதிர்க்கட்சித்தலைவர் தவராசாவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து தர்க்கித்த காணொளிகள் வெளிப்பட்டன.

இவ்வளவுக்கும் எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் வடமாகாண சபையின் ஆட்சிக்காலம்; நிறைவடைகிறது.

இந்த முடிவை முன்னிட்டோ இல்லையென்றால் இறக்குமதிகளுக்குரிய அன்னிய செலாவணியை வெட்ட முனையும் கொழும்பின் முடிவின் அடிப்படையிலேயோ முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு புதிய 60>000அமெரிக்க டொலர் பெறுமதியில் வாகனமொன்றைப்பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப்பத்திரமும் சிறிலங்கா அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அன்னிய செலாவணியை வெட்டும் வகையில் சகல பெரிய புள்ளிகளுக்குரிய வெளிநாட்டு வாகன அனுமதிப்பத்திரங்களும் இடைநிறுத்தப்பட்ட நிலையில், விக்னேஸ்வரன் போன்ற ஒருவருக்கு மட்டும் எப்படி அதனைவழங்குவதென வினா எழுப்பி ராஜித்த சேனாரத்ன இந்த விடயத்தை காய்வெட்டினார்.

எது எப்படியோ எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் வடமாகாண சபையின் ஆட்சிக்காலம்; நிறைவடைவதால் இனி வடமாகாண சபைக்குரிய புதியதேர்தல் வரும்வரை ஆளுனர் என்ற பாத்திரம் அங்கு அரசியல் செய்யப்போவதற்காக வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

இந்த அரசியலுக்குரிய கட்டியங்கள் புலம்பெயர் மக்கள் மத்தியில் லண்டன் போன்ற நகரங்களில் இந்தவார இறுதியில் ஆளுனர் ரெஜினோல்ட் குரெ நடத்தவுள்ள சந்திப்புக்களில் கூறப்படவும் கூடும்.

ஆளுனர் ரெஜினோல்ட் குரெ தனது லண்டன் சந்திப்புக்களை நடத்திய பின்னர் சிறிலங்கா பிரதமது ரணிலும் லண்டனுக்கு வரவுள்ளமை இன்னொரு விடயம்

இதேபோல இன்று வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபி அடிக்கல் நாட்டுவிழாவில் வல்வெட்டித்துறை நகர சபையின் சுயேட்சைக்குழுவும் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் குழுவும் இழுபறிப்பட்டது. ஒருகட்டத்தில் அடிக்கல் நாட்டவதற்கு வெட்டப்பட்ட குழியும் மண்போடப்பட்டு மூடப்பட்டது.

விழாவுக்கு வந்திருந்தவர்களும் விரட்டப்பட்டனர் இறுதியில் நினைவுத் தூபியை அமைக்க நீதிமன்ற உத்தரவை காட்டி சிறிலங்கா காவற்துறையினரால் தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா? அல்லது வேறுநபர்களா என்றசந்தேகம் தனக்கு இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேறு குறிப்பிட்டுள்ளார்

ஆனால் தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர் குறித்த சந்தேகத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுப்பினாலும் தற்போதுள்ள தமிழ் அரசியல்வாதிகள் எல்லாம் தமிழ்மக்களின் தலைமைத்துவத்துக்கு உரியவர்களா என்ற ஒரு ஐயம் ஏறுமுகப்படும் யதார்த்தத்தையும் புறந்தள்ள முடியாது.

 

https://www.ibctamil.com/articles/80/107160

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.