Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த நாட்டுடன் யுத்தம் செய்ய இந்த 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கிளுயுள்ளது ;அனந்தி சசிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டுடன் யுத்தம் செய்ய இந்த 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது  ;அனந்தி சசிதரன்

வடக்கு மாகண மகளிர் அமைச்சுக்கு இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை என்று வட.மாகாண சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

ananthi_sasi_tharan.jpg

இவ்வாறிருக்க இலங்கை அரசாங்கம் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் 3 ஆயிரம் மில்லியன் ரூபாயை பாதுகாப்பிற்கு ஏன் ஒதுக்கியுள்ளது? என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் பனங்கட்டுக்கொட்டு கிராமத்தை சேர்ந்த பெண்கள் சுய தொழில் அமைப்புக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

மன்னார் பிரதேச சமூக சேவை உத்தியோகஸ்தர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் அனந்தி சசிதரன் குறித்த நிகழ்வின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“இறுதி யுத்ததில் ஒரு இனத்தையே அழிப்புக்கு உள்ளாக்கி விட்டு அதில் பாதிக்கப்பட்ட பெண்களை மீள் எழுச்சி அடையவிடாமல் தடுத்து அவர்களுக்குரிய எந்த உதவியையும் செய்யாமல் இப்போது பாதுகாப்புக்கென 3 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள்.

ஒன்பது வருட யுத்தம் முடிந்த பின்பு இந்த அரசாங்கம் எந்த நாட்டுடன் யுத்தம் நடத்துவதற்காக இந்த 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியிருக்கின்றது என்பது எங்களுடைய மக்கள் எழுப்புகின்ற கேள்வியாகதான் இருக்கின்றது.

மீள் எழுச்சியை மக்களுக்கு ஏற்படுத்தாது இராணுவத்திற்கும் படை பலத்தை அதிகரிப்பதற்கும் ஒதுக்கும் பொழுது நாடாளுமன்றத்தில் எங்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்கின்றவர்கள் இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கப் போகின்றார்களா?

அல்லது, இதய சுத்தியுடன் எங்களுடைய மக்களை போரில் இருந்து மீண்டெழுகின்ற நிலைக்கு கொண்டு வர போகின்றார்களா? என்று மக்கள் தான் வினவ வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/42352

8 minutes ago, கிருபன் said:

ஒன்பது வருட யுத்தம் முடிந்த பின்பு இந்த அரசாங்கம் எந்த நாட்டுடன் யுத்தம் நடத்துவதற்காக இந்த 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியிருக்கின்றது

பிற தேசத்துடன் சண்டை பிடிக்கவல்ல தமிழினத்தை தொடர்ந்து அழிப்பதற்கு தான் இவ்வளவு பாரிய ஒதுக்கீடுகள்.

ஈழத்தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமிப்பதுக்கும், ஈழத்தமிழரின் வரலாற்றை மழுங்கடிக்கவும், தமிழ் மண்ணில் சமூகவிரோத கும்பல்களை இயக்குவதற்கும், புத்தர் சிலைகளை நிறுவுவதற்கும், தமிழ் மண்ணில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்குவதற்கும் இந்த நிதி தேவைப்படுகிறது! 

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட, பேரினவாதம் தனது ராணுவத்தைக் கலைத்துவிடவில்லை. இன்னும் இன்னும் புதிதாக ராணுவ வீரர்களை இணைத்து வருகிறது. 

புதிய போர்த் தளபாடங்கள், போர்க் கப்பல்கள் என்று படைத்துறை நவீன மயப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழர் தாயகத்தில் சிறிய ராணுவ முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு பாரிய ராணுவ முகாம்கள் நிறுவப்பட்டு வருகின்றன. தமிழர் மண்ணில் சிங்கள ஆதிக்கத்தின் கருவியான முப்படைகளும் ஒருபோதுமே அகலப்போவதில்லை என்பதே இதன் அர்த்தம்.

தமது தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கெதிராக தமிழினம் மீண்டுமொருமுறை கிளர்ந்தெழலாம் என்கிற நியாயமான அச்சம் அவர்களுக்கு உள்ளது. முன்னர் விட்டதுபோன்ற தவறுகள் இல்லாமல், போராட்டம் ஒன்று முளைவிட ஆரம்பிக்கும்போதே அதனை முற்றாக நசுக்கி அழித்துவிடவே இந்த ஏற்பாடெல்லாம் நடக்கிறது.இதை பலமுறை ராணுவ அதிகாரிகள், அமைச்சர்கள், அரசுத்தலைவர்கள் என்று பலர் சொல்லியாயிற்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.