Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Torஎன சுருக்கமாக அழைக்கப்படும் வெங்காயவழிசெலுத்தி(The Onion Router) ஒரு அறிமுகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Torஎன சுருக்கமாக அழைக்கப்படும் வெங்காயவழிசெலுத்தி(The Onion Router) ஒரு அறிமுகம்

ச. குப்பன்

Tor என சுருக்கமாக அழைக்கப்படும் வெங்காயவழிசெலுத்தி(The Onion Router) என்பது பயனாளர் ஒருவர் இணையத்தில் முகமிலியாக இணைந்து தான் பயன்படுத்திய இணைய இணைப்பின் விவரங்களைச் சாத்தியமான அனைத்து கண்காணிப்புகளை இட கண்காணிப்புகள் ஆகிய அனைத்தையும் முழுவதுமாக அகற்றி சுதந்திரமாக இணையத்தில்உலாவர உதவிடும் ஒரு வலைபின்னல்கட்டமைப்பாகும்

3.jpg?resize=300%2C168

அதாவது எந்தவொரு நபரும் தன்னுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து கொண்டு முகமிலியாக இணையத்தில் உலாருவதற்கு இந்த Torஆனது அனுமதிக்கிறது மிகமுக்கியமாக எந்தவொரு போக்குவரத்து பகுப்பாய்வு வலைபின்னல் உளவு மூலம் பயனாளர் பாதிக்காமல் அவரைப் பாதுகாக்கிறதுமுகமிலிஇணைய இணைப்பிற்கு மிகவும் பிரபலமானதும் பாதுகாப்பானதுமான விருப்பமாக இந்த Tor எனும் வலைபின்னல் கட்டமைவு அமைந்துள்ளது இந்நிலையில்Tor என்பதொரு இணைய உலாவியென குழப்பி கொள்ளவேண்டாம் Tor என்பது இணைய உலாவியை எளிதாக அனுக உதவிடுமொரு வலையமைப்பாகும் என்ற செய்தியைமட்டும் மனதில் கொள்க மாற்றியமைக்கப்பட்ட மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸின் ESR வலை உலாவியின் உதவியுடன் இந்த Tor வலையமைப்பை நம்மால் அணுகமுடியும் இந்த Tor வலையமைப்பானது 1990 இல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு 2002 இல் நடைமுறைபடுத்தப்பட்டு தற்போதுElectronic Frontier Foundation (EFF).எனும் நிறுவனத்தாரால் பராமரித்து மேம்படுத்துப்பட்டுவருகின்றது 

இது வெங்காயவழிசெலுத்தி(onion routing)எனும் வழிமுறை கருத்தமைவின் அடிப்படையில் செயல்படுகின்றது அதாவது பயனாளரின தரவுகளை முதலில் மறைகுறியாக்கம் செய்தபின்னர் இந்த Torவலைபின்னலுடைய வெவ்வேறுசுற்றுகளின் வாயிலாக கடத்தப்படுதல் மீண்டும் மறைகுறியாக்கம் செய்தபின்னர் மீண்டும் வெவ்வேறுசுற்றுகளின் வாயிலாக கடத்தப்படுதல் என்றவாறு மீண்டும் இவ்வாறான பணியையே பயனாளர் தரவின்மீது செயல்படுத்தப்படுகின்றது அதாவது வெங்காயத்தோல்போன்று பல்லடுக்கு மறையாக்கத்தின் வாயிலாக பயனாளரின்பாதுகாப்பு இதன்மூலம் உறுதி படுத்தப்படுகின்றது ஆயினும் நாம் அனுப்புகின்றதரவானது தொடர்புடைய சேவையளர்பகுதிக்கு ஏதொவொரு சுற்றின் வாயிலாக பாதுகாப்பாக சென்றடையும் வரை ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு குறியாக்கம் தொடர்ந்து மறையாக்கம் என்றவாறு இதில் மாற்றியமைத்து கொண்டேயிருக்கும் கடைசியாக சென்றடையும் மிகச்சரியான சேவையாளர் பகுதிக்கு உண்மையான தரவு பாதுகாப்பாக சென்றடைந்துவிடும் அதனால் இடையில் இந்த தரவினை இடைமறித்து எங்கிருந்துவருகின்றது எங்கு செல்கின்றது உள்ளடக்கம் என்னவென யாராளும் அடையாளம் காணமுடியாதவாறு பல்லடுக்கான குறியாக்கம் மறைகுறியாக்கம் செய்து பாதுகாத்திடுகின்றது தனியான பயனாளருக்கு முகமிலி பாதுகாப்பு வழங்குவதுமட்டுமல்லாது இணைய பக்கங்களுக்கும் சேவையாளர் கணினிக்கும் மறைகுறியாக்கசேவையை இது வழங்குகின்றது நம்முடைய சுய அடையாளத்தை மறைத்து கொண்டு குறிப்பிட்ட இணையபக்கத்தை அனுக விரும்புவோர்கள் இந்த Torவலைபின்னலை பயன்படுத்தி கொள்ளலாம் பயனாளர் ஒருவர் தடைசெய்யப்பட்ட பகுதியிலும் பாதுகாப்பாக உலாவருவதற்கு இது பெரிதும் பயன்படுகின்றது BitTorrent போன்ற P2P பயன்பாடுகளின் கோப்புகளையும் இந்த Torவலைபின்னலின் வாயிலாக மிகவும் பாதுகாப்பாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் BitTorrent பயனாளர்களின் 10k அளவுடைய IP முகவரிகளை Bad Apple எனும் தாக்குதலின் போது இந்த Torவலைபின்னலானது மிகவும் சிறப்பாகபாதுகாத்தது என்ற செய்தியின் வாயிலாக இதனுடைய பாதுகாப்பு நம்பகத்தன்மையை நாம் அறிந்து கொள்ளமுடியும்

இது மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸின் இணைய உலாவியை ஆதரிக்குமாறு இதனுடைய விரிவாக்க ஆதரவு பதிப்பு ஒன்று செயல்படுகின்றது என்ற கூடுதல்செய்தியையும் மனதில் கொள்க இது கையடக்க சாதனத்திலும் தேவையான இடத்திற்கு கொண்டு சென்று பயன்படுத்தி கொள்ளத்தக்கவகையில் இது கிடைக்கின்றது இது ஒவ்வொருமுறை உலாவவந்துமுடிந்தவுடன் அதனுடைய உலாவந்த வரலாறு முழுவதையும் அதனுடைய குக்கீகளின் இடவமைவுகளையும் முழுவதுமாக அழித்து நீக்கம் செய்து கொள்கின்றது அதன்வாயிலாக வேறுயாரும் நம்மை தேடிகண்டுபிடித்திட முடியாதவாறு பாதுகாப்பு ஏற்பாட்டினை செயல்படுத்தி நம்மை பாதுகாக்கின்றது இது விண்டோ லினக்ஸ் மேக் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது அதைவிட இது ஆண்ட்ராய்டு சாதனங்களிலும்(Orbotஎனும் பெயரில்கைபேசிகளிலும் (Orfox எனும் பெயரில்ஐஓஎஸ் கைபேசிகளிலும் செயல்படும் திறன்கொண்டது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக இதனுடைய www.torproject.org/projects/torbrowser.html.en எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க தொடர்ந்து Tor Browser setup.என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இயங்க செய்திடுக உடன் விரியும் திரையில் தேவையான நாம் விரும்பும் மொழியை தெரிவுசெய்து கொள்க அடுத்துதோன்றிடும் திரையில் இந்த பயன்பாடு செயல்படும் கோப்பகத்தை தெரிவுசெய்து கொள்க இதற்காக நாம் பணிபுரியும் கணினியின் திரையைகூட தெரிவு செய்து கொள்ளலாம் இறுதியாக Install. எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நிறுவுகை செய்து கொள்க 

http://www.kaniyam.com/torஎன-சுருக்கமாக-அழைக்கப்ப/

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

இது Tor இன்  தொழில்நுட்பத்தை பற்றிய மேல்வாரியான விளக்கம்.

இதில் குறிப்பிடபடாத இரு சர்ச்சைக்குரிய விடயங்கள் உள்ளது.

ஒன்று  அனாமதேயபடுத்தும் Tor வலையமைப்பை Darknet அல்லது Darkweb எனப்படுகிறது.

இந்த Dark என்ற பதத்திற்கு  'பாதாள இணைய வலையமைப்பு'  என்பதை தமிழில் உரிய பதமாக கொள்ளலாம்.

ஆயினும்,  Darknet அல்லது  Darkweb   இல் Tor ஐ தவிர வேறு வலையமைப்புகளும்  உண்டு.

மற்றது, Tor இலும் தகவல் பாதுகாப்பு பலவீனம் உண்டு என்பதை, விளக்கத்தில் அளிக்கப்பட்ட படத்தில் இருந்தே காணலாம்.  அதாவது, Tor வலையமைப்பில் இருந்து இறுதியாக தகவல் சேரும் இடத்திற்கும் இடையில் மறையாக்கம் இல்லை என்பதே அந்தப் பலவீனம்.

பாதாள உலகத்தை  எவ்வாறு நீதி மற்றும் சட்டங்களால்  மற்றும் விதிகளால்  அமையப்பெறும்  தாராளவாத அரசுகள் இல் இருந்து கிராமத்து ரவுடி வரை ஆட்டிப்படைக்கின்றனரோ, அது போலவே  Darknet அல்லது  Darkweb  இல் தாராளவாத அரசுகள் முதல் வீட்டறை கணனி அல்லது இலத்திரனியல் குறும்புக்காரர்கள் வரை  தத்தமது நோக்கங்களிதற்காக புகுந்து விளையாடுகிறார்கள். ஏனெனில், மறுக்கப்படக் கூடிய அளவிலும் அதிகமான  அனாமதேயம் இந்த Darknet அல்லது  Darkweb இல் உள்ளது.

தகவல் பாதுகாப்பு சமூகத்திடம் இன்னுமொரு கேள்வியும் உள்ளது.  இங்கு இதை வாசிக்கும், ஆராயும் வாசகர்களிடம் கூட அந்த கேள்வி எழலாம்.

 இணையத்  தொடர்பாடலிற்கு இவ்வளவு பாதுகாப்பான Tor, ஏன் இப்படி மற்றும் எவ்வாறு   'பாதாள இணைய வலையமைப்பு' என்ற உலகத்தை சென்றடைந்தது?

மேலும், |இப்படிப்பட்ட Tor ஐ, ஏன் பலதேசியக் பெருநிறுவனங்கள் இருந்து உள்ளூர் சிறு நிறுவனங்கள், ஏன் இலாபம் ஈட்டாத அறக்கட்டளைகள் கூட பாவிப்பதற்கு தயங்குகின்றன? மறுவளமாக , Tor ஆல் இணையத்   தொடர்பு தகவல் பாதுகாப்பு தொழிநுட்ப சந்தையில் ஊடுருவவோ அல்லது ஓர் சிறு பங்கை கூட எடுக்கவோ முடியாமல் போனது?      

இது, ஆங்கிலத்தில் உள்ள மரபுத் தொடரான, 'cannot see the forest for the trees' (வாய்மொழியில், மிஸ்ஸிங்  வுட் போர் தி ட்ரீஸ் என்று பாவிக்கப்படும்) என்ற பிரச்னை போலல்லவா இருக்கிறது.

ஆம், அது உண்மையும்  கூட. சுருக்கமாக, Tor  இணையத்   தொடர்பு தகவல் பாதுகாப்பு தொழிநுட்பத்தை பெரும்பாலும் பாவிப்போர்  'பாதாள இணைய வலையமைபில்' கில்லாடிகள். அதை விட, Tor  கூட 'பாதாள இணைய வலையமைபில்' ஓர் முக்கிய பகுதி. எல்லாவற்றையும் விட, பில்லியன் பெறுமதியான பெரு நிறுவனங்களில் இருந்து இலாபம் ஈட்டாத அறக்கட்டளைகள் கூட Tor ஐ தமது இணையத்   தொடர்பு தகவல் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் உத்தியோகபூர்வமற்ற முறையில் கூட பாவிப்பதற்கு ஏறெடுத்தும் கருத்தில் எடுப்பதத்திற்கு மிகவும் தயக்கமும், பின்னிற்கவும் செய்கின்றன. இவை எல்லாவற்றையும் விட்டாலும், Tor  அல்லது டோர் ஐ அடிப்படையாக கொண்ட  இணையத்   தொடர்பு தகவல் பாதுகாப்பு தொழிநுட்ப உற்பத்திப்பொருட்கள் தொழிநுட்ப சந்தையில் ஊடுருவவோ அல்லது ஓர் சிறு சந்தைப் பகுதியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. ஏன், துணிகர மூலதனக்காரர்கள் (venture capitalists) கூட Tor இ ஓர் பொருட்டாக கருதவில்லை.

 கூர்ந்து நோக்கினால், Tor தொழில்நுட்பப் பெறுமானம் இல்லையா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.  ஆனால், டோர் இல் தொழில்நுட்பப் பெறுமானம் உண்டு என்பதை , Tor இன்  'பாதாள இணைய வலையமைப்பு' மதிப்பினை வைத்து எடை போடலாம்.

இங்கு தான் Tor இன் சந்தேகத்திடற்கும், சர்ச்சைக்கும் உட்படும் பிறப்பிடம் என்று கருதப்படும் Pentagon தொடர்பும், Tor இன் தோற்றுவாய்க்கான காரணாமாக கருதப்படும் Pentagon இன்  இணையத்   தொடர்பு தகவல் பாதுகாப்பு தேவை எவ்வாறு Tor ஐ 'பாதாள இணைய வலையமைபில்' சிக்கவைத்து, Tor ஆல் அந்த 'பாதாள இணைய வலையமைபில்' இருந்து 'நாகரிக இணைய வலையமைபிற்கு' இதுவரைக்கும் மீண்டு வரமுடியாமல் செய்து விட்டது என்பதற்கும், ஏறத்தாழ சமகால, மற்றும் சாமந்திரமான நோக்கங்களை கொண்டு உருவாக்கப்பட்ட Facebook மற்றும் Twitter எனும் இணைய தொழிநுட்பங்கள் (Faceboo, Twitter ஐ உருவாக்கத்தின் பின்ணணியில் NSA மற்றும் CIA இருந்ததாக இன்றும் பாரிய சந்தக்கண்கள் உண்டு), சாதாரண மக்களின் வாழ்க்கையோடு ஊடுருவி, பின்னிப்பிணைந்ததின் பின்ணணியில் தனிமனித சந்தைப்படுத்துதல் (individuals' marketing by same individuals)  எவ்வாறு நேர் மறையான விளைவுகளை  முறையான, மனோதத்துவ அடிப்படையில் அணுகப்படும் சந்தைப்படுத்துதல் (product or  platform marketing) உண்டுபண்ணும் என்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

இது போலவே Google, Amazon மற்றும் அப்படிப்பட்ட முதலைகளுக்கும் மேலே சொன்னது பொருந்தும்.    

இதை வாசிப்போரின் சந்தேகளுக்கும்,கேள்விகளுக்கும், துருவாரவத்திற்கும், ஆரம்பமாக கீழேயுள்ள இணைப்புக்கள்.  

https://surveillancevalley.com/blog/government-backed-privacy-tools-are-not-going-to-protect-us-from-president-trump

https://surveillancevalley.com/blog/internet-privacy-funded-by-spies-cia

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.