Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் படையினர் விவசாயம் செய்து அவற்றை விற்பனை செய்வது இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் படையினர் விவசாயம் செய்து  அவற்றை விற்பனை செய்வது இல்லை

 

யாழில் படையினர் விவசாயம் செய்து அவற்றை விற்பனை செய்வது இல்லை

 

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வசமிருக்கின்ற காணிகளில் பொதுமக்களின் காணிகளில் படையினர் விவசாயம் செய்து, அதனை சந்தைகளில் விற்பனை செய்வது இல்லை என விவசாய பிரதி அமைச்சர் அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 

மேலும், அவ்வாறு படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால் அதனை உடனடியாகத் தான் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

யாழ். கோவில் வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது பொதுமக்களின் காணிகளில் படையினர் விவசாயம் செய்வதால் பல்வேறு பாதிப்புக்களை மக்கள் எதிர்நோக்கி வருவதால் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு விவசாய பிரதி அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிப்பதற்கு வழங்க வேண்டும் என படையினர் கோரியிருக்கின்ற போது அதற்கு எவ்வளவு நிதி வேண்டும் என ஆராய்ந்து அதனை அரசாங்கம் வழங்க வேண்டு மென்று கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் சொல்லி இருக்கின்றனர். 

படையினர் வசமிருக்கின்ற காணிகளில் எங்கள் மக்கள் தான் வேலை செய்கின்றனர். அங்கு செய்யப்படுகின்ற விவசாய உற்பத்திப் பொருட்களை குறிப்பாக மரக்கறி வகைகளை இங்குள்ள சந்தைகளில் விற்பதில்லை. அவர்கள் தங்கள் தேவைகளுக்காகவே அதனைப் பயன்படுத்துகின்றனர். 

ஆனாலும் இராணுவத்தினரால் உள்ளுர் வியாபாரிகள் பாதிக்கப்படுவது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் இருந்த போதே நான் பேசியிருக்கின்றேன். அத்தோடு விவசாய அமைச்சரையும் சந்தித்து அண்மையில் பேசியிருக்கின்றேன். மேலும் படையின் மேற்கொள்ளும் விவசாயத்தையும் பார்த்திருக்கின்றேன். 

ஆனால் அவர்கள் செய்கின்ற உற்பத்திகள் இங்குள்ள சந்தைகளுக்கு வரப் போவதில்லை. அத்தோடுஅவர்கள் தொடர்ந்தும் அந்த உற்பத்திகளைச் செய்யமுடியாது. ஏனெனில் மக்களின் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என ஐனாதிபதி கூறியிருக்கின்றார். 

அதற்கமைய காணிகளும் விடுவிக்கப்பட இருக்கின்றது. அதுவரையில் அந்தக் காணிகளில் அவர்கள் விவசாயம் செய்தாலும் பரவாயில்லை. ஏனெனில் மக்களிடம் அக் காணிகள் கையளிக்கப்படும் போது அந்தக் காணிகள் வளப்படுத்திய காணிகளாக விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். ஆகவே இதன் பயன் மக்களையே சென்றடைய இருக்கின்றது. 

இதேவேளை மருதனார் மடம் மற்றும் திருநெல்வேலி சந்தைகளில் இரானுவத்தினரின் வாகனங்களில் இரானுவச் சீருடையடன் வந்தே இரானுவத்தினர் மரக்கறிகளை விற்பனை செய்வதாக ஊடகவியியலாளர்கள் தெரிவித்த போது அதனை மறுதலித்த அங்கஐன் இராமநாதன் இதற்கான ஆதாரம் இருந்தால் உடனடியாக அதனைத் தான் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். 

இச் சந்திப்பின் முடிவில் இந்த விடயம் தொடர்பில் மாவட்ட இராணுவத் தளபதியுடனும் தொலைபேசியில் உரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

(யாழ். நிருபர் பிரதீபன்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.